உன் அஹிம்சா மூர்த்தங்களின் அபிஷேகத்துக்கு எம் மக்களின் ரத்தம்தானா கிடைத்தது? உன் அதீத அன்பின் பிரார்த்தனைகளுக்கு எம் மரண ஓலமா மந்திரங்கள்? உன் பெருங் கருணையின் யாகத்துக்கு எம் உடல்களா சமித்துகள்?.. சொல்லுங்கள் மகாத்மாவே நீங்கள் அவதாரமா.. அரிதாரமா?.. காலின் கீழ் போட்டு மிதித்தவனிடம் ஏன் காவு கொடுத்தாய் உன் கிராம ராஜ்ஜியக் கனவுகளை? உன்னை நம்பி உன் பின் திரண்ட ஆவினங்களை எதற்காக ஒரு மாட்டு வியாபாரியிடம் விலை பேசி விற்றாய்?.. கொடு நரகமாக இருந்த சிறைச்சாலைகள் எல்லாம் நீங்கள் போர்க்களம் புகுந்ததுமே பூஞ்சோலைகளாகியது எப்படி? இடுப்பில் விலங்கு பூட்டி இழுக்க வைக்கப்பட்ட கல் செக்குகள் எல்லாம் காணாமல் போனது எப்படி? சிறையில் இருந்தபடியே நீங்கள் சுய சரிதம் எழுதிக் குவிக்க உங்களுக்கு எப்படிக் கிடைத்தன சித்திர எழுதுகோல்கள்..
View More சொல்லுங்கள் மகாத்மாவேTag: மகாத்மா காந்தி
சொல்லுங்கள் மனித குல மாணிக்கங்களே
நாதுராம் கோட்÷ ஒரு மத வெறியன் ஒரு முட்டாள் மாபெரும் குற்றவாளி – மனிதருள் மாணிக்கங்களே நீங்கள் சொல்லுங்கள் – நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்அவனிடத்தில் நீங்கள் இருந்திருந்தால் – உங்கள் தாயும் மனைவியும் மகளும் கதறக் கதற உங்கள் கண் முன்னே கற்பழிக்கப்படுகிறார்கள் – முதியவர் தன் ஊன்றுகோலால் இருவரையும் எட்டித் தள்ளிவிட்டு, சற்று தொலையில் ஹூக்கா குடித்துக்கொண்டுகண்களில் மதம் மின்ன சற்றே களைப்புடன் சாய்ந்திருப்பவன் முன் சென்று நிற்கிறார்…
View More சொல்லுங்கள் மனித குல மாணிக்கங்களேஇரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்
இந்த நாடு சுதந்திரம் பெற உழைத்தவர்களுள் தலையாய இருவர் என மகாத்மா காந்திஜியையும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸையும் சொல்லலாம். இருவரின் வழிமுறைகள் வேறானவையாக இருந்தபோதும், இலக்கு ஒன்றாகவே இருந்தது.
காந்திஜியும் நேதாஜியும் ஒத்த கருத்துடன் செயல்பட்டிருந்தால் சுதந்திர இந்தியா வேறு வடிவில் எழுந்திருக்கும் என்பதே சரித்திர ஆய்வாளர்களின் கருத்து. நமது துரதிர்ஷ்டம், காந்திஜியும் நேதாஜியும் துவக்கக் காலம் (1922) முதலே உடன்பாடும் முரண்பாடும் கொண்டவர்களாகவே இயங்கி வந்துள்ளனர்…..
