‘பைசன்’ படத்தை முன்வைத்து அவர்ண சிந்தனைகளும் கேள்விகளும்

திரைப்படத்தை பார்த்து முடிக்கும் எவருக்கும் ஏற்படுவது பெரும் உன்னத உணர்வு.  புனித நதியில், கங்கையில் அல்லது காவேரியில், அதன் புனிதத்தை உணர்ந்து நீராடினால் ஏற்படும் மனத்தூய்மை உணர்வு… மாரி செல்வராஜ் சத்தியமாக கீதை படிக்கவில்லை. அவருக்கு அதில் ஆர்வமும் இருக்க அவசியமில்லை. அப்படி ஒரு வேலியை நாம் உருவாக்கியிருக்கிறோம். ஆனால் மேலே மதுராபுரி மாட்டிடையன் கீதையில் சொன்னவற்றை தம் திரைப்படத்தில் காட்சிப்படுத்திவிட்டார் அவர்… சங்கிகள் என்று தம்மை சொல்லிக் கொள்கிறவர்களில் பலர் இந்த வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். நீங்கள் அப்படி செய்வது உங்கள் தலைவரான கோல்வல்கரையே கேலி செய்வதுதான்… எவ்வித மலின வணிக சமாச்சாரமும் இல்லாத, மலினங்கள் விடயத்தில் துளி சமரசமும் இல்லாத திரைப்படம் ஒன்றை தமிழ் சமுதாயம் வெற்றி பெற வைக்குமென்பதைக் காட்டியிருக்கிறது பைசன்…

View More ‘பைசன்’ படத்தை முன்வைத்து அவர்ண சிந்தனைகளும் கேள்விகளும்

ம(மா)ரியம்மா – 11

This entry is part 11 of 14 in the series ம(மா)ரியம்மா

மறு நாள் பொழுது விடிகிறது. கிராமம் முழுவதும் ஒரே பரபரப்பாக இருக்கிறது. சேனல்…

View More ம(மா)ரியம்மா – 11

மாண்டூக்ய உபநிஷத் – எளிய விளக்கம் – 4

முன்தோற்றமற்றது என்றால் என்ன? இதற்குமுன் எதுவும் தோன்றவில்லை, இதுவேதான் இருந்துவருகிறது, இதை யாரும் படைக்கவில்லை, உருவாக்கவில்லை, இதுவும் தோன்றவில்லை. “தோன்றவில்லையா, அப்பொழுது இது எப்படி இருக்கமுடியும்?” என்ற கேள்வி எழுகிறது. நமது வெளியுலக உணர்வுப்படி நோக்கினால் — ஒன்று தோன்றியது என்றாலே, அதற்குத் துவக்கம் இருக்கவேண்டும், அதை யாராவது உருவாக்கி இருக்கவேண்டும் என்றுதானே பொருள்? அப்பொழுது அது பரம்பொருளாக இருக்கமுடியுமா? முடியாதே! அதனால் அப்பரம்பொருள் தோற்றமற்றது, துவக்கமற்றது. அது எப்பொழுதும் இருக்கிறது.

இது முடிவும் அடையாதது: முடிவு என்று ஒன்று இருந்தால் அதற்குத் துவக்கம் என்றும் ஒன்றும் இருக்கவேண்டும் அல்லவா! எனவே, துவங்காத ஒன்று முடிவும் அடையாது.

அது வெளியிலும் இல்லை என்றால் என்ன? எல்லாமே அதுதான், அப்பரம்பொருள்தான்! எனவே எதுவும் அதற்கு வெளியில் இருக்கமுடியாது.

அறிவியல்படி நோக்கினால், பெருவெடிப்புக்குமுன் அண்டமே இல்லை, அண்டத்தில் இருக்கும் எதுவுமே இல்லை. அண்டமே அண்டத்தில், பரம்பொருளுள் அடங்கி இருந்தது. அந்நிலையில்தான் நிர்குணப் பிரம்மமும் இருக்கிறது.

