ஆற்றுப் படலம் – 3 The Canto of the River – 3
கதவினை முட்டி, மள்ளர் கை எடுத்து ஆர்ப்ப ஓடி,
நுதல் அணி ஓடை பொங்க, நுகர் வரி வண்டு கிண்ட,
ததை மணி சிந்த உந்தி, தறி இறத் தடக் கை சாய்த்து,
மத மழை யானை என்ன, மருதம் சென்று அடைந்தது அன்றே. 16
சொற்பொருள்: கதவு – மதகுகளின் கதவு. மள்ளர் – உழவர். நுதல் அணி ஓடை – முன்பக்கத்தி்ல் உள்ள ஓடை; யானையின் மத்தகத்தில் அணிவிக்கப்படும் ஆபரணம்; தறி – யானையைக் கட்டுவதற்கான முளை (அல்லது) வெள்ளத்தைத் தடுப்பதற்காகக் கரைகளில் அடிக்கப்பட்ட முளைகள்
இந்தப் பாடலில் நதி, யானையாகச் சித்திரிக்கப்படுகிறது.
மதகின் கதவுகளை நதி முட்டுகிறது; யானையோ கோட்டைகளின் கதவுகளை முட்டிப் பெயர்க்கக் கூடியது. நதி ஓடிவரும் வேகத்தைக் கண்டு உழவர்கள் கைகளை உயரத் தூக்கியபடி கதறுகிறார்கள்; யானை ஓடிவரும்போதும் அப்படித்தான் மக்கள் கதறுவார்கள். நீர்த்தேக்கங்களின் முன்புறம் உள்ள ஓடைகள் நிரம்பிப் பொங்கி வழியுமாறு ஆற்றின் வெள்ளம் பெருகுகிறது; யானைக்கோ மத்தகத்தின் மீது அணிவிக்கப்பட்ட அணிகலனின் ஒளி வெள்ளம் பொங்கிக் கொண்டு இருக்கும். நதியிலும் வண்டுகள் மொய்க்கின்றன; யானையின் மதநீரின் மேலும் வண்டுகள் மொய்க்கும். நெருக்கமாகக் கட்டப்பட்டுள்ள மணிகள் அறுந்து போகுமாறு நதி ஓடுகிறது; யானையும் ஓடும்போது அதனை அலங்கரிக்கக் கட்டியுள்ள மணிகள் அறுந்துபோகுமாறு ஓடக்கூடியது. நதியின் கரையெங்கிலும் அதன் வெள்ளம் பெருகி கரையைத் தாண்டி வந்துவிடாமல் அடித்து வைக்கப்பட்டுள்ள முளைகளை எல்லாம் நதியின் ஓட்டவேகம் அரித்தெடுத்து, பிடுங்கி எறிந்தபடி செல்கிறது; யானைகள், தம்மைக் கட்டுவதற்காக அடிக்கப்பட்ட முளைகளைப் பெயர்த்து வீசி எறிந்தபடி ஓடுவன. நதி, நீர் பெருக்கிச் செல்கிறது; யானை மதநீர் பெருக்கிச் செல்கிறது.
இவ்வாறாக, வயலும் வயல் சூழ்ந்த நிலமுமான மருததத்துள் சரயு வெள்ளம் யானை புகுந்ததைப்போலப் புகுந்தது.
Translation: Because of the violent knocks on the doors; because it makes the farmers cry with raised hands; because it fills and overflows the channels (like the shimmer of gems on the frontlet piece on the foreheads of elephants); by the swarming of bees; by spilling the string of bells; by pulling the pegs off; by the immense flow (of must) the river gamboled into the fields and surroundings like an elephant in rut.