View More இரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்எனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…
“ராமக்ருஷ்ணோ தயானந்தோ ரவீந்த்ரோ ராமமோஹன: ராமதீர்த்தோ(அ)ரவிந்தஸ்ச விவேகானந்த உத்யசா: தாதாபாயீ கோபபந்து: திலகோ…
View More எனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…காந்தி, கோட்சே, ஹிந்துமதம்: கமல்ஹாசன் கருத்துக்கள் – ஒரு பார்வை
துரதிர்ஷ்டவசமாக, தமிழ்நாட்டின் பெரும்பான்மை மக்களுடைய பண்பாட்டு, வரலாற்று அறிவும் கூட கமல்ஹாசன் அளவுக்கோ, அல்லது அதைவிட சிறிதே சற்று மேலாகவோ தான் இருக்கிறது என்று தோன்றுகிறது. அதனால் தான், அவரது கேள்வி அடிப்படையிலேயே அபத்தமானது என்பதைக் கூட அழுத்தமாகக் கூறி அதை நிராகரிக்காமல் அதைவைத்து மாய்ந்து மாய்ந்து முட்டாள்தனமான “விவாதங்களை” நடத்திக் கொண்டிருக்கிறார்கள். விநோதமான மீம்கள் வந்து கொண்டிருக்கின்றன. இது குறித்து ஆதாரபூர்வமான தரவுகளுடன் நான் எழுதிய ஹிந்து என்னும் சொல் என்ற எனது கட்டுரையிலிருந்து ஒரு பகுதியைக் கீழே தருகிறேன்… அதிகாரபூர்வ பாஜக, ஆர் எஸ் எஸ் தரப்புகள் கமலுடைய ஹிந்து மத அவதூறுக்கு கண்டனம் தெரிவித்து விட்டு, அதே வீச்சில் காந்தி கொலையையும் கோட்சேயையும் தாங்கள் ஒரு போதும் ஆதரிக்கவில்லை என்று சந்தேகமின்றி தெளிவுபடுத்தியுள்ளன…
View More காந்தி, கோட்சே, ஹிந்துமதம்: கமல்ஹாசன் கருத்துக்கள் – ஒரு பார்வைநேதாஜி: தலைவர்களின் தலைவர்
பகவத்கீதை அவரது வழித்துணையாக இருந்தது. அவரது கைப்பெட்டியில் அது கடைசி வரை இருந்தது. சுதந்திரப் போருக்கு கீதை தூண்டுதலாக இருக்கும் என்று அவர் நம்பினார். அதேபோல, சுவாமி விவேகானந்தரே நாட்டில் எழுந்துள்ள நவ எழுச்சிக்குக் காரணம் என்று அவர் பலமுறை கூறி இருக்கிறார்… நேதாஜியின் வாழ்க்கையே ஒரு போர்க்களம். அவர் வாழ்ந்தது 48 ஆண்டுகள் மட்டுமே. அதற்குள் அவர் நிகழ்த்திய அரசியல் சாதனைகள், வெளிநாட்டுத் தலைவர்களுடனான சந்திப்புகள், போர்முனை சாகசங்கள் உள்ளிட்டவற்றை அறிகையில், அந்த மாபெரும் தலைவனின் பிரமாண்டம் புரிகிறது…
View More நேதாஜி: தலைவர்களின் தலைவர்அழகிய மரம்: பாரதத்தின் பண்டைய பாரம்பரியக் கல்வி
1200 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட சோழர்கால ஐம்பொன் உலோக சிலைகளை பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளது. ஒன்றிண்டு சிலைகளைத் தவிர , மற்ற எல்லா விக்கிரங்களும் , எந்தக் குறைபாடும் இல்லாமல் (corrosion, erosion, cracks) இன்றளவும் நமது வழிபாட்டில் உள்ளன… இந்தக் கல்வி முறைக்கான நிதி வசதி என்பது (ஆசிரியர் சம்பளம் முதலியன) அந்த கிராமமோ , சமூகமோ , கல்வி கற்கும் மாணவர்களோ ஏற்றுக் கொண்டார்கள் . பிரிட்டிஷ் அரசு எந்த விதமான உதவியும் செய்யவில்லை. ஓரிரு இடங்களைத் தவிர, அனைத்து இடங்களிலும் சூத்திரர் சாதி எண்ணிக்கை மாணவர்கள்தான், மற்ற அனைத்து சாதி எண்ணிக்கை மாணவர்களை காட்டிலும் குறிப்பாக பிராமண சாதி எண்ணிகையை காட்டிலும்அதிகம். எனக்கே இந்த அதிர்ச்சி என்றால் ‘சமுக நீதிக் காவலர்கள் / செயல்பாட்டாளர்‘ இவர்களுக்கு எந்த அளவுக்கு அதிர்ச்சி ஏற்படும்?….
