சக்திதான் என்றும் !

தோளி ருப்ப தெல்லாம் -மற்றோர்
துயர்து டைக்கவென்றே! தம்பி
காளி அடங்கமாட்டாள்! செல்வக்
கட்டி லென்று கண்டோம்!….
காடும் சடையும் வேண்டாம்! இங்கே
கலி பிளக்க வந்தோம்! அவளைப்
பாடு தம்பி பாடு! இந்தப்
பாருன் கையி லாடும்!…..
ஆடுகின்ற கடலில் -நம்மை
ஆட்டு கின்ற மனதில் -இருளைச்
சாடுகின்ற கதிரில் -அறவோர்
சாந்த மான நகையில் -ஆங்கோர்
வேடு வச்சி நடையில் -நெஞ்சம்
விம்மு கின்ற கலையில் -தோன்றிப்
பாடும் அன்னை சக்தி! பார் பார்!
பரவுதங்கு செந்தீ!…

View More சக்திதான் என்றும் !

சக்தி வாழ்க! – மகாகவி பாரதி

குனிந்த தலையை நிமிர்த்தினாள்; சோர்ந்த விழியில் ஒளி சேர்த்தாள்; கலங்கிய நெஞ்சிலே தெளிவு வைத்தாள்; இருண்ட மதியிலே ஒளி கொடுத்தாள்… உள்ளம் தெளிந்திருக்க, உயிர் வேகமும் சூடும் உடையதாக, உடல் அமைதியும் வலிமையும் பெற்றிருக்க, மஹா சக்தியின் அருள் பெறுதலே வாழ்தல்; நாம் வாழ்கின்றோம்.

View More சக்தி வாழ்க! – மகாகவி பாரதி

எழுமின் விழிமின் – 19

கடந்த ஆயிரம் ஆண்டுகளாக எவை எவை நம் இனத்தைப் பலவீனப்படுத்துமோ அவற்றுக்கெல்லாம் நாம் இடங்கொடுத்து விட்டோம்… நாம் வேண்டுவது சக்தி. சக்தி, ஒவ்வொரு முறையும் சக்தியே வேண்டும். உபநிடதங்கள் சக்திக்குப் பெரும் சுரங்கமாகும். உலகம் முழுவதற்கும் வீரம் அளிக்கப் போதுமான அளவு சக்தி இதற்கு உண்டு… தன்னம்பிக்கை கொள்ளுங்கள். உலகியல் செல்வம் வேண்டுமென்றால் அத்வைதத்தின் மூலம் வேலை செய்யுங்கள். அது உங்களை வந்து அடையும். நீங்கள் அறிவிற் சிறந்த மேதாவியாக ஆக விரும்பினால் அத்வைதத்தை அறிவுத் துறையில் உபயோகியுங்கள். அறிவிற் சிறந்த மேதையாவீர்கள்…

View More எழுமின் விழிமின் – 19

சக்கரவர்த்தியின் மனைவி

..மங்காவின் தந்தையார் திருமலை சம்பங்கி அய்யங்கார் ஊர் ஊராகச் சென்று ஹரி கதைகள் சொல்லுபவர். இப்படிப் பட்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்த மங்கா தான் ராஜாஜி என்று நாடே புகழும் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் அவர்களின் மனைவி..மங்காவின் பெற்றோர்கள் ஆசாரம் பார்ப்பவர்கள் என்றாலும் மங்கா கணவர் வழியில் எல்லோரிடமும் சகஜமாகப் பழகினாள்…திருப்பதி வெங்கடாசலபதி படத்தின் முன் நின்று “கணவர் பிழைத்து எழுந்தால்
நான் அணிந்திருக்கும் நகைகள் அனைத்தையும் உனக்கே காணிக்கை
செலுத்துகிறேன்” என்று வேண்டிக் கொண்டாள்…

View More சக்கரவர்த்தியின் மனைவி

கதை சொல்லும் ஈழத்து அம்பிகை ஆலயங்கள்

புத்தர் இந்தப் பிணக்கைத் தீர்க்க மணிபல்லவம் வந்தார்… ‘எந்த விக்கிரகத்தின் வலது கால் அசைவதைக் காண்கிறாயோ, அதுவே சரியானது என்று காட்டு’ எனக் கட்டளையிட்டாள்… “ஒரு மார்பிழந்த திருமாபத்தினி” என்று போற்றப்படும் கண்ணகியின் கற்பு அவளை தெய்வீக நிலைக்கு உயர்த்தியிருக்கிறது… அம்பாள் திருவடிவத்தை கிறிஸ்துவின் அன்னையான மரியாள் என்று காட்டினார்கள். வந்தவர்கள் மகிழ்ந்து அக்கோயிலை கத்தோலிக்க மரபுப்படி மாற்றி ஜெபமாலை மாதா என்று போற்றினார்களாம்..

