விநாயகர் அகவல்: அனைவருக்குமான ஆன்மீகம்

பக்தி, யோக சாதனை ஆகிய இரண்டு பாதைகளும் எல்லை கிழித்து பிரித்துவிட முடியாதவை. என்ற போதிலும் திருமந்திரத்தில் யோக-தந்திர சாதனைகளில் உள்ள முக்கியத்துவமும் இதர திருமுறைகளில் பக்திக்கு உள்ள முக்கியத்துவமும் அவை இரண்டு முழுக்க வெவ்வேறான பாதைகள் என்பது போல காட்சி மயக்கமொன்றை ஏற்படுத்துகின்றன. விநாயகர் அகவல் இந்த மயக்கத்தை இல்லாமலாக்குவதுடன் இரண்டையும் ஆற்றலுடனும் அழகுடனும் இனிமையுடனும் இணைக்க முடியும் என்பதைக் காட்டுகிறது. பின்னர் அருணகிரிநாதர், தாயுமானவர், பாரதி வரை ஏற்பட்ட இணைவு இனிமைக்கு பிள்ளையார் சுழியாகவும் அமைந்துள்ளது…

View More விநாயகர் அகவல்: அனைவருக்குமான ஆன்மீகம்

முருகன் உண்மையில் யார்?

சிறந்த இந்து சிந்தனையாளர் அரவிந்தன் நீலகண்டனின் சமீபத்திய மகத்தான பேருரை. உலகெங்கும் உள்ள தமிழ் இந்துக்கள், குறிப்பாக முருகபக்தர்கள் அனைவரும் பார்த்து, கேட்டு, உள்வாங்க வேண்டிய அத்தனை முக்கியமான விஷயங்களும் இந்த ஒரு மணி நேர வீடியோவில் உள்ளன. “முப்பாட்டன் முருகன்” என்ற ரீதியிலான சமீபத்திய பொய்ப் பிரசாரங்களின் உண்மையான நோக்கத்தையும் சதித்திட்டத்தையும் மிகத் தெளிவாக விளக்குகிறார்…

View More முருகன் உண்மையில் யார்?

இந்தியாவில் தூய்மைப் பணியாளர்களின் நிலை – ம.வெங்கடேசன்

தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் இருமுறை தலைவர் பதவியில் திறம்பட செயல்பட்டவர் ம.வெ. அத்துடன் சிறந்த சமூக வரலாற்று அறிஞரும் ஆவார். அவருடைய உரை நேரடி அனுபவத்திலிருந்து வருவது. தூய்மைப் பணியாளர்கள் குறித்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோதியுடன் நேரடியாக உரையாடியது, கொரோனா காலகட்டத்தில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து தூய்மைப் பணியாளர்கள் செய்த தொண்டு, தமிழ்நாடு உட்பல பல மாநிலங்களில் மாநில அரசு அமைப்புகளின் மெத்தனம், ஒப்பந்தக் காரர்களின் சுரண்டல்கள், அராஜகங்கள், பாலியல் அத்துமீறல்கள், தனது பணிக்காலத்தில் அவர் எடுத்த அதிரடி சட்ட நடவடிக்கைகள், பட்டியல் சமுதாயத்தினரே மிக அதிக அளவில் இந்தப் பணிகளுக்கு வரும் நிலைமை தொடர்வது சரியானதா என்று பல முக்கியமான விஷயங்களைத் தொட்டுச்செல்வதாக அவரது உரை அமைந்திருந்தது. உரையின் வீடியோ பதிவுகளை இங்கே காணலாம்…

View More இந்தியாவில் தூய்மைப் பணியாளர்களின் நிலை – ம.வெங்கடேசன்

ஜடாயு உரை: இளங்கோ முதல் தாயுமானவர் வரை

கடந்த ஜூன்-4, 2017 ஞாயிறு அன்று அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் வளைகுடாப் பகுதியிலுள்ள பாரதி தமிழ்ச்சங்கம் என்ற அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் ‘இளங்கோ முதல் தாயுமானவர் வரை: தமிழ் இலக்கியச் சுடர்கள்‘ என்ற தலைப்பில் உரையாற்றினார் ஜடாயு. அதன் ஆடியோ, வீடியோ பதிவுகள் கீழே… அவரது உரையை கிட்டத்தட்ட இரண்டாம்/மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதி வரையான தமிழ் இலக்கியத்தின் சிறந்த படைப்புகள்/படைப்பாளிகள் பற்றிய ஒரு கழுகுப் பார்வை (Bird’s eye view) என்று சொல்லலாம். உரையின் அடிநாதமாக இருந்தது தமிழ் இலக்கியம், தமிழ் பண்பாடு எல்லாம் அகில இந்தியப் பண்பாட்டோடு இணைந்த ஒன்று, அதன் பகுதி என்ற வாதம்….

