அண்மையில் ஐடி நிறுவனம் ஒன்று, பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு புரோகிராமர் வேலை என்று விளம்பரம் செய்திருந்தார்கள். அதில் ஆச்சரியமான உண்மை ஒன்று இருக்கிறது. கணினித் துறையில் புரோகிராமராக நுழைய அந்தக் கல்வியே போதும் என்பதுதான்… தரமற்ற கல்வி ஒரு சுமை. இங்கே கல்வி என்பது பாடப்புத்தகம், அதனைச் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் இரண்டையும் குறிக்கிறது. இந்தக் கல்விமுறை ஒரு மாணவனுக்குச் சிந்திக்கும் திறனையோ, தன்னம்பிக்கையையோ, தேர்வில் வெற்றி பெற வேண்டிய உழைப்பையோ ஊக்கப்படுத்துவதாகவே இல்லை… ஒரு மாணவர் தனக்கு எந்தக் கல்வித் துறையில் ஆர்வம் என்று எண்ணிப் பார்த்து அதற்காகவெல்லாம் உழைப்பது இல்லை. அப்படி ஒரு குறிக்கோளை அவருக்கு யாரும் சொல்லித் தருவதும் இல்லை, ஊக்கப்படுத்துவதும் இல்லை, தானாகக் கண்டடைவதும் இல்லை. எது சுலபம், எதில் ஏமாற்றலாம் என்பதை நோக்கியே மாணவர்களும் இருக்கிறார்கள்…
View More நமது கல்வித் துறையில் பத்து குறைகள்Tag: கல்லூரிகள்
ஆசிரியர் போராட்டம் குறித்து சில எண்ணங்கள்
உங்கள் தரப்பின் நியாயம் என்ன? ஓய்வூதிய பிடித்தம் என்னவாயிற்று எனத் தெரியவில்லை என்கிறீர்கள். பள்ளிகளை மூடுவதை தடுக்கிறீர்கள் .. இக்கோரிக்கைகளை நான் சரி என்பேன். நிச்சயம் அரசு இவற்றுக்கு பதில் சொல்ல வேண்டும். ஆனால் நீங்கள் இவற்றை ஒப்புக்கு சப்பாணியாய் வைத்துக்கொண்டு சம்பளஉயர்வு , பழைய ஓய்வூதியம் என்று பாடுகிறீர்கள்… கல்வித் தரம் சரியில்லை எனில் கேள்வி கேளுங்கள் என்கிறீர்கள் சரி….யாரைக் கேட்பது ? இதுவரை பள்ளியின் மோசமான தோல்விகளுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டு பொதுமக்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த தியாக செம்மலான ஆசிரியர்களை காட்டுங்களேன் பார்ப்போம்…
View More ஆசிரியர் போராட்டம் குறித்து சில எண்ணங்கள்நீட் தேர்வும் தமிழ்நாட்டின் கல்வித்தரமும்: சில யோசனைகள் – 3
உயர் கல்வியை பொறுத்தவரையில் ஒரு மாணவன் விருப்பப்படுவதை படிப்பதற்கான வழியை காட்டுவதே சரியானது. இன்று அத்தனை மாணாக்கர்களும் ஒன்று மருத்துவம் அல்லது பொறியியல் படிக்க ஆசைப்படுகிறார்களே – என்பது உண்மைதான். ஆனால் இந்த ஆசை இயல்பாக, அவர்களது அடிப்படை ஆர்வம் சார்ந்து உருவானது அல்ல. 20 வருடங்களுக்கு முன்பு கூட ஒரு பள்ளிக்கூடத்திற்கு சென்று 6-7ம் வகுப்பு மாணவ மாணவியரிடம் சென்று உங்கள் எதிர்கால லக்ஷியம் என்னவென்று கேட்டால், மருத்துவம், பொறியியல், சட்டம், காவல்துறை, ராணுவம், ஆசிரியப்பணி என்று ஏராளமான பதில்கள் கிடைக்கும். அனால் இன்று அதே கேள்வியை கேட்டால் பொறியியல் அல்லது மருத்துவம் என்ற இரண்டு பதில்கள் மட்டும் தான் கிடைக்கும். காரணம்? சமூகம் மருத்துவம் மற்றும் பொறியியல் ஆகியவற்றை மட்டுமே சிறப்பான தொழில்களாக காண்கிறது. ஏனைய துறைகளில் ஆர்வம் உடைய குழந்தைகள் கூட இந்த இரண்டு துறைகளை நோக்கி பயணப்பட வேண்டி உள்ளது. இத்துறைகளால் நிராகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே ஆசிரியர்களாகவோ, செவிலியர்களாகவோ வருவார்கள் எனில் அது சமூகத்திற்கும் நல்லது இல்லை. எனவே பொருளாதார அடிப்படைகளை கணக்கில் கொள்ளாமல், சமூக மதிப்பை பற்றி கவலைப்படாமல் ஒரு குழந்தை தனது ஆர்வத்தை மட்டுமே கணக்கில் கொண்டு தனக்கான பாதையை உருவாக்க நாம் வழி செய்ய வேண்டும்…..
