நீங்கள் ஒரு ஏழை இந்து சமூகத்தை சேர்ந்த முதல் தலைமுறை பட்டதாரி என்றால், உங்கள் குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் 50,000 க்குள் இருந்தால் மட்டுமே உங்களுக்கு கல்வி உதவித்தொகை, இல்லாவிட்டால் இல்லை. ஆனால் இதே நீங்கள் கிறிஸ்தவராகவோ முஸ்லிமாகவோ (”சிறுபான்மையினர்”) இருந்தால் வருமானம் ஒரு பொருட்டே இல்லை. அதிர்ச்சி அடையாதீர்கள் . மத்திய அரசு என்ன சொல்கிறது என்றால் சிறுபான்மையினருக்கு ஆண்டு வருமானம் 2,50,000 க்குள் அதாவது இந்துக்களை விட 500% அதிகமாக இருந்தாலும் உதவித்தொகை கிடைக்கும்! மேலும் இவர்களுடைய வருமானத்திற்கு யாரும் உத்திரவாதம் அளிக்க வேண்டாம். அவர்களாக ஒரு வெள்ளைத்தாளில் தங்கள் வருமானம் இரண்டரை லட்சம் தான் என்று எழுதிக்கொடுத்தால் போதும். கல்விக்கட்டணம் முழுமையும் இலவசம்! இது என்ன விதமான நியாயம் என்று சொல்லுங்கள்…. மத்திய அரசும், மாநில அரசும் சேர்ந்து 37 விதமான கல்வி உதவித்தொகைகளை வழங்குகிறது. ஆனால் இதில் பெரும்பாலான பயனாளிகள் சிறுபான்மையினத்தை சார்ந்தவருக்கு மட்டுமே… ஒவ்வொரு ஆண்டும் என்ன இலக்கு நிரணயிக்கப்பட்டிருக்கிறது. எவ்வளவு பேருக்கு அதிகமாக கொடுக்கப்பட்டிருக்கிறது என்று பாருங்கள். போஸ்ட் 11 ,12 ஆம் வகுப்பு படிக்கும் சிறுபான்மையினர் என்றால் மாதம் 380 ரூபாய் முதல் 550 வரை வழங்கப்படுகிறது. இதுவே ஏழை இந்துக்குழந்தையாக இருந்தால் ஆண்டுக்கு வெறும் 23 ரூபாய் மட்டுமே… இதை போலவே உயர் தொழில் நுட்ப கல்வி நிலையங்களில் கல்வி கற்பதற்கு சிறுபான்மையினருக்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு 3 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இதே இந்துக்களுக்கு ஆண்டுக்கு 12,000 முதல் 40,000 வரை மட்டுமே. மேலும் சிறுபான்மையினர் கல்வி நிலையங்களில் RTE சட்ட்த்தின் நெருக்குதலும் இல்லாத்தால் அவர்கள் முழுமையாக 100% தங்கள் ஆட்களை படிக்க வைத்து விடுவார்கள். பெரும்பான்மையினரின் கல்வி நிலை என்பது எந்த உதவியும் இன்றி சீரழிந்து போய்விடும்….
View More இந்து மாணவர்களுக்கும் வேண்டும் கல்வி உதவித்தொகை – ஏன்?Tag: காங்கிரஸ், பாஜக, நரேந்திர மோடி, ராம் விலாஸ் பஸ்வான், ஜிதன்ராம் மாஞ்சி, உப்பேந்திர குஷ்வாஹா, நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி, சோனியா, ராகுல், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், அடல் பிகாரி வாஜ்பாய்,
பீஷ்ம பிதாமகருக்கு …
எங்களின் வணக்கத்திற்குரிய ஆச்சார்யர் அவர்களுக்கு, மிகவும் அசாதாரணமான ஒரு நிலையில் இதை எழுத…
View More பீஷ்ம பிதாமகருக்கு …விதியே விதியே… [நாடகம்] – 5
