அஞ்சலி: ஸ்ரீரங்கம் G.P.ஸ்ரீனிவாசன்

திரு GPS (கோமடம் பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்) அமைதி, அறிவுபூர்வ ஆழ்ந்த சிந்தனையுடன் அகிம்சை வழி போராளியாக எளியவராக நடமாடும் நூலகராக சிறந்த வாசகராக மொழி பெயர்ப்பாளராக வாழ்ந்தவர்… Hindu Voice என்ற மும்பை பத்திரிக்கையின் தமிழக செய்தியாளாராக பல ஆண்டுகள் பணிபுரிந்தவர். பற்பல இந்துத்துவ சிந்தனையாளர்களோடும் தொடர்பு கொண்டு ஒரு இயக்கம் செய்ய வேண்டிய பல வேலைகளை தனி ஒருவராக செய்து வந்தவர்.

View More அஞ்சலி: ஸ்ரீரங்கம் G.P.ஸ்ரீனிவாசன்

புதிய காசி விஸ்வநாதர் ஆலயம்: நேரடி அனுபவம்

விஸ்வநாதர் கோவிலில் அதன் விஸ்தீர்ணத்தையும் அதன்
விரிவாக்கத்தையும் மிகத் தெளிவாக காண முடிந்தது. ஏற்கனவே நான் வந்த கோவில் போலவே இது இல்லை. ஏதோ புதிய கோவிலுக்கு வந்த ஒரு உணர்வு ஏற்பட்டது. அந்த அளவுக்கு பிரமாண்டமாக அமைக்கப்பட்டு இருந்தது என்பது மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம். ஆலய விரிவாக்கத்தின் போது சுற்றியிருந்த பல கடைகளுக்கு உள்ளாக ஒளிந்து கொண்டிருந்த, வீடுகளுக்குள் மறைந்திருந்த பல புராதன ஆலயங்கள் வெளிப்பட்டிருக்கிறது.. இன்று இவ்வளவு பிரம்மாண்டமான ஆலயம் உருவாகிவிட்ட பின்பும், நந்தி பரிதாபமாக ஞானவாபி மசூதியை பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்த போது என்னை மீறி கண்ணீர் முட்டிக்கொண்டு வந்துவிட்டது…

View More புதிய காசி விஸ்வநாதர் ஆலயம்: நேரடி அனுபவம்

மேற்கு வங்கத்தில் வன்முறை வெறியாட்டம்

சுதந்திர இந்திய வரலாற்றில் தேர்தல் முடிவுகளை ஒட்டி நடந்த மிகக் கொடூரமான வன்முறையாக சமீபத்தில் திரிணாமுல் கட்சியினர் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் நிகழ்த்திய மேற்குவங்க வன்முறைகள் உள்ளன… மாநிலத்தின் பல இடங்களில் கற்பழிப்புகள், கூட்டு பலாத்காரம் மற்றும் கொலைகள் நடந்துள்ளன. தேர்தல் நாளன்று பாஜகவின் வாக்குச் சாவடி முகவர்களாக பணியாற்றிய காரணத்துக்காகவே பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்… கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பாரதிய ஜனதா கட்சி மற்றும் சகோதர அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்…

View More மேற்கு வங்கத்தில் வன்முறை வெறியாட்டம்

வ.களத்தூர் கோயில் திருவிழாவும் நீதிமன்றத் தீர்ப்பும்

வ.களத்தூரில் மாரியம்மன் கோயில் திருவிழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்த இஸ்லாமியர்களுக்கும், அவர்களுக்கு சாமரம் வீசிய அரசியல் கட்சிகள், ஊடகங்களுக்கும் சம்மட்டி அடியாக இத்தீர்ப்பு அமைந்துள்ளது… ஜனநாயக நாட்டில், இந்துக்கள் தங்கள் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டவே நீதிமன்றத்தில் பல ஆண்டுகள் போராட வேண்டிய துர்பாக்கியம் நிலவுவது உண்மையிலேயே வேதனைக்குரியது. மக்கள்தொகைப் பரவலில் நிகழும் மாற்றங்கள் சமுதாய அமைதியை எவ்வாறு பாதிக்கின்றவ என்பதற்கு இந்த ஊர் மிகப் பொருத்தமான உதாரணம்…

View More வ.களத்தூர் கோயில் திருவிழாவும் நீதிமன்றத் தீர்ப்பும்

அஞ்சலி: சுவாமி ஓங்காரானந்தர்

இங்ஙனம் மூன்று மகத்தான ஆசாரிய பரம்பரையினரின் புனித சங்கமமாக விளங்கியவர் சுவாமி ஓங்காரானந்தர். சுவாமிகள் அடிப்படையில் ஒர் ஆசிரியர். அவரது மையமான பணி என்பது நமது ஞான நூல்களை ஆழமாகவும், முறையாகவும் தொடர்ச்சியாகவும் கற்பிப்பது என்பதாகவே இருந்தது… துறவியும் ஆன்மீகத் தலைவருமாக இருக்கும் ஒருவர் இந்து தர்மத்தை அவமதிக்கும் வெறுப்பு பிரசாரங்களுக்கு எந்தவகையில் உறுதியான எதிர்ப்பையும் எதிர்வினையையும் பதிவுசெய்ய முடியும், செய்ய வேண்டும் என்பதற்கான ஆதர்ச வழிகாட்டுதலாக சுவாமிகளின் இந்த நடவடிக்கைகள் அமைந்தன.

