செ.அருட்செல்வப் பேரரசனின் முழு வியாச மகாபாரத மொழிபெயர்ப்பு துல்லியமானதாகவும், அதே சமயம் எளிய, சுவாரஸ்யமான நடையிலும் அமைந்துள்ளது. இது அச்சுப்புத்தகமாகவும் 14 தொகுதிகளில் வெளிவந்திருக்கிறது. நடுத்தர வயதினர், முதியவர்கள் ஆகியோருக்கு பெரிய புத்தகங்களை மின்நூல்களாக வாசிப்பது என்பது அனேகமாக இயலாத காரியம். ஒவ்வொரு மகனும், மகளும் தங்கள் பெற்றோருக்கு அன்புப் பரிசாக வழங்க சாலச் சிறந்த அச்சு நூல் தொகை முழுமஹாபாரதம்…
View More முழு மகாபாரதம் அச்சுநூல் தொகுப்புTag: வியாச பாரதம்
அருட்செல்வப் பேரரசனின் முழுமஹாபாரதச் சிறுகதைகள்
வியாச மகாபாரதத்தை முழுமையாக தமிழில் மொழிபெயர்த்து 2013ம் ஆண்டு முதல் தனது இணையதளத்தில் பதிப்பித்து வரும் செ.அருட்செல்வப் பேரரசன், அண்மையில் மகாபாரதத்தில் உள்ள தனிக்கதைகளை மின்னூல்களாகவும் (E-books) வெளியிட்டிருக்கிறார். இதுவரை உதங்க சபதம், கருடனும் அமுதமும், நாகவேள்வி, நாகர்களும் ஆஸ்திகரும், துஷ்யந்தன் சகுந்தலை, யயாதி ஆகிய நூல்கள் வந்துள்ளன. இவற்றை எளிய வடிவில் கதைகளாக மட்டுமே படித்து அறிந்த வாசகர்களுக்கு, வியாச மகாரபாரத்தில் உள்ளதன் நேரடியான வடிவத்தை வாசிப்பது என்பது முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கும். இவற்றுக்குக் கிடைக்கும் வாசக ஆதரவு, மேலும் பல மஹாபாரதக் கதை நூல்களை இதே வடிவில் வெளியிடுவதற்கு அவரை ஊக்குவிக்கும், தூண்டுதலாக அமையும். இந்த மின் நூல்கள் அமேசான் தளத்தில் கிடைக்கின்றன….
View More அருட்செல்வப் பேரரசனின் முழுமஹாபாரதச் சிறுகதைகள்வான் பறக்கும் மதகரி: ஜெயமோகனின் வெண்முரசை முன்வைத்து..
பல நல்ல மகாபாரத மறு ஆக்கங்கள் உண்டு; அவை ஒற்றைப் படையான குரல்களுடன், ஒரு குறிப்பிட்ட தரப்பின் நியாயங்களையும் தார்மீகங்களையும் வலியுறுத்துவதாகவே உள்ளன. பாரத காவியத்தின் பிரம்மாண்டத்தை அதன் முழுமையான நோக்கில் மீள் உரைக்க முற்படுவது என்பது வியாசன் சென்றடைந்திருக்கும் அதே உயரங்களுக்குத் தாவும் முயற்சி தான். வானோக்கித் துதிக்கை நீட்டிப் பறக்க எத்தனிக்கும் யானையின் முயற்சி. வெண்முரசு நாவலில் நெடுக அதைக் காண்கிறோம்… மூன்று விதங்களில் இந்த நாவலை வாசிக்கலாம். ஒரு நல்ல, சமநிலை கொண்ட வாசிப்பு என்பது இந்த மூன்று அணுகுமுறைகளையும் உள்ளடக்கியதாக, அதே சமயம் அவற்றின் எல்லைகளையும் உணர்ந்ததாக இருக்கும்…. தீவிர படைப்பூக்கம் கொண்ட ஒரு கலைஞனின் அகம் என்பது தொடர்ந்து பிரவாகித்துக் கொண்டிருக்கும் நீரோட்டம் போல. அந்த பிரவாகத்தின் இயல்புகள் அதன் ஒவ்வொரு அலை மடிப்பிலும் தெரியவராவிட்டால் தான் ஆச்சரியம்…
View More வான் பறக்கும் மதகரி: ஜெயமோகனின் வெண்முரசை முன்வைத்து..மகாபாரத ஆக்கங்கள் – ஒரு பட்டியல்