தனித்தன்மை வாய்ந்தது: இப்படிப்பட்டது எதுவும் இருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அப்படிப்பட்டது தனித்தன்மை வாய்ந்த ஒன்றுதானே!

View More மாண்டூக்ய உபநிஷத் – எளிய விளக்கம் – 4

ஒரே நிலம், நீர், நெருப்பு — ஆனால் மனிதன்…

“தாழ்த்தப்பட்டவனின் வீட்டில் ஒளிநுழைந்தால் அது தீண்டப்படாததாகி விடுமா? எந்த மனிதனின் வீட்டிற்குள் இறையொளி இருக்கிறதோ அவனே சான்றோன் ஆவான்” என்கிறார் சர்வக்ஞர். தன்னைப் போலவே பிறரை நேசிப்பவன் உலகமே தானாகிற சிறப்புப் பெறுகிறான். ”ஆசைகளை அடக்கி வாழ்பவனுக்கு உலகமே கைலாசமாகிறது,“ என்பது அவரது தத்துவமும், சித்தாந்தமும். பசித்தவனுக்கு உணவு தருதல், உண்மையிலிருந்து மாறாமல் இருத்தல், சகமனிதனை நேசித்தல் என்ற பண்புகள் மட்டுமே வாழ்க்கையை எளிமைப்படுத்தி உயரவைக்கும் என்கிறார்…

View More ஒரே நிலம், நீர், நெருப்பு — ஆனால் மனிதன்…

இந்து சமூக அமைப்பும் சாதிகளும் – உரை

இந்து சமூக அமைப்பு மற்றும் சாதிகள் குறித்த வரலாற்றுப் பின்னணி. சமுதாய சமத்துவம், சீர்திருத்தங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான இந்து சிந்தனைகள். இத்திறக்கில் நாம் இப்போது செய்ய வேண்டியது என்ன? – இவற்றை முன்வைத்து சமீபத்தில் ஒரு இந்து ஆன்மீக, சமூகசேவை அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் ஜடாயு ஆற்றிய உரை (55 நிமிடங்கள்). இங்கே கேட்கலாம்…

View More இந்து சமூக அமைப்பும் சாதிகளும் – உரை

சாதி அரசியல் செய்கிறாரா மோதி?

“மோதியை எப்படி வேண்டுமானாலும் எதிர்த்துக் கொள்ளுங்கள். ஆனால் எனது சாதியை வைத்து, கீழ் சாதிகளில் பிறக்க நேர்ந்து விட்ட மக்களை (நீசீ ஜாதி மே பைதா ஹுயே லோக்) அவமதிக்காதீர்கள்” என்று மோதி பதிலடி கொடுத்தார்.. பிரியங்கா நேரடியாக சாதியைக் குறிப்பிட்டு எதுவும் சொல்லாத போது, மோதி வலிந்து இதில் சாதியை நுழைக்கிறார் என்பது தான் எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.. “நீச்” என்ற சொல் உடனடியாக ஹிந்தி பேசும் பாமர ஜனங்களிடம் ஏற்படுத்தும் உணர்வு எப்படிப் பட்டது என்பதை மேல்தட்டுகளிலேயே புழங்கிய பிரியங்கா அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், மக்களோடு மக்களாக புழங்கிய மோதி உடனடியாக அறிந்து கொண்டு, தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்…

View More சாதி அரசியல் செய்கிறாரா மோதி?