Elucidation: This verse is vivid in its imagery and rich in its pun on words. It likens the vast energy of the water current to the movements of a warring elephant, overflowing with its venereal secretions. If the elephants knock their heads violently on the great gates of forts, the gushing waters kick the sluice gates away; if the elephants make the people on their path cry with raised hands helplessly, so does the water; if the elephants glitter with the gems that decorate their foreheads, shimmering like a brook of light, the rushing river fills all the channels in one go, overflows in no time and its waters shimmer too; if the elephants rip the bells that are tied to their bodies, the river rips apart the bells tethered on their way (to sound a note of warning when the tide rises) as it goes; if the elephants pluck the trammels off to which they are tethered, so does the river, pulling off all the pegs driven on the banks to restrain the flow of water; the river is full of water and the elephants are overflowing with must. And so, the river rushes past the farmlands like warring elephant.
முல்லையைக் குறிஞ்சி ஆக்கி, மருதத்தை முல்லை ஆக்கி,
புல்லிய நெய்தல் தன்னைப் பொரு அரு மருதம் ஆக்கி,
எல்லை இல் பொருள்கள் எல்லாம் இடைதடுமாறும் நீரால்,
செல்லுறு கதியில் செல்லும் வினை என, சென்றது அன்றே. 17
சொற்பொருள்: ஆறு செல்கின்ற வேகத்தால் காடுகள், மலைகளிலிருந்து அரித்தெடுக்கப்பட்டு வந்த பொருட்களால் நிறைந்தன. ஆகவே காட்டுப் பகுதி மலைப் பகுதியைப்போலத் தோற்றமளித்தது. அடுத்த பகுதியான வயல்வெளிகளிலோ, காடுகளிலிருந்து சிதறிய பொருட்கள் இறைக்கப்பட்டு அவை காட்டுவெளிகளாகவே காட்சியளித்தன. அதற்கும் அடுத்த பகுதியான நெய்தல் நிலப் பகுதியிலோ, வயல்களிலிருந்து அடித்துவரப்பட்ட பொருட்கள் சிதறி, அவை வயலும் வயல் சூழ்ந்த நிலங்களாகவும் காட்சி தந்தன. இப்படி, ஒரு நிலையை இன்னொரு நிலையாக மாற்றி, விலங்குகளை மக்களாகவும், மக்களை தேவராகவும், தேவரை விலங்குகளாகவும் சுழற்றிப் போடும் அவர்களுடைய பாவ-புண்ணிய பலன்களைப் போல நதியின் ஓட்டம் சென்றது.
Translation: The forests filled with the products of the hills resembled the hilly terrain; the cultivated lands in turn were strewn with the plunder from the forests and had the appearance of the woods; and the last lap of the river, backwaters and the confluence with the sea, the lands leading to sea, were left with paddy and other products of the fields, wearing the appearance of the farmlands. Like the effects of one’s good or evil deeds that make an animal to take birth as a human and human into celestial and the celestial into the beast, the river changed the state of every land in its course.
Elucidation: Coming down the hills, passing through the forests, farmlands and reaching the sea, the river leaves the products of one land in the next, making it appear like the other. The forests wear the garb of hills; farms look like woods; and the land adjoining the seas resemble forests. This change of states is likened to the cycle of births and deaths whereby one life-form attains another form in accordance with the effects of their good and evil deeds.
காத்த கால் மள்ளர் வெள்ளக் கலிப் பறை கறங்க, கைபோய்ச்
சேர்த்த நீர்த் திவலை, பொன்னும் முத்தமும் திரையின் வீசி,
நீத்தம் ஆன்று அலையது ஆகி நிமிர்ந்து, பார் கிழிய நீண்டு,
கோத்த கால் ஒன்றின் ஒன்று குலம் எனப் பிரிந்தது அன்றே. 18
சொற்பொருள்: கால் – வாய்க்கால். கைபோய் – விரைவாகச் சென்று
உழவர்கள் காத்து நின்ற வாய்க்கால்களில், ‘வெள்ளம் வருகிறது’ என்ற அறிவிப்பாக ஒலிக்கின்ற மருதப் பறைகள் ஒலிக்க, நீர்த்திவலைகளையும், பொன்னையும் முத்தையும் தன் அலைக் கரங்களால் வீசியபடி வெள்ளம் திரண்டது; பூமி கிழியும்படியாக நெடுந்தொலைவு ஓடியது. பின்னர் மாந்தருடைய குலங்கள் (பல தலைமுறைகளுக்கு அப்பால்) பற்பல கிளைகளாகப் பிரிவதுபோல் ஒரு கால்வாயிலிருந்து பல சிறுசிறு கால்வாய்களாகப் பிரிந்து ஓடலானது.
