வேதம் புதுமை செய்த பாரதி – புத்தக அறிமுகம்

“வேதம் புதுமை செய்” என்று தான் எழுதியதைத் தாமே செய்தும் காட்டியிருக்கிறார் பாரதியார் என்பது ஆசிரியரின் கருத்து. ஶ்ரீ அரவிந்தரின் “யோகரகசிய ஞானமொழி” என்பதை பாரதியார் நன்கு உள்வாங்கித் தனது வீரியமிக்க மொழியில் பலவாறு வெளிப்படுத்துகிறார்.. “சாதிகள் இல்லையடி பாப்பா” என்ற வரிகளே பாரதி உண்மையில் எழுதியவை, அவரது இதயத்தைப் பிரதிபலிப்பவை. இதனை “சாதி பெருமையில்லை பாப்பா” என்று திருத்த முயன்ற திரிபு முயற்சிகளை ஆணித்தரமாக, ஆதாரபூர்வமாக மறுதலிக்கிறார் ஆசிரியர்.. இதுவரை யாரும் தொடாத, வெளிச்சம் பாய்ச்சாத பாரதியின் ஒரு பரிமாணத்தை வெளிக் கொண்டு வருகிறது என்பதால் மிகவும் முக்கியமான நூலாகிறது…

View More வேதம் புதுமை செய்த பாரதி – புத்தக அறிமுகம்

வேதத்தைக் குறித்த வியாசம் – பாம்பன் சுவாமிகள்

சம்ஸ்கிருத மொழியில் பெரும்புலமை பெற்ற பாம்பன் சுவாமிகளைக் குறித்து, அவர் ஒரு தனித்தமிழ் ஆதரவாளர், வேதத்தை ஏற்றுக் கொள்ளாத சைவர் என்பது போன்ற பொய்யான பிம்பம் தமிழ்ச் சூழலில் சிலரால் கட்டமைக்கப் பட்டு வருகிறது. 1903ல் வெளிவந்த கேள்வி-பதில் வடிவில் அமைந்த அவரது இந்த நூல், வேதத்தைக் குறித்த அவரது ஆழமான புரிதலுக்கு சான்றாக உள்ளது. உதாரணத்திற்கு சூத்திரர்-பெண்கள் வேதம் ஓதுதல் குறித்த இந்தக் கேள்வி.. இந்த நூலை முழுமையாக pdf வடிவில் தரவிறக்கம் செய்து வாசிக்கலாம்…

View More வேதத்தைக் குறித்த வியாசம் – பாம்பன் சுவாமிகள்

வைக்கம் போராட்டத்தில் பிராமணர்கள் – புத்தக அறிமுகம்

இன்றைக்கு கட்டமைக்கப்பட்டுள்ள சாதிய எதிர்ப்புவாதமானது தன்னை பிராம்மண துவேஷக் கோட்பாட்டுடன் இணைத்துக் கொண்டுள்ளது. பிராம்மணர்கள் என்பது ஒரு முகாந்தரம்தான். உண்மையான இலக்கு இந்து மதம்… எனவேதான் இந்த புத்தகம் முக்கியமானது. பல பிராம்மணர்கள் கடுமையாக தீண்டாமையை எதிர்த்தார்கள். தீண்டாமையையும் கேரளத்தில் அதையும் தாண்டி நிலவிய அணுகாமைக் கொடுமையையும் அவர்கள் எதிர்த்தார்கள். அதே ஹிந்து சமயத்தில் உள்ள கோட்பாடுகளை, கருத்துக்களைக் கொண்டு எதிர்த்தார்கள்…

View More வைக்கம் போராட்டத்தில் பிராமணர்கள் – புத்தக அறிமுகம்

மகாபாரதம்: மாபெரும் உரையாடல் – புத்தக அறிமுகம்

இந்தப் புத்தகத்தின் மூலம் மஹாபாரதத்தை எப்படிப் படிக்கவேண்டும் என்று ஹரி கிருஷ்ணன் கற்றுத் தருகிறார், நமக்கு அவர் கற்பிக்கிறார் என்னும் சுமை தெரியாமல்… பெளராணிகர்கள், நாத்திகர்கள், அரைவேக்காட்டு ஆய்வாளர்கள் இவர்களுடைய பலவிதமான கூற்றுகள், பழிகள், குற்றச்சாட்டுகள் இவற்றுக்கு இந்த நூல் பதில் சொல்கிறது. ஒவ்வொரு வாதமும் ஆதாரங்களுடன் மின்னுவது சிறப்பு.. ஆய்வு முகம், ஆன்மீக முகம் இவையிரண்டும் சேர்ந்து அமைந்தவர்கள் குறைவுதான். இந்த ஒரு காரணத்தினாலேயே ஹரியின் இந்த நூல் அரியநூல் வரிசையில் அதுவாக அமர்கிறது…

View More மகாபாரதம்: மாபெரும் உரையாடல் – புத்தக அறிமுகம்

கேள்விக்கென்ன பதில் – புத்தக அறிமுகம் 

பொதுவாக தொலைக்காட்சி, பத்திரிகைகள் போன்றவற்றில் எடுக்கப்படும் பேட்டிகளில் இடதுசாரி, திராவிட இயக்கம், காங்கிரஸ், இஸ்லாம், கிறிஸ்தவம் போன்றவற்றைச் சேர்ந்த பிரபலமென்றால் பூப்போல் கேள்விகள் கேட்பார்கள். வலதுசாரி பிரபலங்கள் என்றால் முள்ளால் குத்திக் கிழிப்பார்கள்.

