தாழ்த்தப்பட்டோர், பழங்குடிகள் ஆகியோரிடம் ஹிந்து மதத்தின் பெருமையை எடுத்துச் செல்லும்விதமாக பல்வேறு முயற்சிகளை திருப்பதி தேவஸ்தானம் எடுத்து வருகிறது.
கோயில் அர்ச்சகர் பயிற்சிகளில் தலித்துகள், பழங்குடிகள் ஆகியோரைச் சேர்த்துக் கொள்வது, அவர்கள் குடியிருக்கும் இடங்களுக்கே வெங்கடாசலபதி விக்ரகத்தைக் கொண்டு சென்று பிரார்த்தனை செய்வது போன்று திட்டங்களை தேவஸ்தானம் செயல்படுத்தி வருவதாக தேவஸ்தான தலைவர் கருணாகர ரெட்டி தெரிவித்தார்.
சங்கராச்சாரியர், ராமானுஜர், அன்னமாச்சாரியர் ஆகியோர் காலத்தில் ஹிந்து மதப் பண்பாடு அனைத்துப் பகுதிகளிலும் பரவியிருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் தற்போது ஹிந்து மதத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதைக் கருத்தில் கொண்டே, பெரியோரின் ஆலோசனையின்படி, பல்வேறு சமூகத் திட்டங்களை செயல்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்திருக்கிறது.
“தலித கோவிந்தம்” என்ற திட்டத்தின்படி திருப்பதி வெங்கடாசலபதி விக்ரகத்தை தலித்துகள் வாழும் பகுதிக்குக் கொண்டு சென்று, அங்கு வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
“மத்ஸ்ய கோவிந்தம்” என்ற மற்றொரு திட்டத்தின்படி, ஆந்திரத்தின் கிழக்குக் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மீனவர்களுக்கு வேதத்தின் பெருமைகளும், வழிபாட்டு முறைகளும் விளக்கப்படுகின்றன.
ஏழைகளுக்குத் திருமணம் செய்து வைக்கும் “கல்யாணமஸ்து”, மாநிலம் முழுவதும் தேர்பவனி நடத்தும் “பக்தி சைதன்ய யாத்ரா” ஆகியவை தேவஸ்தானம் செயல்படுத்திவரும் பிற சமூகத் திட்டங்களாகும்.
இத்திட்டங்களுக்கு தீவிர மதப் பற்றாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்களா என்று கேட்டபோது, “அப்படியொன்றும் இல்லை” என்றார் ரெட்டி.
~ செய்தி: தினமணி
இது பற்றி முன்பு ஜடாயு எழுதிய பதிவு.
// கோயில் அர்ச்சகர் பயிற்சிகளில் தலித்துகள், பழங்குடிகள் ஆகியோரைச் சேர்த்துக் கொள்வது, //
மகிழ்ச்சி தரும் செய்தி.
வேத காலத்தில் வேதங்கள் ஓதுவதும், வேள்விகள் நடத்துவதும் விருப்பமுள்ளவர் உரிமை.
ஆனால் பிற்காலத்தில், வேத நெறிக்கு எதிரானவர்களால் வேத நெறி பயிலும் வாய்ப்பு தலித்துகளிடமிருந்தும், சூத்திரர்களிடம் இருந்தும் பறிக்கப்பட்டது.
தலித்துகளும், சூத்திரர்களும் தங்களது இழந்த உரிமையை மீண்டும் பெறுவதன் மூலம் ஹிந்து மதம் தனது வேத காலத்திற்கு திரும்புகிறது.
ஆடுவோமே, பள்ளு பாடுவோமே !
Niraiya ezuthu pizaikaL. porukkavum.
This is good sign. Should support this kind of activity to strengthen our culture.
meekaum nalla muyarcheiyakum..