சுவாமி: இங்கு எதற்கு வந்தாய்? சிறுவன்: நான் துறவியாக விரும்புகிறேன்; சுவாமி: அப்படியா! நீ சிறு பிள்ளையாக இருக்கிறாய். ஊருக்குச் சென்று எஸ்.எஸ்.எல்.சி. படித்து முடித்துவிட்டு சர்டிஃபிகேட் எடுத்துக்கொண்டு வா, சேர்த்துக் கொள்கிறேன்… தான் கொண்டு வந்த மதிய உணவை அவருக்குக் கொடுத்துவிடுகிறார். அந்தப் பாட்டி தினந்தோறும் இவர் வருகைக்காக காத்திருக்கிறார்… மாணவர்களுக்கு வார்டனாக இருந்ததால் அனைவரும் ‘வார்டன் சுவாமிஜி’ என்றே அழைத்து வந்தனர். தலைமை ஸ்தானத்தை அவர் தேடிச் செல்லவில்லை. அது தானே தேடி வந்தது…
View More அஞ்சலி: சுவாமி நித்யானந்தர் (தபோவனம்)Tag: சாமியார்
பாதிரியாரும் போற்றிய ஒரு இந்து சாமியார்
இந்த நட்புணர்வை உணர்ந்தவர்போல் உடனே அவர் என்னைத் தேடி வந்து கேட்டார்: “நீங்கள் அமெரிக்க மதப் பிரச்சாரகரா?”
”ஆம்” என்றேன்.
“எங்கள் நாட்டில் நீங்கள் ஏன் கிறுத்துவ மதத்தைப் போதிக்கிறீர்கள்?” என்று அவர் நேரடியாகக் கேட்டார்.
View More பாதிரியாரும் போற்றிய ஒரு இந்து சாமியார்குள்ளம்பாளையம்: மதமாற்றிகளை சிறைபிடித்த மக்கள் சக்தி!
பல்லடம் அருகே வீடு, வீடாகச் சென்று பிரசாரம் செய்து, கட்டாய மதமாற்றம் செய்ய முயன்ற ஐந்து பாதிரியார்களை பொதுமக்கள் சிறை பிடித்தனர். போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பாதிரியார்களை மீட்டு, போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்… தேவார திருவாசகங்களை ஓதினோம். ஒவ்வொரு வீடாகச் சென்றோம். வாயிலில் நின்றோம். வந்தவருக்கு அடிகளின் திருக்கரங்கள் நீறிட்டன. திருவாசகம் நூலின் படி கொடுத்தோம். சிறார்களுக்கு இனிப்புகள் வழங்கினோம்…
View More குள்ளம்பாளையம்: மதமாற்றிகளை சிறைபிடித்த மக்கள் சக்தி!மனிதப் பேராசையும் ஆன்மீக சந்தையும்: ஒரு பார்வை
அத்வைதத்தை அறிவியல் ஒப்புக்கொள்ளாமல் இருக்கலாம்.ஆனால் ஆஸ்த்மாவை அறிவியல் சரியாகவே கையாள்கிறது. இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்ளக்கூடாது… அர்ஜுனன் நம்மைப்போன்ற நிலையில் ஒரு கேள்வியை கேட்கிறான் – ஆன்மீகப்பயிற்சியில் ஈடுபடும் ஒருவன் நம்பிக்கை இருந்தும் நடுவில் வழி தவறினால் அதுகாறும் செய்தபயிற்சி வீண்தானா? என்று. இதற்கு பதில் அளிக்கும் பகவான் எவ்வளவு குறைந்திருந்தாலும் ஆன்மீகப்பயிற்சிகள் வீணாவதில்லை. தோல்வி அடையும் ஒருவன் அடுத்த பிறவியில் விட்ட இடத்திலிருந்து தன்னுடைய பயிற்சியை தொடருவான் என்று கூறுகிறார்.
View More மனிதப் பேராசையும் ஆன்மீக சந்தையும்: ஒரு பார்வைபுனிதத்தின் மீது மதச்சார்பின்மையின் தாக்குதல்
(தமிழில்: மது) ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்றைக்கு தலித் மக்கள் குடியிருக்கும் சேரிக்குள் நுழைந்ததாக செய்திகள் வந்ததோ அன்றே என் நண்பரிடம் சொன்னேன் “இந்த ஒரு செய்கை போதும். அவருக்கான கைது வாரண்டை அவரே எழுதிக்கொண்டு விட்டார்’ என்று… பொங்கி எழாத இந்திய மதங்களிடம் மட்டுமே மதச்சார்பற்ற நடுநிலையுடன் அரசு நடந்து கொள்ள முடியும், மற்ற பாலைவன மதங்களுடன் அல்ல என்பது தெளிவு. அரசை பயமுறுத்தாவிட்டால் அது அக்கறை கொள்ளாது என்கிற துரதிருஷ்டமான நிலைக்கு தள்ளப் பட்டுள்ளோம்.
View More புனிதத்தின் மீது மதச்சார்பின்மையின் தாக்குதல்வையகம் இதுதானடா
… அந்தப் புத்தகத்தைப் பயன்படுத்தி சற்றே ஆராய்ந்து பார்த்ததில், வெள்ளைத்தாதன்பட்டி பக்கம் உள்ள கோயில் வெறும் கோயில் மட்டுமல்ல. சுரங்க வாசலும்கூட என்று தெரியவந்தது. நான்கு நாயக்கர்கள் ஒட்டிக்கொண்டிருக்கும் நான்கு தூண்களுக்கு நடுவில் ரகசிய சுரங்கம் ஆரம்பிக்கிறது. நிலக்கோட்டை அரண்மனைக்கு இட்டுச் செல்லும் இரண்டு மூன்று சுரங்கங்களில் இதுவும் ஒன்று என்று யூகம். என்னைத் தவிர வேறு யாரிடமும் இதைப் பற்றி ஜெயக்குமார் சொன்னதில்லை ….
View More வையகம் இதுதானடாஆன்மீகச் சூறாவளி விவேகானந்தர் – 2
“சுதந்திரம் பெறுவதென்பது, இயற்கையை வெல்வதன்மூலம்தான், ஓடி ஒளிவதன்மூலம் அல்ல. கோழைகளுக்கு வெற்றி கிடையாது. அச்சத்தையும், துன்பத்தையும், அறியாமையையும் ஓடவைக்கப் போரிட்டே ஆகவேண்டும்”
View More ஆன்மீகச் சூறாவளி விவேகானந்தர் – 2