முன்பு மார்ச் 24 போராட்டத்திற்கு அனுமதி கிடைக்காத போது நீதிமன்ற அனுமதி பெற்ற நிலையில் இந்த மே 22 போராட்டத்திற்கு அனுமதி கிடைக்காதபோது நீதிமன்றத்தை அணுகாமல் தடையை மீறுவோம் என பொது மக்களைத் தூண்டியது ஏன்? கடற்கரையோர மீனவ கிராம மக்கள் தாமாக போராட்டத்திற்கு வந்தார்களா? சர்ச்சில் ஃபாதர் சொன்னதால் வந்தார்களா? நூறு நாட்கள் தொடர்ந்து போராடி ஸ்டெர்லைட் எதிர்ப்பை தீவிரப் படுத்திய குமரெட்டியாபுரம் கிராமத்தில் ஒருவர் கூட துப்பாக்கிச்சூடு, தடியடி என எந்த தாகுதலுக்கு ஆளாக வில்லை. ஏன் தெரியுமா? கிராம மக்களுக்கு நோக்கம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மட்டுமே.. அரசுக்கு எதிரான சட்டத்தை மீறும் வன்முறைப் போராட்டம் அல்ல…
View More ஸ்டெர்லைட்: திசைமாறிய போராட்டமும் விடைதெரியா வினாக்களும்Tag: கூடங்குளம்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ஒரு கண்ணோட்டம்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்களில் எட்டு பேர் கொல்லப்படுவோம் என்பது தெரிந்து இருந்தவர்களே. அதாவது, மக்கள் அதிகாரம் போன்ற வன்முறை போராட்ட வழிமுறைகளில் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் கொண்டவர்களே. இப்படி ஒரு அசம்பாவிதம் நடக்கும் என்பது காவல்துறைக்கு முன்பே தெரிந்திருக்கிறது. அதனால்தான் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் பாதிரியார்களுக்கும் காவலர்கள் முன்கூட்டியே தகவல் சொல்லிவிட்டிருக்கிறார்கள். அவர்களும் வெகு கவனமாக தூத்துக்குடி பக்கமே தலைவைக்காமல் இருந்துவிட்டிருக்கிறார்கள். காவலர்கள் அப்பாவி மக்களிடம் எதுவும் சொல்லவில்லை… வன்முறைப் போராளிகள் ஆயுதங்களுடன் இருந்திராதபோது சுட்டுக் கொன்றது நிச்சயம் மிக மிகத் தவறு. அவர்கள் பொதுச் சொத்துக்கு தீங்கு விளைவித்தபோதிலும் அரசுப் பணியாளர்களுக்கு துன்பங்கள் விளைவித்தபோதிலும் ஆயுதம் இல்லாத ஒருவரை அரசு எந்திரம் சுட்டுக் கொன்றது நிச்சயம் தவறுதான்…
View More தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ஒரு கண்ணோட்டம்உதயகுமார் விவகாரம்: சூதுசெய்யும் படித்தவர்கள் – 2
வெளிநாட்டு அமைப்புகளிடம் இருந்து நிதி வாங்கிக் கொண்டு இந்தியாவைத் துண்டாடுகிறார்கள் என்று ஜெயமோகன் கடுமையான குற்றசாட்டுக்களை வைக்கும் அருந்ததி ராயும், எம்.டி.எம், அ.முத்துக்கிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்களும் இந்த உதயகுமாரை விட எளிமையாக நடிப்பார்களே? ஏன் அவர்களைக் கொஞ்சிக் குலாவுவது கிடையாது? ஏன் இவருக்கு மட்டும் சிறப்பு சலுகை?… அணு உலை மீது குற்றம், சந்தேகம் இருந்தால் அந்தத் துறையின் விற்பன்னர்களிடம் அல்லவா முதலில் கேட்க வேண்டும்? அப்படி சந்தேகம் ஏற்படும் அளவுக்கு விக்ரம் சாராபாயும், அப்துல் கலாமும், டாக்டர் சிதம்பரமும், ராஜா ராமண்ணாவும் பொய்யர்களா அயோக்கியர்களா என்ன? இந்தியா வெற்றிகரமாக ராக்கெட்டுகளையும் சாட்டிலைட்டுகளையும் ஏவவில்லையா? அவர்கள் மீது ஏற்படாத ஒரு நம்பிக்கை இந்தியாவை உடைப்பேன் என்று சொல்பவனின் மீது வந்தால் எது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்?….