View More ஜடாயு உரை: இளங்கோ முதல் தாயுமானவர் வரை

ஜடாயுவின் இராமாயண உரை

ஜூன் 20,21 தேதிகளில், திருவண்ணாமலையில், தர்ம ரக்ஷண சமிதி அமைப்பின் ஆன்மீகப் பயிற்சி முகாமில், இரண்டு நாட்களாக, ஆறு அமர்வுகளில் இராம காதை முழுவதையும் அடியேன் உரையாற்றினேன் (ஆறு காண்டங்கள், ஆறரை மணி நேரம்). அதன் பதிவுகளை இந்த Playlistல் காணலாம். இந்த உரைகள் சம்பிரதாயமான கதாகாலட்சேப நடையிலோ, முற்றிலும் பண்டிதத் தமிழிலோ அல்லது மொத்தமும் பேச்சு வழக்கிலோ இல்லாமல் சகஜமாகவும், இயல்பாகவும் இருக்க வேண்டும் என்று முயற்சி எடுத்திருக்கிறேன். கதையின் சுவாரஸ்யம் குன்றாத வகையில் பொருத்தமான இடங்களில் கம்பராமாயணப் பாடல்களைக் கூறி, விளக்கிச் சென்றிருக்கிறேன்…

View More ஜடாயுவின் இராமாயண உரை

நாயன்மார்கள்: ஓர் சொற்பொழிவு

நாயன்மார்களின் சரிதங்கள், நமது சமயப் பண்பாட்டு மலர்ச்சிக்கும் எழுச்சிக்கும் அவர்கள் ஆற்றிய பங்களிப்பு குறித்து சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் ஜடாயு ஆற்றிய உரை. பெரியபுராணத்தின் பின்னணியையும், சம்பந்தர், அப்பர், சுந்தரர், சிறுத்தொண்டர், கண்ணப்பர், திருநீலகண்டர் மற்றும் சில நாயன்மார்களையும் குறித்து வரலாறு, இலக்கியம், சமயம் என்ற மூன்று தளங்களையும் தொட்டுச் செல்கிறது இந்த 50 நிமிட உரை. இங்கே கேட்கலாம்..

View More நாயன்மார்கள்: ஓர் சொற்பொழிவு

இந்து சமூக அமைப்பும் சாதிகளும் – உரை

இந்து சமூக அமைப்பு மற்றும் சாதிகள் குறித்த வரலாற்றுப் பின்னணி. சமுதாய சமத்துவம், சீர்திருத்தங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான இந்து சிந்தனைகள். இத்திறக்கில் நாம் இப்போது செய்ய வேண்டியது என்ன? – இவற்றை முன்வைத்து சமீபத்தில் ஒரு இந்து ஆன்மீக, சமூகசேவை அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் ஜடாயு ஆற்றிய உரை (55 நிமிடங்கள்). இங்கே கேட்கலாம்…

View More இந்து சமூக அமைப்பும் சாதிகளும் – உரை

அஞ்சலி: ஜெயகாந்தன் நினைவில்..

நாவல்கள், சிறுகதைகள், அரசியல், சமூக விமர்சனங்கள், மேடைப் பேச்சுக்கள், திரைப்பட இயக்கம் என பல தளங்களில் வியாபித்து நிற்கிறது அவரது ஆளுமை. நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் என்ற பாரதியின் அடியொற்றி வெளிப்பட்டது அவரது சத்திய ஆவேசம். ஜெயகாந்தனின் மறைவைத் தொடர்ந்து ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்ற பெங்களூர் வாசக வட்டக் கூட்டத்தில் ஜெயகாந்தனின் இலக்கிய ஆளுமையையும், படைப்புகளையும் நினைவுகூர்ந்து நான் ஆற்றிய உரையின் ஒலி வடிவம் இங்கே…

View More அஞ்சலி: ஜெயகாந்தன் நினைவில்..

ஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் – 4

சம்ஸ்க்ருத பாஷையில் வீரம் போற்றும் கவிதைகள் (Heroic Poetry) என்ற அலகீடுகளைக் கொண்ட காவ்யங்கள் மிகக் குறிப்பாகக் காணக்கிட்டவில்லை எனினும் வால்மீகி ராமாயணம் இந்த அலகீடுகளுடன் முற்றுமாக ஒத்துப்போகும் ஒரு அபூர்வ காவ்யம் என்பது நோக்கத்தக்கது. நவீன அறிஞர்கள் ராமாயண காவ்யத்தினை இலக்கியச் செறிவுள்ள ஒரு காவ்யமாக அணுக விழைந்தாலும் அதே சமயம் இந்த காவ்யத்தில் பொதிந்துள்ள சௌர்யம் (வீரம்) போற்றும் பாங்கு ஒரே காவ்யம் இரண்டு அபூர்வமான குணாதிசயங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளமையைக் காட்டுகிறது என்றால் மிகையாகாது.

View More ஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் – 4

ஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் – 3

ராமகதை தூய கங்கை நதியைப் போன்று வடக்கிலிருந்து தெற்கிற்கு தனது மூல மற்றும் முழுமையான வடிவில் வந்தது எனச் சொல்லலாம். ஆயிரத்து சொச்சம் வருஷ முன்னமேயே தெற்கிலே இந்த வால்மீகி ராமாயண காவ்யம் மக்களால் ஏற்கப்பட்டிருக்க வேண்டும் என்பது அவதானிக்கத் தக்கது. தக்ஷிண பாரதத்தில் இந்த நூலின் மீது ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து எழுதப்பட்ட விரிவுரைகள் இந்த நூல் ப்ரதி மாறாது பாதுகாக்கப்பட ஹேதுவாக இருந்தது என்பதும் குறிப்பிடத் தக்கது. வடக்கு மற்றும் தெற்கு என்ற இரண்டு பாடாந்தரங்களிலும் பல விஷயங்கள் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டிருக்கலாம் என பதிப்பாசிரியர்கள் அபிப்ராயப்படுகின்றனர். ஆயினும் தெற்குப் பாடாந்தரம் மூலராமாயணம் என்று கருதப்படும் நூலினை அதனுடைய மூல மற்றும் தொன்மையான வடிவில் அப்படியே பாதுகாத்து வைத்துள்ளது என்ற டாக்டர் ஜேக்கபி அவர்களின் கருத்தை பதிப்பாசிரியர் குழுவினர் வழிமொழிகின்றனர்.

View More ஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் – 3