தென்னகத்தின்[தக்காணம்] செல்வச்செழிப்புள்ள இந்துக்கோவில்களைச் சூறையாடிக் கொள்ளையடிப்பதைக் குறிக்கோளாகக்கொண்ட போர்ச்சுகீசியருக்கு இந்துமாக்கடலின் அக்கரையிலுள்ள கன்னியாகுமரி, திருச்செந்தூரைவிட, திருக்கேதீஸ்வரம் எளிதான இரையாகவே அமைந்ததால், அவர்கள் அதில் வெற்றிபெற்றனர். சேதுப்பாலம் மற்றும் இராமேஸ்வரம் கோவிலின் அறங்காவலரான இராமநாதபுரம் சேதுபதியின் வலிமையான பாதுகாப்பே அங்கு அவர்களின் தோல்விக்குக் காரணமாக இருக்கலாம்.
“பொது ஆண்டுக்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்னர் இலங்கைக் கடற்கரையிலிறங்கிய இளவரசன் விஜயன், பல்லாண்டுகளாகச் சிதிலமடைந்து கிடந்த திருக்கேதீஸ்வரம் கோவிலைக் கட்ட ஏற்பாடுசெய்தான்.”
Tag: சேதுபதி
ஆழமில்லாத கடலும் ஆழமான நம்பிக்கைகளும்
ஆழமில்லாத அந்த கடல் பகுதியில் இந்த தேசத்தின் பல பகுதிகளில் வாழும் இந்துக்கள் தங்கள் பெற்றோர், முதாதையர்களுக்கு இறங்கி நின்று தர்ப்பணம் என்று அழைக்கபடும் அஞ்சலியை செலுத்துகிறார்கள். எண்ணற்ற இந்திய மொழிகளின் தொனியில் சம்ஸ்கிருத மந்திரங்கள் ஒலிப்பதை கேட்கமுடிகிறது. இங்கு செய்யும் இந்த புனித காரியத்தால் அவர்களது ஆத்மாக்கள் சாந்தியுடன் சொர்க்கம் அடையும் என்ற ஆழந்த நம்பிக்கை. வருபவர்களில் பலர் தங்கள் சிறுவயது குழந்தைகளுடன் வந்திருக்கும காட்சியை கண்டபோது அந்த பிஞ்சுமனங்களில் இப்படிவிதைக்கபடும் நம்பிக்கை விதைகள் தான் இந்து மதம் என்ற அழியாத விருட்சம் பல ஆயிரமாண்டுகளாக தொடர்ந்து வளர்கிறதோ என்ற எண்ணம் எழுந்தது.
View More ஆழமில்லாத கடலும் ஆழமான நம்பிக்கைகளும்மறவர் மண்ணில் மதமாற்றம் செய்த பாதிரியார்
பூமிக்கு உரிமையுள்ள ஒருவனையுமல்லவா இந்த பாதிரியார் மதம் மாற்றிவிட்டார் என்ற கோபம், வருத்தம். ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து கடைசியில் நம்மையுமா? சேதுபதியால் கோபத்தை அடக்கமுடியவில்லை… மறவர் படையினர் இந்தப் பாதிரியாரையும் அவருடன் வந்தவர்களையும் காளையார்கோயிலுக்குக் கொண்டு சென்றனர். அங்கு இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.. பாதிரியாரின்பால் இரக்கம் உண்டாகும்படி பிரசாரம் மேற்கொள்ளப் பட்டது மிகவும் திட்டமிட்டு நடத்தப் பட்ட செயல்பாடு..
View More மறவர் மண்ணில் மதமாற்றம் செய்த பாதிரியார்