ஸ்ரீ ராமர் ராஜ்ஜியத்தை நோக்கி யோகி அரசு

அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் பதவி ஏற்பதற்கு முன்பே சில முன்மாதிரியான முடிவுகளை எடுக்க…

View More ஸ்ரீ ராமர் ராஜ்ஜியத்தை நோக்கி யோகி அரசு

இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 24

“எவர் என்னை அண்டி வருகிறார்களோ அவர்களுக்கு நான் அபயம் அளிப்பேன். என்னை அடைந்தபின் அவர்களுக்கு எந்த வித பயமும் வேண்டாம். இது என்னுடைய கொள்கை” – இந்த வரிகள் மூலம் இராமரின் தெய்வீக அம்சத்தை வால்மீகி எல்லோருக்கும் உணரவைக்கிறார். இது இறைவனால் அனைவருக்குமே கொடுக்கப்பட்டுள்ள உறுதி…. எப்படி ராமராஜ்யத்தில் எல்லாமே உண்மை என்பதால் பொய் என்பதே இல்லாது போகிறதோ, அதேபோல ஆனந்த நிலையில் எந்தப் பொருளும் பரம்பொருள் ஆகிவிடுவதால், வேறு என்பதே இல்லாததாகி அச்சம் என்பதும் இல்லாது போகிறது…. சான்றோரின் குணங்களான மனவடக்கம், பொறுமை, எளிமை, இனிமையான பேச்சு, இவை அனைத்தும் நற்குணம் இல்லாதவர்களிடம் காண்பிக்கப்படும்போது, அதை அவர்கள் பலமின்மை என்று தவறாக நினைக்கிறார்கள்….

View More இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 24

இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 1

நற்குணங்களின் குன்று, வீரன், கடமையில் கருத்துடையவன், நன்றி மறவாதவன், உண்மை விளம்பி, மனத்திடம் மிக்கோன், நற்குணத்தை ஒக்கும் செயல்கள் கொண்டோன், அனைவரின் நலம் விரும்பி, கல்வி மிக்கோன், திறமை மிக்க தொழிலாளி, பழகுதற்கு எளிமையானவன், தன்னிலே இன்புற்றோன், சீற்றத்தை அடக்கியவன், அழகன், அழுக்காறு அகன்றோன், சீண்டினால் சீறுவோன் என்ற இப்பதினாறு குணங்களைக் கொண்டவனே குணசீலன் என்று இங்கு கூறப்பட்டிருக்கிறது. இவை அனைத்தையும் இப்படிப் பட்டியலிட்டு ஒவ்வொருவனும் இப்படி இருக்கவேண்டும் என்று கூறாமல், இந்தக் குணங்கள் எல்லாவற்றையும் கொண்ட ஒரு வாழும் அல்லது வாழ்ந்த மனிதன் ஒருவனின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் மூலம் மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் எப்படி ஒரு குணவானாக இருக்க வேண்டும் என்று கூற விரும்பி, அப்படிப்பட்ட ஒருவன் இருக்கிறானா என்று வால்மீகி முனிவர் தவச்சீலர் நாரதரிடம் கேட்கிறார்.

View More இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 1