இங்ஙனம் மூன்று மகத்தான ஆசாரிய பரம்பரையினரின் புனித சங்கமமாக விளங்கியவர் சுவாமி ஓங்காரானந்தர். சுவாமிகள் அடிப்படையில் ஒர் ஆசிரியர். அவரது மையமான பணி என்பது நமது ஞான நூல்களை ஆழமாகவும், முறையாகவும் தொடர்ச்சியாகவும் கற்பிப்பது என்பதாகவே இருந்தது… துறவியும் ஆன்மீகத் தலைவருமாக இருக்கும் ஒருவர் இந்து தர்மத்தை அவமதிக்கும் வெறுப்பு பிரசாரங்களுக்கு எந்தவகையில் உறுதியான எதிர்ப்பையும் எதிர்வினையையும் பதிவுசெய்ய முடியும், செய்ய வேண்டும் என்பதற்கான ஆதர்ச வழிகாட்டுதலாக சுவாமிகளின் இந்த நடவடிக்கைகள் அமைந்தன.
View More அஞ்சலி: சுவாமி ஓங்காரானந்தர்Tag: சுவாமி சித்பவானந்தர்
இந்துத்துவ அறிவியக்கம் என்று ஒன்று இருக்கிறதா?
‘ஒரு ரொமிலா தாப்பரை உருவாக்கியிருக்கிறீர்களா’ என கொக்கரிக்கிறார்கள் இடதுசாரிகள். இல்லை என்பதுதான் சந்தோசமான விசயம்.. அரசு அதிகார உதவியுடன் வெளிநாட்டு பல்கலைக்கு சென்று இந்திய வரலாற்றைப் படித்து அதை காலனிய-மார்க்சிய நோக்கில் மட்டுமே அணுகி தன்னை ஒரு அதிகார மையமாக மாற்றிய ஒரு ஆளுமையை இந்துத்துவம் உருவாக்கவில்லை. ஆனால் பீம்பெதகா குகைகளை கண்டுபிடித்து அவற்றுக்கு உலக குகையோவியங்களின் தொல்வரலாற்றில் சரியான இடத்தை ஏற்படுத்திக் கொடுத்த விஷ்ணு வகங்கர் ஆர்.எஸ்.எஸ்.காரர். ஆசியாவின் மிகச் சிறந்த தொல்லியலாளர் என சர்வதேச தொல்லியலாளர்களால் அறியப்பட்ட பிரஜ் பஸி லால் இந்துத்துவர்… இந்துத்துவர்கள் உருவாக்கும் சிந்தனைகள் என்பது அவர்களின் வாழ்க்கைகளேதான். ‘களப்பணி’, ‘அறிவியக்கம்’ என்பது போன்ற பாகுபாடுகளை கேட்கும் போது துணுக்குற செய்கிறது. பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவும் தத்தோபந்த் தெங்கடிஜியும் தாணுலிங்க நாடாரும் சுவாமி சித்பவானந்தரும் செமினார் சிந்தனையாளர்களல்ல. அவர்களின் வாழ்க்கைக்கும் அவர்கள் சிந்தனைக்கும் கோடு கிழிக்க முடியாது…
View More இந்துத்துவ அறிவியக்கம் என்று ஒன்று இருக்கிறதா?காயத்ரி ஜபம்: ஓர் விளக்கம்
காயத்ரி ஜபம் என்றால் காயத்ரி மந்திரத்தை இயந்திரத்தனமாக குறிப்பிட்ட எண்ணிக்கையில் “சொல்வது” என்றே பெரும்பான்மையினர் எண்ணுகின்றனர். அப்படிச் செய்வதும் ஆன்மீக ரீதியாக பலனளிக்கக் கூடியது, உள்ளத்தைத் தூய்மைப் படுத்துவது என்றாலும், ஜபம் என்ற உளப் பயிற்சியில் அது ஆரம்பகட்ட நிலை மட்டுமே. அடுத்தடுத்த படிகளுக்குச் செல்லும் விழைவும் முயற்சியும் கொண்டிருப்பதே சிரத்தையான மாணவருக்கு அடையாளம்… எந்த உதட்டசைவும் இன்றி மனதிலேயே மந்திரத்தை மீண்டும் மீண்டும் இசைப்பது மானஸிக ஜபம் எனப்படும். இதுவே உத்தமமானது என்று கருதப்படுகிறது.. பாரம்பரியமாக காயத்ரி ஜபம் செய்யும் முறையில், ஜபத்தைத் தொடங்கும் முன்பு மந்திரத்தின் உருவமாக காயத்ரி தேவியின் சகுண தியானம் பரிந்துரைக்கப் பட்டுள்ளது…
