உங்கள் பெரியாரால் *** கதை என்று இழிவு படுத்தப்பட்ட சிலப்பதிகாரத்தை மேற்கோள் காட்டியிருப்பது பாராளுமன்றத்தைக் கொச்சைப்படுத்தவா? பெரியார் அப்படி என்ன சொன்னார்?… “மறைவழி காட்டிடத் தீவலம் செய்வது” தமிழர் முறை. யார் தமிழர் இங்கே? கண்ணகியின் சாபம் தெரிந்த உங்களுக்கு கண்ணகியின் திருமணம் பற்றி தெரிந்திருக்க வேண்டுமே.. சிலப்பதிகாரத்தில் உங்களைப்போலவே, உங்கள் திராவிட இயக்கத்தைப் போலவே, ஒரு ஆசாமி இருந்தான். பொற்கொல்லன் அவன்…
View More கனிமொழி எம்.பி அவர்களுக்கு சில சிலப்பதிகாரக் கேள்விகள்Tag: பெரியாரின் மறுபக்கம்
திராவிட அரசியலின் மூன்று பரிமாணங்கள்
பா.ரஞ்சித்திடம் பெரியார் முகமூடியை போடு இல்லையென்றால் நீ ஜாதி வெறியன் என்ற லாவணியை பாட ஆரம்பித்திருக்கிறார்கள். இது மெல்ல விவாதமாவது தமிழகத்தின் தலையாய தேவை. இன்றும் பெரியாரியம் யாருக்கு ஒரு முகமூடி என்பதை அரசியல் எதார்த்தம் சொல்லும். பிற்படுத்தப்பட்ட எழுச்சியும், அதிகாரமும் பட்டியல் ஜாதிகளுக்கு உறுத்தக்கூடாது என்ற ஏற்பாடு மட்டுமே பிராமண வெறுப்பு பேசுகிற திராவிடத்தின் மைய நோக்கம்… நீதிக்கட்சி இந்து மதத்திற்கு விரோதமாக இல்லை, ஆனால் தி.க/திமுகவின் இந்து மத விரோத கருத்துகள் மிஷனரி, இஸ்லாமிய மதமாற்றும் அரசியலுக்கு பயன்பட்டன. பிற்படுத்தப்பட்ட அதிகார எழுச்சி, ஆபிரஹாமிய மதமாற்ற குழுக்கள் மட்டுமே இன்றும் பெரியார் என்கிற முகமூடியை வேறு வேறு காரணத்திற்காக நீட்டித்துக் கொண்டிருக்கின்றன… ஆக, அன்று திமுக இன்று சீமான் பேசுவது போல இன்னும் சிறப்பாகவே பேசியது. தமிழர் ஆட்சி ஒப்பற்ற பேராட்சி ஆனால் பிராமணியம் சதி செய்து ஒழித்துவிட்டது என்று முன் வைத்தது. இன்று அதை மாற்றி சீமான் தெலுங்கர்கள் ஒழித்துவிட்டார்கள் என்கிறார். ஆனால் வரலாறு என்னவோ யாராவது தண்ணீர் தரமாட்டார்களா என்று சாவின் நொடியில் இழுத்துக் கொண்டிருக்கிறது இந்த நொடி வரை…
View More திராவிட அரசியலின் மூன்று பரிமாணங்கள்கோயில்நுழைவுப் போராட்டமும் திராவிட இயக்கமும் – 1
‘தாழ்த்தப்பட்டோர் கோயில் நுழைவுப் போராட்டத்தை பகிரங்கமாகவும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்புத் தொண்டர்களைத் திரட்டியும்…
View More கோயில்நுழைவுப் போராட்டமும் திராவிட இயக்கமும் – 1தந்தி தொலைக்காட்சியில் திராவிடர் கழக மறுப்பின் திரிபுவாதம்!-4
அடுத்த சர்ச்சைக்கு வருவோம். திரு.பாண்டே அவர்கள் பெரியார் தலித்துகளுக்காக வைக்கம் போராட்டத்தை தவிர…
View More தந்தி தொலைக்காட்சியில் திராவிடர் கழக மறுப்பின் திரிபுவாதம்!-4தந்தி தொலைக்காட்சியில் திராவிடர் கழக மறுப்பின் திரிபுவாதம்!-3
மூன்றாவது சர்ச்சைக்கு வருவோம். இது கீழவெண்மணியில் பெரியார் ஆற்றிய எதிர்வினையைப் பற்றிய கேள்வி.…
View More தந்தி தொலைக்காட்சியில் திராவிடர் கழக மறுப்பின் திரிபுவாதம்!-3தந்தி தொலைக்காட்சியில் திராவிடர் கழக மறுப்பின் திரிபுவாதம்!-2
இரண்டாவது சர்ச்சைக்கு வருவோம். பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பார்ப்பானை அடி, பாம்பை விட்டுவிடு என்ற சொல்லாடல் பற்றியது. திரு. பாண்டே கொடுத்த ஆதாரங்களைவிட அதிகளவு, வீரமணி எதிர்பார்த்த அளவு ஆதாரங்களை நாம் கொடுத்திருக்கிறோம். வீரமணி தன் பதவியை விட்டு விலகுவாரா? ஒருவேளை பதவியில் இருந்து விலகினாலும் விலகிவிடுவார். ஆனால் அந்தப் பதவியில் அவர் மகன் அன்பு வருவார் என்பதில் ஐயமில்லை…
View More தந்தி தொலைக்காட்சியில் திராவிடர் கழக மறுப்பின் திரிபுவாதம்!-2பெரியாரின் மறுபக்கம் – பாகம் 19: மணியம்மையாரின் புளுகும் மூடநம்பிக்கையும்!
