கரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 1

தன் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் தன் மக்களின் பாதுகாப்புக்கு கெடுதலாக விளங்கும் எவரையும் அவர்கள் நடுங்கும் வண்ணம் ஒழிக்கும் மன உறுதி படைத்த தலைவர்களைப் பெற்ற புண்ணிய தேசம் இஸ்ரேல். தி ஹவுஸ் ஆன் கரிபால்டி ஸ்ட்ரீட் என்கிற இந்த இஸ்ரேலிய திரைப்படம் கூட நிஜமாகவே நடந்த அத்தகைய ஒரு தீர சாகசத்தின் கதைதான். 1979ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் இது.

View More கரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 1

மோடியின் உண்ணாவிரதமும் தொப்பிக் கதைகளும்

..இப்போதும் கூட, மோடியின் பிரம்மாண்ட வளர்ச்சியைத் தாங்க முடியாத அவரது எதிரிகள் ‘தொப்பிக்கதைகள்’ மூலமாக அவரைச் சிறுமைப்படுத்த முனைகின்றனர். உண்ணாவிரத நிகழ்வுக்கு வந்த இஸ்லாமிய மதகுரு ஒருவர் அணிவிக்க முயன்ற முஸ்லிம் தொப்பியை ஏற்க மறுத்து அவமதித்து விட்டதாகக் கதைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. உண்மையில் இச்சம்பவம் நிகழவில்லை என்பது ஒருபுறமிருக்க, அவ்வாறு நடந்தாலும் அதில் தவறு காண ஏதும் இல்லை என்பதை அவர்கள் உணர மறுக்கின்றனர்…

View More மோடியின் உண்ணாவிரதமும் தொப்பிக் கதைகளும்

மூன்று கரிப் பூச்சுக்களும் ஒரு சுண்ணப் பூச்சும்

சுதந்திர இந்தியாவில் பிரதமர் செய்த ஒரு நியமனத்தை முதல்முதலாக ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். […] அப்போது நீதிமன்றம் கேட்ட பல கேள்விகளுக்காகவே, மானம் உள்ள எவரும் உடனடியாக பதவியை விட்டு விலகி ஓடியிருப்பார். அது இல்லாத மன்மோகன் சிங், வழக்கம் போல சாந்த சொரூபியாகக் காட்சி அளித்தார்.

View More மூன்று கரிப் பூச்சுக்களும் ஒரு சுண்ணப் பூச்சும்

செக்யூலரிசம் – ஓர் எளிய அறிமுகம்

புராணங்களின் புரட்டுக் கட்டுரைகள் என்று நெடிய நெடிய புத்தகங்கள் எழுதுவார். குரானைப் பற்றியோ, பைபிள் பற்றியோ பேசமாட்டார். இவரும் செக்யூலர்தான்… ஜாதிக் கட்சித் தலைவராக இருப்பார். மதச்சார்பின்மை பற்றி முழங்குவார். மதமாற்றம் குறித்து ஆதரவு தெரிவிப்பார். மதம் மாறிய மன்னன்கள் மறக்காமல் கல்யாணத்துக்குப் பெண் தேடும்போது ஜாதியோடு தேடுவார்கள். கட்சித் தலைவர் மொய் வாங்கிவிட்டு திருமணத்துக்குச் சென்றுவிட்டு அரசியல் பேசிவிட்டு மொய் வைத்துவிட்டு வருவார். இதுவும் செக்யூலரிசத்தின் பாடங்களுள் ஒன்று.

View More செக்யூலரிசம் – ஓர் எளிய அறிமுகம்

மதானி: வளரும் பயங்கரவாதத்தின் ஒரு மாதிரி – 2

“.. இன்றைய தி.மு.க அரசு மதச்சார்பற்ற ஆட்சி செய்வதால் அல் உம்மா போன்ற இயக்கங்கள் இனி தேவையில்லை. நாங்கள் நடத்தியது பழிவாங்கும் செயலேயன்றி பயங்கரவாதத் தாக்குதல் இல்லை” என்கிறார் பயங்கரவாதி பாட்சாவின் மகன்… “கடவுளின் சொந்த தேசம்” என்று அழைக்கப் படும் கேரளம் தற்போது “பயங்கரவாதிகளின் சொந்த தேசம்” என்று ஆகிவிட்டது. ஜிகாத் பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப் படும் கேரள இளைஞர்கள் பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் நடக்கும் பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பிவைக்கப் படுகிறார்கள்.