உண்மையை ஒத்துக் கொள்வதென்றால் மகாபாரதம் எனக்கு உலகத்தின் தலை சிறந்த இலக்கியம். தர்க்கபூர்வமான, அறிவுபூர்வமான அணுகுமுறைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது அந்த உணர்வு. ஆழ்ந்த பித்து என்றே சொல்லலாம்…மகாபாரதத்தை மூலமாக வைத்து எழுதப்பட்ட புனைவுகள், எடுக்கப்பட்ட திரைப்படங்கள் மீது எனக்கு எப்போதும் ஒரு soft corner உண்டு. அப்படிப்பட்ட எல்லா இலக்கிய/கலை முயற்சிகளையும் ஒரு பட்டியல் போட வேண்டும் என்று எனக்கு ஒரு நீண்ட நாள் ஆசையும் உண்டு. இவை சுருக்கங்களாக இருக்கலாம், இந்திய மொழிகளில் பாரதத்தைக் கொண்டு போகச் செய்த முயற்சிகளாக இருக்கலாம், மறுவாசிப்புகளாக இருக்கலாம், எதுவாக இருந்தாலும் அவற்றை ஒரு பட்டியல் போடும் முயற்சியே இந்தக் கட்டுரை…
View More மகாபாரத ஆக்கங்கள் – ஒரு பட்டியல்வியாசன் எனும் வானுயர் இமயம்
வரலாற்றுக் கண்ணோட்டத்தில், இந்த நான்கு “வியாசர்களும்” ஒருவராக இருப்பது என்பது முற்றிலுமாக சாத்தியமில்லாதது. கிருஷ்ண துவைபாயன வியாசர் என்பவர் முழுமையான ஒரு தனித்த வரலாற்று ஆளுமை என்பது மகாபாரதத்தை ஆழ்ந்து வாசிக்கும் எவருக்கும் கிடைக்கும் சித்திரம். வேதகால கருத்தாக்கங்களின் மிக இயல்பான நீட்சியாகவே மகாபாரதம் உள்ளது… “கைகளைத் தூக்கிக் கொண்டு கதறுகிறேன். ஆனால் கேட்பார் ஒருவருமில்லை. அறத்திலிருந்து தான் பொருளும், இன்பமும் எல்லாம். ஆனால் அதை ஏன் மனிதர் பின்பற்றுவதில்லை? காமத்தாலோ பயத்தாலோ பொறாமையாலோ உயிர் போகும் என்ற நிலையிலோ கூட தர்மத்தை விட்டு விடாதீர்! தர்மம் என்றும் உள்ளது. இன்ப துன்பங்கள் அநித்தியமானவை…
View More வியாசன் எனும் வானுயர் இமயம்மஹாபாரதம் கும்பகோணம் பதிப்பு மறு வெளியீடு
தமிழில் மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாக சொல்லப்படும் மஹாபாரதம் கும்பகோணப் பதிப்பு தற்போது இருப்பில் இல்லை. குறைந்த அளவே அச்சிடப் பட்ட முந்தைய வெளியீட்டின் பிரதிகள் அனைத்தும் ஒரு வருடம் முன்பு விற்றுத் தீர்ந்து விட்டன. இந்தப் பொக்கிஷத்தை இப்போது வாசிக்க விரும்புபவர்கள் புத்தகம் கிடைக்காமல் அல்லல் உறுகின்றனர். இது மிகவும் வருந்தத்தக்க விஷயம். இது தொடர்பாக ஸ்ரீசக்ரா பப்ளிகேஷன் திரு.வெங்கட்ராமன் அவர்களை தொடர்பு கொண்ட போது அவர் குறைந்தது நூறு பேர் முன் வெளியீட்டுத் திட்டத்தில் இணைந்து கொண்டால் கண்டிப்பாக வெளியிடுவதாக சொல்லியிருக்கிறார். இதைத் தங்களுக்குத் தெரிந்த நண்பர்களுக்கும் குழுமங்களுக்கும் தயை கூர்ந்து பரிந்துரைக்கவும். விவரங்கள் கீழே…
View More மஹாபாரதம் கும்பகோணம் பதிப்பு மறு வெளியீடுமஹாபாரத உரையாடல்கள் – 002 கர்ணன்
துரோணர் சாதியைக் காரணம் காட்டிக் கர்ணனுக்குக் கற்பிக்க மறுப்பதாக பவன்ஸ் பதிப்பில் கமலா சுப்பிரமணியம் எழுதியிருப்பதும், விக்கிபீடியாவில் சொல்லியிருப்பதும், இந்தக் கட்டத்தைத் தவறாகப் புரிந்துகொண்ட காரணத்தால் எழுந்துள்ள பேச்சுகள். இவற்றுக்கு அடிப்படை இல்லை.
View More மஹாபாரத உரையாடல்கள் – 002 கர்ணன்