கம்பராமாயணம் – 4

நாட்டுப் படலம் – 1 Canto of the Country – 1

கோசல நாட்டு வளம் The richness of Kosala

வாங்க அரும் பாதம் நான்கும் வகுத்த வான்மீகி என்பான்,
தீம் கவி, செவிகள் ஆரத் தேவரும் பருகச் செய்தான்;
ஆங்கு, அவன் புகழ்ந்த நாட்டை, அன்பு எனும் நறவம் மாந்தி,
மூங்கையான் பேசலுற்றான் என்ன, யான் மொழியலுற்றேன். 1

சொற்பொருள்:

பாதம் – கவிதையின் அடி: நறவம் – தேன்; மூங்கையான் – ஊமை.

தேவர்களும் செவிகுளிரக் கேட்கும்படியான இனிய, மாற்றி அமைக்க முடியாத, நான்கு அடிகளாலான யாப்பிலமைந்த வடமொழிக் கவிதைகளாக ராமாயணத்தை வான்மீகி பாடினான். அவ்வாறு அவன் போற்றிய கோசல நாட்டின் சிறப்பை நான் மிகுந்த ஆசை என்னும் தேனைக் குடித்ததனால் எழுதுகிறேன். ஆனாலும் நான் செய்வது ஓர் ஊமையன் பேச முயன்றதுபோன்ற, ஆசையினால் செய்யப்படும் முயற்சியே.

Translation: In sweet verses of four feet did Valmiki compose his Ramayana. They were of such sweetness that even the Devas gorged on them. I too am trying to portray the greatness of Kosala since I am drunk with desire (to do likewise). It is but like the vocalisations of a dumb person.

Elucidation: In the first canto Kamban compared himself to a cat attempting to lick the Ocean of Milk dry; and a little boy scratching figures on the earth while a Master Craftsman watched. In this poem too he, with great humility, compares his poems with those of Adikavi Valmiki, whose work is imbibed with great relish even by celestial beings. “What I am attempting now is just because I am drunk with desire and (not because I am competent to do that. I feel tongue tied (because I am intoxicated with desire) to the extent that have become dumb. All my attempts to sing like Valmiki are as ridicualous as a mute person’s attempts to sing” he says.

வரம்பு எலாம் முத்தம்; தத்தும் மடை எலாம் பணிலம்; மா நீர்க்
குரம்பு எலாம் செம்பொன்; மேதிக் குழி எலாம் கழுநீர்க் கொள்ளை;
பரம்பு எலாம் பவளம்; சாலிப் பரப்பு எலாம் அன்னம்; பாங்கர்க்
கரும்பு எலாம் செந்தேன்; சந்தக் கா எலாம் களி வண்டு ஈட்டம். 2

சொற்பொருள்:

பணிலம் – சங்கு; குரம்பு – கால்வாயின் கரை; மேதி – எருமை; சாலி – நெற்பயிர்; ஈட்டம் – கூட்டம்; சந்தக் கா – அழகிய பூந்தோட்டம்

வயல் வரப்புகளில் எல்லாம் முத்துக்கள் மண்டியிருக்கும். நீர் ஓடும் மடைகளில் எல்லாம் சங்குகள். நிரம்பிய வெள்ளம் ஓடும் கால்வாய்களின் கரையெல்லாம் செம்பொன்னால் ஆனவை; எருமைகள் படுத்ததனால் ஏற்பட்ட குழிகளில் தேங்கிய நீரில் செங்கழுநீர் மலர்கள் பெருங்கூட்டமாகப் பூத்துள்ளன; சமப்படுத்திய வயல்களிலோ பவளமணிகள் பரவியுள்ளன. சாலி என்னும் உயர்வகை நெல் நிரம்பிய வயல்களில் அன்னப் பறவைகள் உலவுகின்றன; அருகிலுள்ள கரும்பு வயல்களில் கருப்பங்கழிகளுக்கு இடையிலிருக்கும் கூடுகளிலிருந்து செந்தேன் பொழிகின்றது. அழகிய பூந்தோட்டங்களில் தேன்குடித்த வண்டுகளின் பெருங்கூட்டம் உலவுகிறது.

Translation: Ridges of the fields are brimming with pearls; streams are full of conch shells; bunds of the flooded canals are lined by pure gold; in the cesspools formed by buffaloes, red lilies abound; the flattened surface of fields are paved with corals; Swans swim around in paddy fields; in the nearby sugarcane fields, honey is dripping; drunken honeybees swarm over fragrant gardens.

Elucidation: All the descriptions in this verse point to the abundence of water resources. Large canals run so deep that they bring up gold from the bowels of the earth. Even the recess caused on the ground by a resting buffalo becomes a puddle where red lilies flourish. The sugar canes are so very tall and strong, huge honey combs are built in their midst and hence the dripping of honey.

