தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் இருமுறை தலைவர் பதவியில் திறம்பட செயல்பட்டவர் ம.வெ. அத்துடன் சிறந்த சமூக வரலாற்று அறிஞரும் ஆவார். அவருடைய உரை நேரடி அனுபவத்திலிருந்து வருவது. தூய்மைப் பணியாளர்கள் குறித்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோதியுடன் நேரடியாக உரையாடியது, கொரோனா காலகட்டத்தில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து தூய்மைப் பணியாளர்கள் செய்த தொண்டு, தமிழ்நாடு உட்பல பல மாநிலங்களில் மாநில அரசு அமைப்புகளின் மெத்தனம், ஒப்பந்தக் காரர்களின் சுரண்டல்கள், அராஜகங்கள், பாலியல் அத்துமீறல்கள், தனது பணிக்காலத்தில் அவர் எடுத்த அதிரடி சட்ட நடவடிக்கைகள், பட்டியல் சமுதாயத்தினரே மிக அதிக அளவில் இந்தப் பணிகளுக்கு வரும் நிலைமை தொடர்வது சரியானதா என்று பல முக்கியமான விஷயங்களைத் தொட்டுச்செல்வதாக அவரது உரை அமைந்திருந்தது. உரையின் வீடியோ பதிவுகளை இங்கே காணலாம்…
View More இந்தியாவில் தூய்மைப் பணியாளர்களின் நிலை – ம.வெங்கடேசன்கம்பனில் காத்திருப்பு – புத்தக அறிமுகம்
நண்பர் ஜகன்னாத் அவர்களின் கம்பராமாயண வாசிப்பு ரசனை, ஆய்வு, சமயம் ஆகிய மூன்று கண்ணோட்டங்களையும் உள்ளடக்கியது என்பதை இந்தத் தொகுப்பை வாசிப்பவர்கள் புரிந்து கொள்ள முடியும். இவற்றுக்கிடையில் முரண்பாடுகளை அவர் காண்பதில்லை. இவை மூன்றையும் இணைத்துச் செல்வதாகவே அவரது பார்வை அமைந்துள்ளது. . இதிலுள்ள பத்துக் கட்டுரைகளில் நான்கு, இராமகாதைக்கெனத் தமது வாழ்வின் கணிசமான பகுதியைச் செலவிட்டு உழைத்த பெருந்தகைகளைப் பற்றி அமைந்துள்ளது குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது…
View More கம்பனில் காத்திருப்பு – புத்தக அறிமுகம்ஶ்ரீ கிருஷ்ணரின் பிரம்ம மோகன லீலையும் அதன் உட்பொருளும்
மனதிற்கினியதும், வசீகரமானதும், ஆழமான தத்துவ உட்பொருள் கொண்டதுமான பிரம்ம மோகன லீலை ஶ்ரீமத்பாகவம் பத்தாவது ஸ்கந்தம் 13-14 அத்தியாயங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. மாயத்தால் கண்ணனுடன் விளையாட பிரம்மா பின்பு தானே மாயச்சுழலில் சிக்கி திகைத்து நிற்பதும் இதில் வருகிறது. அதைப் பற்றியது ஜடாயுவின் இந்த உரை…
View More ஶ்ரீ கிருஷ்ணரின் பிரம்ம மோகன லீலையும் அதன் உட்பொருளும்தொடரும் “தோமா வழி கிறித்தவம்” மோசடி, நடிகர் ராஜேஷ், உறக்கத்தில் இந்துக்கள்
