வெங்கடேசப் பெருமான் ஒரு பாடலாவது ஒரு நாளில் எழுத வேண்டும் என்று அன்னமையாவுக்கு அன்புக் கட்டளையிட வாழ்நாளின் இறுதிவரை அதைத் தொடர்கிறார். 95 வயதுவரை வாழ்ந்ததால் நாளுக்கொன்றாக அவர் முப்பத்திரண்டாயிரம் பாடல்கள் பாடியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அவற்றில் பன்னிரண்டாயிரம் மட்டுமே கிடைத்திருக்கின்றன. அவர் தெலுங்கு, வடமொழி இரண்டிலும் எழுதியுள்ளார். கீர்த்தனங்களில் பல்லவி, சரணமென்ற முறை இவரால் தான் அறிமுகமானதென்ற ஒரு கருத்துமுண்டு… “உதவாக்கரையான என்னை நீ காப்பாற்றினால்தான் – உன் கருணை பெருமையோடு பேசப்படும் – என்னால்தான் உனக்குப் பெருமை – உன்னிடமிருந்து நான் சக்தி பெறுகிறேன் – ஏ வெங்கடேசா, நாமிருவரும் ஒருவரிடமிருந்து ஒருவர் பயனடைகிறோம்… ”அலமேலு மங்கையே நீ முத்தைப் போல ஜொலிக்கிறாய். வெங்கடேசன் உன்னைப் புதுமையாகப் பார்க்கிறார். காதலாகப் பார்க்கிறார். எவ்வளவு நளினமுனக்கு…”
View More வாழ்வின் ஒவ்வொரு நாளும் ஒரு பாடல்: அன்னமையாTag: ஆன்மீக இலக்கியங்கள்
சங்க இலக்கியமும் சைவர்களும் – 2
சங்க இலக்கியங்களில் உலகு ,உயிர், வினை, ஊழ் , இறை முதலிய தத்துவப் பொருள்களின் சிந்தனை வளர்ச்சியே சைவ சித்தாந்தம் என மேம்போக்காகப் படிப்பவர்க்கும் விளங்கும்.. எல்லாப்பிறப்பும் என்றது எண்பத்து நான்கு இலட்சம் யோனி பேதங்களில் உள்ள ஒவ்வொரு யோனியின் எண்ணற்ற பிரிவுகளிலும். ஆதலின், அதனை யுணர்ந்த அடிகள் “பிறந்திளைத்தேன்” என்றார். அடிகள் வருந்துதற்குக் காரணமான இந்த எண்பத்து நான்குநூறாயிரம் யோனி பேதப் பிறப்பும் அவற்றின் பிரிவுகளும் ஓரிடத்தில் ஒருகாலத்தில் ஒருபருவத்தில் தோன்றுவன அல்ல. ஆகவே, நித்தமாய் என்ணிக்கையற்றவையாய் உள்ள உயிர்களில் ஒன்று எண்ணற்ற பிறவி எடுக்கும்போது ஏதோ ஒரு பிறவியில் உலகின் ஏதோ ஒரு இடத்தில் மற்றொரு உயிருடன் ஏதோ ஒருவகையில் உறவு உடையதாகும்… புறநானூற்றில், புலனழுக்கற்ற அந்தணாளன் கபிலர், நக்கீரர், பரணர், நல்லுருத்திரனார், நல்லந்துவனார் போன்றோர்களின் பாடல்களோடு, சிற்றினம் என ஆன்றோரால் கடியப்பட்டார் சூழலில் அவரோடுகூடி மதுவும் புலாலும் வுண்டு மங்கையருடன் களித்திருக்கும் புரவலர்களைப் போற்றிப் புகழும் பாடல்களும் உள்ளன. ஊரெரியூட்டுதலையும் உயிர்க்கொலையையும், பெண்களின் கண்ணீர்க்கம்பலையையும் வீரம் எனும் பெயரால் நியாயப்படுத்தலை ஆன்மநேயத்தை மக்களிடையே பரப்ப விரும்பும் துறவிகள் எங்ஙனம் ஏற்றுக் கொள்ள முடியும்? சைவப் புலவர்கள் சங்க இலக்கியங்களில் உகந்தனவற்றை ஏற்றுப் போற்றியே வந்துள்ளனர்…
View More சங்க இலக்கியமும் சைவர்களும் – 2சங்க இலக்கியமும் சைவர்களும் – 1
சங்க இலக்கியத்தைப் பேசவந்த எழுத்தாளர் சைவத்தையும் சாடியுள்ளார். ஒரு பயிலரங்கில், ‘ சைவ சமயவாதிகள் இலக்கியத்திற்கு எதிராக இருந்ததால் தான் அவ்விலக்கியங்கள் மக்களிடம் பரவவில்லை’ என்று ஒரு பேராசிரியர் உரத்துப் பேசினார். இக்கருத்து எந்த அளவுக்கு உண்மை எனத் தமிழறிஞர்கள் சிந்திக்க வேண்டும். முழுமுதற்கடவுளாம் சிவபரம்பொருளைச் சங்கப்புலவர்கள் அருந்தவத்தோன், ஆதிரைமுதல்வன், ஆலமர்செல்வன், ஆனேற்றுக் கொடியோன், கொன்றையங்கலந் தெரியலான், பைங்கட்பார்ப்பான், மணிமிடற்றந்தணன், முக்கட்செல்வன் என்று சைவர்கள் இறும்பூது கொள்ளும் அளவிற்குப் பல்வேறு சிறப்புப் பெயர்களாற் புகழ்ந்து கூறினர். இப்பெயர்களெல்லாம் சிவபரத்துவத்தை