பிற சமயத்தார் சைவத்திற்குத் தீங்கு இழைக்கத் தொடங்கும் அவ்வப்போது, தம் வாக்கு வல்லபத்தால், அவர்களை வென்று சைவப் பயிர் வளர்த்த வைதிகசைவக் காவலர் அப்பைய தீட்சிதர்… ஊர்ணநாபி (சிலந்திப்பூச்சி) யானது எப்படி நூலைச் சிருட்டிக்கின்றதோ, பூமியிலெப்படிப் பல ஓஷதிகள் (தாவரங்கள்) உண்டாகின்றனவோ, மனிதன் மேனிமீது எப்படித் தலைமயிர் உடம்புமயிர் உண்டாகின்றனவோ அப்படியே பிரமமாகிய அட்சரத்திலிருந்து (அழிவிலாதது) யாவும் உண்டாகின்றன… சிவன் எளிய பூசைக்கே உளம் மகிழ்வான். அவனை மகிழ்விக்கப் பச்சிலையும் நீரும் போதும்.. ‘
View More ஒருசிவனை உவந்தேத்தும் அப்பைய தீட்சிதர்Tag: பிரபஞ்சத் தோற்றம்
நட்சத்திரங்களின் கதை!
ஒரு நட்சத்திரத்தை எடுத்துக்கொண்டு அதன் வரலாறை, அது உருவாகும், உள்படல தூசுகளின் (Interstellar Dust ) மூலத்தில் இருந்து, அது தன்னொளியை நிறுத்திகொள்ளும் அந்திம காலம் வரையிலான நிகழ்வுகளை விளக்க முயலுவோம். நாம் இங்கே அந்த படலகதையின் உண்மைகளை சாட்சியங்கள் கொண்டு விளக்க முயலபோவதில்லை. ஆனால் இந்தக்கதையை, இன்று மாபெரும் அறிவியலாளர்கள் புரிந்து கொண்டிருக்கும் இயல்பிலேயே விளக்க தலைப்படுகிறோம்.
View More நட்சத்திரங்களின் கதை!“முதல் பாவ”க் கொள்கையின் அபத்தம் – 2 [நிறைவுப் பகுதி]
(மூலம்: ரிச்சர்ட் ஷேனிக்) இயற்கைக்கு முந்தைய கொடை என்ற இந்தக் கருத்துருவாக்கம், மிகவும் நல்ல, எல்லோரையும் அன்பு செலுத்தும் ஒரு தெய்வத்தைக் காட்டாமல் வீம்புச் சண்டை போடும் தெய்வத்தைத்தான் காட்டுகிறது… கடவுள் இல்லை என்று சொல்லும் நாஸ்திகர்களும், கடவுளைப் பற்றி கவலை இல்லை என்று சொல்லும் அக்னோஸ்டிக்குகளும், ஒழுக்க ரீதியான தார்மீக வாழ்வு வாழ்ந்தவர்களில் பெரும்பான்மையினர்… இப்படி கிறிஸ்துவ மதத்துக்கு முதல் பாவம் தேவைப்படுவதால், இந்தக் கொள்கை இல்லாமல் கிறிஸ்துவ மதமே பரிதாபமான நிலையைத்தான் அடையும்…
View More “முதல் பாவ”க் கொள்கையின் அபத்தம் – 2 [நிறைவுப் பகுதி]“முதல் பாவ”க் கொள்கையின் அபத்தம் – 1
(மூலம்: ரிச்சர்ட் ஷேனிக்) இந்த மொழிபெயர்ப்புக் கட்டுரை கிறிஸ்துவ மதத்தைப் பற்றியது. இது ஏன் இங்கே ‘தமிழ்ஹிந்து’வில் பிரசுரிக்கப்படவேண்டும் என்ற கேள்வி எழலாம்… அதுவும் நிரந்தர உண்மைகளை புனித ஆவியிடமிருந்து பெற்று கிறிஸ்துவ மக்களுக்கு இரண்டாயிரம் வருடங்களாகக் கொடுத்து வந்திருப்பதாகச் சொல்லும் சர்ச்சுக்கு இது தலைகுனிய வைக்கும் மாபெரும் தவறு… மனித இயற்கையைக் கொடுத்து, அவர்களுக்கு வலியும், துயரமும் சாவையும் கொடுத்து, ஒட்டுமொத்தமாக அவர்களது சந்ததிகளுக்கும் மிருகங்களுக்கும் அவர்கள் பொறுப்பேற்க முடியாத ஒரு செயலுக்காக இவ்வளவு கஷ்டத்தைக் கொடுத்திருப்பதுதான் ஒழுக்கம் கெட்ட செயல்…
View More “முதல் பாவ”க் கொள்கையின் அபத்தம் – 1ஆண்டவன் மறுப்பும் ஆன்மிகமே: புத்தக விமர்சனம்
போலிப்பகுத்தறிவு பேசிய இனவாதிகள் ஆபிரகாமிய மத நம்பிக்கையை ஆதர்ச மத நம்பிக்கையாக நம் மக்கள் முன் வைத்தனர். இந்துக்களும் தமது இறைக் கோட்பாடுகளை ஆபிரகாமிய சட்டகத்தில் பிரதி எடுக்க ஆரம்பித்தனர். “நான் முருகனை நம்புகிறேன். நீ ஏசுவை/அல்லாவை நம்புகிறாய்” என மத-ஒப்புமை பேச ஆரம்பித்தனர். ஆனால் உண்மை வேறுவிதமானது; … ஒரு தொடக்க அறிதல் முறையாக சிருஷ்டியை ஒரு தேவன் செய்தான் என்கிற கோட்பாட்டை வைத்து விளையாடிவிட்டு அதனை வளரும் குழந்தை பொம்மைகளை உதறுவது போல உதறியிருக்கிறார்கள்…
View More ஆண்டவன் மறுப்பும் ஆன்மிகமே: புத்தக விமர்சனம்