சமூக நீதித் திருவிழா: கங்காவதரண மகோத்ஸவம்

பல தலைமுறைகள் தவம் செய்து பின்னர் பகீரதன் கங்கையைக் கொண்டு வந்தான். ஆனால் ஸ்ரீ தர அய்யாவாளோ தலித் சேவை மூலம் தனது வீட்டு கிணற்றிலேயே கங்கையை பிரவாகமெடுத்து வர செய்தார். ஹிந்துத்துவ ஞான கங்கை ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு இதயத்திலும் சாதியமெனும் அழுக்குகளை நீக்கி சமுதாய ஏற்றம் பெற உழைப்போம். அதற்கு இந்த கங்காவதரண மகோத்ஸவம் நமக்கு உத்வேகமளிக்கட்டும். கார்த்திகை அமாவாசை (2010 டிசம்பர் 5, ஞாயிறு), திருவிசநல்லூர், தஞ்சை மாவட்டம்…

View More சமூக நீதித் திருவிழா: கங்காவதரண மகோத்ஸவம்

சாதிகள் வக்கிரமடைந்தது எப்படி?

(மூலம்: ராம் ஸ்வரூப்) பண்டைய இந்தியாவில் சாதி கூட்டுறவு சித்தாந்தமாகவும், கலாசார அடையாளமாகவும் இருந்தது. ஆனால் இன்று அது மாபெரும் சமூக மோதல்களுக்கான சித்தாந்தமாக உருமாற்றப் பட்டுக் கொண்டிருக்கிறது… தற்போதைய தோட்டி சாதியினரின் பெயர்களையும், அவற்றின் உட்பிரிவுகளையும் வைத்து ஆராய்ந்து பார்க்கையில், இந்த சாதியின் உருவாக்கம் முகமதிய ஆட்சிக் காலத்தின் ஆரம்பத்தில் தான் நிகழ்ந்திருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது…

View More சாதிகள் வக்கிரமடைந்தது எப்படி?

மீண்டும் ஒரு சிறுமி எரிக்கப்பட்டாள்

(மூலம்: தருண் விஜய்) இந்த ஏழைகளுக்கு ஏதாவது போடு” என்று உங்களை உதாசீனம் செய்யும் நிலையில் ஒரே ஒரு நாள் வாழ்ந்து பாருங்கள். அலுவலகங்களில் வேலை மந்தமாக நடப்பதற்குக் காரணம் காட்டப்படுபவர்களாகவும் முட்டாள்களாகவும் மற்றவர் போடும் பிச்சையில் வாழ்பவர்களாகவும் நீங்கள் வாழ்ந்து பாருங்கள். அதன் பின்னால், வால்மீகியாக வாழ்வது என்றால் என்ன என்று…

View More மீண்டும் ஒரு சிறுமி எரிக்கப்பட்டாள்

நீதிக்கட்சியின் மறுபக்கம் – 02

எப்பொழுதுமே தாழ்த்தப்பட்டவர்களால் நடத்தப்பட்ட போராட்டங்களை – வரலாற்றை – தாழ்த்தப்பட்டவர்களால் போராடிப் பெற்ற உரிமைகளை – நீதிக்கட்சி, ஈவேரா இவர்களுக்கு உரிமையாக்கி விடுவார் இவர். இந்த புத்தகத்திலும் அதுமாதிரியான ஒரு வரலாற்றுப் புரட்டலை செய்திருக்கிறார் எஸ். வி. ராஜதுரை. அவருடைய நோக்கம் தாழ்த்தப்பட்டத் தலைவர்களின் வரலாற்றை எழுதுவதல்ல. அனைத்துச் சாதனைகளும் நீதிக்கட்சியால் மட்டுமே பெறப்பட்டது என்று நிலைநிறுத்தவே இந்தத் தகவல்களைச் சேர்த்திருக்கிறார்…

View More நீதிக்கட்சியின் மறுபக்கம் – 02

நீதிக்கட்சியின் மறுபக்கம் – 01

உண்மையிலேயே நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பாடுபடத்தான் தோன்றியதா?தாழ்த்தப்பட்டோரிடையே அரசியல் அனுபவம் உள்ளவர்கள் இல்லாது இருந்தார்களா? நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்தும் பணியைத் தொடர்ந்து செய்து வந்ததா? நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களுக்கு செய்த சாதனைதான் என்ன?

