தமிழ்நாட்டின் நினைவிலேயே ஏறக்குறைய விலகிவிட்டிருந்த “திருநெல்வேலிப் புரட்சி”யையும் அதன் முக்கியப்புள்ளியான வாஞ்சிந்தாதனின் வீர வரலாற்றையும் குறித்து பல்லாண்டு கால உழைப்பைச் செலுத்தி, ஆதாரங்களைத் திரட்டி அதன் அடிப்படையில் மிகச்சொற்பமான புனைவுத்தன்மை சேர்த்து ரகமி எழுதிய நூல் இது. அச்சில் இல்லாதிருந்த இந்த நூலை, இந்த சுதந்திரப் பவள விழா ஆண்டில் பாரதி நூலகம், மறுபதிப்பு செய்துள்ளது. அதே பழைய எழுத்துருவில், படங்களுடன் சேர்த்து வெளியிருப்பது மிகச் சிறப்பு..
View More ரகமியின் வீர வாஞ்சி: மறுபதிப்புTag: தேசபக்தர்கள்
சாவர்க்கர்: வரலாற்றின் இருட்டறையிலிருந்து ஓர் எதிர்க் குரல் – நூல் வாசிப்பு அனுபவம்
இந்த பாரத மண்ணுக்கு , அதன் விடுதலைக்கு , அதன் நெடிய பண்பாட்டுக்கு – தன்னுடைய உடல் , பொருள் மற்றும் வளமான எதிர்காலம் முதலியனவற்றை ஆகுதியாக அளித்த மகத்தான ஒரு செயல் வீரரின் தியாகத்தை என்னுடைய எழுத்திலே கொண்டு வர இயலாது என்ற அவநம்பிக்கையை இந்த நூல் என்னுள் தோற்றுவித்தது.. அருமையான இந்த நூலினை எழுதியவர் விக்ரம் சம்பத். பன்முகத் திறன்கள் பெற்ற ஆளுமையுள்ள ஒரு வரலாற்று அறிஞர் . இந்த நூலில் ஏரளாமான தரவுகள் / ஆவணங்கள் கொண்டு அற்புதமான இதனை வடிவமைத்து உள்ளார்.. பிரிட்டிஷ் காலனிய ஏகாதிபத்திய ஒடுக்குமுறை, சாவர்க்கரை மிகவும் துன்புறுத்தி விட்டது . இந்தக் கொடுமை “ மகாத்மா ” காந்திக்கும் “ பண்டித ” நேருவுக்கும் கூட நிகழவில்லை. ஒன்றன்பின் ஒன்றாக இரு ஆயுள் தண்டனைகள் பெற்ற ( 50 ஆண்டுகள் ) சாவர்கர் ஒரு கைதி என்ற முறையிலும் , ஓர் ஹிந்து என்ற முறையிலும் , ஓர் சித்பவன் பிராமணர் என்ற முறையிலும் எவ்வாறு தன்சிறைவாசத்தை எதிர்கொண்டார் ?…
View More சாவர்க்கர்: வரலாற்றின் இருட்டறையிலிருந்து ஓர் எதிர்க் குரல் – நூல் வாசிப்பு அனுபவம்மண்ணுருண்டையா மாளவியா?
மதன் மோகன் மாளவியா சனாதன வைதீக இந்து மதத்தை காப்பாற்ற அகில பாரத இந்து மகாசபையை உருவாக்கியவர். அவர் வட்டமேசை மாநாட்டுக்காக கடல் கடந்து இங்கிலாந்து சென்ற போது இந்த தேசத்தின் மண்ணுருண்டையை கொண்டு சென்றார். எனவே அவர் மண்ணுருண்டை மாளவியா என அழைக்கப்பட்டார். தலித் மக்களின் ஆலய நுழைவு போராட்டத்தை எதிர்த்தார். குழந்தை திருமணத்தை ஆதரித்தார். இவர் ஏற்படுத்திய பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஒரு இந்து நிறுவனம் மட்டுமே. இப்படிப்பட்டவருக்கா பாரத ரத்னா கொடுப்பது? இதைத் தமக்கே உரிய வசை பாணியில் எழுதியுள்ளார்கள்… ஆனால் உண்மை என்ன?
View More மண்ணுருண்டையா மாளவியா?அமரர் தாணுலிங்க நாடார் சொன்ன கதைகள்
ஐயா தாணுலிங்க நாடார் அவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொதுக் கூட்டங்களில் பேசும்போது சின்னக் கதைகள் மற்றும் உவமைகள் மூலமாக தனது கருத்துக்களை எடுத்து வைப்பார். அவற்றில் சிலவற்றைக் கீழே தருகிறோம்…. தமிழகத்தில் இந்து எழுச்சிக்கு வித்திட்ட முன்னோடிகளில் தலையாய தலைவர் தாணுலிங்க நாடார் (1915-1988) அவர்கள். தன் வாழ்நாள் இறுதிவரை இந்துமுன்னணியின் தலைவராகப் பணியாற்றி வழிகாட்டியவர். 1957 : நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினர், 1964 : நாடாளுமன்ற ராஜ்யசபை உறுப்பினர், 1982: இந்து முன்னணித் தலைவராக பொறுப்பேற்றார்….