View More அஞ்சலி: சுவாமி ஓங்காரானந்தர்

ஒரு விசுவாசமான கலகக்காரனின் வெளிவராத கடிதங்கள் – புத்தக அறிமுகம்

ஒரு எளிய ஹிந்து அல்லது இந்தியன் தினம் தினம் ஒரு கூர்மையான வாதத்தால் வீழ்த்தப்பட்டுக் கொண்டே இருக்கிறான். ஒரு சாதரண பேச்சில் பகிரங்கமாக சீண்டப்படுகிறான். இந்த சூழலில், சமூகசேவை, கல்வி, மருத்துவம் தொடங்கி எல்லாமே இந்தியாவில் எப்படி ஒரு அரசியல் கருவியாக, உள்நோக்கம் கொண்டதாக ஆகியிருக்கிறது என்பதை தன் இயல்பான தர்க்கத்தால் முன் வைத்திருக்கிறார் B.R.மகாதேவன், கதைமாந்தர்களின் வழியாக. எப்படிப்பட்ட வாதங்களால் நாம் அன்றாடம் களத்தில் வீழ்த்தப்படுகிறோமோ, அது எல்லாவற்றிற்கும் வெகுசாதாரண மொழியில் பதில் சொல்ல,ஒரு தரப்பை உருவாக்கிக் கொள்ள இந்த புத்தகம் மிக முக்கியமானது…

View More ஒரு விசுவாசமான கலகக்காரனின் வெளிவராத கடிதங்கள் – புத்தக அறிமுகம்

ராஜேந்திர சோழனும் ஹிந்து மன்னர்கள் கூட்டமைப்பும்

கஜினியின் அத்தனை படையெடுப்பும் கோவில்களை கொள்ளையடிப்பது, பிற மதத்தினரை இஸ்லாமியர்களாக மதம் மாற்றுவது அல்லது கொன்றொழிப்பது என்ற முழுமையான ‘ஜிஹாதி’ வடிவமுறை போர்கள்தான். இந்த நேரத்தில்தான் அவனை எதிர்க்க சந்தேல அரசன் வித்யாதரன்,மாளவ அரசன் போஜராஜன், காளச்சூரி அரசன் காங்கேயா விக்ரமாதித்தன் முதலான ஹிந்து மன்னர்களின் கூட்டமைப்பு ஒன்று உருவானதை சில தரவுகள் சொல்கின்றன. இந்த நேரம்தான் ராஜேந்திர சோழனின் வடஇந்திய திக்விஜயம் நடந்தது.. ராஜேந்திர சோழனுக்கு மேற்கண்ட மன்னர்களுடன் நட்பும் இருந்தது..

View More ராஜேந்திர சோழனும் ஹிந்து மன்னர்கள் கூட்டமைப்பும்

அயோத்தியில் எழுகிறது ஸ்ரீராமர் ஆலயம்: மாபெரும் வரலாற்றுத் தருணம்

பல நூற்றாண்டுகளாக நமது மாபெரும் புனிதத் தலமாக விளங்கிய அயோத்தி 1528ல் இஸ்லாமியப் படையெடுப்பாளன் பாபரால் சிதைக்கப் பட்டது. இதோ இன்று ஆகஸ்டு 5, 2020 அன்று ஸ்ரீராமனின் பேராலயம் அதே அயோத்தியில் எழப் போகிறது… ஸ்ரீராமஜன்மபூமியில் எழும் இந்தப் பேராலயம் தர்மத்தின் வெற்றியை முரசறைகிறது. ஆபிரகாமிய அதர்ம மதங்களின் ஆக்கிரமிப்பும் அராஜகமும் தொடர நாம் அனுமதியோம் என்று கட்டியம் கூறுகிறது. ஒருங்கிணைந்த இந்து சக்தி ஒளிவீசி உரம் பெற்று வேத தர்மத்தையும் இந்துப் பண்பாட்டையும் பாரதபூமியைம் அன்னிய சக்திகளின் அழிப்புத் தாக்குதல்களிலிருந்து காக்கும் என்ற நம்பிக்கையையும் உறுதியையும் பிரகடனம் செய்கிறது. இதுவே இந்த நிகழ்வின் முக்கியத்துவம். இதனை உள்ளபடி உணர்வோம். இந்த மகத்தான நிகழ்வு நிகழும் தருணத்தில் நாம் வாழ்கிறோம் என்பதே நமது பாக்கியம். இத்தருணத்தை உள்ளன்புடன், மகிழ்வுடன் நாமும் கொண்டாடி மகிழ்வோம்…