View More அழகிய மரம்: பாரதத்தின் பண்டைய பாரம்பரியக் கல்விகம்யூனிஸ்டுகளின் கயமை: காந்தி-ஜோஷி கடிதங்கள்
தினசரி வன்முறை நாடகங்களை மாணவர்களை வைத்து கம்யூனிஸ்ட் கட்சி போடுகிறது. அதில் ரத்தம் தோய்ந்த கைகளை வைத்துக்கொண்டும் சுடுவது போன்றும் காட்சிகளை அரங்கேற்றுகிறார்கள். காந்தி இந்தியாவின் ரஸ்புடின் என்று உங்களை குற்றம் சாட்டுகிறார்கள். பன்னெடுங்காலமாக சாத்வீக உணவை உண்டு வரும் பிராமண மற்றும் வைஸ்ய மாணவர்களை கட்டாயமாக மாமிச உணவு உண்ண வைக்கிறார்கள். கட்டற்ற பாலுறவு என்பது தான் அவர்கள் கொள்கை. ஒரு தார மணம் பற்றி கடுமையாக தூற்றுகிறார்கள். இதை தவிர தடி கொண்டு தங்கள் அரசியல் எதிரிகளை தாக்குகிறார்கள். வாய்ப்பிருந்தால் அவர்களையும் விடுதலை வீரர்களையும் பிரிட்டிஷ் காவல்துறையிடம் போட்டு கொடுக்கிறார்கள்…. ஜோஷியின் பதில்களை காந்தி ஏற்றுக்கொள்ளவில்லை. காந்திக்கு அன்றே தெரியும் கம்யூனிஸ்டுகள் தேச விரோதமாக மாறுவார்கள் என்ற உண்மை….
View More கம்யூனிஸ்டுகளின் கயமை: காந்தி-ஜோஷி கடிதங்கள்காந்திஜியும் சியாமா பிரசாத் முகர்ஜியும்
அந்நாளில் ஹிந்து மகாசபையின் தலைவராகவும் பின்னாளில் அதிலிருந்து வேறுபட்டு பாரதிய ஜன சங்கத்தை துவக்கியவராகவும் அறியப்படும் முகர்ஜி, ராஜாஜியின் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்தார். “உங்களுடைய உடல்நிலையை கவனியுங்கள். நீங்கள் ஒரு வேலையில் ஆழ்ந்துவிட்டால் அதனை முடிக்காமல் ஓயமாட்டீர்கள் என்பது தெரியும். உங்களுடைய பலமும் பலவீனமும் அது தான். நல்ல ஓய்விற்கு பிறகு மீண்டும் உங்கள் பணியை துவக்குவீர்கள் என்று நம்புகிறேன்”… காந்தியின் இந்த கடிதங்கள் முகர்ஜி அவர் மேல் செலுத்திய ஆதிக்கத்தையும் காந்தி முகர்ஜி மேல் கொண்டிருந்த அன்பையும் விளக்குகின்றன….
View More காந்திஜியும் சியாமா பிரசாத் முகர்ஜியும்அழகிய மரம் (இந்தியப் பாரம்பரியக் கல்வி) – புத்தக அறிமுகம்
1931-ல், லண்டனில் மகாத்மா காந்திஜி ஓர் உரை நிகழ்த்தினார். அதில், அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்த கல்வியின் நிலையைவிட, ஐம்பது நூறு ஆண்டுகளுக்கு முன்பாக, இந்தியாவில் கல்வி நிலை ஒப்பீட்டளவில் சிறப்பாக இருந்திருக்கிறது. பிரிட்டிஷார் அமல்படுத்திய நிர்வாக நடைமுறைகள், இந்தியப் பாரம்பரியக் கல்வி என்ற அழகிய மரத்தை வேரோடு பிடுங்கி எறிந்துவிட்டது என்று சொன்னார். காந்திஜியின் அந்தக் கூற்று, 18-19-ம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் கல்வி தொடர்பான மிகப்பெரிய விவாதக் கதவுகளைத் திறந்துவிட்டது. அந்த விவாதங்கள் மற்றும் அது தொடர்பான தரவுகளின் முழுமையான தொகுப்பே இந்தப் புத்தகம். காந்தியவாதியும் வரலாற்றாசிரியருமான தரம்பால், பிரிட்டிஷாரின் ஆவணங்களின் அடிப்படையில் இந்த ஆதாரபூர்வமான நூலை எழுதினார். மிக முக்கியமான இந்த வரலாற்று நூலை B.R.மகாதேவன் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்து நமக்கு அளித்திருக்கிறார்..
View More அழகிய மரம் (இந்தியப் பாரம்பரியக் கல்வி) – புத்தக அறிமுகம்