View More நீட் தேர்வும் தமிழ்நாட்டின் கல்வித்தரமும்: சில யோசனைகள் – 3நீட் தேர்வும் தமிழ்நாட்டின் கல்வித்தரமும்: சில யோசனைகள் – 2
”பின்தங்கியவர்கள் நகரத்திலும் உண்டு, கிராமத்திலும் உண்டு. எனவே நகரம் கிராமம் என்று பிரித்து கிராமத்தவருக்கு தனி ஒதுக்கீடு கொடுப்பது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது” என்று கூறி தீர்ப்பளித்துள்ளனர் நீதி அரசர்கள். இந்த தீர்ப்பை தொடர்ந்து தான் தமிழக அரசு ஒரே அடியாக நுழைவு தேர்வை ரத்து செய்யும் வரலாற்று முடிவை எடுக்கிறது. அதன் விளைவைத்தான் இன்று கண்டுகொண்டு இருக்கிறோம்… பெங்களூரில் கர்நாடாகாவின் பல்வேறு ஜாதிகளுக்கு சொந்தமான மாணவர் /மாணவியர் விடுதிகள் உள்ளன. மூவேந்தர்களும் தங்கள் ஜாதி என்று நிரூபிக்க கம்பு சுற்றும் நண்பர்களிடம் ஒன்றை கேட்க விரும்புகிறேன்.உங்கள் ஜாதியை சேர்ந்த மாணவி ஒருவர் கலந்தாய்விற்காகவோ, எதாவது ஆய்வரங்கில் கலந்து கொள்ளவோ சென்னைக்கு வந்தால், அவர் தங்குவதற்கு, சரி விடுங்கள், ஓய்வெடுப்பதற்கு 100 சதுரஅடி இடத்தையாவது தயார் செய்து வைத்திருக்கிறீர்களா?…
View More நீட் தேர்வும் தமிழ்நாட்டின் கல்வித்தரமும்: சில யோசனைகள் – 2நீட் தேர்வும் தமிழ்நாட்டின் கல்வித்தரமும்: சில யோசனைகள் – 1
தங்கள் சமூகத்தில் நவீன கல்வி கல்வி பெற்றவர்களது எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்று எண்ணும் அனைவரும் தமது ஜாதி அமைப்புகள் வாயிலாக கல்வி நிறுவனங்கள் தொடங்குவதை குறித்து யோசிக்க வேண்டும்… ஒரு கல்வி நிறுவனத்தின் சிறப்பு அதன் கட்டிடங்களிலோ, பேருந்துகளிலோ இல்லை. அந்நிறுவனத்தின் மனிதவளத்தில் தான் உள்ளது. உங்கள் ஜாதியை சேர்ந்த ஒருவனுக்கு வேலை கொடுத்தால் ஒரு குடும்பம் நன்றாக இருக்கும். அவ்வளவு தான். ஆனால் திறமையான ஆசிரியர் ஒருவருக்கு வேலை கொடுத்தால் ஒரு தலைமுறை மாணவர்கள் நல்வாழ்வு பெறுவார்கள். சென்ற தலைமுறையில் இந்த விஷயத்தில் மிக தெளிவாகி இருந்தார்கள். பல கிறிஸ்தவ நிறுவனங்கள் குடுமி வைத்த அந்தணர்களை வேலைக்கு வைப்பதில் எந்த தயக்கமும் கொள்ளவில்லை. திறமை இருந்தால் போதும். அதே போல வைதீக அந்தணர்கள் ஆங்கிலேயரிடம் சென்று ஆங்கிலம் கற்கவும் தயங்கவில்லை. இதனை புரிந்து கொண்டு சர்தார்ஜி ஆனாலும் பார்சியானாலும் திறமை உள்ளவர்களுக்கு வேலை கொடுங்கள்….
