பாகிஸ்தான் என்ற தனி நாடு தேவையா என்பது குறித்து இந்து தரப்பு வாதங்கள், இஸ்லாமியத் தரப்பு வாதங்கள் எல்லாவற்றையும் விரிவாகச் சொல்லிவிட்டு கடைசியில் பிரிவினைதான் ஒரே வழி என்ற முடிவையும் முன்வைப்பவர், அந்தப் பிரிவினையை எப்படி நடைமுறைப்படுத்தவேண்டும் என்று சொல்லியிருப்பவைதான் மிகவும் முக்கியமானவை. அது தொடர்பாக டாக்டர் அம்பேத்கர் முன்வைத்திருக்கும் யோசனைகள் எல்லாம் ஒரு மாமேதை, ஒரு தீர்க்கதரிசி சொன்ன ஆலோசனைகளாக இருக்கின்றன. சற்று உணர்ச்சி மேலிடச் சொல்வதென்றால், மாபெரும் ரிஷி கண்டு சொன்ன வேத வாக்கியங்கள் போல் இருக்கின்றன..
View More பாகிஸ்தான்: இந்தியப் பிரிவினை – அம்பேத்கரின் நூல் தமிழில்Tag: இந்திய முஸ்லிம்கள்
வரலாற்றின் பாடங்கள்: வீர சாவர்க்கர் – ஷவுக்கத் அலி உரையாடல்
1925ல் வீர சாவர்க்கருக்கும் கிலாஃபத் இயக்கத் தலைவர்களில் ஒருவரான ஷவுக்கத் அலிக்கும் இடையே நடந்த இந்த உரையாடல் முக்கியமானது. இந்த 2021ம் ஆண்டில் தாலிபானின் எழுச்சியை இந்திய முஸ்லிம்களில் கணிசமானவர்கள் வரவேற்றுள்ளனர் என்ற செய்தியின் பின்னணியில் வாசித்தால் இது நமக்குப் பல விஷயங்களை உணர்த்துகிறது. உரையாடல் நடந்தபடியே வருமாறு… “நேற்று வரை எல்லோரும் நல்லவரே என்று எங்கள் வீட்டுக் கதவுகளைத் திறந்து வைத்திருந்தோம். உலகின் வேறு பகுதியிலிருந்து வந்த திருடர்கள் எங்கள் சொத்தைக் கொள்ளையடித்து விட்டனர். இன்று புத்தி வந்து, சற்றே ஜாக்கிரதையாக வீட்டைப் பூட்டுகிறோம். சில கொள்ளையர்கள் வந்து, “நாங்கள் பல காலமாகக் கொள்ளையடித்து வந்துள்ளோம். நீங்கள் வீட்டைப் பூட்டுவது அநியாயம். இது நம் உறவை பாதிக்கும்” என்றால் நாங்கள் என்ன சொல்வது? அப்படிப்பட்ட அபாயகராமான உறவை முறிக்க வேண்டிய நேரம் இது… ”
View More வரலாற்றின் பாடங்கள்: வீர சாவர்க்கர் – ஷவுக்கத் அலி உரையாடல்விஸ்வரூபம் 2: திரைப்பார்வை
50 வயதுக்கு மேல் ஒருவன் தன் காதல் அனுபவங்களை நினைத்து நினைத்துத் தனக்குத் தானே சிரித்துக் கொள்வது போல அமைந்திருக்கிறது இத் திரைப்படம். கமல் சம்மந்தம் சம்மந்தம் இல்லாமல் என்னவெல்லாமோ வசனம் பேசுகிறார். படத்தின் முதல் காட்சியில் தன் அரசியலுக்கு விளம்பரம் செய்து கொள்கிறார். இதனால் படத்தில் வரும் காட்சிகள் அரசியலுக்கு உள்ளதா அல்லது படத்துக்கு உரியதா என்பதில் குழப்பம் ஏற்படுகிறது. 64 குண்டுகள் என்கிறார். 64 வருடம் கொள்ளை என்று பிராமணரைப் பார்த்துச் சொல்கிறார். நொடிக்கு நொடியில் முஸ்லிம் – பிராமண – காங்கிரஸ் அரசியல் என்று மாறும்போது நமக்குத் தலை சுற்றுகிறது.. கமலுக்கும் மனைவிக்குமான காதல் காட்சிகள் காணச் சகிக்கவில்லை. கமல் இப்போது முஸ்லிமா இந்துவா என்ற குழப்பம் அவர் மனைவிக்கு மட்டுமல்ல, நமக்கும் ஏற்படுகிறது…பாசிட்டிவாக சில விஷயங்களைச் சொல்ல வேண்டுமென்றால், இப்படி ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற பல காட்சிகளை குன்சாக ஒன்றாக்கி ஒரு படமாக்கியது பெரிய சாதனைதான். இதற்கு எடிட்டருக்குப் பெரிய பாராட்டு சொல்ல வேண்டும்…
