முருகன் வள்ளி மீது கொண்ட காதலை விளக்கும் திருப்புகழ் பாடல்களில் சிருங்கார ரசம் கொப்பளித்துப் பொங்குகின்றது… நற்பண்புகளையுடைய தம்பதியரிடையே அமைந்த நற்காமம் பத்தியாக, சிவ- சக்தி ஐக்கிய அனுபவமாக அமையும்…அவரவர்க்கு உகந்த மார்க்கத்தைக் கைக்கொண்டு ஒழுகி இறையருளைப் பெற வைதிகம்,இந்து தருமம் அனுமதிக்கின்றது… கந்த சஷ்டி விரதத்தை வள்ளி திருக்கலியாண மகோற்சவமாகக் கொண்டாடி..
View More வள்ளிச் சன்மார்க்கம்Tag: தாந்திரீகம்
போகியை யோகி எனல்
உடலின் எல்லாச் செயல்பாடுகளுக்கும் ஒத்துழைத்தாலும் எதுவும் தனது சுய நலனுக்காக அல்ல. இதை ஆத்மாவுக்கு அனுசரணையாகப் பக்குவப்பட்ட உள்ளம் உணர்ந்திருக்குமானால் அதன் செயல், காமத்தின் விளைவாக நிகழும் செயலாகவே இருப்பினும் அது உள்ளத்தையும் உள் அந்தரங்கமான ஆத்மாவையும் பாதிப்பதில்லை. இதனால்தான் போகியை யோகி என்று கூற முடிகிறது.
View More போகியை யோகி எனல்மகத்துவம் மிக்க மஹாகும்பாபிஷேகம்
ஸ்வாமி ஸ்திரமாக பாலாலயத்தில் இருக்காமல் விரைவில் பணிகள் நடந்து கருவறையிலே எழுந்தருள வேண்டும் என்பதற்காக பாலஸ்தாபனக் கும்பாபிஷேகத்தை ஸரராசியிலே, தேய்பிறையிலே செய்கிற வழக்கம் இலங்கையில் உள்ளது… காப்பணிந்து கொண்ட குருமார்கள் கோயிற் சூழலை விட்டு காப்புக் கழற்றும் வரை செல்லலாகாது. சவரம் செய்தலாகாது. அதே வேளை அவர்களின் உறவுகளுக்குள் ஏற்படும் ஜனன மரண ஆசௌசமும் அவர்களை இக்காலத்தில் தாக்காது… ஆனால் அதியுன்னதமான இக்கிரியைகளைப் படம் பிடிப்பதை அனுமதிக்கக் கூடாது என்பதில் மாறுபாடான கருத்தில்லை.
View More மகத்துவம் மிக்க மஹாகும்பாபிஷேகம்தேவி சூக்தம்
மானுடர் உண்பதும் காண்பதும் சுவாசிப்பதும் சொல் கேட்பதும் எல்லாம் என்னால். அதை அறியார் ஆயினும் அவர்கள் என் உள் உறைபவரே… மனதில் எண்ணம் உருவாகி அது சொல்லாகப் பரிணமிப்பது பற்றிய ஆழ்ந்த உளவியல் தத்துவம் அது. வாக்கு அல்லது மொழி நான்கு படிநிலைகள் கொண்டது என்று தந்திர சாஸ்திரம் கூறுகிறது. பரா என்பது வாக்கின் ஆதி நிலை … கவிஞனின் தனி மனம் பிரபஞ்ச மனத்துடன் ஒன்றுபடும் தருணத்தில் ஏற்படும் ஆன்மிக பரவச நிலையிலேயே அத்தகைய கவிதை எழுகிறது. அது காலவெளியையும் கடந்து செல்கிறது.
View More தேவி சூக்தம்இந்து தாலிபானியம்…? – ஒரு எதிர்வினை
ஹுஸைனின் இந்த ஓவிய முறைமை அத்தகைய ஆன்மிகத் தேடலோ அல்லது வழிபாட்டு முறையோ எனக்கொள்ளும்படிக்கு ஜெயமோகனுக்கு எவ்வாறு தோன்றுகிறது? … இந்து மதத்தினரின் கண்டனத்துக்குள்ளாகும் ஒரு ஓவிய முறைமையை விடாப்பிடியாக செய்தே தீருவேன் என்று செய்பவர் வக்கிர மனத்த்தினர் தரும் மாபெரும் விலைகளுக்காக பொது நாகரிகம் கருதாத, மனித மன மரியாதையற்ற, கலை வியாபாரியாகவே இருக்க வேண்டும். அல்லது தன் மதத்தைக் காயப்படுத்தாமல் இந்து மதத்தினரைக் காயப்படுத்தி, தீவிரவாதிகள் குண்டுகளால் சாதிப்பதை தூரிகையால் சாதிப்பவராக இருக்க வேண்டும்.
View More இந்து தாலிபானியம்…? – ஒரு எதிர்வினைInvading the Sacred: அமெரிக்காவில் நிகழும் இந்துமத ”ஆய்வுகள்” – பகுதி (2)
உறவுமுறைகளின் கௌரவம் இப்படித்தான் பேணப்பட வேண்டும் என்பதில் நாம் மேலை நாடுகளைவிட கறாரான சமுதாயமே. என்றும் புராண உருவகங்களையும் நடைமுறை வாழ்க்கையையும் போட்டு ஒரு நாளும் யாரும் குழப்பிக் கொள்வதில்லை… ‘நம்மவர்’ – ‘மற்றவர்’ என்ற சமன்பாட்டின் தலையில் ஏற்றப்பட்டு ’நாம்’ அல்லாத ’மற்றவர்கள்’ சாத்தானைப்போலவே கருதப் பட வேண்டியவர்கள் என்ற மனப்போக்கு அடைந்த விபரீதம்.
View More Invading the Sacred: அமெரிக்காவில் நிகழும் இந்துமத ”ஆய்வுகள்” – பகுதி (2)