Translation: Floods rushed through the channels guarded by the farmers, and accompanied by the beats of drum to warn the onslaught of stormwater, throwing about a screen of mist, pearls and specks of gold with its valiant arms of waves, filled and formed a long route of stream, branching off into many rivulets even as a family branches off into a tribe, a lineage, down the generations.
Elucidation: Like a single family branching off into a several lines of descendants in the course of time, the waters gathered themselves in streams, to branch off into rivulets, down the way it coursed.
கல்லிடைப் பிறந்து, போந்து, கடலிடைக் கலந்த நீத்தம்,
எல்லை இல் மறைகளாலும் இயம்ப அரும் பொருள் ஈது’ என்னத்
தொல்லையில் ஒன்றே ஆகி, துறைதொறும், பரந்த சூழ்ச்சிப்
பல் பெருஞ் சமயம் சொல்லும் பொருளும்போல், பரந்தது அன்றே. 19
சொற்பொருள்: கல் – மலை.
மலையில் தோன்றிப் பாய்ந்த நீர், ஆறாக ஓடிக் கடலோடு கலந்தது. அளவில்லாத வேதங்களாலும் ‘இன்ன தன்மையது‘ என்று எடுத்துரைக்க முடியாத பரம்பொருள் தத்துவம் இதுவே என்று சுட்டுவதைப் போல, தொடக்கத்தில் ஒரே இடத்தில் தோன்றிப் பல இடங்களில், பல்வேறு விதமான அளவுகளிலும் வடிவத்திலும் பாய்ந்து, வழிநெடுகிலும் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு, இறுதியில் கடலில் கலந்து, வேறுபாடின்றிக் கலக்கும் உயிர்களின் தன்மைக்கு விளக்கமாகப் பல்வேறு சமயங்களும் உரைப்பதை ஒத்து இருந்தது.
Translation: The rain waters, coursing down the hills surged across the country to find its confluence in the ocean. As if to show that ‘this is what the numberless Scriptures attempt to describe, but are unable to,’ it started as ‘one’ in the beginning, flowed its varied ways and confluenced into ‘One’, which is the philosophy that the many and varied religions propound.
Elucidation: It was ‘water’ in the beginning, starting as showers. Down the course it assumed various forms, had varying depths and speed, and was known by different names. And it became its ‘one whole’ again when it reached the ocean. To think of it, this is the philosophy that all the religions preach, propogate and propound. The river explains it all. It is the Supreme that takes different forms, different names, referred to in hundreds and thousands of religious debates, while the essence remains One and no more than One.
நீர் பாய்ந்து யாவையும் எழிலுடன் விளங்குதல் – Beauty abounding all over with the river coursing through.
தாது உகு சோலைதோறும், சண்பகக் காடுதோறும்,
போது அவிழ் பொய்கைதோறும், புதுமணல் தடங்கள்தோறும்,
மாதவி வேலிப் பூக வனம் தொறும், வயல்கள் தோறும்,
ஓதிய உடம்புதோறும் உயிர் என, உலாயது அன்றே. 20
சொற்பொருள்: தாது – மகரந்தம், போது – மொட்டு, மாதவி – குருக்கத்திக் கொடிகள். பூக வனம் – பாக்கு மரங்கள் நிறைந்த தோப்பு.