விளக்கும் காரணப் பெயர்களாம்… திருஞானசம்பந்தப் பிள்ளையார் முதலிய திருமுறையாசிரியர்கள் பலரும் சங்கத்தையும் சங்க இலக்கியங்களையும் அறிந்தேயிருந்தனர் என்பதற்கு அவர்தம் அருளிச் செயல்களிலிருந்து சான்றுகள் கிடைக்கின்றன. பத்தி இலக்கியங்கள், குறிப்பாகத் திருமுறைகள் உயர்மக்களுக்கு ஆகா என விலக்கப்பட்ட கைக்கிளை பெருந்திணைகளை பத்தியுணர்வின் பெருக்கினைப் புலப்படுத்தும் உத்திகளாக மாற்றிக் கொண்டன. உயர்குடி மக்களுக்கு ஆகா எனத் தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் ஒதுக்கிய இத்திணைகளுக்குத் திருமுறைகள் உயர்நிலை யளித்துத் தழுவிக்கொண்டன…
View More சங்க இலக்கியமும் சைவர்களும் – 1ஆன்மீக இலக்கியம் – பண்பு, பார்வை, பணி
எப்போதும் விரிந்து விரிந்து பெருகும் – ஆழ்ந்து ஆழ்ந்து ஆழம் காணும் – பறந்து பறந்து சிகரம் தேடும் – அனுபவப் பகிர்வழகே இலக்கிய சுகம், இலக்கிய ஞானம். இதற்கு ஹைக்கூவும் உதவும், காவியமும் உதவும். சிறு கதையும் உதவும், பெரு நாவலும் உதவும். நாடகமும் உதவும், திரையுலகும் உதவும்… புலனுகர்வுகள் – உணர்ச்சிகள்-கருத்துகள் – கற்பனைகள் என்பவற்றைக் கருவியாகக் கொண்டு அவற்றையே தாண்டி ஓர் ஆன்மவெளியில் கலைஞன் வந்திறங்கும் போது அக்கலைஞனின் கலைப்படைப்பில் ஒரு மகோன்னதம் சித்திக்கும்… மேலைக் காற்று இலக்கியத் திறனாய்வுக்கு வேண்டாம் என்பதல்ல நோக்கம். சுய பார்வைகளையும் , சுதேசிப் பார்வைகளையும் இழந்து – அபத்தப் பார்வைகளையும் அலக்கியப் பார்வைகளையும் வளரவிட வேண்டாம் என்பதுவே நோக்கம்….
View More ஆன்மீக இலக்கியம் – பண்பு, பார்வை, பணிஅஞ்சலி: ரா.கணபதி
ரா.கணபதி அவர்கள் ஒரு சகாப்தம். பெரும் தத்துவஞானி, ஆன்ம சாதகர், பக்தர். அறிவுக்கனலே அருட்புனலே’ ஒரு தலைமுறையை ராமகிருஷ்ண – விவேகானந்த இயக்கத்துக்கு கொண்டு வந்துள்ளது. தெய்வத்தின் குரல் – அவரால் தொகுக்கப்பட்ட காஞ்சி சந்திர சேகரேந்திர சரஸ்வதி அவர்களின் உபந்நியாசங்கள், விளக்கங்கள் – மாபெரும் ஒரு முயற்சி. பழம்பெரும் பௌராணிக மரபின் இறுதி ஒளிவிளக்காக வாழ்ந்த அவர் வாழ்க்கை மஹா சிவராத்திரி அன்று முடிவடைந்தது ஒரு அற்புத பொருத்தம். அவரது புனித நினைவை தமிழ்ஹிந்து வணங்குகிறது..
View More அஞ்சலி: ரா.கணபதிபக்திச் சிறகால் வசப்பட்ட ஞானவானம்: காரைக்காலம்மையார்
சத்தியத்தை – சிவத்தை – சுந்தரத்தை, சுடுகாட்டு அரங்கின் மைய நடனமாக அனுபவிக்கின்றது அம்மையின் மனம்.. புழுதி அள்ளி அவிக்க முயல்கின்றது பேய்! பூச்சுக்கள் உதிர்கையில், சாயம் வெளுக்கையில், புழுதி அள்ளி அவிக்க முயலும் கைகளும் நம் கைகளே என்பது புலனாகின்றது… ஒப்பனைகளின் அழிவில் பேயரங்கமும், அதன் மைய நிகழ்வாம் அப்பனின் ஆட்டமும் தெரிகின்றன. அந்த ஆட்டமே பிரபஞ்சத்தின் இயக்க மையம்; இலட்சிய மையம்.
View More பக்திச் சிறகால் வசப்பட்ட ஞானவானம்: காரைக்காலம்மையார்இது ஒரு ஓப்பன் ஸோர்ஸ் மதம்
……வேறுபடும் பன்மைத்தன்மைக்கும், மாற்றத்தை அனுமதிக்காத ஒற்றைத் தன்மைக்கும் இடையே உள்ள வித்தியாசமே இந்து மதத்தை மற்ற மதங்களிடம் இருந்து பிரிக்கும் முக்கிய வேறுபாடு என்று சொல்ல முடியாது; ஆன்மீக மூலங்களைத் திறந்து வைத்திருப்பதன் மூலம் இந்துத்துவமானது ஒரு திறந்த மூல (open source) மதமாக திகழ்வதும், மாற்றக் கூடாத இறையியலைப் போதிக்கும் மற்ற மதங்கள் மூடிய மூல (closed source) மதங்களாக இருப்பதும்தான் மிக முக்கியமான வேறுபாடு.
View More இது ஒரு ஓப்பன் ஸோர்ஸ் மதம்