சீமானும் விஜயும் இந்த மோசடி வலையின் பல்வேறு சரடுகளில் (pun intended) அறிந்தோ அறியாமலோ இயக்கப்படுகிறவர்கள். திராவிடம், தனித்தமிழ் இயக்கம், வேத மறுப்பு போலி சைவம் அனைத்துமே இந்த பெரும் மோசடியின் அங்கங்கள்.. நடிகர் ராஜேஷ் இதைப் பரப்பும் ‘ஐந்தவித்தான்’ என்கிற பிரச்சார திரைப்படத்தில் நடித்தார். தவறு, அவரது மதம் பரப்ப ஊழியம் புரிந்தார். அதில் வரும் எளிய ஃபார்முலா ஒன்றுதான்.. அவர்கள் பொய்மையில் வலிமையடைந்து கொண்டிருக்கிறார்கள். நீங்களோ உண்மையினை காக்கவும் பரப்பவும் திராணியின்றி, சோம்பலால் சுயநலத்தால் அந்த பொய்மை பரவ துணை போகிறீர்கள்…
View More தொடரும் “தோமா வழி கிறித்தவம்” மோசடி, நடிகர் ராஜேஷ், உறக்கத்தில் இந்துக்கள்தமிழகத்தின் சனாதன பாட்டி ஔவையார்
வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் சங்ககாலத்திலிருந்து பல ஔவையார்கள் வாழ்ந்ததாக கருதுகிறார்கள். ஆனால் தமிழரின் சனாதன தர்ம மனமானது, கல்வியும் அனுபவமும் இறைஞானமும் கொண்ட ஒற்றைப் பெண்மணியாக ஔவையை உருவகித்தது. ஔவைப் பாட்டி ஒரு ஆன்மிக பண்பாட்டு archetype. அப்படிப்பட்ட பெண்ஞானியை உருவாக்கும் கல்வி முறை இந்த மண்ணில் இருந்திருக்கிறது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பாட்டி ஏதோ ஒரு கட்டத்தில் அவள் பேரக்குழந்தைகளுக்கு ஔவை பாட்டியின் வடிவமாக வேண்டும்…
View More தமிழகத்தின் சனாதன பாட்டி ஔவையார்அயோத்தி ஶ்ரீராமர் ஆலய பிரதிஷ்டை ஓராண்டு நிறைவு: சில எண்ணங்கள்
அயோத்தி ஸ்ரீராமஜன்மபூமி கோயில் பிராண பிரதிஷ்டை வைபவம் நம் காலத்தில் நாம் கண்களால் காண நிகழ்ந்த ராம பட்டாபிஷேகம்… ராம் லாலா என்ற குழந்தை ராமர் வழிபாடு அரசியல் காரணங்களுக்காக உருவாக்கப் படவில்லை, அதற்கு குறைந்தபட்சம் 500 ஆண்டு பாரம்பரியம் உண்டு… தமிழ்நாட்டில் ராமாயணத்தை எரித்த இந்து விரோத அரசியல் கயவர் கூட்டத்தின் அதர்ம கொள்கைகள் இன்னும் புழக்கத்தில் உள்ளன. இவை தான் தமிழ்நாட்டின் அவமானச் சின்னங்கள். இவற்றை சுயமரியாதையுள்ள தமிழ் இந்துக்கள் எப்போது அகற்றப் போகிறோம்?…
View More அயோத்தி ஶ்ரீராமர் ஆலய பிரதிஷ்டை ஓராண்டு நிறைவு: சில எண்ணங்கள்Path to War: படம் நமக்களிக்கும் பாடம்
சில நாட்களுக்கு முன் ‘Path to War’ என்ற ஹாலிவுட் படத்தை ஏதோ ஒரு ஓடிடி தளத்தில் பார்த்தேன். வியட்நாம் போர் எப்படி அமெரிக்க முடிவுகளால் வடிவமைக்கப்பட்டது என்பதை காட்டும் படம்.. இறந்த ஒவ்வொரு அமெரிக்க வீரனுக்கும் சில நூறு அப்பாவி வியட்நாம் ஆசியர்கள் இறந்திருக்கிறார்கள். வியட்நாமியர்கள் இவை குறித்து பெரிதாக திரைப்படங்கள் எதுவும் எடுத்து சர்வதேச வெளியில் அமெரிக்கா போல ஒப்பாரி வைத்ததாக தெரியவில்லை. தம் வலிகளைத் தாண்டி தம் வலிமையால் பிரகாசிக்கிறார்கள். இறுதியில் தெரியக்கூடிய விடயம் ஒன்றே ஒன்றுதான். உன் மண்ணில் வேர் கொண்ட தலைவன் உன்னை தன் குடும்பமென்று நினைக்கக் கூடிய தலைவன் – அப்படி ஒருவனால் மட்டுமே நீ காப்பாற்றப்பட முடியும். அதனால் தான்…