View More காயத்ரி ஜபம்: ஓர் விளக்கம்சுவாமி சித்பவானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு நூல் வெளியீடு
தமிழகத்தை வாழ்விக்க வந்த தவச்செல்வர்களில் முக்கியமானவர் சுவாமி சித்பவானந்தர் (1898 – 1985). சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு குறித்து 2-3 சிறு நூல்கள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. ஆனால் விரிவான வாழ்க்கை வரலாற்று நூல் இல்லை என்று இதுகாறும் ஒரு குறை இருந்து வந்தது. யதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா அவர்கள் எழுதி சமீபத்தில் வெளிவந்துள்ள ‘வேதாந்தம் தந்த வீரத்துறவி – சுவாமி சித்பவானந்தர் வாழ்க்கை வரலாறு’ என்ற நூல் அக்குறையைப் போக்கியுள்ளது. மூன்று பாகங்களாக, 1500 பக்கங்களில், சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றையும் விரிவாக இந்த நூல் விளக்குகிறது…
View More சுவாமி சித்பவானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு நூல் வெளியீடுகல்வி – வள்ளுவர் நெறியும் விவேகானந்தர் மொழியும்
திருவள்ளுவர் – சுவாமி விவேகானந்தர்- இருவருமே மனிதப் பிறவியின் மாண்பை உணர்த்தியிருக்கிறார்கள். தன்னம்பிக்கையின் அவசியத்தை எடுத்துக் கூறியுள்ளார்கள். சோம்பலைத் தூற்றியிருக்கிறார்கள்.முயற்சியின் மேன்மையைப் போற்றியிருக்கிறார்கள். ஒழுக்கத்தின் பெருமையை உணரச் Thiruvalluvar 1செய்திருக்கிறார்கள். நற்பண்புகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்திருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக கல்வியைப் பற்றிய கருத்துக்களை அழகாக வடித்திருக்கிறார்கள்.
View More கல்வி – வள்ளுவர் நெறியும் விவேகானந்தர் மொழியும்மாணிக்கவாசகர் : மொழி எல்லைகள் கடந்த ஆன்மநேய ஒருமைப்பாடு
குருதேவர் சொன்னார் ‘ஆத்ம சாதனத்துக்கு தாயுமானவர் பாடல்கள் பெரிது. பொருள் விளக்கத்துக்கு திருவாசகம். ஒரு முனிவரே வந்து பிரம்மதத்துவத்தை தமிழில் சொன்னது திருவாசகம். ’ ஸ்ரீ நாராயண குருதேவர் இதை சொன்னது சுவாமி சித்பவானந்தர் மனதில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 1928-29 இல் இந்த மகான்களின் சந்திப்பு நிகழ்ந்தது. 1960 இல் சுவாமி சித்பவானந்தரின் ‘திருவாசகம்’ விளக்க உரை நூல் வெளியானது… மாணிக்கவாசக சுவாமிகளின் திருவாசகம் காலம் மொழி எல்லைகளை கடந்து அந்த ஆன்மநேய ஒற்றுமையை நம் தேசத்திலே வெளிக்காட்டியது…
View More மாணிக்கவாசகர் : மொழி எல்லைகள் கடந்த ஆன்மநேய ஒருமைப்பாடு[பாகம் 24] அழுதால் அடையலாம்: சித்பவானந்தர்