View More கேள்விக்கென்ன பதில் – புத்தக அறிமுகம் 

காஷ்மீர் முதல் ஈழம் வரை – புத்தக அறிமுகம்

காஷ்மீர் முதல் யுத்தம், சரஸ்வதி நதி, இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி, பிரிட்டிஷாரின் ஆட்சிக்கு முன்பான பாரம்பரியக் கல்வி மற்றும் தொழில்நுட்பம், கீழவெண்மணி படுகொலை, மரிச்சபி படுகொலை, சிலைத்திருட்டு, தலித் அரசியல் என இந்திய அரசியல், வரலாற்றுக் களத்தின் முக்கிய விஷயங்கள் அனைத்தையும் பற்றி எழுதப்பட்ட முக்கியமான நூல்களின் சாராம்சமானது இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது…

View More காஷ்மீர் முதல் ஈழம் வரை – புத்தக அறிமுகம்

பாரதம் : நேற்று இன்று நாளை – புத்தக அறிமுகம்

நூலாசிரியர் B.R.மகாதேவன் எழுதியுள்ள முன்னுரை: பிரிட்டிஷார் இந்துஸ்தானில் கால்பதித்தபோது இங்கு கல்வி, மருத்துவம்,…

View More பாரதம் : நேற்று இன்று நாளை – புத்தக அறிமுகம்

திருவள்ளுவர் – ஒரு விரிவான வரலாற்றுத் தேடல் : புத்தக அறிமுகம்

அறிவியலாளர்கள் குறைவாகவும், ஆர்வலர்கள் அதிகமாகவும் குறள் ஆராய்ச்சியில் இறங்கியதால் இன்றும் குழப்பம் தொடர்கிறது. திருவள்ளுவரின் காலம், ஜாதி, சமயம், பல்வேறு குறட்பாக்கள் எடுத்தாளும் நூல்கள், கருத்துகள், சர்ச்சைகள் என பல கோணங்களிலிருந்தும் வள்ளுவனையும் குறளையும் ஆராய்ந்து தொகுத்து எழுதப்பட்டுள்ள நூல் இது. நூலாசிரியர் ஜனனி ரமேஷ் மிகுந்த முயற்சியெடுத்து, பாடுபட்டு இதை உருவாக்கியிருக்கிறார். திருக்குறள் ஆர்வலர்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய நூல் இது.

View More திருவள்ளுவர் – ஒரு விரிவான வரலாற்றுத் தேடல் : புத்தக அறிமுகம்

சுவாமி விவேகானந்தர் – மிஷனரி மோதல்: புத்தக அறிமுகம்

நூலின் தலைப்பில் குறிப்பிட்ட பேசுபொருளை விளக்குவதோடு கூட, பொதுவாக கிறிஸ்தவ மதம் குறித்த இந்துக்களின் விமர்சனங்களையும், கிறிஸ்துவ மத வரலாற்றில் உள்ள சர்ச்சைகள், விவிலியத்தில் உள்ள சில விஷயங்கள் ஆகிய பலவற்றையும் முன்னும் பின்னுமாகத் தொகுத்து அளித்திருக்கிறார் நூலாசிரியர். அந்த விதத்தில், கிறிஸ்தவ மதப்பிரசாரங்களை எதிர்கொள்வதற்கும் எதிர்ப்பதற்கும் விழிப்புணர்வு கொண்ட இந்துக்களுக்கு உதவக் கூடிய கையேடு என்ற அளவிலேயே இந்த நூலைக் கருதலாம்…

View More சுவாமி விவேகானந்தர் – மிஷனரி மோதல்: புத்தக அறிமுகம்

இந்து மதம்: நேற்று இன்று நாளை – புத்தக அறிமுகம்

கிறிஸ்தவ-இஸ்லாமிய அடிப்படை வாதங்கள், கம்யூனிஸ அறிவுசார் பயங்கரவாதம் போன்ற அழிவு சக்திகள் என தொடர் தாக்குதல்களுக்கு ஆளான பிறகும் சனாதன இந்து தர்மம் நிலைபெற்று நிற்பதற்கான காரணங்கள். ஜாதி : மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு மிகவும் மோசமாக அவதூறு செய்யப்படும் இந்த (இந்து) சமூகக் கட்டமைப்பின் உண்மை மதிப்பீடு, மாற்றிக்கொள்ள வேண்டிய விஷயங்கள்… புத்தகத்திலிருந்து ஒரு சிறு பகுதி – கோட்சே குற்றவாளியா?…

View More இந்து மதம்: நேற்று இன்று நாளை – புத்தக அறிமுகம்