நாட்டில் விவாதிக்கப் படவேண்டிய பல பிரச்சினைகள் இருக்கும்போதும், இந்நிறுவனம் பல முறை ஹிந்து கலாசாரம், ஹிந்து ஆன்மீகம், ஹிந்து பண்பாட்டின் பழக்க வழக்கங்கள் என்று ஹிந்து மதம் சம்பந்தப்பட்ட கருப்பொருள்களையே விவாதத்திற்கு எடுத்துக் கொண்டு, விவாதத்தினிடையே அவற்றை கேலி செய்து, நிந்தனை செய்து, அவமதித்து, அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஹிந்துப் பெரும்பான்மையின மக்களின் மனங்களில் சந்தேகம், நம்பிக்கையின்மை போன்ற விஷவித்துக்களை விதைத்து, அவர்களே தங்கள் பண்பாட்டையும், பழக்க வழக்கங்களையும் வெறுத்து ஒதுக்குமாறு செய்வதையே தொழிலாகக் கொண்டிருக்கிறது.
View More ஹிந்துமத உணர்வுகளைப் புண்படுத்தும் மின்-ஊடகங்கள்Tag: இந்துத்துவம்
வேதாளம் சொன்ன கதை: குமரி மாவட்டத்தில் ஒரு பிள்ளையார் கோவில்
வேதாளம் எள்ளி நகைத்து “மகனே நீ ஏன் இப்படி கஷ்டப்படுகிறாய்? நீ உனக்காக கஷ்டப்படுகிறாயா அல்லது வேறு யாருக்காகவோவா? இந்த உலகத்தில் நன்றி கெட்டவர்கள் உண்டு அவர்கள் உன்னை பயன்படுத்திக்கொண்டு பிறகு அதிகாரத்துக்கு வந்த உடனேயே ஆதாயத்துக்காக உன் எதிரிகளுடன் சேர்ந்து கொண்டு உனது நியாயமான கோரிக்கைகளை கூட நிராகரித்து விடுவார்கள். இதற்கு உதாரணமாக நடந்த ஒரு சம்பவத்தை சொல்கிறேன் கேள் …
View More வேதாளம் சொன்ன கதை: குமரி மாவட்டத்தில் ஒரு பிள்ளையார் கோவில்ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க அரசியல்: ஒரு அலசல்
ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம் சேவகர்கள் பலர் பா.ஜ.க வில் இருந்தாலும் அது தனியான சுதந்திரமான கட்சி, அதன் பிரச்சனைகளை அதுவே தீர்த்துக் கொள்ளக்கூடிய சக்தி படைத்தது. தற்போது அக்கட்சிக்குள்ளே நடந்து கொண்டிருக்கும் பூசல்கள் மனதுக்கு வருத்தம் அளிப்பதாக இருந்தாலும், அவற்றிலிருந்து விரைவில் மீண்டு வரும் … தன்னுடைய ஆலோசனைகளுக்கும், அறிவுரைகளுக்கும், செயல்பாட்டிற்கும் தக்க அங்கீகாரம் கிடைக்கும் விதமாக, மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான திரு அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களை சென்று மோகன்ஜி சந்தித்தது, அவரின் நற்பண்பைக் காட்டும் விதமாக அமைந்துள்ளது.
View More ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க அரசியல்: ஒரு அலசல்கைவிடப்பட்டவர்களா இந்துக்கள்?
ஷா ஆலம் (மலேசியா) பகுதியில் குழுமியிருந்த அந்தக் கூட்டத்தினர் மதவெறி கோஷங்களை எழுப்ப தலைவரான ஹாஜி சொன்னார் – “கோயில் கட்டுமானம் மட்டும் தொடர்ந்தால் இங்கே ரத்த ஆறு ஓடும்” … தாங்கள் ஒரு குற்றமும் செய்யாதபோதும், கோயம்புத்தூர் முதல் கோலாலம்பூர் வரை, காட்மாண்டு முதல் ஜெட்டா வரை ஏன் எல்லா இடங்களிலும் கொத்துக் கொத்தாக இந்துக்கள் படுகொலைக்கு எளிய இலக்காகின்றனர்? இந்துக்கள் படும் காயங்கள் பல துறைகளிலும் செல்வாக்குள்ள தலைவர்களாக உள்ள இந்துக்களாலேயே கண்டுகொள்ளாமல் ஒதுக்கப் படுகின்றன. ஏன்? (மூலம்: தருண் விஜய், தமிழில்: ஜடாயு)
View More கைவிடப்பட்டவர்களா இந்துக்கள்?வாழும் வரலாறு: நானாஜி தேஷ்முக்
