பிறக்கும் எவரும் இறப்பது இயற்கையெனினும் அடல்ஜியின் மரணச்செய்தி மிகவும் வருந்த வைக்கிறது. அவரைப் போல சீரிய சிந்தனையும், நேர்மைத்திறமும் கொண்ட தலைவர்கள் இந்தியச் சூழலில் மிக, மிக அபூர்வமானவர்கள்.. தங்க நாற்கர திட்டம், ஜிஎஸ்டியை ஆரம்பித்தது, தகவல்தொழில்நுட்ப துறைக்கு உயிரூட்டியது, தனிப்பட்ட ஏற்றுமதி பகுதிகளை ஆரம்பித்து இந்தியாவின் வளர்ச்சிக்கு அடிகோலியது, கிராம சாலைத்திட்டம் கொண்டு வந்தது, ஏழைகள் அனைவருக்கும் உணவு திட்டம் என பெரும் திட்டங்களை கொண்டு வந்தவர் வாஜ்பாய். அவர் கொண்டு வந்த இந்த அந்த்யோதயா உணவுத் திட்டம் தான் இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக பசிப்பிணி போக்கி எல்லோருக்கும் உணவு என்பதை ஆரம்பித்து வைத்தது.. நாட்டுக்காகவும் ஏழை எளிய மக்களுக்காவும் பாடுபட்ட மகானை வழியனுப்பும்போது வாஜ்பாயின் கொள்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி எடுப்போம். நமக்காக காலமெலாம் உழைத்த ஆன்மா நீத்தோர் இடத்திலிருந்து நமக்கு அருளட்டும்…
View More மாபெரும் தேசிய நாயகர் அடல் பிஹாரி வாஜ்பாய்: அஞ்சலிTag: பாரதிய ஜனதா
ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பு: ஒரு பார்வை
ரஜினி காந்த் இந்திய தேசியவாதத்துக்கு இணக்கமானவராகவே இதுவரை இருந்துவந்துள்ளார். அவர் பி.ஜே.பி.யின் ஆசியுடன் களத்தில் குதித்திருக்கிறார் என்று நம்ப அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றன. தமிழ் தேசியப் பிரிவினைவாத சக்திகள் அவரைக் கட்டம் கட்டி எதிர்க்கத் தொடங்கியிருப்பதிலும் பாஜக அவருடைய வருகையை வரவேற்று அறிக்கைகள் விட்டிருப்பதிலும் இருந்து இந்த யூகமே உண்மையாக இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதுபோல் தெரிகிறது. ஆனால், தமிழக, இந்திய அரசியலை தமிழக இந்திய சக்திகள் தீர்மானிக்கவில்லை என்று நம்ப நூற்றுக்கணக்கான நிகழ்வுகள் நடந்தவண்ணம் இருக்கின்றனவே… ரஜினியின் அரசியல் பிரவேசம் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பது அவரைப் பின்னின்று இயக்குபவர்கள் யார் என்பதைப் பொறுத்தே அமையும். ஏனென்றால், ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக திரை மறைவு சக்திகளுக்குக் கிடைத்த பொன் முட்டையிடும் வாத்து அவர்….
View More ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பு: ஒரு பார்வைதமிழகமும் பா.ஜ.க.வும் – பிணைக்கப் பட்ட எதிர்காலம்
இங்கு மிகப்பெரிய சந்தேகம், முதலில் பா.ஜ.கவினருக்கு தமிழகத்தில் காலூன்ற வேண்டும் எனும் எண்ணம் இருக்கிறதா என்பதே. தன்னை நிலைநிறுத்திக்கொள்ள விழையும் ஒரு கட்சி இதைப்போன்றதொரு அமைதியைக் கடைப்பிடிப்பது நல்லதல்ல…. இன்று தமிழகத்தில் உருப்படியான அரசியல் சக்தியாகத் தெரிந்தது அ.இ.அ.தி.மு.க மட்டும் தான். இந்த சூழலில் தமிழக அரசியலில் ஒரு ஆற்றல் வெற்றிடம் நிலவுவதை நம்மால் உணரமுடிகிறது. அந்தவெற்றிடத்தை நிரப்புவது யார்? அந்த இடத்துக்கான போட்டியாளர்கள் யார்?யார்?… இஸ்லாத்தின் பெயரால் இயங்கும் தீவிரவாத இயக்கங்கள். இனத்தையும், சமுதாயத்தையும், இயற்கையையும் காப்பவர்களாகக் காட்டிக்கொண்டு,கிறிஸ்தவ அமைப்புகளுக்கும் மேற்கத்திய சக்திகளுக்கும் கையாள்களாக இருக்கக்கூடிய அமைப்புகள்…இந்தப் பட்டியலைப் பார்த்தாலே தமிழகம் சந்தித்துக்கொண்டிருக்கும் அபாயம் புரியும்….