View More விஸ்வரூபம் 2: திரைப்பார்வைதாய்மதம் திரும்புதலும் சாதியும்
இந்துமதத்தின் வரலாற்றில் அன்னியர்களை சுவீகரித்து ஏற்பதும் மதம் மாறியவர்களைத் திரும்பக் கொண்டு வருவதும் நீண்ட நெடிய காலமாக நடந்து வந்துள்ளது. இது ஒன்றும் நவீனகாலக் கண்டுபிடிப்பு அல்ல… தேவல ஸ்மிருதி (Devala Smriti) என்ற சம்ஸ்கிருத நூல் பொ.பி 10ம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. மிலேச்சர்களால் கைப்பற்றப்பட்டவர்களையும் மதமாற்றத்தினால் தர்ம நெறிகளிலிருந்து தவறியவர்களையும் மீண்டும் சமுதாயத்திற்குள் சுவீகரிப்பதற்கான விதிமுறைகள், கட்டுப்பாடுகள் ஆகியவற்றை இந்த நூல் கூறுகிறது.. விஜயநகரப் பேரரசை நிறுவிய சகோதரர்களில் ஒருவரான புக்கராயரும்கூட இவ்வாறு தாய்மதம் திரும்பியவர்தான் என்று இந்தப் பேரரசு குறித்த காவியப் பதிவுகளில் கூறப்பட்டுள்ளது… இவ்வளவு நீண்டகாலமாக இது நடந்து வந்திருக்கிறது என்னும்போது, தாய்மதம் திரும்பும் இந்துக்கள் எந்த சாதிகளுக்குள் இணைந்தார்கள்? விடை மிக எளிது…
View More தாய்மதம் திரும்புதலும் சாதியும்நம்மிடமிருந்து விலகிச்செல்லும் இஸ்லாமியர்கள்: ஒரு சாமானிய தமிழனின் பார்வை
அல்ஜீரியாவிலும் துனிசியாவிலும் இருந்து வந்த பயங்கரவாதிகளுக்காக, தான் என்றும் பார்த்திராத யூதர்கள் என்ற ஒரு இனக்குழுவின் மேல் ஒரு கடுமையான ஆதாரமில்லாத குற்றச்சாட்டை வைப்பது – இதை எப்படி செய்ய முடிகிறது? அந்த பயங்கரவாதிகளை ஏன் காக்க வேண்டும் – அவர்களுடன் என்ன உறவு, மத ரீதியிலானதை தவிர?… முன்பெல்லாம் இஸ்லாமியர் வீட்டுப் பெண்கள் நம் வீட்டு பெண்களை போல் தான் இருந்தார்கள். அவர்கள் எல்லா சுதந்திரத்தையும் அனுபவித்தார்கள். அயத்துல்லா கொமேனி ஈரானில் கல்லூரி படிக்கும் பெண்களை கருப்பு அங்கியால் மூடியபோது கூட நம் ஊர் முஸ்லிம் பெண்கள் சாதாரண ஆடைதான் அணிந்திருந்தார்கள்… ”இந்த அங்கியை அணிந்தால் தலை வேர்த்து கசகசவென்று ஆகி இப்படி நடக்கிறது. தலை வேறு வலிக்கிறது” என்று அழாக்குறையாக அந்தக் குழந்தை சொன்னது சுருக்கென்று தைத்தது. ஆனால் அவள் தந்தையோ கண்டும் காணாமல் இருந்தார். 7 வயது குழந்தைக்கு ஹிஜாப் என்ற அந்தக் கருப்பு அங்கியை அணிவிக்க வேண்டிய கட்டாயம் என்ன?…
View More நம்மிடமிருந்து விலகிச்செல்லும் இஸ்லாமியர்கள்: ஒரு சாமானிய தமிழனின் பார்வைமதச்சார்பின்மை இந்திய தேசப்பாதுகாப்புக்கு ஓர் அச்சுறுத்தல் – துஃபாயில் அகமது