மருத நில வளம் The richness of Agricultural tracts

ஆறு பாய் அரவம், மள்ளர் ஆலை பாய் அமலை, ஆலைச்
சாறு பாய் ஓதை, வேலைச் சங்கின் வாய்ப் பொங்கும் ஓசை,
ஏறு பாய் தமரம், நீரில் எருமை பாய் துழனி, இன்ன
மாறு மாறு ஆகி, தம்மில் மயங்கும்-மா மருத வேலி. 3

சொற்பொருள்: அரவம், அமலை, ஓதை, ஓசை, தமரம், துழனி ஆகிய எல்லாமே வெவ்வேறு வகை ஒலிகள்; மருதம் – நன்செய் நிலம்; மள்ளர் – மருதநிலப் பகுதியில் வசிப்போர்; வேலை – வேளை; ஏறு – காளை.

ஆற்றுநீர் பாய்கின்ற ஒலி; கரும்பு ஆலைகளில் குடியானவர் கருப்பஞ்சாறு பிழியும்போது எழுப்பும் ஒலி; பிழிந்த சாறு பெருகிப் பாயும் ஒலி; வேளாவேளைக்குச் சங்குகளை ஊதும் ஒலி; காளைகள் பாய்ந்தோடும் ஒலி; எருமைகள் குட்டையைக் கலக்கும் ஒலி–இப்படிப்பட்ட ஒலிகள் எல்லாம் கலந்து மாறிமாறிக் கோசல நாட்டின் நன்செய் நிலங்களில் ஒலிக்கின்றன.

Translation: The sound of the river in full flow; the murmur of the peasants who are feeding sugarcane into crushers; the sound of the juice pouring out of the crushers; the sound emanating from Conches being blown from time to time; the sounds from the hooves of bulls that are rushing; the sound of water splashed by buffaloes wading into ponds–all these sounds melt into each other and are heard alternatively in the fertile lands of Kosala.

மருதம் வீற்றிருக்கும் காட்சி The enthroned Marudam

தாமரை விளக்கம் தாங்க

தண்டலை மயில்கள் ஆட, தாமரை விளக்கம் தாங்க,
கொண்டல்கள் முழவின் ஏங்க, குவளை கண் விழித்து நோக்க,
தெண் திரை எழினி காட்ட, தேம் பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட, மருதம் வீற்றிருக்கும் மாதோ. 4

சொற்பொருள்:
முழவு – பேரிகை; எழினி – அழகிய திரை.

குளத்தின் கரையிலமைந்த பசுமையான தோட்டங்களில் மயில் ஆடுகின்றன; தாமரை மலர்கள் விளக்குகளைப் போல உயர்ந்து நிற்கின்றன; இடியோசை மயிலின் நடனத்துக்கு மத்தளம் வாசிக்கிறது; நீலக்குவளை மலர்கள் அந்த நடனக் காட்சியை கண்விரித்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றன; குளத்தின் குளிர்ந்த நீரலைகள் நடன அரங்கத்தின் திரைகளாக அமைகின்றன; இனிமையைப் பொழியும் மகர யாழைப் போல வண்டுகள் பாடிக்கொண்டிருக்கின்றன. இத்தகைய அரங்கத்தில் (இந்த அற்புதமான நடனத்தைப் பார்த்தபடி) மருதம் (ஓர் அரசனைப் போல) வீற்றிருக்கிறது.

Translation: In the cool gardens located on the banks of the pond, Peacocks dance; Lotus flowers hold their heads up like lamps; thunder plays the drums; blue lilies are like admiring eyes of an audience; the thin ripples on the pond’s surface are like curtains; bees buzz verily like the sweet music of makara yazh (a stringed instrument shaped like a fish). In this lovely court, the Marudam is enthroned.

Elucidation: From the natural happenings in and around a pond, the Master Poet creates a lovely scene of dance performance fit for a king.

தாமரைப் படுவ, வண்டும் தகை வரும் திருவும்; தண் தார்க்
காமுகர்ப் படுவ, மாதர் கண்களும் காமன் அம்பும்;
மா முகில் படுவ, வாரிப் பவளமும் வயங்கு முத்தும்;
நாமுதல் படுவ, மெய்யும் நாம நூல் பொருளும் மன்னோ. 5

சொற்பொருள்:

திரு – செல்வத்தின் கடவுளாகிய இலக்குமி; காமுகர் – காதலர்; நாம நூல் – முழுமையான நூல், வேதம்; நாமநூல் பொருள் – வேதங்களின் சாரமான இறைவன்.

வண்டுகளும் திருமளும் தாமரை மலர்களில் உறைகின்றனர்; பெண்களின் கண்களும் மன்மதனின் அம்புகளும் குளிர்ந்த மாலைகளை அணிந்த காதலர்களின்மீது பாய்கின்றன; கடலின் பவளமும், ஒளிரும் முத்துக்களும் பெரும் மேகங்களிலிருந்து மழையோடு வீழ்கின்றன; சத்தியமும், வேதங்களின் சாரமும் மக்களின் நாவில் முதன்மையாக உறைந்திருக்கின்றன.

Translation: Bees and goddess Lakshmi reside in lotus flower; the eyes of women and the arrow of Cupid dart towards their own garlanded lovers; corals and brilliant pearls are showered by huge clowds along with the rain. Primarily residing on the tongues of the people are Truth and the essence of Vedas.

Elucidation: The country’s opulence has been described in a variety of ways. But, ultimately, what is important is, the people always speak the truth and their tongues never cease to chant the name of the God, who is the essence of the Vedas.

முந்தைய பகுதி… அடுத்த பகுதி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *