இந்த நெருக்கடி திடீரென்று உருவானதல்ல. ஆட்சிபீடத்தில் அமர்ந்த ராஜபக்சே சகோதர்களின் அரசு அந்த நாட்டின் பொருளாதாரத்தையும், நல்வாழ்வையும் நாசமாக்குவதற்கு என்னவெல்லாம் குளறுபடிகள் சாத்தியமோ எல்லாவற்றையும் “ரூம் போட்டு யோசித்து” செய்வது போல ஒவ்வொன்றாக செய்தது. இந்தியாவுடனான நெருக்கமான உறவிலிருந்து விலகி விலகி, பகாசுர சீனாவின் ராட்சச டிராகன் கரங்களில் தனது நாட்டின் துறைமுகம், கட்டமைப்புகள், வளங்கள் என ஏறக்குறைய எல்லாவற்றையும் அடகுவைத்து விட்டு இப்போது இலங்கை முழி பிதுங்கி நிற்கிறது.. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியர்களான நமக்கு இதிலிருந்து கிடைக்கும் பாடங்கள் முக்கியமானவை…
View More இலங்கையின் பொருளாதார நெருக்கடி: ஒரு பார்வைTag: சீனா
மீன்டும் வாலாட்டும் சீனா
எவ்வித அறிவிப்பும் இல்லாமல், சீன அதிபர் ஜீ ஜின்பிங் திபெத்திற்கு விஜயம் செய்துள்ளார். …
View More மீன்டும் வாலாட்டும் சீனாகொரோனா தடுப்பூசியை ஏன் மோதி அரசு முதலிலேயே அதிகமாக தயாரிக்கவில்லை?
பாரத அரசாங்கத்தில் வேலையில் இருக்கும் ஒரு அன்பர் என்னுடன் பகிர்ந்த தகவல்கள் இந்த விஷயமாக மிகுந்த தெளிவை அளிக்கிறது.. ஆரம்ப கட்டத்திலேயே முழுமையான பரிசோதனைகளுக்கு முன்னால் கோடிக்கணக்கான தடுப்பூசிகளை தயாரித்து மக்களுக்கு போட்ட பின்னர், பாதகமான எதிர்விளைவுகளை எதிர்கொண்டால் என்ன ஆகியிருக்கும்?… நிறவெறி மிகுந்த அமேரிக்க அரசின் மூலப்பொருள் ஏற்றுமதித் தடை என்ற சதி நடவாதிருந்தால், பாரதத்தில் இரண்டாம் கொரோனா அலையில் நெருக்கடியையும் பெருமளவில் பொதுமக்களின் சாவுகளையும் நாம் எதிர்கொள்ளத் தேவையே இருந்திருக்காது…
View More கொரோனா தடுப்பூசியை ஏன் மோதி அரசு முதலிலேயே அதிகமாக தயாரிக்கவில்லை?சீன வைரஸும் தேசப் பேரிடரும் – 1
வெளவால் போன்ற ஒரு உயிரிடமிருந்து நோய்க்கிருமி பரவ்வேண்டுமென்றால் கிட்டத்தட்ட 10 உருமாற்றங்கள் அடைந்த பின்னரே மனிதரைத் தாக்கும் வலிமையைப் பெற முடியும். இவையெல்லாம் நடந்திருந்தால் அதற்கான விஞ்ஞான, மருத்துவ சான்றுகள் கிடைத்திருக்கும். ஆனால் அதன் தடயமே இல்லை. ஆய்வகத்தில் செயற்கையாக உருவாக்கும் வெளவால் வைரஸ்தான் இப்படி நேரடியாக மனிதர்களைத் தாக்கும் பலம் பெறமுடியும்… இந்தத் திட்டமானது சீன விஞ்ஞானிகள் சிலரால் பொதுவெளியில் பகிரங்கமாக முன்வைக்கப்பட்டிருக்கிறது. அப்படிச் சொன்ன சில விஞ்ஞானிகள் மர்ம முறையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். உண்மையில் இப்போது நடப்பது மூன்றாம் உலகப் போர். உண்மையான எதிரியை விட்டுவிட்டு ஒவ்வொரு நாட்டு மக்களும் தமக்குள்ளாகவே கட்சி பிரிந்து அடித்துக்கொண்டு மடியப்போகிறார்கள்….