சரயு நதியின் நீர், மகரந்தங்களைச் சொரிகின்ற சோலைகள் ஒவ்வொன்றிலும், காடுகளாக அடர்திருக்கும் சண்பகப்பூச் சோலைகள் ஒவ்வொன்றிலும், மொட்டுகள் மலர்கின்ற பொய்கைகள் ஒவ்வொன்றிலும், குருகத்திக் கொடிகள் வேலியாக அமையப் பெற்ற பாக்குமரத் தோப்புகள் ஒவ்வொன்றிலும், ஒவ்வொரு வயலிலும் பாய்ந்து, படர்ந்து நிறைந்தது. ‘தேவர், மனிதர், விலங்கு, தாவரம்’ என்று சொல்லப்படும் பல்வேறு வடிவங்களைத் தாங்கி இயங்கிக்கொண்டிருக்கும் உயிர்க் குலங்கள் ஒவ்வொன்றின் உள்ளும் நிற்கும் உயிர் ஒன்றுதான் என்று சொல்வதைப்போல், அத்தனை உயிர்க்குலத்துக்கும் ஆதாரமாக விளங்கி நிறைந்தது.
Translation: The river went through the many groves that were spilling pollen, forests of Champaka trees, through every blossoming garden, through the lands filled byareca palm, surrounded by creepers and every fields, and moved about like the ‘single life’ that pulsates in every form of living.
Elucidation: Tradition divides the forms of life into four, namely, Celestials, Humans, Animals and Plants. The life that pulsates in every form of life remains the same. Sarayu flowed through different groves, woods and thickets, feeding them, sustaining them, and making them grow, thus demonstrating the philosophy that ‘the forms are many; but the life that pulsates in them is one.’
ஆற்றுப் படலம் நிறைவடைந்தது – End of Canto of River
// It is the Supreme that takes different forms, different names, referred to in hundreds of thousands of religious debates, while the essence remains One and nore more than One. //
“கல்லிடைப் பிறந்து போந்து” பாடலுக்கான விளக்கம் அருமை.
முண்டக உபநிஷத் பிரம்மத்தைத் தேடும் ஒவ்வொருவரையுமே ஒரு நதியாகவும், அவர்கள் அனைவரும் தங்கள் நாம-ரூபங்களில் இருந்து விடுபட்டு சென்றடையும் பரம்பொருளைக் கடலாகவும் கூறுகிறது –
யதா நத்ய ஸ்யந்தமானா: ஸமுத்ரே
அஸ்தம் கச்ச்ந்தி நாமரூபே விஹாய
ததா வித்வான் நாமரூபாத் விமுக்த:
பராத்பரம் புருஷம் உபைதி திவ்யம்
தாயுமானவர் “சமயம் எனும் நதி உண்ட கடலே” என்கிறார்.
“பொங்குபல சமயம் எனும் நதிகள் எல்லாம்” சென்றடையும் “கங்கு கரை காணாத கடல்” என்கிறார் வள்ளலார்.
சமயங்களின் பன்முக ஒருமையைக் குறிக்க இந்து இலக்கியம் இந்த நதி-கடல் என்கிற அற்புதமான உருவகத்தைக் காலங்காலமாகப் பயன்படுத்தி வருகிறது.
சரயுநதி வர்ணனையின் இடையில் அற்புதமாக இந்த தத்துவ மணியை வைத்துள்ள கம்பனின் மேதாவிலாசம் தான் என்னே!
ஜடாயு,
அங்கே அத்வைதம் மின்னுவதைக் காணுங்கள். ‘அலங்கலில் தோன்றும் பொய்மை அரவென பூதமைந்தும்’ என்று சுந்தர காண்ட காப்புச் செய்யுளில் மட்டுமில்லை, இதோ இங்கேயும் அத்வைதம் தோன்றி நிற்கிறது. கம்பனின் சமநோக்கு என்பது இங்கே வெளிப்படுகிறது. தவறு. இங்கேயும் வெளிப்படுகிறது.