ஒரு உடல் நலன் இல்லாத அதிகார வெறி பிடித்த மர்மமான ஒரு பெண்மணிக்கு ஏன் தமிழ் நாடு வாக்களிக்க வேண்டும்? சிந்தியுங்கள். ஜெயலலிதாவுக்கு இன்றைய தேவை ஓய்வும், மருத்துவ சிகிச்சையும், பயிற்சிகளும், மருந்துகளுமே அன்றி நிச்சயமாக முதல்வர் பதவி கிடையாது. அதற்கான அருகதையுடையவர் அவர் கிடையாது என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார். அவருக்குத் தேவையான ஓய்வை அளியுங்கள்… தமிழ் நாட்டில் முக்கியமான இந்துத் தலைவர்கள் பலரும் கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப் பட்டார்கள். ஆம்பூரில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் பெரும் கலவரம் நடத்தி போலீஸ்காரர்களைக் கடுமையாகத் தாக்கி பெண் போலீஸ்காரர்களை மான பங்கப் படுத்தினர். இது எதையும் கண்டு கொள்ளாமல்இஸ்லாமிய பயங்கரவாதம் தமிழ் நாட்டில் வேர் விட்டு வளர அனுமதி அளித்து வைத்திருக்கிறார் ஜெயலலிதா. ஓட்டுக்காக இவர் அனுமதித்திருக்கும் பயங்கரவாதம் நாளைக்கு ஒட்டு மொத்தத் தமிழ் நாட்டையே அழித்து விடக் கூடியது. நீங்களும் உங்கள் மனைவி குழந்தைகளும் குண்டு வெடித்துச் சிதறும் அபாயம் தமிழ் நாட்டைச் சூழ்ந்துள்ளது. ஊழல் மலிந்த நீர், மின்சாரம், கல்வி, பாதுகாப்பு,சாலை, வேலை என்று அனைத்து துறைகளிலும் மெத்தனமும் செயலின்மையும் ஊழல்களும் மலிந்த ஜெயலலிதா அரசு உடனடியாக நீக்கப் பட வேண்டும்…
View More தமிழக தேர்தல் 2016: ஒரு வேண்டுகோள் – 2 (வேண்டாம் அ.தி.மு.க)Tag: இலவசம்
பூனைக்கு யார் மணி கட்டுவது?: மதுவிலக்கு குறித்து சில எண்ணங்கள்
இறைவன் படைப்பில் ஓரறிவு படைத்த உயிரினங்கள் தொடங்கி ஆறறிவு படைத்த மனிதர்கள் வரை…
View More பூனைக்கு யார் மணி கட்டுவது?: மதுவிலக்கு குறித்து சில எண்ணங்கள்கம்யூனிஸமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 3
கம்யூனிஸத்தை எதிர்க்கும் இந்தியாவின் ஒரு வலது சாரிக் காரரையும், அமேரிக்காவின் ஒரு இடது சாரிக் காரரையும் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். இருவருமே நகைச்சுவையை வைத்துதான் அரசியல் விமர்சனத்தை முன்வைப்பவர்கள்…. பெரு நோய்கள் ஏற்படுகையில், ஏழைகளால் தனியார் மருத்துவத்தின் செலவுகளை ஏற்க முடியாது. அரசு மருத்துவமனைகளில் மருத்துவம் கிடைக்காது. தற்பொழுதைய நிலையில் அவர்கள் அந்த நோய்களுடனேயே வாழ்ந்து மடிகிறார்கள்… அரசு வருவாயில், ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியமே 24 சதவிகிதமாக மாறியுள்ளது…
View More கம்யூனிஸமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 3இலவசங்களில் மூழ்கி கடனில் எழும் தமிழகம்
நமது மக்களுக்கு ஒரு குணம் – ஃப்ரீயாக கொடுத்தால் பினாயில் என்றாலும் வாங்கி குடிப்பார்கள். என்னிடம் தொலைக் காட்சி ஏற்கனவே உள்ளது – எனக்கு இலவச தொலைக் காட்சி வேண்டாம் என்று எவர் கூறுகிறார்? பல தலைமுறைகளாக சேரிகளில் மக்கள் வசித்துக் கொண்டு, தொலைக் காட்சியில் கண்ணையும் மனதையும் நிலை குத்தவிட்டு, ஏன் இப்படி குடிசையிலேயே தலைமுறை தலைமுறையாக இருக்கிறோம் என்று தெரியாமலே இருக்கிறார்கள். மக்களிடம் இலவசப் பொருள்கள் தான் மிகுந்திருக்கிறதே தவிர வாழ்க்கைத்தரம் உயரவே இல்லை.
View More இலவசங்களில் மூழ்கி கடனில் எழும் தமிழகம்இன்று மலர்ந்தது சுதந்திரம்
“நீங்கள் என்ன வானத்திலிருந்து குதித்தவர்களா?” என்று நீதிபதிகளை நோக்கிக் கேட்டார் ஓர் அமைச்சர். இன்னொருவர், “நாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைச் சேர்ந்தவர்கள். நீங்கள் இந்த வேலைக்கு அரசால் நியமிக்கப்பட்டவர்கள். எங்களை விட நீங்கள் உயர்ந்தவர்களா? கட்டைப் பஞ்சாயத்து நடத்துவது போல இருக்கிறது,” என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டது. “இரண்டு நீதிபதிகள் சேர்ந்து ஒரு நாட்டின் விதியை, 120 கோடி மக்களின் விதியைத் தீர்மானிப்பதற்கு என்ன உரிமை இருக்கிறது?” என்று நம் முதல்வர் கேட்ட கேள்வி ஆணித்தரமானது. இந்திய அரசியல் சட்டம் நாடாளுமன்றத்தைத் தான் sovereign என்று சொல்லியிருக்கிறது. இது போன்ற யாரோ எழுதி வைத்துவிட்டதை வைத்துக்கொண்டு அதற்குக் கட்டுப்பட்டு நடப்பது என்பது சுதந்திரமாகாது…
View More இன்று மலர்ந்தது சுதந்திரம்