கர்ணன் காதில் எதுவும் விழவில்லை, அவன் தன் பாட்டில் போய்க்கொண்டிருந்தான். ஆனால் “மாமா! மாமா!” என்று அழைத்தபடி ஒரு அழகிய இளம் பெண் தன் நீலப்பட்டாடை சலசலக்க வேகவேகமாக ஓடி வந்து கர்ணனின் நீண்ட கை ஒன்றைப் பற்றினாள். பாதி அலங்காரத்தில் ஓடி வந்ததால் அவள் தலையில் சரியாக செருகப்படாத மல்லிகைச் சரம் கீழே கர்ணன் கால்களில் விழுந்தது. மீண்டும் புற உலகத்துக்கு வந்த கர்ணனின் முகம் அவளைப் பார்த்ததும் முதலில் தன்னிச்சையாக மலர்ந்தது. ஆனால் அடுத்த கணமே மீண்டும் அவன் கண்கள் சுருங்கின. அதற்குள் பானுமதியும் அருகில் வந்தாள்…. “இந்த சூதன் மகனை அங்க நாட்டு அரசனாக்கினோம். தோழன் தோழன் அண்ணன் மாமன் என்று கொண்டாடினோம். நமக்கு உண்மையிலேயே சரிசமானமாக வைத்தோம். சூத ரத்தம் என்று பார்க்காமல் நம் வீட்டு ரத்தினத்தை அவன் வீட்டுக்கு ஒளி தர அனுப்ப எண்ணினோம்…..
View More ஆயிரம் துச்சாதனர் [சிறுகதை]Tag: சாதிய மறுப்பு
ஆர்.எஸ்.எஸ், மனு, அம்பேத்கர்
அந்தப் பையனின் அப்பாவுடையது போன்றது தான் இன்றும் இந்திய சமூகத்தின் பொது மனநிலை. ஆனால் அத்தகைய மன விலகல்களை முறிக்கும் மாமருந்தாகத் திகழ்கிறது இந்துத்துவம். சராசரியை விட அதிகமாக, ஆர் எஸ் எஸ் இயக்கத் தொண்டர்களின் குடும்பங்களில் சாதி இணக்கத் திருமணங்கள் நடக்கின்றன என்பதை சமூகவியலாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள்… முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசுவது எளிது. ஆனால், சாதி பேதம், ஏற்றத் தாழ்வு இவற்றை எதிர்த்துப் போராடுவது ஒரு கடினமான வேலை. காரணம், இந்தப் போராட்டம் நம்மவர்களுக்கு இடையேயானது…. முற்போக்குகளும் சோஷலிஸ்டுகளும் காங்கிரஸ் அரசியல்வாதிகளும் உள்ளூர அம்பேத்கருக்கு இந்த கௌரவம் அளிக்கப் படுவதை விரும்பவில்லை. அதற்கான பழியை இந்துத்துவம் மீது போடுவதற்கான பொன்னான வாய்ப்பை எதிர்பாத்திருந்தனர். ஆனால் ஆர் எஸ் எஸ் அதை முழுவதுமாகப் பொய்யாக்கியது….
View More ஆர்.எஸ்.எஸ், மனு, அம்பேத்கர்கும்பமேளாவில் தலித் சகோதரிகள்
கும்பமேளாவில் புனித நீராடிய அந்தப் பெண்கள் எல்லா வகையிலும் சமூக மீட்சிக்கான முன்னுதாரணங்கள். பதினைந்தாண்டுகள் முன்பு வரை மனிதக் கழிவை அகற்றும் பணியில் தள்ளப் பட்டிருந்தவர்கள் அவர்கள். கோயில்களுக்குள் அவர்கள் அனுமதிக்கப் படவில்லை. அவர்களுக்கான மதச் சடங்குகளை நடத்தி வைக்க யாரும் முன்வரவில்லை… சுலப் அமைப்பு அவர்கள் விடுதலைக்கு வழி செய்தது. அவர்களுக்கு மாற்று வாழ்வாதாரங்களையும், கல்வி கற்பதற்கான வாய்ப்பு வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தது… உண்மையில் தூய்மையடைய வேண்டியிருந்ததது அந்த சகோதரிகள் அல்ல. அவர்களது மீட்சியின் மூலம் நூற்றாண்டுகளாக இந்து சமுதாயத்தைப் பீடித்திருக்கும் சாதிய அடக்குமுறைகள், சாதியம் விளைவித்த வெறித்தனங்கள் வக்கிர மலங்கள்….
View More கும்பமேளாவில் தலித் சகோதரிகள்ஆதிக்க சாதி இந்துக்களின் மனசாட்சிக்கு ஒரு அறைகூவல்
“உயர் வகுப்பினர் என தம்மை அழைத்துக் கொள்வோர் தங்களோடு இணைந்த சகதோழர்களுக்காக ஆற்ற…
View More ஆதிக்க சாதி இந்துக்களின் மனசாட்சிக்கு ஒரு அறைகூவல்சாதி இணக்கத் திருமணங்கள் குறித்து இந்து சான்றோர்கள்
இந்தியாவில் சாதி இணக்கத் திருமணம் செய்வதற்கு ஒரு நல்ல காரணம் இருக்கிறது: … சாதி இணக்கத் திருமணங்கள் செய்யாமல் இருப்பதால் இந்திய சமூகம் நாளுக்கு நாள் உடலளவில் பலகீனம் அடைந்து வருகிறது… அதன் தொடர்ச்சியாக அனைத்துவிதமான வியாதிகளும், ஏனைய தீமைகளும் வரவேற்கப்படத் தயாராக இருக்கின்றன என்பது உனக்குத் தெரியவில்லையா ?
View More சாதி இணக்கத் திருமணங்கள் குறித்து இந்து சான்றோர்கள்சாதிய மறுப்பு ஹிந்து திருமண விளம்பரங்கள் (ஃபிப் 12, 2012)
சாதிகளை கடந்து வரதட்சிணை வாங்காமல் திருமணம் செய்ய விரும்புவோர் இங்கு தங்கள் விளம்பரங்களைத் தரலாம். இங்கு வெளியிடப் படும் விளம்பரங்கள் குறித்து தமிழ்ஹிந்து இணையதளம் எவ்வித பொறுப்பு ஏற்க இயலாது. தொடர்பு கொள்வோர் தாங்களே தரவுகளை முழுமையாக சரி பார்த்து கொள்ளவும்.
View More சாதிய மறுப்பு ஹிந்து திருமண விளம்பரங்கள் (ஃபிப் 12, 2012)சாதிய மறுப்பு ஹிந்து திருமண விளம்பரங்கள்
சாதிகளை கடந்து வரதட்சிணை வாங்காமல் திருமணம் செய்ய விரும்புவோர் இங்கு தங்கள் விளம்பரங்களைத் தரலாம். இங்கு வெளியிடப் படும் விளம்பரங்கள் குறித்து தமிழ்ஹிந்து இணையதளம் எவ்வித பொறுப்பு ஏற்க இயலாது. தொடர்பு கொள்வோர் தாங்களே தரவுகளை முழுமையாக சரி பார்த்து கொள்ளவும்.
View More சாதிய மறுப்பு ஹிந்து திருமண விளம்பரங்கள்