View More Path to War: படம் நமக்களிக்கும் பாடம்ஈ.வே.ரா குறித்த விவாதங்கள் – யாருக்கும் வெட்கமில்லை
பெண்விடுதலை என்பது ஈவெராவால் முன்னெடுக்கப்படவில்லை. அதை முன்னெடுத்தவர்கள் வேறு பலர்.. ஈவெரா கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டிய இடம் கீழ்வெண்மணி விஷயத்தில் அவர் வெளியிட்ட அறிக்கை. பொதுவாக அவரிடம் இருந்த சாதியம். ஈவெரா குறித்து எவ்வித மலினமும் ஆபாசமும் இல்லாமல் காத்திரமானதோர் விமர்சனத்தை முன்வைத்தவர் தேசிய சுகாதார தொழிலாளர் துறை தலைவராக இருக்கும் ம.வெங்கடேசன், இந்துத்துவ இயக்கத்திலிருந்து வந்தவர்..
View More ஈ.வே.ரா குறித்த விவாதங்கள் – யாருக்கும் வெட்கமில்லைதிருப்பரங்குன்றம்: ஜிஹாதி தாக்குதலும், ஆக்கிரமிப்பு சதிகளும்
திருப்பரங்குன்றம் மலையின் பெயரை சிக்கந்தர் பாஷா மலை என பெயர் மாற்றம் செய்து, 2025 பிப்ரவரி 18 அன்று முருகன் சந்நிதிக்கு மேல் ஆடு மாடு கோழியை வெட்டி விருந்து வைக்கிறோம், முடிஞ்சா தடுங்கடா சும்பைகளா என சவால் விட்டிருக்கின்றன இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்கள். இந்த ஜிஹாதிய கனவுகள், சிறுபான்மை அதிகார உறுதிப்படுத்தல் எனும் அரசியல் சதி, அதன் மூலம் இந்து இன ஒழிப்பு – இது ஒவ்வொரு கட்டமாக, படிப்படியாக எப்படி செயல்படுகிறது என்பது பற்றிய ஒரு விழிப்புணர்வு பதிவு இது.
View More திருப்பரங்குன்றம்: ஜிஹாதி தாக்குதலும், ஆக்கிரமிப்பு சதிகளும்மகாவிஷ்ணு – கர்மா தியரி: சரியான விளக்கம்
இந்து தர்ம ஆசாரியர், வேத-ராமாயண அறிஞர் டாக்டர் ரங்கன் ஜி அவர்களின் சமீபத்திய வீடியோ. மகாவிஷ்ணு சர்ச்சை பின்புலத்தில் தமிழ்நாட்டில் ஒலிக்கும் ஏகப்பட்ட கூச்சல்கள், குழப்படிகளுக்கு நடுவில், தர்மம் குறித்த சரியான, ஆதாரபூர்வமான, உண்மையான விளக்கத்தை இந்த வீடியோ அளிக்கிறது… பாவம் செய்பவர்கள் கஷ்டத்தை அனுபவிப்பார்கள் என்று சகல சாஸ்திரங்களும் கூறுகின்றன. ஆனால், இதை வைத்து, நாம் பார்க்கக்கூடிய கஷ்டத்தை அனுபவிப்பவர்கள் எல்லாம், முன்பு ஏதோ பாவம் செய்திருப்பார்கள் என்று முடிவு கட்டி விடலாமா?…
View More மகாவிஷ்ணு – கர்மா தியரி: சரியான விளக்கம்