ஒருபுறம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் வியக்கவைக்கும் முன்னேற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் மக்களின் வாழ்க்கையில் ஏராளமான பிரச்சினைகளும் ஆபத்துகளும் வந்துகொண்டே இருக்கின்றன. அதிகார வெறி, பொதுநலத்தை ஓரங்கட்டிவிட்டது. எங்கு பார்த்தாலும் கோஷ்டிப் பூசல் காணப்படுகிறது. எந்தக் கட்சியும் இதற்கு விலக்கல்ல. இந்த பரஸ்பர அவநம்பிக்கை, தகராறு போன்றவற்றால் அரசியல் கட்சிகள் பலவீனமடைந்து கொண்டிருக்கின்றன. அறப்பண்பு முற்றிலுமாக செல்லரித்துப் போய்விட்டது. மனித விழுமியங்கள் நலிவடைந்து விட்டன. அரசுகள் ஸ்திரத்தன்மை இழந்துவிட்டன. எங்கு பார்த்தாலும் அநீதியும் அட்டூழியமும் அக்கிரமமும் நடந்துகொண்டிருப்பதைப் பார்க்கிறோம். இவற்றுக்கெல்லாம் என்ன பரிகாரம் என்பதை…
View More வாழும் வரலாறு: நானாஜி தேஷ்முக்இந்திய தேசியம்: ஸ்ரீஅரவிந்தரின் பிரசித்தி பெற்ற உரை
உலத்தாருக்குத் தொண்டு செய்ய நான் உனக்குச் சுதந்திரம் கொடுத்தேன். நீ வெளியே போய் இந்த சமாச்சாரத்தைச் சொல். இந்தியா விருத்திக்கு வரும்போது ஸனாதன தர்மம்தான் முன்னுக்கு வரும் என்பதைச் சொல். இந்தியா மேன்மையையடையுமென்று சொல்லும்போது ஸனாதன தருமந்தான் விருத்தியடையுமென்பது கருத்து; இந்தியா பிரவிருத்தியாகுமென்று சொன்னால், உலகத்தின் கண் ஸனாதன தருமம் பிரவர்த்திக்குமென்று பொருள்…
View More இந்திய தேசியம்: ஸ்ரீஅரவிந்தரின் பிரசித்தி பெற்ற உரைவேர்க்கடலைத் தோல்கள், வேதத்தின் காலம், விடுதலை வேள்வி …
… இன்று வரலாறு அந்த நீதிபதியை மறந்துவிட்டது, இந்த வழக்கு நடந்த மும்பை உயர்நீதிமன்றத்தில், அந்த தீர்ப்பு வழங்கப்பட்ட அறையில் அந்த “குற்றவாளியின்” வார்த்தைகள் பொறிக்கப்பட்டு விளங்குகின்றன. அந்த குற்றவாளிதான் சுதந்திர கோஷத்தை இந்த தேசத்துக்குத் தந்த மகான்…. அவரது உற்ற நண்பராகவும் சீடராகவும் விளங்கிய ஜின்னா, அவரது மறைவு வரை அப்பழுக்கற்ற தேசியவாதியாகவே இருந்தார், அதன் பின்னரே பாதை தடுமாறி பிரிவினை வாதியானார்….
View More வேர்க்கடலைத் தோல்கள், வேதத்தின் காலம், விடுதலை வேள்வி …ஊர்வம்பு – மல மல மல மல்லே மல்லே (இறுதி)
ஓஷோ சொல்கிறார் – “இந்த போப் வெறும் அரசியல்வாதி…ஹிந்துக்களுக்கு இழப்பதற்கு எதுவும் இல்லை. ஏனென்றால், அவர்களுடைய மதம் கிறுத்துவத்தைவிட மிக மிக வளமையானது. போப் வெறும் ஏழை ஆண்டி. அவரை எதிர்ப்பதில் எந்தப் பலனும் இல்லை. அவரை எதிர்க்காதீர்கள். அம்பலப்படுத்துங்கள் ….
View More ஊர்வம்பு – மல மல மல மல்லே மல்லே (இறுதி)ஊர்வம்பு – மல மல மல மல்லே மல்லே..
“எது எப்படியானா என்ன? அவனவன் சோத்துக்கே லாட்டரி அடிக்கான். இதில வேலை வெட்டி இல்லாமல் இந்த இந்துத்துவாதிகள் அயோத்தி கோயிலுக்கும், ராமர் பாலத்திற்கும், திருப்பதி கோயிலுக்கும், தென்காசி கோயில் நிலத்திற்காகவும் எதற்காகப் போராட்டம் நடத்துகிறார்கள்? விட்டுக்கொடுத்து வாழவேண்டியதுதானே?”
View More ஊர்வம்பு – மல மல மல மல்லே மல்லே..அழகியல் அரசியல்
எத்தனையோ சிவபக்தர்களும், ஆத்திகர்களும் ‘அன்பே சிவம்’ திரைப்படத்தைப் பார்த்துக் கண்கள் குளமாகி, நெக்குருகி நின்றிருக்கிறார்கள். காரணம் திரைப்பட ஊடகத்தின் அழகியல். அரசியல் கட்சிகள் போல மேடை போட்டு, கெட்ட வார்த்தை பேசவில்லை இப்படம். ஒரு மிகப்பெரிய அறிவுஜீவித்தனத்தை முன்வைப்பது போலவே, ரோஹிந்தன் மிஸ்த்ரி, அரவிந்த் அடிகா நாவல்கள் போலவே, அருந்ததிராயின் அரைகுறைக் கட்டுரைகள் போலவே ஒரு தத்துவம் போல், இலக்கியம் போல் தன்னை முன்வைத்துக் கொண்டது ‘அன்பே சிவம்’ திரைப்படம்.
View More அழகியல் அரசியல்