”1954 ஆம் ஆண்டு ரங்கூனிலே நடைபெற்ற புத்தர் மாநாட்டிலே கலந்துகொள்ள அய்யா சென்றிருந்தார். நானும் இன்று அமைச்சராக உள்ள ராசாராமும் உடன் சென்றிருந்தோம். உலகப் புத்த சங்கத் தலைவர் மல்ல சேகரா அந்த மாநாட்டுக்கு வந்திருந்தார். அப்போது டாக்டர் அம்பேத்கர், முஸ்லீம் மதத்தில் தாம் சேர முடிவெடுத்துள்ளதாகக் கூறி தந்தை பெரியாரையும் முஸ்லீம் மதத்தில் சேருமாறு கேட்டுக்கொண்டார். அப்போது அய்யா இந்து மதத்திலே இருந்துகொண்டு அதைச் சீர்த்திருத்த வேண்டுமே தவிர அந்த இழிவுகளை அப்படியே விட்டுவிட்டு மதம் மாறக்கூடாது. அப்படி நீங்கள் மதம் மாறினால் ஏராளமானவர்களையும் அழைத்துச் செல்லுங்கள் என்று கூறினார்.”
View More பெரியாரின் மறுபக்கம் – பாகம் 19: மணியம்மையாரின் புளுகும் மூடநம்பிக்கையும்!பெரியாரின் மறுபக்கம் – பாகம் 18: தேசப்பற்று இல்லாத ஈ.வே. ராமசாமி நாயக்கர்!
”சுயமரியாதை இயக்கத்தின் அரசியல் கொள்கையானது பார்ப்பன ஆதிக்கக் காங்கிரசை எதிர்ப்பது அதற்காக எவ்வளவு அவசியப்பட்டாலும் அவ்வளவு அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதும், சமுதாயத்தில் ஜாதி மத பேதங்களை அகற்றுவதும். மூடப்பழக்கங்களை ஒழிப்பதும் பொருளியில் சமதர்மமாகும். இவைகளைப் பற்றிய விஷயங்களை மக்களிடையில் பிரசாரம் செய்யவும் அமுலுக்குக் கொண்டுவரவுமான காரியங்கள் நடைபெறவேண்டும். காங்கிரஸ் ஆட்சியைவிட பிரிட்டிஷ் ஆட்சியே மேலானது என்பது என்னுடைய வெகுநாளைய அபிப்ராயம்”.
View More பெரியாரின் மறுபக்கம் – பாகம் 18: தேசப்பற்று இல்லாத ஈ.வே. ராமசாமி நாயக்கர்!திராவிட மாயையில் ‘சுயமரியாதை’ இழந்த திருமணங்கள்
தலைவர்களின் பிறந்த நாட்கள் விழாக்களின் போது குறிப்பிட்ட எண்ணிக்கை அளவில் ஜோடிகள் “ஏற்பாடு” செய்யப்பட்டு – பாதிபேர் ஏற்கனவே திருமணம் செய்தவர்களாக இருப்பார்கள், மீதிப்பேர் கிடைக்கிற சன்மானத்திற்காக, குழந்தை குட்டிகளை வீட்டில்விட்டுவிட்டு, ‘நடிக்க’ முன்வந்திருப்பார்கள் – அவர்களுக்கு சுயமரியாதைத் திருமணம் நடக்கும்.
View More திராவிட மாயையில் ‘சுயமரியாதை’ இழந்த திருமணங்கள்பெரியாரின் மறுபக்கம் – பாகம் 17: ஈ.வே. ராமசாமி நாயக்கரின் ஆணாதிக்க மனோபாவம்!
‘முஸ்லிம்களும் தமிழர்களே! திராவிடர்களே!’ என்று சொல்லும் ஈ.வே. ராமசாமி நாயக்கர் முஸ்லிம் தமிழ் பெண்களின் அடிமைத்தனம் விலக போராட்டம் நடத்தியிருக்கவேண்டுமா? இல்லையா? கோஷாமுறையை அகற்ற மசூதிமுன் போராட்டம் ஒன்றை நடத்தியிருக்கலாமே. ஆனால் இதுவரை போராட்டம் நடத்தவில்லை. காரணம் முஸ்லிம்களிடம் போனால் வாலை ஒட்ட நறுக்கிவிடுவார்களோ என்ற பயமோ என்னவோ?
View More பெரியாரின் மறுபக்கம் – பாகம் 17: ஈ.வே. ராமசாமி நாயக்கரின் ஆணாதிக்க மனோபாவம்!