View More தமிழகமும் பா.ஜ.க.வும் – பிணைக்கப் பட்ட எதிர்காலம்மாபெரும் வெற்றியின் மகத்தான விளைவுகள்…
1984-க்குப் பிறகு இந்திய அரசியலில் நிலவிய குழப்பமான, அரசியல் எண்ணிக்கை விளையாட்டுக்கு வழிவகுத்த சூழல் இத்தேர்தலில் காணாமல் போயிருக்கிறது. அரசின் கொள்கை முடிவுகளில் சிறு கட்சிகள் கூட ஆதிக்கம் செலுத்தும் நிலையையும், பாஜகவின் மகத்தான வெற்றி மாற்றி அமைத்திருக்கிறது…. மக்களிடம் காங்கிரஸுக்கு எதிராக பிரசாரம் செய்து வென்று, பிறகு மக்கள் முதுகில் குத்துவது போல காங்கிரஸை ஆதரித்துவந்த பல கட்சிகளுக்கும் இத்தேர்தல் ஆப்பு வைத்துவிட்டது… இஸ்லாமியர்களும் கூட குறிப்பிடத்தக்க அளவில் பாஜகவுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் வாக்களித்து, தங்கள் மீதான அபவாதத்தைப் போக்கிக் கொண்டிருக்கிறார்கள். சிறுபான்மையினரை தாஜா செய்யும் போக்கிற்கு இத்தேர்தல் முடிவு கண்டிருக்கிறது…
View More மாபெரும் வெற்றியின் மகத்தான விளைவுகள்…பாஜகவில் பிதாமகர்கள்
காலம் மாறி வருவதையும் துடிப்பும் ஆற்றலும் ஓரளவு குறைந்த வயதும் கூடிய தலைவர்களை இன்றைய பாரதம் எதிர் நோக்கிக் காத்திருக்கிறது. வாக்களர்களில் பெரும்பாலோனோர் இளைஞர்கள். எதிர்காலம் குறித்த கனவுகளையும் அதை நோக்கி நாட்டைக் கொண்டு செல்லக் கூடிய தலைவர்களையும் எதிர் நோக்கிக் காத்திருப்பவர்கள்…. இது நாள் வரை மதிப்பையும் மரியாதையையும் பிரமிப்பையும் ஈட்டிய அந்த முது பெரும் தலைவர்கள் எல்லோரும் சாதாரண திராவிடக் கட்சி அரசியல்வாதிகள் போல தேர்தலில் போட்டியிடப் பிடிவாதம் பிடிப்பதும் இந்த சீட்டுதான் வேண்டும் என்று சிறு பிள்ளை போல அடம் பிடிப்பதும் அவர்கள் மீது பெரும் மரியாதைக் குறைவையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றன….
View More பாஜகவில் பிதாமகர்கள்திக்குத் தெரியாமல் தவிக்கும் ராகுல்!
கடந்த 2013 ஜனவரி மாதம் ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் “பதவி அதிகாரம்…
View More திக்குத் தெரியாமல் தவிக்கும் ராகுல்!இந்தியாவை இணைக்கும் இரும்புத் துகள்கள்
இந்த இயக்கத்தின் உற்சாகம் நாடெங்கும் பா.ஜ.க தொண்டர்களிடமும், பொதுமக்களிடமும் திட்டமிட்டதை விடப் பெரிதாக, தீயாகப் பற்றிக் கொண்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் ஒற்றுமை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்று, 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்…. ஒவ்வொரு கிராமத்தின் மண்ணும், அந்த மண்ணின் விவசாயிகளின் பயன்பாட்டில் இருந்த இரும்புத் துகள்களும் சேகரிக்கப் படும். அந்த மண் ஒற்றுமைச் சிலையின் பீடமாகும். அந்த இரும்புத் துகள்கள் உருகி, இறுகிப் பிணைந்து இந்தியாவின் இரும்பு மனிதரின் சிலை உருக்கொண்டு எழும்… இதுவரை மோதி மக்களிடம் உரையாடிக் கொண்டிருந்தார். இப்போது மக்கள் மோதியின் கோரிக்கையின் பேரில் தேச ஒற்றுமைக்காக ஓடப் போகிறார்கள். இது எத்தகைய எழுச்சியை உருவாக்கும் என்று உணர்கிறீர்களா?…