அம்பேத்கரின் “சாதி ஒழிப்பு”: ஓர் மீளாய்வு – 2

சாதிக்கொடுமைகள் கலப்பு திருமணத்தால் தீருமா என்பது கேள்வி. அமெரிக்க, தென்னாப்பிரிக்க நாடுகளில் நடைபெற்ற அடிமை ஒழிப்பு, உரிமையெடுப்பு இயக்கங்கள் கலப்பு திருமணத்தை முன்வைத்தா உரிமைகளை வென்றெடுத்தன? அமெரிக்க கறுப்பின உரிமை போராளியான மார்ட்டின் லூதர் கிங் கலப்பு திருமணத்தை முன்னிறுத்தினாரா?…. இந்துக்கள் யார் யார் என்றால் யாரெல்லாம் முஸ்லீம்கள் இல்லையோ, கிறிஸ்துவர்கள் இல்லையோ பார்சிகள் இல்லையோ அவர்கள் எல்லோரும் இந்துக்கள் என முன்வைத்தது அம்பேத்கர் தான். மேலும் இந்துவாக மதம் மாறலாம் எனும் சட்டக்கருத்தை முன்வைத்ததும் அம்பேத்கர் தான்… இந்துக்கள் பழங்குடியினரிடம் சமயப் பரப்புரை செய்தால் கேலி பேசுவதும் அதை தடுப்பதுமாக ஒரு பக்கமும், இன்னோர் பக்கம் ஏன் பழங்குடியினரிடம் போகவில்லை அதற்கு சாதியே காரணம் என சொல்லுவதுமாகவும் இருப்பது – எந்த அளவில் சரி?…

View More அம்பேத்கரின் “சாதி ஒழிப்பு”: ஓர் மீளாய்வு – 2

அம்பேத்கரின் “சாதி ஒழிப்பு”: ஓர் மீளாய்வு – 1

75 வருடங்களுக்கு முன்பு பாபாசாகிப் அம்பேத்கர் எழுதிய “சாதி ஒழிப்பு” (Annihilation of Caste) எனும் புத்தகத்தை இப்போது மீளாய்வு செய்ய வேண்டியது அவசியமாகிறது. முதலில் அம்பேத்கர் என்ன எழுதியிருக்கிறார் என பார்த்துவிட்டு அதற்கான விமர்சனத்தை பார்ப்போம்… இந்துக்கள் ஒரு சமூகமாக அல்லது தேசியமாக பரிணமிக்க சாதியே தடையாக இருக்கிறது. இந்துக்களுக்கு தாங்கள் ஒருவருக்கொருவர் உறவு கொண்டவர்கள் என்ற பிரக்ஞையே இல்லை. இந்துக்களுக்கு தங்களுடைய சாதியோடு மட்டும் உறவு இருக்கிறது, மற்றைய இந்துக்களுடன் கிடையாது…. சாதி என்ற அமைப்பு இந்துக்களிடையே பரஸ்பர நம்பிக்கை, உதவி, ஒருங்கிணைப்பை உண்டாக்கித் தருவது இல்லை. ஒரு சாதி இன்னோர் சாதிக்கு எதிராக இருக்கிறது. அதற்கு அடிப்படையாக நூல்கள் எழுகின்றன… சதுர்வர்ணம் சூத்திரர்களுக்கு மிகவும் கொடுமையான அமைப்பாக இருக்கும். சூத்திரர்கள் சதுர்வர்ண முறையின் கீழ் எல்லாவற்றிக்கும் மற்றவர்களை நம்பியே இருக்கவேண்டிய அவசியம் இருக்கும். மற்றவர்கள் சூத்திரர்களை கொடுமைப்படுத்த நினைத்தால் அதை யாரும் கேட்கமுடியாமல் போகும்…