View More அமரர் தாணுலிங்க நாடார் சொன்ன கதைகள்தனித்து விடப்பட்ட பாதையில் தனித்து நடந்து வந்த ஒரு மனிதர்
கடந்த சனிக்கிழமை செப்டம்பர் 7-ம் தேதி பி.என். ஸ்ரீனிவாசன் தனது 85-ம் வயதில் காலமானார் என்ற செய்தியை நான் இணையத்தில் தான் படித்தேன். பி.என். ஸ்ரீனிவாசனும் இது பற்றியெல்லாம் கவலைப் பட்டவரில்லை.அப்படி ஒரு ஜீவன், அப்படி ஒரு வாழ்க்கை. தான் வாழும் காலத்தின் தர்மங்களை, வாழ்க்கை முறைகளை, நம்பிக்கைகளைப் பற்றிக் கவலை கொள்ளாது தன் வழியில் தான் நினைத்ததை முடிந்த அளவில் செயல் படுத்தி வந்தவர். அவர் வேறு ஒரு யுகத்தில், யுக தர்மத்தில் வாழ்ந்தவர்….சென்னை மாநிலக் கல்லூரிக்கு எதிரே மெரினா கடற்கரையில் உள்ள திடலுக்கு திலகர் கட்டம் என்ற பெயரை மீண்டும் வைக்கக்கோரி உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடினார்… நமக்கெல்லாம் மறந்துவிட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகள், யாருக்கு ந. சோமையாஜுலுவை நினைவில் இருக்கும்? ஒரு காலகட்டத்தில் தென் மாவட்டங்களில் சுதந்திரப் போராட்ட காலங்களில் தன் பெயரை பிரகாசிகக்ச் செய்தவர். அவரைப் பற்றி ஒரு நீண்ட கட்டுரை, பாரத மணியில் வந்திருந்தது…
View More தனித்து விடப்பட்ட பாதையில் தனித்து நடந்து வந்த ஒரு மனிதர்17-ஜூன் 2012: வீர வாஞ்சி நாதன் பலிதானத்தின் 100வது ஆண்டு
நெல்லைச் சீமை ஈன்றை வீரத் திருமகனின், தியாகச் சுடரின் புனித நினைவுக்கு எமது இதய அஞ்சலி.
நண்பர்களுக்கு: இன்றோ அல்லது இந்த வாரமோ நீங்கள் ஏதாவது கூட்டமோ பொது நிகழ்ச்சியோ நடத்துவதாக இருந்தால், இந்த தகவலை அங்கு வந்திருக்கும் தமிழர்களுக்கு மறக்காமல் குறிப்பிடவும். விரும்பினால் 1 நிமிட மௌன அஞ்சலியும் அனுஷ்டிக்கலாம்…
வந்தே மாதரம்!
View More 17-ஜூன் 2012: வீர வாஞ்சி நாதன் பலிதானத்தின் 100வது ஆண்டுஎழுமின் விழிமின் – 13
ஹிந்து சமயத்தைப் போல உயர்வாக மனித குலத்தின் மேன்மைச் சிறப்பைப் பற்றி வேறெந்தச் சமயமும் இந்த உலகத்தில் போதிக்கவில்லை. அத்துடன் ஏழை எளியவர்களின் கழுத்தின் மீது ஏறி மிதிக்கிற சமயமாக இவ்வுலகில் ஹிந்து சமயத்தைப் போல வேறெதுவும் இல்லை. இக்குற்றத்திற்குச் சமயம் பொறுப்பு அல்ல; ஹிந்து சமயத்திலுள்ள வெளி வேஷக்காரர்கள், வறட்டு ஆசாரவாதிகள் ஆகியோரே காரணம்… அறியாமை எனும் இருண்ட மேகம் இந்நாட்டைக் கவிந்திருக்கிறதென்பதை உணர்கிறீர்களா? அவ்வுணர்ச்சி உங்கள் மன அமைதியைக் குலைத்து, உங்களுக்குத் தூக்கமில்லாமல் செய்துவிடுகிறதா? அது உங்கள் குருதியில் கலந்து, இரத்தக் குழாய்களில் ஓடி, இதயத் துடிப்போடு சேர்ந்து துடிக்கிறதா?…
View More எழுமின் விழிமின் – 13