View More கதை சொல்லும் ஈழத்து அம்பிகை ஆலயங்கள்

வீரமுண்டு… வெற்றியுண்டு!

இந்த நாளில் தான், பாரதத்தின் உயர்வுக்காகப் பாடுபடும் ‘ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்’ எனப்படும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை நான்கு சிறுவர்களுடன் நாகபுரியில் துவக்கினார் [..] போராட்டமயமான வாழ்க்கையை எதிர்கொள்வதற்கான உந்துசக்தியையும் தன்னம்பிக்கையையும் மக்களுக்கு அளிப்பவையாக நவராத்திரி பூஜையும் விஜயதசமி விழாவும் [..] கல்வி பயில்வதற்கான ‘எழுத்தறிவித்தல்’ விஜயதசமியில் துவங்குவது நமது மரபு. வித்யாரம்பம் இந்நன்னாளில் துவங்கினால், நன்மை என்பது நாடு முழுவதுமே பரவலாக காணப்படும் நம்பிக்கை [..] இறை சக்தியும் வீரமும் உள்ள இடத்தில் வெற்றி இருக்கும். அங்குதான் அமைதி நிலவும் [..]

View More வீரமுண்டு… வெற்றியுண்டு!

அம்பிகை வழிபாடும், ஸ்ரீசக்கர பூஜையும்

..உள்ளக் கமலத்தில் உறையும் உன்னதமானவளை.. மானசீகமாக, உள்ளே, அந்தராத்மாவில் பூஜித்துப் பின்னர், சுழு முனை வழியே பிரமரந்திரம் வரை கொண்டு சென்று, உபசாரங்கள் வழங்கி நாசித்துவாரத்தின் வழியே திரிகண்டமுத்திரையில் குவித்து, புஷ்பாஞ்சலியுள் புகுவித்து, புறத்தே அமைந்துள்ள ஶ்ரீசக்கர மஹாயந்திர மத்தியில் ஆவாஹனம் செய்வர்…

View More அம்பிகை வழிபாடும், ஸ்ரீசக்கர பூஜையும்

யாதுமாகி….

இல்லையென்றால் உங்கள் வீட்டில் ‘டண் டணா டண்’ இணைப்பு இல்லை என்று பொருள்… மாட்சிமை தாங்கிய பேரரசரின் சாம்ராஜ்ஜியத்தின் பாதுகாவலுக்காகவும் ஜனநாயகத்தையும் இந்தியாவையும் ஜப்பானிய காட்டுமிராண்டிகளிடமிருந்து காப்பாற்றவும் நாங்கள் இங்கே அனுப்பப்பட்டதாக… “விபசாரி! சின்ன சின்ன சந்தோஷங்களுக்குள் கூட என்னென்ன அதிர்ச்சிகள் என் தேவனே…”… ஒரே கோஷம் மட்டுமே கேட்டது. ஒற்றைக் குரலாக– ‘பந்தே மாதரம்’… இப்போது ஒரு குண்டு அவளது நெற்றி வட்டத்தை சரியாகத் துளைத்தது.

View More யாதுமாகி….

நிர்வாண சுகதாயினி

தொடர்ந்து உச்சரிப்பதால் ஏற்படும் அதிர்வுகள் நல்லதொரு சூழலை உருவாக்குகின்றன. நல்ல எண்ணங்கள் நல்ல சொற்களாக வெளிப்படுகின்றன. நல்ல செயலாகப் பரிணமிக்கின்றன. தீயவை அகலுகின்றன. நம்மைச் சுற்றி கண்ணுக்குத் தெரியாமல் இருக்கின்ற பிரபஞ்ச அதிர்வுகள் (கடவுளரும்) அப்படியே ஆகட்டும் என வாழ்த்துகின்றன… வெட்டுண்ட கரம் வீதியில் (மண்ணில்) துடிதுடிக்கிறது. ஆனால் விரைந்து செல்லுகிறார் துறவி. அவர் யார்?

View More நிர்வாண சுகதாயினி

சக்தி கொடு! அண்ணா ஹஸாரேக்கு நரேந்திர மோடியின் கடிதம்

உங்கள் வார்த்தைகளால் கோடிக்கணக்கான இளைஞர்கள் இனி பெரும் எதிர்பார்ப்புகளை கொண்டிருப்பார்கள். எனவே நான் செய்யும் சிறிய பிழையும் அவர்களை பெரும் ஏமாற்றமடைய செய்யும்… இவர்களால் தங்கள் மீது அவதூறுகள் வீசப்படுமோ உங்களுக்குத் தொல்லை கொடுப்பார்களோ என்று எனக்கு அச்சமாகவே உள்ளது.

View More சக்தி கொடு! அண்ணா ஹஸாரேக்கு நரேந்திர மோடியின் கடிதம்