View More சீன வைரஸும் தேசப் பேரிடரும் – 1மோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை
இன்றைய சீன அதிபர் ஜின்பிங் பெரும் வரலாற்றுணர்வு மிக்க மனிதர். சீனா இழந்த கலாச்சாரச் செல்வங்களை மீட்டுக் கொண்டுவருவதில் மிகவும் ஆர்வமுடையவர் ஜின்பிங். அவரை, இன்னொரு வரலாற்று ஆர்வலரான பிரதமர் மோடி மாமல்லபுரத்திற்கு அழைத்துச் சென்றது பெரும் ஆச்சரியமில்லை… மோடி-ஜின்பிங் மாமல்லபுர சந்திப்பினால் இந்திய-சீனா இடையே உள்ள பிரச்சினைகள் தீர்ந்துவிடப் போவதில்லை. எனினும் இரண்டு பழம்பெரும் நாகரிகங்கள் தங்களின் கடந்தகால வரலாற்றை உணர்ந்து கொள்ள இந்தச் சந்தர்ப்பம் உதவியிருக்கிறது. இந்திய-சீனப் பொருளாதார யுத்தம் முக்கியமான பிரசினை. சீனா இந்தியாவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட எல்லா வழிகளிலும் முயல்கிறது. இன்றுவரை அதில் வெற்றியும் பெற்றிருக்கிறது என்றாலும் எதிர்காலத்திலும் இந்தியா இப்படியே இருக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை. ஏனென்றால் இன்றைக்கு உலக நாடுகளுடன் சுமுக உறவு வைத்திருக்கும் வலிமையான இந்தியாவை சீனர்கள் அடக்கி வைப்பது சாத்தியமில்லை…
View More மோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வைராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 7
பாரதம் செவ்வாய்க்கு முதல்தடவையே கோள் மங்கல்யானை அனுப்பி வெற்றிகண்டிருக்கிறது; விண்ணில் பறந்துசெல்லும் செயற்கைக்கோளை மிஷன் சக்தி ஏவுகணைமூலம் தாக்கியழித்திருக்கிறது; கண்டம்விட்டுக் கண்டம்தாவும் ராக்கெட்டுகளை வெற்றிகரமாகச் செலுத்தியிருக்கிறது; அணுகுண்டுத் தயாரிப்பிலும் தன்னிறைவு பெற்றிருக்கிறது. ஆகவே, பாரத்த்தின் விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள் திறமையில், ஆய்வுத் திறனில் உலக வல்லரசுகளுக்குச் சளைத்தவர் அல்லர் என்று கண்கூடாகத் தெரிகிறது.
View More ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 7ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்… – 1
அணு ஆயுதப்போர் இருநாட்டிற்குமே மாபெரும் கேட்டையும், அழிவையும், பல இலட்சக்கணக்கான உயிர்ச்சேதத்தையும், அணுக்கதிர்வீச்சினால் பல்லாண்டுகள் எவரும் அணுகமுடியாத நிலமையையும் விளைவிக்கும் [mutually assured destruction]. அரசு சரியாகச் செயல்பட முடியாத நிலையும் உண்டாகும். பயங்கரவாதிகள் கையில் அணு ஆயுதங்கள் சிக்க பாகிஸ்தான் காரணமாகக்கூடும் என்று டேனியல் பைமன் எழுதியுள்ளார்.
View More ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்… – 1ராகுல்ஜியின் சீன தூதரக சந்திப்பு: வெளிவராத உண்மைகள் :)
எங்க தலைவரு கொதிக்காரு, ஒமக்கு ஜோக்கா இருக்கு என்னா?… சரி, மேலே… போற வழில சீன தூதரகத்தப் பாத்துட்டாரு. அதென்னா சைனீஸ்ல எழுதீருக்கான்? நிறுத்துன்னுட்டாரு… நானும் போனேனா? உள்ள போனவரு “உங்க செஃப் எங்க?”ன்னு ரிசப்ஷன்ல கேட்டாரு… அவன் சீஃப்னு நினைச்சிகிட்டு தூதரைப் பாக்க வந்திருக்காருன்னு , ஒரு ஃபார்ம் கொடுத்து ’நிரப்பு’ன்னுட்டான். அதுல இங்க்லிஷ்லயும் சைனீஸ்லயுமா எழுதியிருந்திச்சா, அண்ணன் குழம்பிட்டாரு… ஒரு வெண்பா சொல்லுங்க. அப்படியே கட்சி இதழ்ல போட்டுருதேன்… கொடுத்துருவம்…
View More ராகுல்ஜியின் சீன தூதரக சந்திப்பு: வெளிவராத உண்மைகள் :)டிராகனின் சீறலும் சிங்கத்தின் கர்ஜனையும்…
இந்திய- சீனப் போர் மீண்டும் நிகழுமானால், இரு தரப்பிலும் பலத்த சேதம் நிச்சயம். ஆனால், அது 1962 போல இருக்காது என்பது சீனாவுக்கும் தெரியும். ஆயினும் இந்தியாவைச் சீண்டுவதன் மூலமாக ஆசிய பிராந்தியத்தில் தனது வல்லாதிக்கத்தை உறுதிப்படுத்த சீனா முயல்கிறது. இனிமேல் அந்த நாடகம் எடுபடாது என்பதை மோடி அரசு வெளிப்படுத்திவிட்டது. அமைதிக்காக கைகுலுக்கும் அதேசமயம், எல்லையில் வீரர்களைக் குவிக்கவும் இந்தியா தயார் என்பது உலகுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
View More டிராகனின் சீறலும் சிங்கத்தின் கர்ஜனையும்…சீறும் சிங்கம்… திகைக்கும் உலகம்!
ஜூன் 9-இல் மியான்மர் நாட்டின் எல்லைக்குள் புகுந்து இந்திய ராணுவம் நடத்திய…
View More சீறும் சிங்கம்… திகைக்கும் உலகம்!