View More மதானி: வளரும் பயங்கரவாதத்தின் ஒரு மாதிரி – 2

மதானி: வளரும் பயங்கரவாதத்தின் ஒரு மாதிரி – 1

மதானியின் மனைவி சூஃபியா கைதானதுதான் தாமதம், காங்கிரஸ் மற்றும் கம்யூனிச கட்சியினர் மதானியை தங்களிடமிருந்து ஒதுக்குவதாகக் காட்டிக் கொள்வதில் பெரும் சண்டை போடத் துவங்கிவிட்டனர்! .. மதானியும் மேலும் 22 பயங்கரவாதிகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளது குறித்து கோவை குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்கள் முற்றிலும் மனம் நொந்து போயிருக்கிறார்கள், உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று நீதிக்குப் போராடுவோம் என்று கூறியுள்ளார்கள்…

View More மதானி: வளரும் பயங்கரவாதத்தின் ஒரு மாதிரி – 1

Invading the Sacred: அமெரிக்காவில் நிகழும் இந்துமத ”ஆய்வுகள்” – பகுதி (3)

மது கைடபர்கள் வந்து தொல்லை கொடுக்கும் போதும் அறிதுயில் உணர ஹிந்து கற்றுக் கொண்டிருக்கின்றான். அவன் மீது வெறுப்பும், பகையும், அலட்சியமும், அழிநோக்கமுமாக, மாற்றார் பண்பாட்டுக் கடலைச் சிலுப்புவதில் எழுந்த விஷ்த்தையும் கழுத்தில் நிறுத்திக் கவனமும் நிதானமும் பேண ஹிந்து ஒருவனே கற்றிருக்கின்றான்… ஹிந்துவினுடைய சாஸ்திரங்களே அவனுடைய வேதாந்தமே விடாப்பிடியான அறிவு நெறிக் கோட்பாட்டுகளினால் ஆக்கப் பட்டவை என்று அவனுக்கு யாரேனும் கஷ்டப் பட்டுப் புரிய வைக்க வேண்டும். இல்லையேல் அறிவு நெறி என்பதெல்லாம் மேற்குலக மாயை என்று அவனை மயக்கி வழிதப்பச் செய்ய, அவனுக்குள்ளும் வெளியேயும் ஆள் இருக்கிறது.

View More Invading the Sacred: அமெரிக்காவில் நிகழும் இந்துமத ”ஆய்வுகள்” – பகுதி (3)

புனிதத்தின் மீது மதச்சார்பின்மையின் தாக்குதல்

(தமிழில்: மது) ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்றைக்கு தலித் மக்கள் குடியிருக்கும் சேரிக்குள் நுழைந்ததாக செய்திகள் வந்ததோ அன்றே என் நண்பரிடம் சொன்னேன் “இந்த ஒரு செய்கை போதும். அவருக்கான கைது வாரண்டை அவரே எழுதிக்கொண்டு விட்டார்’ என்று… பொங்கி எழாத இந்திய மதங்களிடம் மட்டுமே மதச்சார்பற்ற நடுநிலையுடன் அரசு நடந்து கொள்ள முடியும், மற்ற பாலைவன மதங்களுடன் அல்ல என்பது தெளிவு. அரசை பயமுறுத்தாவிட்டால் அது அக்கறை கொள்ளாது என்கிற துரதிருஷ்டமான நிலைக்கு தள்ளப் பட்டுள்ளோம்.

View More புனிதத்தின் மீது மதச்சார்பின்மையின் தாக்குதல்

கைவிடப்பட்டவர்களா இந்துக்கள்?

ஷா ஆலம் (மலேசியா) பகுதியில் குழுமியிருந்த அந்தக் கூட்டத்தினர் மதவெறி கோஷங்களை எழுப்ப தலைவரான ஹாஜி சொன்னார் – “கோயில் கட்டுமானம் மட்டும் தொடர்ந்தால் இங்கே ரத்த ஆறு ஓடும்” … தாங்கள் ஒரு குற்றமும் செய்யாதபோதும், கோயம்புத்தூர் முதல் கோலாலம்பூர் வரை, காட்மாண்டு முதல் ஜெட்டா வரை ஏன் எல்லா இடங்களிலும் கொத்துக் கொத்தாக இந்துக்கள் படுகொலைக்கு எளிய இலக்காகின்றனர்? இந்துக்கள் படும் காயங்கள் பல துறைகளிலும் செல்வாக்குள்ள தலைவர்களாக உள்ள இந்துக்களாலேயே கண்டுகொள்ளாமல் ஒதுக்கப் படுகின்றன. ஏன்? (மூலம்: தருண் விஜய், தமிழில்: ஜடாயு)

View More கைவிடப்பட்டவர்களா இந்துக்கள்?

பலுசிஸ்தானின் சுதந்திரப் போர்

அப்போதைய பலுசிஸ்தான் தலைவர்களில் ஒருவர் இந்திரா மீது மிகுந்த அபிமானமும் மரியாதையும் வைத்திருந்தார். அவர் தனது மகளின் திருமணத்தை புதுடெல்லியில் நடத்த விரும்பினார். புதுடெல்லியில் திருமணத்தை நடத்தினால் இந்திரா நேரில் கலந்து கொண்டு மணமக்களை ஆசீர்வதிப்பார் என்று அவர் நினைத்ததுதான் அதற்கு காரணம். முதலில் இந்திராவும் இதற்கு மகிழ்ச்சியுடன் ஒப்புதல் அளித்தார். ஆனால் இதைப்பற்றி ஆழமாக யோசித்ததை அடுத்து…

View More பலுசிஸ்தானின் சுதந்திரப் போர்