View More நீதிக்கட்சியின் மறுபக்கம் – 01

பண்டைக்குலமும் தொண்டக்குலமும்

நந்தனாரைத் தங்கள் சமயத் தலைவராக, நாயனாராக ஏற்று வழிபடும் சைவர்கள் எப்படி நோக்குகின்றார்கள்? சூழ்நிலையை எதிர்த்து வாழ்ந்தால், அந்த வாழ்க்கை போராட்டமாகத்தான் ஆகும். அத்தகைய போராட்ட வாழ்வை விரும்பி நந்தனார் மேற்கொண்டார்… சைவ மரபில் நெருப்பு சிவனுக்கு ஒரு குறியீடு. நெருப்பு சிவனுக்கு வடிவம். வேள்வியில் மூட்டும் தீக்கு சிவாக்கினி என்று பெயர்… யாழ்ப்பாணர் சிவனடியவர்களாகிய அந்தணர் கூட்டத்திலேயே இருந்தமையால் அவருக்கு சாதி குலம் பற்றிய சிந்தனைக்கு வாய்ப்பிருக்கவில்லை போலும்!

View More பண்டைக்குலமும் தொண்டக்குலமும்

சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 6

அண்ணல் அம்பேத்கர் வீர சாவர்க்கருக்கு எழுதுகிற கடிதத்தில் குறிப்பிடுகிறார்: “இந்து சமுதாயத்தை சீர்ப்படுத்த தீண்டாமை அழிந்தால் மட்டும் போதாது இன்றைய சாதிமுறையே முழுமையாக அழிய வேண்டும். இதனை உணர்ந்த வெகு சிலருள் நீங்களும் ஒருவர் என்பதனை அறிய எனக்கு ஆனந்தமாக இருக்கிறது.”… ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகளும், சுயநல சாதித் தலைவர்களும் இட ஒதுக்கீடு என்ற அம்சத்தையே ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி, இந்து சமூகத்தைப் பிளவு படுத்தும் முயற்சிகள் மேற்கொள்வதை ஒவ்வொரு இந்துவும் எதிர்க்க வேண்டும்.

View More சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 6

சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 5

“ஸ்ரீ ஐயன் காளியின் ஆக்ஞைக்கு இணங்க நமது சகோதரிகளின் கல்மாலைகளை அறுத்தெறியவே நாம் முழு சம்மதத்துடன் இங்கு கூடியிருக்கிறோம்.” அம்மேடையிலேயே அருவாள் கொண்டு கல்மாலைகள் அறுத்தெறியப் பட்டன.. ”எனது இனத்தவர்களுக்கு வீடோ, பூஜை நடத்த கோவிலோ கிடையாது. எனவே இவ்விஷயத்தில் வேறு சமுதாயத்தினருக்குச் செய்வதை விடக் கூடுதலாக எங்களுக்கு அரசாங்கம் செய்து தரவேணுமென்று வேண்டுகிறேன். எங்கள் தேவைகளுக்காக கிணறுகளும், கோயில்களும் நிர்மாணித்துத் தரவேண்டும்”

View More சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 5

மூவகை இந்துத்துவத்தின் முரணியக்கம்

மதமாற்ற மதங்களின் தொடர்ச்சியான பணபலமும், அதிகார பலமும் மிக்க தாக்குதலால் பாதிக்கப்படுபவர்கள் மூவகை இந்துத்துவர்களும்தான். ஆனால் இந்த சக்திகளை எதிர்கொள்ளும் நுட்பமான அறிவுத் தெளிவும், செயல் திட்பமும் அரசியல் இந்துத்துவத்தினாலேயே சாத்தியமாகிறது… சடங்கு இந்துக்களும் அரசியல் இந்துக்களும் அறிவின் தளங்களில் திரள்வதும், ஆன்மீக இந்துத்துவம் விரிந்து பரவி வலுவடைவதும் இதன் மூலமே சாத்தியமாகும்.

View More மூவகை இந்துத்துவத்தின் முரணியக்கம்

சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 4

ஒருநாள் ஐயன் காளி விளையாடிக் கொண்டிருந்த பந்து பக்கத்தில் இருந்த ஒரு நாயர் வீட்டில் விழுந்த போது அந்த நாயர் வந்து ஐயன் காளியை எச்சரித்தான். அன்று முதல் விளையாடுவதை விட்டுவிட்ட ஐயன் காளி ஆழமான மௌன சிந்தனையில் மூழ்கினார்… நினைவுகூர்ந்த ஐயன் காளி, ‘ஒரு புலையர் பெண் செய்த வேலையை, அட ஆறு நாயர் ஆண்கள் சேர்ந்து செய்ய முடியவில்லையே!’ என்றார்.

View More சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 4