மருளர்களோடு மன்றாடுதல்: சல்மான் ருஷ்டி

… ஏனெனில், உலகிலுள்ள அனைவருக்கும் பொது உரிமையான கருத்துச் சுதந்திரத்திற்கு ஆதரவாக நான் மன்றாடுகிறேன். கருத்துச் சுதந்திரத்தின் பகுத்தறிவுத் தன்மையைவிட, அது மனித இயல்பின் இதயமாக இருப்பதே எனது செயல்களுக்குக் காரணம் என்று என் மனசாட்சி சொல்லுகிறது. (”மிட்நைட் டையஸ்பரா: என்கவுண்டர்ஸ் வித் சல்மான் ருஷ்டி” புத்தகத்தில் இருந்து சில பகுதிகள்)

View More மருளர்களோடு மன்றாடுதல்: சல்மான் ருஷ்டி

அந்த அடக்குமுறையாளர்கள் !

மூலம்: தருண் விஜய், மொழியாக்கம்: ஸ்ரீநிவாசன் ராஜகோபாலன்
நல்ல நோக்கங்களுடைய நமது அன்பிற்குரிய பல ஹிந்துக்கள், சிறிதும் வெட்கமில்லாமல், தாங்கள் ஒரு கிருத்துவ பள்ளியில் படித்திருந்தாலும், கிருத்துவத்துக்கு மதம் மாறவில்லை என்று பல முறை பீற்றிக்கொள்வார்கள். அப்படிப்பட்ட மேன்மையாளர்களின் பட்டியலில் எனது பேரையும் நான் சேர்க்கச் சொல்லவா? நான் ஒரு கிருத்துவப் பள்ளியில்தான் படித்தேன். எனது ஆசிரியர்களான ஜேக்கப் சார், மற்றும் ஃபாதர் பெஞ்சமின் மீது அன்பு கொண்டுள்ளேன். ஆனால், அவ்வன்பு, “சார், ஒரு ஹிந்துவாக, நான் மதிக்கிற, நீங்கள் சார்ந்துள்ள மதத்தின் பெயரால் சிலர் செய்யும் செயல்களுடன் எனக்கு உடன்பாடு இல்லை” என்று கூறுவதைத் தடுக்கலாமா?ஜனநாயகமும் பன்மையும் இணைந்து நமது நரம்பில் ஓடும்போது, அந்த ஒரு சிலரின் அடக்குமுறையை எதிர்க்க நாம் ஏன் தயங்குகிறோம்?

View More அந்த அடக்குமுறையாளர்கள் !

விழித்தெழும் பாரதத்தை நோக்கி: விவேகானந்தர் கவிதை

மீண்டும் எழுவாய்
இது உறக்கம்தான் மரணமல்ல
புது வாழ்வில் விழித்தெழும்
துணிவுறும் பார்வைகள் வேண்டித் துடித்தெழும் உன்
கமலமலர் விழிகளின் சிறு அயரல்
ஓ சத்தியமே!
உன்னை வேண்டி நிற்கும் உலகம்
உனக்கென்றும் அழிவில்லை

View More விழித்தெழும் பாரதத்தை நோக்கி: விவேகானந்தர் கவிதை

அன்னை காளி – கவிதை

(மூலம்: சுவாமி விவேகானந்தர்)
நண்பா
துக்கத்தையும் துணிந்து காதலி
பாழ்மரணத்தையும் பாய்ந்து அணைத்துக்கொள்
அழிவின் ஆட்டத்திலும் கலந்து ஆடு
தாய் உன்னிடம் வருவாள்.

View More அன்னை காளி – கவிதை