View More இந்தியாவை இணைக்கும் இரும்புத் துகள்கள்பாட்னா: ஏழு குண்டுவெடிப்புகளும் எதிர்கால இந்தியாவின் எழுச்சிப் பிரகடனமும்
எல்லாவிதமான தடுப்பு முயற்சிகளும் வேலை செய்யாத கடைசி நிலையில் மோடியின் பிருமாண்டமான கூட்டத்தை நிறுத்தும் கடைசி முயற்சியாக இஸ்லாமிய பயங்கரவாதத்தின் துணையை நாடியிருக்கிறார் நிதிஷ். பீஹார் மாநில போலீஸ் இப்படி அலட்சியமாக இருந்திருக்க நியாயமில்லை. எந்தவிதமான குறைந்த பட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அளிக்க பிடிவாதமாக மறுக்கச் சொல்லி உத்தரவு இருந்திருக்கிறது….. அன்று மோதியும் பிற பா ஜ க தலைவர்கள் அவர்களுக்கு மேலாக அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான மக்களும் காட்டிய பொறுப்புணர்வும் முதிர்ச்சியும் இந்திய ஜனநாயகத்தின் மீதும் அதன் மக்களின் மனப்பக்குவம் மீதும் மாபெரும் நம்பிக்கையை உருவாக்கி விட்டன… மக்கள் எந்தவிதமான வன்முறையும் கலவரமும் இல்லாமல் அமைதியாக எவருக்கும் இடையூறு விளைவிக்காமல் பாதுகாப்புடன் வீடு திரும்ப வேண்டும் என்று அக்கறையுடன் அவர் அன்று விடுத்த கோரிக்கை இந்தியாவுக்கு ஆண்டவன் அனுப்பி வைத்துள்ள ஒரு கொடை அவர் என்பது உறுதியானது. அவரையும் இந்தியா தவற விடுமானால் அதற்கு மன்னிப்பே இல்லாமல் போய் விடும். ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்த பின்னும் வாராது போல வந்த மாமணியைத் தோற்பதற்கு இந்தியாவுக்கு நேரமும் வளமும் கிடையாது…
View More பாட்னா: ஏழு குண்டுவெடிப்புகளும் எதிர்கால இந்தியாவின் எழுச்சிப் பிரகடனமும்வாழ்த்துக்கள் நரேந்திர மோடி!
குஜராத் மாபெரும் தலைவருக்கு மூன்றாவது முறையாக தொடர்ந்து வெற்றி மாலை சூட்டியிருக்கிறது. நாளைய இந்தியா 2014-ல் தில்லியில் அவரை வரவேற்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது…. நரேந்திர மோடியைப் போன்றதொரு தலைவர் நமக்கு அடிக்கடி வாய்ப்பதில்லை. ஒரு தேசத்தின் அரசியல் வரலாற்றில், அதன் கொந்தளிப்புகளின் ஊடாக, மக்களின் கனவுகளையும் அபேட்சைகளையும் சுமந்து, தங்கள் சுய உழைப்பாலும் தியாகத்தாலும் இலட்சியவாதத்தாலும் மேலேறி வருகிறார்கள் அவர்கள். அந்தத் தருணத்தில் வரலாற்றின் போக்கையே மாற்றுகிறார்கள். கனவுகளை விதைத்து, அவற்றை மெய்ப்படச் செய்கிறார்கள்…
View More வாழ்த்துக்கள் நரேந்திர மோடி!தாமரை சங்கமம் – மகத்தான வெற்றியின் பின்னணி
பாஜக-வின் தாமரை சங்கமம் (மே 10, 11) மிக வெற்றிகரமாக முடிந்தது பற்றி அனைவரும் மகிழ்ச்சி கொண்டிருக்கும் வேளையில், அந்த வெற்றியின் படிப்படியான திட்டமிடல் பற்றியும், அந்த வெற்றித்தேரை ஒவ்வொரு படிநிலைக்கும் கவனமாகவும், ஆழ்ந்த ரசனையோடும், தீவிர முனைப்போடும் கூடிய கடின உழைப்பினால் நிலைசேர்த்த எண்ணிலடங்காத் தொண்டர்களையும், மாவட்ட, மாநில நிர்வாகிகளையும் நன்றியுடன் நினைக்கும் முகமாகவே இந்தக் கட்டுரை… அத்தனை ஊர்களிலிருந்தும் லட்சக் கணக்கில் திரண்ட தொண்டர் கூட்டம், அத்தனை செலவும் 100 சதம் தொண்டர்களின் கைக்காசே…
View More தாமரை சங்கமம் – மகத்தான வெற்றியின் பின்னணி