View More அயோத்தியில் எழுகிறது ஸ்ரீராமர் ஆலயம்: மாபெரும் வரலாற்றுத் தருணம்

“மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை

மங்கலம் என்ற பெயரை பாகிஸ்தான், சிரியா, அரேபியா என்று மாற்றி விடுவார்களோ என்ற அளவு இஸ்லாமியர்களின் கும்பல், மக்கள் தொகை திருப்பூரில் உள்ள மங்கலம் பகுதியில் பெருகி வந்தது. அங்குள்ள இந்து பெண்களைக் குறிவைத்து லவ் ஜிஹாத், ஹை டெசிபலில் கூம்பு வடிவ ஒலி பெருக்கியில் அலறுவது, தேர் திருவிழா, சுவாமி புறப்பாடு இவைகளை அராஜகமாக தடுப்பது. மீறி வந்தால் சூழ்ந்து கொண்டு தாக்குவது, பெண் பக்தர்களை பாலியல் ரீதியாக துன்பப்படுத்துவது , கோவிலில் செய்யும் பூஜைகள் இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்துகிறது என்று டார்ச்சர் செய்வது, வாரம் ஒரு முறை கூலிக்கு மாரடிக்கும் திக, திமுக, நாம் தமிழர், விடுதலை சிறுத்தைகள் ஆட்களை கொண்டு நம் கடவுள்களை பச்சை பச்சையாக ஆபாசமாக வர்ணிப்பது, ஆபாச பேச்சு என்று அராஜகம் செய்து கொண்டிருந்தார்கள்… இதை பொறுக்க மாட்டாத இந்துக்கள் தாமதமாகவேணும் விழித்துக்கொண்டு, இந்து ஒற்றுமை மூலம் இந்த விவகாரத்திற்கு தீர்வு காண முடிவு செய்தார்கள். அதை திட்டமிட்டு செயல்படுத்தினார்கள். அந்த மாபெரும் குடியுரிமை சட்டத் திருத்த (CAA) ஆதரவுக் கூட்டத்தை அச்சுறுத்த இஸ்லாமியர்கள் மேடையை முற்றுகையிட கூடினார்கள். இந்துக்களின் உறுதியையும், எழுச்சியையும் கருத்தில் கொண்டு அமைதியாக வெறிக்கூச்சலோடு கலைந்து சென்றார்கள்.. அடி உதை, கொலை செய்வதெல்லாம் இஸ்லாமிய வெறியர்களின் பாதை நாம் ஏன் அதை செய்ய வேண்டும். அதற்கு பதிலாக இனி இந்து தொழில் முனைவோர்களை ஆதரித்து வளர்க்க வேண்டும் என்று முடிவு செய்து, ஹிந்து வியாபாரிகளிடம் மட்டுமே வணிகம் செய்வது என்ற முடிவை எடுத்தனர்…

View More “மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை

ஒரு காதல் காவியம் [சிறுகதை]

நாயக்கன்கொட்டாயைச் சேர்ந்த பறையர் குலத்தைச் சேர்ந்த திவ்யா என்ற பெண்ணுக்கும் சக்கிலியர் குலத்தைச் சேர்ந்த இளவரசன் என்ற பையனுக்கும் இடையில் காதல் மலர்கிறது. விஷயம் தெரிந்ததும் பறையர் குலத்தினர் ஆத்திரம் கொள்கிறார்கள்… பின்னால் திவ்யா பர்தா அணிந்தபடி இறங்குகிறார். காதலியின் தோழி அமீரின் உறவினர். திவ்யாவும், இளவரசனைப் பார்த்து, ‘நீங்களும் இஸ்லாமுக்கு மாறிவிடுங்கள். நம்மை அங்கு யாரும் பிரிக்க முடியாது’ என்று சொல்கிறாள். இளவரசனோ தடுமாறுகிறான். என்ன விஷயமென்றால் பாளையங்கோட்டையில் இருந்த அவனது நண்பர்கள் ஜெகத் கஸ்பருக்கு உறவினர்கள். அவர் இதே யோசனையைச் சொல்லி அவனை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றியிருக்கிறார்… அமைதி மார்க்கமும் அன்பு மார்க்கமும் அங்கிகளைக் கழட்டிப் போட்டு தெருவில் புரள ஆரம்பிக்கின்றன, துப்பாக்கிகள், வெடி குண்டுகள் என வீசப்படுகின்றன… திவ்யா கண்களில் நீர் கோர்க்க, அருகில் நிற்கும் செபாஸ்டினைப் பார்த்துக் கேட்பார்: நாம தமிழர்னு தான சொன்னீங்க. மோதிரம் மாத்தறது நம்ம பழக்கம் இல்லையே. அப்போது சர்ச் சுவரில் விழும் அவர்களுடைய உருவங்களின் தலைக்கு மேலே இரண்டு கொம்புகள் முளைக்கும். இளவரசனும் திவ்யாவும் என்ன அதிசயம் என்று அதைப் பார்ப்பார்கள். செபாஸ்டியனும் பாதிரியும் கூட அதை ஆச்சரியமாகப் பார்ப்பார்கள்…

View More ஒரு காதல் காவியம் [சிறுகதை]