பிரதமர்: உண்மையில் இந்தப் போர் தமிழ் மக்களின் சம்மதத்துடன் நடந்த ஒன்றே அல்ல. ஆயுதம் ஏந்திய ஒரு சிலரால் முன்னெடுக்கப்பட்ட ஒன்று அவ்வளவுதான். இன்னும் சரியாகச் சொல்வதானால், ஒரு சர்வதேசக் கடத்தல்காரன், விடுதலைப் போராளி என்ற போர்வையில் ஊரை ஏமாற்றி உலையில் போட்டிருக்கிறார். இதுதான் உண்மை. அதனால்தான் தனி நாடு கேட்ட வடக்கு கிழக்கு பகுதியில் எவ்வளவு தமிழர்கள் இருந்தார்களோ அதே அளவுக்கு தமிழர்கள், சிங்களர்கள் பெரும்பான்மையாக இருக்கும் தெற்குப் பகுதியில் இதே போர்க் காலகட்டம் முழுவதிலும் சந்தோஷமாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள்… குழந்தை: விடுதலைப் புலிகள் செய்த தவறுக்காக அப்பாவிகள் கொல்லப்பட வேண்டுமா..? ஒரு பக்கம் போராளிகள்… இன்னொரு பக்கம் ராணுவம். இரண்டுக்கும் நடுவில் அப்பாவிகள் சிக்கிக் கொண்டிருந்தோமே… எங்களைக் காப்பாற்ற நீங்கள் ஏதாவது செய்திருக்கலாமே…. அழிவின் மர்மச் சுரங்கத்தில் ஆயிரம் காலடித் தடங்கள். இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்குமாக. ஆனால், அன்பின் நெடுஞ்சாலையிலோ ஒற்றைக் கால் தடம் கூடப் பதிக்கப்படவில்லை. அது ஏன்..? கோரிக்கையும் சரியில்லை. வழிமுறையும் சரியில்லை. நீ யாராக இருந்தாய் என்பதை வைத்து அல்ல… யாராக இருக்கிறாய் என்பதை வைத்துத்தான் மற்றவர்கள் உன்னை மதிப்பார்கள் என்று போராளிகளுக்குப் புரிய வைத்திருக்க வேண்டும்…
View More விதியே விதியே… [நாடகம்] – 5இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் 20
முந்தைய பகுதிகள் தொடர்ச்சி.. சென்ற கட்டுரையில் உத்திர பிரதேசத்தில் நடந்த வகுப்பு கலவரங்கள்…
View More இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் 20நாட்டு மக்கள் முகத்தில் கரி பூசும் காங்கிரஸ்
நிலக்கரி ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் கடும் கண்டனத்துக்கு ஆளாகியுள்ள மத்திய…
View More நாட்டு மக்கள் முகத்தில் கரி பூசும் காங்கிரஸ்ஹெலிகாப்டர் ஊழல்: பா.ஜ.க மீது வீண் பழி போடும் காங்கிரஸ்
2004ல் ஆட்சியில் அமர்ந்த தினத்திலிருந்து கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாக ஊழல் மேல்…
View More ஹெலிகாப்டர் ஊழல்: பா.ஜ.க மீது வீண் பழி போடும் காங்கிரஸ்காங்கிரஸை ஆதரிக்க கருணாவின் காரணங்கள்
கருணாவின் கட்சியை காங்கிரஸ் ப்யூரோ ஆஃப் இண்டெலிஜென்ஸை அதாவது சில நேரங்களில் அதை சி.பி.ஐ என்றும் அழைக்கப்படும் (அ) நம்பப்படும் ஒரு கும்பலை வைத்து திருக்குவளை முன்னேற்ற கழகத்தின் அனைத்து காய்களையும் நாசுக்காக கம்பி எண்ண வைத்தது நினைவிருக்கலாம். அத்தகைய நயவஞ்சக நண்பனான அந்நிய காங்கிரஸிற்கு தன் ஆதரவு கரத்தை மீண்டும் துடைத்து கொண்டு நீட்டி தன் விசுவாசத்தை குட்டிக்கரணம் அடித்து நிருபித்திருக்கிறார் அண்ணன் கருணா. அவரின் ராஜதந்திரத்தை மன்னிக்க “இராச தந்திர”, “இன மான” உணர்வு மிக்க நகர்வை , மக்களை ஒடுக்க வந்த ஆரிய நச்சுக்களும், பார்ப்பன பதர்களும் ,மவுண்ட் ரோடு மகா விஷ்ணு வகையறாக்களும் விமர்சிக்கின்றன.
View More காங்கிரஸை ஆதரிக்க கருணாவின் காரணங்கள்நதிநீர் தாவாக்களில் வஞ்சிக்கப்படும் தமிழகம்: தீர்வு என்ன?