View More உதயகுமார் விவகாரம்: சூதுசெய்யும் படித்தவர்கள் – 2ஹைட்ரோகார்பன் பிரச்சினையை நாம் எவ்வாறு அணுக வேண்டும்?
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை இந்திய அரசும், மாநில அரசும் ஓஎன்ஜிசியும் மிகத் தைரியமாக மக்களிடம் சென்று விளக்க வேண்டும். இந்தத் திட்டத்தைப் பின்வாங்கினால் தமிழகம் மட்டுமல்ல இந்தியாவின் எந்த மூலையிலும் ஹைட்ரோ கார்பன் திட்டமல்ல, கச்சா எண்ணெய்யைக்கூட எடுக்க முடியாது. ஏனெனில் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் என்ற பெயரில் இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தையும் முடக்க ஒரு தரப்பு முனைப்பாகவே இருக்கிறது. இதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதன் வாயிலாக அமல்படுத்தாமல், முகநூல், தொலைக்காட்சிகள் மற்றும் மக்களிடம் நேரடியான உரையாடல்களை நிகழ்த்துவதன் மூலமாக நடைமுறைப்படுத்த வேண்டும்….
View More ஹைட்ரோகார்பன் பிரச்சினையை நாம் எவ்வாறு அணுக வேண்டும்?புனித பாரதத்தைத் துண்டாடும் சக்திகள் எவை?
இவ்விரு போராட்ட களங்களில் கூடங்குளம் எதிர்ப்பாளர்களின் போர்க்களத்துக்குத் தளம் அமைத்துக் கொடுத்து அதில் கலந்து கொண்டு முன்னணியில் நிற்போர் யாரென்று பார்த்தால் பல கிறிஸ்தவப் பாதிரிமார்கள் எனும் போதுதான் மக்களுக்கு இதில் சந்தேகம் ஏற்பட்டது. ..நாடு முழுவதும் 22 ஆயிரம் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், 2009-10ஆம் ஆண்டில் மட்டும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து பத்தாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிதியுதவி பெற்றுள்ளன என்றும், இதில் தமிழகத்தில் மட்டும் 3218 நிறுவனங்களுக்கு இந்த அயல் நாட்டுப் பணம் பாய்கிறது என்பதையும் மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது…வெளிநாட்டு நிதி என்று நாம் பொதுவாகக் குறிப்பிடும் இந்த நிதி குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து வந்திருப்பதாகத் தெரிகிறது.
View More புனித பாரதத்தைத் துண்டாடும் சக்திகள் எவை?அணு உலையைக் குலைக்கும் அந்நியக் கரங்கள்
ஆணவப் போக்குடன் மத்திய அரசு நடந்துகொண்டது. அதன் விளைவாக உதயகுமார் கும்பலுக்கு ஆதரவு பெருகியது.. கத்தோலிக்கர்களின் இந்திய தலைமை குருமார்களுடன் மத்திய அமைச்சர்கள் சிலர் பேச்சு நடத்தினர். அதனால் பயன் பெரிய அளவில் விளையவில்லை. மதத்தை விட, இந்தப் போராட்டத்துக்கு நிதி உதவி அளிக்கும் நாடுகளின் சர்வதேச அரசியல் வலுவானது… தூத்துக்குடியில் இயங்கும் TDA அமைப்பு சென்ற நிதியாண்டில் பெற்ற மொத்த நிதி ரூ. 2.38 கோடி! இந்த நிதி மதமாற்ற நடவடிக்கைகளிலும் அணு உலை எதிர்ப்புப் போராட்டங்களுக்கு உதவும் செயல்பாடுகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது..
View More அணு உலையைக் குலைக்கும் அந்நியக் கரங்கள்இந்த வாரம் இந்து உலகம் (மார்ச் 2, 2012)
என்னென்னவோ அதிசயங்கள் நடக்கிறது, சென்ற மாதம் மகா சிவராத்திரியின் போது பாகிஸ்தானிலேயே சிவாலய பூஜைகள் விமரிசையாகக் கொண்டாடப் பட்டதாம். பகவத் கீதையை உருது மொழியில் மொழியாக்கம் செய்திருக்கிறார் ஒருவர். இத்தாலிய கடற்படை கொலைகாரர்களை காப்பாற்ற வாட்டிகன் இந்திய அரசில் உள்ள கிருத்துவர்களான அந்தோணியிடமும், தாமஸிடமும் பேச்சு வார்த்தை நடத்துவதாக ஒரு செய்தி. புகழ்பெற்ற மயிலை கபாலீஸ்வரர் கோவில் குளத்துக்கு அருகில் உள்ள விளக்குக் கம்பத்தில், ஹிந்துக் கடவுள்களை அவமானப்படுத்தும் வாசகத்தை எழுதி ஒரு மிகப்பெரிய பானரை “தமிழ்நாடு தௌஹீத் ஜமாத்” இயக்கத்தினர் கட்டித் தொங்க விட்டுள்ளனர். கூடங்குளம் கிறித்தவ எதிர்ப்புக் குழுவுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருவது குறித்து…
View More இந்த வாரம் இந்து உலகம் (மார்ச் 2, 2012)இந்த வாரம் இந்து உலகம் (ஃபிப்ரவரி – 03, 2012)
இந்து ஆன்மீக மற்றும் சேவைக் கண்காட்சியில் தமிழ்ஹிந்து பங்கு கொண்டது, ஒரிஸ்ஸா மாநிலத்தில், பூரி மாவட்டத்தில் கோனார்க்கில் கொண்டாடப்பட்ட மகா சப்தமி, “விஞ்ஞானம் – ஆன்மிகம் – சமூக சேவை’ கருத்தரங்கம், பகவத் கீதை வெறும் மத நூல் அல்ல என்ற உயர்நீதி மன்ற தீர்ப்பு, தேசியக் கோடி ஏற்ற முயன்ற தலித் ஊராட்சித் தலைவர் தாக்கப் பட்டது, கோவிலில் மணி அடிக்க தடை பற்றி, போஜ்சாலாவில் இந்துக்களின் உரிமை, பார்சல் குண்டு வழக்கில் தீர்ப்பு, அடுத்த ஆண்டு விவேகானந்தர் நூற்றி ஐம்பதாவது ஆண்டு விழாக் கொண்டாட்டம், மேலும் பல செய்திகள்…
View More இந்த வாரம் இந்து உலகம் (ஃபிப்ரவரி – 03, 2012)அணு உலையும் ஆயுதப் போட்டியும் அப்பாவி உயிர்களும் – 2
வளரும் நாடுகளின் அணுசக்தியை மேற்கத்திய நாடுகள் எவ்வாறு முடமாக்க முயல்கின்றன் என்பதையும் அதற்காக அவர்கள் ஏற்படுத்தும் மரணங்களை பற்றியும் கண்டோம்.. ஆசியா நாடுகளின் மொத்த மின் உற்பத்தில் 50% மின்சக்தி தரும் நிலக்கரி பூஜ்ஜியத்தை நோக்கி செல்ல தொடங்க உள்ளது… நமது நாட்டில் இருக்கும் நீர்சக்தி அளவும் குறைந்து கொண்டு இருக்கிறது.. இன்னும் 10 ஆண்டுகளில் ஏற்படக் கூடிய மிக பெரிய எரிசக்தி பற்றாக்குறையை அணுச்சக்தியால் மட்டுமே தீர்க்க முடியும்…
View More அணு உலையும் ஆயுதப் போட்டியும் அப்பாவி உயிர்களும் – 2நிலநடுக்கமும் நமது அரசியல்வாதிகளும்
இந்த எதிர்ப்பாளர்களின் முக்கிய நோக்கம், அணுமின் நிலையத்தில் மின்சாரம் தயாரிப்பதை எதிர்ப்பதல்ல; அங்கு அணுஆயுத உற்பத்தி நிகழாமல் தடுப்பதே… இதே ‘நிலநடுக்கம்’ கேரள அரசியல்வாதிகளால் பிராந்திய நலனுக்காக துஷ்பிரயோகம் செய்யப்படும்போது, அதை எதிர்ப்பவர்களும், இதே குழுவினர் என்பது ஒரு நகைமுரண்… கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் பலரும் இப்போது தங்கள் ஜாகையை முல்லைப் பெரியாறுக்கு மாற்றிக்கொண்டு முழக்கமிடத் துவங்கி இருக்கிறார்கள்… இப்போதைய தேவை, தமிழக எல்லை மாவட்டங்களில் அமைதியைத் திரும்பச் செய்வதற்கான தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கனிவான நடவடிக்கைகளே…
View More நிலநடுக்கமும் நமது அரசியல்வாதிகளும்