கானக மக்களும் மலைவாசிகளும் தமக்கென்று ஒரு தனிக்கலாசாரத்தைப் பின்பற்றுகின்றனர். அவர்கள் இந்துக்களே அல்ல – இதுபோன்ற ஆதாரமற்ற கருத்துக்கள் காலனியம் கட்டமைத்த வரலாறு மூலமாக புகுத்தப் பட்டன. தமிழில் உள்ள சைவ, வைணவ பக்தி இலக்கியங்களை சாதாரணமாகக் கற்பவர்களுக்குக் கூட இந்த சித்திரிப்புகள் எவ்வளவு பொய்யானவை என்பது புரியும். “கானவர் தம் மாமகளிர்” என்கிறார் சம்பந்தர். மலைக்குறவர் இனங்கள் திருமாலின் பொன்னடி வணங்கும் காட்சியைப் பாடுகிறார் பெரியாழ்வார்..
View More கானக மக்களும் மலைக்கோயில்களும்Tag: மலைக்கோவில்
குற்றாலக் குறவஞ்சி: ஓர் இலக்கிய அறிமுகம்
காதல் நோயால் வருந்தும் தலைவியைத் தேடிக் கொண்டு குறத்தி வருகிறாள். தங்களது குற்றால மலையின் அழகையும் வளத்தையும் வர்ணித்து அவள் பாடும் பாடல்கள் அற்புதமானவை. இன்றைய பொதுப்பயன்பாட்டில் குறவன், குறத்தி ஆகிய சொற்களை நாகரீமில்லாத காட்டுமிராண்டி மக்களைக் குறிப்பது போலப் பயன்படுத்துகிறோம். ஆனால் 200 ஆண்டுகளுக்கு முன்பு கூட, மலைவாழ் சாதியினரான குறவர்கள் தங்களது குலத்தின் கீர்த்தியைப் பெருமிதத்துடன் எடுத்துரைப்பதை இந்த நூலில் காண முடிகிறது: “அருள் இலஞ்சி வேலர்தமக்கு ஒருபெண்ணைக் கொடுத்தோம் – ஆதினத்து மலைகளெல்லாம் சீதனமாக் கொடுத்தோம்”… குறி சொல்வதற்கு முன் தெய்வ வணக்கம் செய்கிறாள் குறத்தி. சிவபெருமான், உமையம்மை தொடங்கி பன்றி மாடன், பிடாரி வரை அனைத்து தெய்வங்களையும் துதிக்கிறாள். வரலாறு, சமூகவியல், பண்பாடு குறித்த எந்த ஆழ்ந்த புரிதலும் இல்லாமல் சிறுதெய்வம் பெருந்தெய்வம் அது இது என்று தமிழ்நாட்டு “ஆய்வாளர்கள்” கூறும் ஆதாரமற்ற கற்பனைக் கோட்பாடுகளை எல்லாம் தவிடுபொடியாக்குவதாக உள்ளது அவளது துதிப்பாடல்…
View More குற்றாலக் குறவஞ்சி: ஓர் இலக்கிய அறிமுகம்இந்து அறவழிப் போராட்டம், சமூகசேவை: நிதியுதவி தேவை
தமிழகம் முழுக்க இதுபோன்று இந்து தர்ம நலன் காக்கும் அறவழிப் போராட்டங்களில் ஈடுபட்டு நூற்றுக்கும் மேற்பட்ட எமது அமைப்பைச் சார்ந்தவர்கள் சிறைச்சாலைகளில் உள்ளனர். இவர்களது குடும்பங்களுக்கு நிதி உதவி செய்திடவும், தொண்டர்கள் மேல் போடப் பட்டுள்ள வழக்குகளை சந்திக்கவும், தொடர் நடவடிக்கைகளில் ஈடுபடவும் நிதியுதவி தேவைப் படுகிறது… இரத்த தானம், கண் தானம் ஆகிய சேவைகளில் எமது அமைப்பினர் முன்னிலை வகிக்கின்றனர். திருவிளக்கு வழிபாடுகள், சமய வகுப்புகள், உழவாரப் பணிகள் ஆகியவை பல பகுதிகளில் நடத்தப் படுகின்றன…
View More இந்து அறவழிப் போராட்டம், சமூகசேவை: நிதியுதவி தேவைஅருணையின் கருணை
ஒரு சாதாரணமான இரும்புக் குண்டு காந்த சக்தியுடைய இரும்புக் குண்டைச் சுற்றி வந்தால் அச்சாதாரண இரும்புக் குண்டு காந்தக் குண்டாக மாறுவதுபோல், சாதாரண மனம் (அதாவது சக்தி) சிவமாகிய திருவண்ணாமலையை கிரிவலம் வந்தால் முடிவில் மனம் சிவத்தில் கலந்து சிவமேயாகும்… பக்தியுடன் ஒருமைப்பட்ட மனதுடனும், இறைவனிடத்தில் நம் தேவைகளைப் பற்றி ஏதும் விண்ணப்பிக்காமல் கிரி வலம் செய்தோமானால் நம் தூல வாழ்விற்கும், ஆன்மீக வாழ்விற்கும் தேவையான பொருளும், அருளும் நம் பக்குவத்திற்கு ஏற்ப கொடுத்தருளுவார்.
View More அருணையின் கருணைதேவன்குறிச்சி – சிறுமலையில் பெருந்தெய்வங்கள்
தே. கல்லுப்பட்டியிலிருந்து நடந்தும் (3 கி. மீ) அல்லது நகரப் பேருந்திலும் செல்லலாம். மலையை ஒட்டிய பாதை. உங்கள் இடப்புறம் ஒரு குட்டை. தண்ணீர் நிறைந்திருக்கும் நேரம் அதில் ஒரு ஆமை மூழ்கி இருப்பதுபோலவும் அதன் தலையும், ஓடும் மட்டும் வெளித்தெரிவதுபோலவும் தெரியும் ஒரு பாறை இருக்கும்.. மலை ஏறும் அனுபவம் மிக ரம்மியமான ஒன்று. கடைசி ஐந்து நிமிடங்கள் மலை மிகவும் செங்குத்தாகச் செல்லும். செல்லும் வழியெங்கும் விதவிதமான செடிகளைக் காணலாம்.
View More தேவன்குறிச்சி – சிறுமலையில் பெருந்தெய்வங்கள்