மாநிலக் கட்சிகள் பிராந்திய நலனை மட்டுமே மனதில் கொண்டு அரசியல் செய்வதில் ஆச்சரியமில்லை. அவர்களின் அரசியல் ஒரு குறுகிய பிராந்தியத்தை அடிப்படையாக கொண்டது. ஆனால் காங்கிரசும், பா.ஜ.க.வும் (ஓரிரு மாநிலங்களில் மட்டுமே வலுவாக இருக்கும் மார்க்சிஸ்டுகளை தேசிய கட்சியாகவே மதிக்க முடியாது) தமிழகத்தின் நலனைப் புறக்கணிப்பது அநியாயம். திமுக அல்லது அதிமுக உடன் சேர்ந்து சில எம்பிக்களைப் பெற்று விடுவதாலும், கழகங்களின் சுயநல கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம் அவர்களின் முழு ஆதரவைப் பெற்று விடுவதாலும், இந்த இரண்டு கட்சிகளுமே தமிழகத்தின் நலனை எண்ணிப் பார்ப்பதாக இல்லை. உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு அளித்தாலும் அதை காங்கிரசும், பா.ஜ.க.வும் ஆளும் கேரள, கர்நாடக மாநில அரசுகள் மதிப்பதில்லை. நீதிமன்றத்தின் தீர்ப்பினை அமல்படுத்தாத மாநிலங்களின் மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு மத்திய அரசை சார்ந்தது. சம்பந்தப்பட்ட மாநில அரசை அரசியல் சட்டத்தின் 356 வது பிரிவை அமல்படுத்தி கலைக்க வேண்டும். அல்லது 355வது பிரிவைப் பயன்படுத்தி சட்டசபையை முடக்கிவிட்டு நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தலாம்
View More நதிநீர் தாவாக்களில் வஞ்சிக்கப்படும் தமிழகம்: தீர்வு என்ன?கசாப் தூக்குத் தண்டனையும் காங்கிரசின் தந்திரங்களும்
கசாபுக்கு தண்டனை பெற்றுத் தந்த காங்கிரஸ் அரசு, வழக்கில் பல ஓட்டைகளை உருவாக்கி,கசாப் கும்பலுக்கு உள்ளூரில் உதவிய ‘ஸ்லீப்பர் செல்’ பிரமுகர்களைத் தப்பிக்கச் செய்து விட்டது (முஸ்லிம் வாக்கு வங்கிக்காகவா?)…. கசாபுக்கு தூக்கு நிறைவேற்றப்படுவதை பாகிஸ்தோனோ, உலக நாடுகள் எதிர்க்க வாய்ப்பில்லை. இந்திய முஸ்லிம்கள் எதிர்ப்பார்களோ என்ற அச்சத்தால் தான், இவ்வளவு ரகசியமாக நிறைவேற்றி உள்ளார்கள் என்றால், இது இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களை கேவலப்படுத்துவதாகும்… ஊழல்கள், அன்னிய முதலீடு தொடர்பாக ஏற்பட்டிருக்கும் சிக்கல்களை எதிர்கொள்ள இது உதவும் என்று காங்கிரஸ் கணக்குப் போட்டிருக்கிறது…. நாட்டுநலன் அடிப்படையில் கசாப் தூக்குக்காக அக்கட்சியை இப்போதைக்குப் பாராட்டுவோம். அதே சமயம் அக்கட்சியின் சுயரூபத்தை பிரசாரமும் செய்வது அவசியம்….
View More கசாப் தூக்குத் தண்டனையும் காங்கிரசின் தந்திரங்களும்காங்கிரசின் சமையல் எரிவாயு சதிகள், கருகும் மக்கள்
இந்த சிலிண்டர் கட்டுப்பாடு வெறும் விலை வித்யாசம் மட்டும் தானா? காங்கிரஸின் சதி இதில் என்ன?… பேண்ட் வாசிப்பவனின் மந்திர இசைக்கு மயங்கி ஏமாளி எலிகள் மலையிலிருந்து விழுந்து மாய்த்துக்கொண்டதைப்போல, அயல் நாட்டு சோனியாவின் குரூரமான இசைக்குப் பின்னால் செய்வதறியாது சென்று கொண்டிருக்கிறது தேசம்… தினம் தினம் 42 லட்சம் இல்லங்களைச் சென்றடையும் சிலிண்டர்களின் 150% விலையேற்றம், மக்களிடம் மிக மோசமாக உடனடியாக பாதிப்பை ஏற்படுத்தும்… அப்படியானால் இது எப்படி ஆம் ஆத்மியின் அரசு என்று வெட்கமில்லாமல் சொல்லிக் கொள்கிறீர்கள்? 523 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 6000-க்கும் மேற்பட்ட சட்ட மன்ற உறுப்பினர்களும் ஆண்டுக்கு 3,00,000 க்கும் மேற்பட்ட சிலிண்டர்களையும் எடுத்துக் கொள்கிறார்கள்…
View More காங்கிரசின் சமையல் எரிவாயு சதிகள், கருகும் மக்கள்