என்னுடைய பேரக்குழந்தைகளின் தலைமுறைக்கு சொல்ல ஒரு விஷயம் என்னிடம் உண்டு. உங்கள் காலத்தில் கேரளா, மேற்கு வங்கம், பிஹார் மற்றும் உத்தர பிரதேசத்தின் பல பகுதிகளிலிருந்து ஹிந்துக்கள் முற்றிலுமாக வெளியேற வேண்டிய நிர்ப்பந்தத்தை மதச்சார்பின்மை உருவாக்கும் – காஷ்மீரீலிருந்து பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்டது போல… ஒரு திருடன் குளித்துவிட்டு சுத்தபத்தமாக பயபக்தியுடன் ராத்திரியில் கோவிலுக்குள் நுழைகிறான். அவனுடைய உண்மையான நோக்கம் கோயிலில் உள்ள தெய்வ விக்ரஹங்களைக் கொள்ளையடிப்பது. காலடித்தடம் கேட்டு திரும்பிப் பார்த்தபோது, வேறொருவன் செருப்புடன் கோவிலுக்குள் நுழைந்ததை காண்கிறான். உடனே திருடன் எச்சரிக்கிறான் – “நான் மட்டும் இப்போது வேலையில் மும்முரமாக இல்லாதிருந்தால், ஆலயத்தை அவமதித்தற்காக உன்னை தண்டித்திருப்பேன்!” அந்த திருடன் மதச்சார்பற்றவன். இதுதான் இந்திய சமூகத்தின் யதார்த்தநிலை…
View More மதச்சார்பின்மை இந்திய தேசப்பாதுகாப்புக்கு ஓர் அச்சுறுத்தல் – துஃபாயில் அகமதுஒன்றிவாழ இடம் தராத இஸ்லாம்
ஹிந்து வெறுப்பால் பாகிஸ்தான் என்ற கனவுலகை நோக்கிச் சென்ற முஸ்லிம்கள், கடைசியில் அடிமையானது அமெரிக்கா, சீனா, சவுதி அரேபியே போன்ற எதேச்சாதிகார சக்திகளுக்கு மட்டுமே. முன்னேற்றமும், குறைந்தபட்ச நிம்மதியான வாழ்க்கையும் கூட பாக். முஸ்லிம்களில் பெரும்பாலானவர்களுக்கு அமையவில்லை என்பதே முகத்தில் அறையும் உண்மை. இந்நூற்றாண்டின் முதல் பதின்மத்தில் மட்டுமே குண்டு வெடிப்பு, தீவிரவாதத் தாக்குதலால் மடிந்த பாகிஸ்தானியரின் எண்ணிக்கை 35,000க்கும் மேல். செல்வம் கொழிக்கும் இஸ்லாமிய அரபு நாடுகள் சிரிய முஸ்லிம் அகதிகளுக்கு இடமில்லாமல் கை விரித்தது அண்மைய நிகழ்வு.. கலிமாவை ஏற்ற மாந்தரிடையே எந்த நிற – மொழி – இன – பிராந்திய வேற்றுமையும் கிடையாது; எல்லாரும் சகோதரரே; தோளோடு தோள் உரசிக்கொண்டு தொழலாம் என்னும் பம்மாத்துகள் எல்லாம் எந்த அளவு உண்மை என்பதை இனியாவது அப்பாவி இந்திய முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்….
View More ஒன்றிவாழ இடம் தராத இஸ்லாம்ஜிகாதி பயங்கரவாதமும் இந்திய முஸ்லிம்களும்: தவ்லீன் சிங்
நமது முஸ்லிம்கள் அமைதியாகவும் மற்ற மதத்தினரோடு இணக்கமாகவும் இதுவரை வாழ்ந்துவந்தார்கள் என்றால், இங்கு பின்பற்றப்பட்ட இஸ்லாம், இப்போது உலகம் முழுவதிலும் ஐ.எஸ். புகுத்த முயலும் இஸ்லாத்திற்கு மாறுபட்டதாக இருந்தது ஒரு முக்கியக் காரணம். ஆனால், சில வருடங்களாக இது மாறிவருகிறது. இந்திய மசூதிகளில் இப்போது போதிக்கப்படும் இஸ்லாம், சையத் குதூப் மற்றும் அப்துல் வஹாப் போன்றவர்களின் போதனைகளைப் பின்பற்றுகிறது. இஸ்லாத்திற்கு எதிராக உலகளாவிய எதிர்ப்பினால் இஸ்லாமியர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர் என்ற தவறான பிரச்சாரம் தொடர்ந்து இஸ்லாமிய போதகர்களால் செய்யப்பட்டு வருகிறது. மிக அதிக எண்ணிக்கையிலான இந்திய முஸ்லீம்கள் இத்தகைய பொய்களை நம்புகின்றனர்… நபியின் காலம் பொற்காலம் என்றும் அதைநோக்கி இஸ்லாம் திரும்பவேண்டும் என்றும் நினைப்பவர்களுக்கு ஜிகாதி தீவிரவாதம்தான் இஸ்லாத்தின் உண்மை முகம் என்பது புரிபடவில்லை…
View More ஜிகாதி பயங்கரவாதமும் இந்திய முஸ்லிம்களும்: தவ்லீன் சிங்