View More அம்பேத்கரின் “சாதி ஒழிப்பு”: ஓர் மீளாய்வு – 1

புனைவு அறத்தின் வரலாற்று அடிவயிறு: ’வெள்ளை யானை’யை முன்வைத்து – 2

கிறிஸ்தவ ‘அருட்பணியாளரான’ ஜே.எஃப். ஸ்பென்ஸர் இந்த பஞ்சத்தின் கொடுஞ் சூழலை ஆண்டவர் கொடுத்த கருவி என மகிழ்ந்து களிகூர்ந்தார். ரட்சகராகிய ஏசுவின் பக்கம் நம்பிக்கையைத் திருப்ப இந்தியர்களுக்குத் தேவையான அடக்க உணர்வை அளிப்பதற்காக ஆண்டவன் பயன்படுத்தும் கருவிதான் பஞ்சம், நிகழ்காலத்தில் ஏசு நிகழ்த்தும் அற்புதமே இந்தப் பஞ்சம் என அவர் மெட்ராஸ் மெயிலில் எழுதினார்…. தலித்துகளிடையே அயோத்தி தாசர் இரண்டு பிரிவுகளை வகுக்கிறார். ஒரு பிரிவு தாழ்ந்த சாதி. இன்னொரு பிரிவு தாழ்த்தப்பட்ட சாதி. குறவர், தோட்டி, வில்லியர், சக்கிலியர் ஆகியோர் தாமாகவே தாழ்ந்த சாதி என்றும் பறையர் முதலானோர் கனம், தனம் ஆகியவற்றால் பிறரால் வஞ்சகமாக தாழ்த்தப்பட்டவர்கள் என்றும் குறிப்பிடுகிறார். இந்த இரண்டு பிரிவினரை முதல் பிரிவினரோடு சேர்த்து ‘பஞ்சமர் ‘ என்று பெயரிட்டதை தாசர் ஆட்சேபித்தார்… இந்த நாவல் அதி நாடகத்தன்மையுடனும் உணர்ச்சிகர உச்சங்களுடனும் எழுப்பும் வரலாற்றுணர்வு, ஒரு பக்கம் குற்ற உணர்வாகவும், மறுபக்கம் வெறும் வெறுப்புமிழும் தன்மையும் கொண்டதாக அமைந்துவிடுகிறது. எனவே வரலாற்றுத் தரவுகளில் அதை பொருத்திப் பார்க்க வேண்டியதாக இருக்கிறது….

View More புனைவு அறத்தின் வரலாற்று அடிவயிறு: ’வெள்ளை யானை’யை முன்வைத்து – 2

புனைவு அறத்தின் வரலாற்று அடிவயிறு: ’வெள்ளை யானை’யை முன்வைத்து – 1

இலக்கியமாக வாசகனின் உணர்ச்சியை வெற்றிகரமாகத் தட்டி எழுப்பும் இந்த நாவல் தலித்திய பிரசார ஆயுதமாகவும் திகழ்கிறது. நாவல் உருவாக்கும் வரலாற்றுணர்வு, எந்த அளவுக்கு உண்மையான வரலாற்றுத் தரவுகளுடன் பொருந்திச் செல்கிறது என்பதைப் பார்ப்பது அவசியமாகிறது… பறையர் ‘பள்ளி’ ஆகியோர் அறுவடை செய்ய மறுத்துவிட்டனர். பிரிட்டிஷ் வரி வசூல் அவர்களின் வருமானத்தைப் பாதித்தது. தங்கள் கூலியான அறுவடைப் பங்கை அவர்கள் அதிகரித்துக் கேட்டனர். விவசாயக்கூலிகளின் இந்தக் கோரிக்கைக்கும் வேலை நிறுத்தத்துக்கும் நில உடைமையாளர்களின் ஆதரவு இருந்தது… சென்னையில் ‘கொடை பங்களிப்பு எதிர்ப்பு சட்டம்’ (Anti-Charitable Contribution Act) ஒன்றை கொண்டு வந்தார் ரிச்சர்ட் டெம்பிள். அரசு நிர்ணயித்த உணவு தானிய விலையை குறைக்கும் விதத்தில் பஞ்சநிவாரணச் செயல்பாடுகளில் ஈடுபடுவது சிறைத் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டது. பஞ்சத்தினால் ஏற்படும் படுகொலைகள் குறித்துப் பேசுவதும் எழுதுவதும்கூட குற்றமாக கூறப்பட்டது….

View More புனைவு அறத்தின் வரலாற்று அடிவயிறு: ’வெள்ளை யானை’யை முன்வைத்து – 1