கானக மண்ணிலேயே இயல்பாக உருவான காந்தாரா படத்தின் தொன்மம் போல அல்லாமல், அயோத்திதாசரின் கட்டற்ற கற்பனையில் எழுந்த இனவாத கட்டுமானம் கொண்ட டுமீல் புராணங்களிலிருந்து பா.ரஞ்சித் உருவாக்கியுள்ளது தங்கலானின் தொன்மம்.. இந்தப் படத்தின் அரசியல் வெறுப்பு ரீதியானது, இது முன்வைக்கும் வரலாற்றுக் கதையாடல் பொய்யானது. அதற்கு சான்றாக, மதுரைப்பிள்ளை, சுவாமி சகஜானந்தர், எம்.சி.ராஜா, ஜி.எஸ்.லட்சுமண ஐயர் போன்றோரின் வாழ்க்கை வரலாறுகள் உள்ளன. இவர்களின் வரலாறுகளை எல்லாம் நாம் திரைப்படமாக்காத வரை…
View More தங்கலான்: திரைப்பார்வைTag: பா.ரஞ்சித்
எப்போது திரும்பப்போகிறாய் தங்கலானே?
தலித் பட்டிக்குள் அடைக்கப்பட்ட – இத்தனை பேரின் – வாழ்க்கையும் வேறு; வரலாறும் வேறு – நிலம் பறிபோன பின்னும் – பிரிட்டிஷாரால் பீ அள்ளவைக்கப்பட்டவர்களில் – நீ இருந்ததில்லை.. ஆதித்தாய் அடிவயிற்றில் இருந்து கத்தியபடி – நம் கண் முன்னே கதறி அழுது சுட்டிக்காட்டுகிறாள் – அவள் கதறல் உன் காதில் விழவில்லையா?…
View More எப்போது திரும்பப்போகிறாய் தங்கலானே?தங்கலான்
உள்ளடக்கம் சார்ந்துமே ரஞ்சித்தின் அரசியல் நெடி அடிக்கும் காட்சிகள் நீங்கலாக படம் நன்றாகவே இருக்கிறது. ஆனால், அந்த அரசியல் என்பது மலினமானதாக இருப்பதாலும் அது படுசெயற்கையாகக் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதாலும் இந்தப் படம் சுமார் என்ற தளத்துக்கு இறங்கிவிடுகிறது. மேல்பூச்சான கலை இனிப்பு கரைந்த பின் கசப்பு அரசியல்தானே.
View More தங்கலான்திராவிட அரசியலின் மூன்று பரிமாணங்கள்
பா.ரஞ்சித்திடம் பெரியார் முகமூடியை போடு இல்லையென்றால் நீ ஜாதி வெறியன் என்ற லாவணியை பாட ஆரம்பித்திருக்கிறார்கள். இது மெல்ல விவாதமாவது தமிழகத்தின் தலையாய தேவை. இன்றும் பெரியாரியம் யாருக்கு ஒரு முகமூடி என்பதை அரசியல் எதார்த்தம் சொல்லும். பிற்படுத்தப்பட்ட எழுச்சியும், அதிகாரமும் பட்டியல் ஜாதிகளுக்கு உறுத்தக்கூடாது என்ற ஏற்பாடு மட்டுமே பிராமண வெறுப்பு பேசுகிற திராவிடத்தின் மைய நோக்கம்… நீதிக்கட்சி இந்து மதத்திற்கு விரோதமாக இல்லை, ஆனால் தி.க/திமுகவின் இந்து மத விரோத கருத்துகள் மிஷனரி, இஸ்லாமிய மதமாற்றும் அரசியலுக்கு பயன்பட்டன. பிற்படுத்தப்பட்ட அதிகார எழுச்சி, ஆபிரஹாமிய மதமாற்ற குழுக்கள் மட்டுமே இன்றும் பெரியார் என்கிற முகமூடியை வேறு வேறு காரணத்திற்காக நீட்டித்துக் கொண்டிருக்கின்றன… ஆக, அன்று திமுக இன்று சீமான் பேசுவது போல இன்னும் சிறப்பாகவே பேசியது. தமிழர் ஆட்சி ஒப்பற்ற பேராட்சி ஆனால் பிராமணியம் சதி செய்து ஒழித்துவிட்டது என்று முன் வைத்தது. இன்று அதை மாற்றி சீமான் தெலுங்கர்கள் ஒழித்துவிட்டார்கள் என்கிறார். ஆனால் வரலாறு என்னவோ யாராவது தண்ணீர் தரமாட்டார்களா என்று சாவின் நொடியில் இழுத்துக் கொண்டிருக்கிறது இந்த நொடி வரை…
View More திராவிட அரசியலின் மூன்று பரிமாணங்கள்காலா: திரைப்பார்வை
ஒரு கொண்டாட்டமான திரைப்படத்தை மட்டும் அணுகும் நோக்கில் இனி ரஜினியின் படங்களை அணுகமுடியாது. அத்திரைப்படத்தை எடுப்பவர்கள் யார், அவர்களது அரசியல் என்ன என்பதைக்கொண்டே தீர்மானிக்கமுடியும்… மிகத் தெளிவாக தமிழர்களை, ராவணனை ஹிந்துக்களுக்கு எதிரானவர்கள் என்று காட்டுகிறார்கள். அதற்கான காரணமாக ராமனைக் கெட்டவனாகச் சித்திரிக்கிறார்கள். இந்த அரசியலுக்கு அப்படியே தன்னை ஒப்புக்கொடுத்திருக்கிறார் ரஜினி. ஆனால் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ரஜினி என்றுமே திரைப்படத்தில் எடுப்பார் கைப்பிள்ளைதான்…இப்படத்தில் ரஜினி காவல்துறையை அடிக்கிறார். கொல்லுகிறார். கொல்லத் துணை நிற்கிறார். புரட்சிக்குத் துணை போகிறார். ஒட்டுமொத்த அரசுக்கு எதிரான போராட்டங்களை ஆதரிக்கிறார். ஆனால் நிஜத்தில் ரஜினி இவை அத்தனையும் மறுத்தார்…
View More காலா: திரைப்பார்வை