View More நீட் தேர்வும் தமிழ்நாட்டின் கல்வித்தரமும்: சில யோசனைகள் – 1[பாகம் 14] வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன்
அணை உடைந்ததாலும், அமராவதி, காவிரி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாலும் கிராம மக்கள் சிவன் கோயிலிலும், விவேகானந்த உயர்நிலைப் பள்ளியிலும் தஞ்சமடைந்தனர். வெள்ளம் வடியும் வரையில் 3 வேளை உணவு சமைத்துக் கொடுத்து உதவியாக இருந்தார் சுவாமி சித்பவானந்தர்… ”சாதி வித்தியாசம் பாராட்டுவது ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் நோக்கமன்று. யார் எது வேண்டுமானாலும் பேசட்டும். சத்திய, தர்ம வழியில் நாம் நடப்போம்”… வற்றிப்போன உடல், தளர்ந்து போன நரம்புகள், உலர்ந்து போன மூளை – இத்தகைய இளைஞனுக்கு கீதைப் புத்தகத்தை விட நல்லுணவும், உற்சாகம் ஊட்டும் விளையாட்டுமே பொருத்தமானவைகள் என்பது சுவாமிகளின் கருத்து…
View More [பாகம் 14] வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன்அஞ்சலி: பாபா உனக்கேது மரணம்?
Help Ever Hurt Never… Love All Serve All” என்ற வாசகங்கள் மட்டுமே என்னையும் என் குடும்பத்தினரையும் அவர்பால் ஈர்த்தது… பசியோடிருப்பவனுக்கு ஆன்மிகம் எதற்கு? அவனுக்கு உணவைத் தா… கடவுளுக்கு ஏது தீட்டும் சடங்கும்? கடவுளுக்கு ஏது மதமும் சாதியும்?… பாபா உனக்கேது மரணம்?…
View More அஞ்சலி: பாபா உனக்கேது மரணம்?இந்திய மதப்பிரிவினை சட்டம் = பண்பாட்டு அழிவு ? – 2
சராசரி மக்கள் தொகை வளர்ச்சியை விடவும் அதிகமாக,1991 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில், கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ஏன் இவ்வளவு பயங்கரமாக அதிகரித்துள்ளது?… வரும் ஆண்டுகளில் 30வது சட்டப் பிரிவு விளைவிக்கும் தாக்கம் பெரும்பான்மையினரின் முன்னேற்றத்திற்கான வாசல்களைக் கொஞ்சம் கொஞ்சமாக மூடிக் கொண்டே வரப் போகிறது.இது ஏதோ கற்பனையான ஊகம் அல்ல. நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணரின் கோட்பாடு சார்ந்த ஆய்வினால் உறுதிப்படுத்தப் பட்டு, சரியான தவல்களின் அடிப்படையில் கூறப்படும் அறிவுபூர்வமான விளக்கம்…
View More இந்திய மதப்பிரிவினை சட்டம் = பண்பாட்டு அழிவு ? – 2இந்திய மதப்பிரிவினை சட்டம் = பண்பாட்டு அழிவு ? – 1
கிறிஸ்தவர்களைப் பொறுக்கி எடுத்து முன்னேற்றுவதற்காக இந்திய மக்களின் வரிப்பணம் மானியமாக செலவாகிக் கொண்டிருக்கிறது… வளர்ந்துவரும் ஒரு நவீன தேசம் தனது குடிமக்களின் ஒரு பிரிவினருக்கு எதிராக, அதுவும் பெரும்பான்மையினருக்கு எதிராக இப்படி பாரபட்சமாக நடந்து கொள்வது என்பது நினைத்துப் பார்க்க முடியாத விஷயம்.. இந்திய மக்கள் தொகையில் 2.3 சதவீதம் (2001 சென்சஸ் படி) உள்ள கிறிஸ்தவர்கள், இந்தியாவிலுள்ள 22 சதவீதம் கல்வி நிறுவனங்களைத் தங்கள் கட்டுப் பாட்டில் வைத்துள்ளார்கள். அதாவது தங்கள் எண்ணிக்கையைப் போல 10 மடங்கு கல்வி நிறுவனங்கள்…
View More இந்திய மதப்பிரிவினை சட்டம் = பண்பாட்டு அழிவு ? – 1