ருத்ரன் என்பதன் பொருள் “அழச்செய்பவன்” என்பதாகும். உயிர்களை அழச் செய்வதன் மூலம் அவைகளைப் பண்பாடுறச் செய்வது ருத்ரனின் ஒப்பற்ற செயலாகிறது. உலகத்தவர் அழுகின்ற அழுகையின் உட்பொருளை ஆராய்ந்து பார்த்தால் அது துன்பத்தினை தவிர்த்து இன்பத்தினை நாடுவதாகவே இருப்பதைக் காணலாம்…. அழிந்து போகும் உலகப் பொருட்களை நாடி ஓடும் மனிதன் ஒருக்காலும் நிலைத்த இன்பத்தினைப் பெறமாட்டான். அதற்கு மாறாக அவன் மேலும் மேலும் துன்பத்தில் அகப்பட்டுப் பிறவிப் பெருங்கடலினூடே தத்தளிக்க வேண்டியதுதான்… யானே பொய், என் நெஞ்சும் பொய், என் அன்பும் பொய் – ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே…
View More [பாகம் 24] அழுதால் அடையலாம்: சித்பவானந்தர்[பாகம் 22] அமுதாக மாறிய மது
ஒருவனிடத்துள்ள அறிவு, அவன் அடைந்துள்ள பண்பாடு யாவும் அவன் பழகும் நண்பரையும், அவன் வாழும் சூழ்நிலையையும் பொருத்து உருவாகின்றது… தான் தெய்வத்தன்மை வாய்ந்தவன் என்பதை மனிதன் தெரிந்து கொள்ளுவதில்லை. மனிதனிடத்து மறைந்து கிடக்கும் தெய்வத்தன்மையை வெளிப்படுத்த உதவுவதே சமயம்… காந்தத்தைச் சார்ந்த இரும்பானது காந்தமயமாக மாறியமைவதைப் போல, சான்றோரைச் சார்ந்த கொடியவனும் நாளடைவில் சான்றோனாக மாறியமைகின்றான்… கிரீச சந்திரகோஷரிடம், “நீ செய்யும் செயல்கள் அனைத்தையும் நினைவு வரும்பொழுது மட்டும் எனக்கு அர்ப்பணம் செய்துவிடு” என்றார் ராமகிருஷ்ணர்…
View More [பாகம் 22] அமுதாக மாறிய மது[பாகம் 21] சத்தியகாமன், உபகோசலன்: உபநிஷதம் கூறும் உயர் ஞானியர்
பண்டைய ரிஷிகள் ஒருவனுடைய கோத்திரம் தெரிந்த பிறகுதான் அவனை சிஷ்யனாக ஏற்றுக்கொண்டு ஆத்மஞானம் புகட்டுவார்கள்… உண்மையை தெளிவுபடக்கூறிய உன்னை பிராம்மணன் அல்ல என்று சொல்வது தகுதியன்று… வாயு, அக்கினி, ஆதித்யன், பிராணன் ஆகிய நான்கினிடமிருந்தும் கிடைத்த ஞானத்தைவிட குருவிடம் உபதேசம் பெறுவதே சிறந்ததாக நினைத்தான்… அக்கினி வழிபாடு செய்து வந்த உபகோஸலருக்கு உரிய காலத்தில் அந்த அக்கினியே உபதேசம் செய்யும் என்று எண்ணியே ஸத்தியகாமர் யாத்திரை சென்றார்…
View More [பாகம் 21] சத்தியகாமன், உபகோசலன்: உபநிஷதம் கூறும் உயர் ஞானியர்[பாகம் 20] மேலாம் வாழ்வு, உண்மை காணல்
அவதார புருஷர்கள் பெரிய கப்பல் போன்று மற்றவர்களையும் கரையேற்றுவர். சச்சிதானந்தம் பிறப்புரிமை என்பதை ஒவ்வொருவரும் அறியவேண்டும். செயல் அனைத்தையும் கடவுளிடம் ஒப்படைக்கிறவர்கள், தங்களுடைய பிறப்புரிமையைப் பெறத் தகுதியுடையவர்களாகிறார்கள்… நம்முடைய கோட்பாட்டினின்று மாறுபட்டுள்ளது என்ற ஒரே காரணம் பற்றி, பிறர் கோட்பாடுகளை ஒதுக்குதல், புறக்கணித்தல் பொருந்தாது… அன்பு செய்து வாழும் தன் மனைவியைத் தன்பாற்பட்டவள் என்ற காரணம்பற்றி ஒருவன் தாழ்வாக எண்ணுவானாயின் அவனினும் குறைபாடுடையவன் எவன்?
View More [பாகம் 20] மேலாம் வாழ்வு, உண்மை காணல்