கம்பராமாயணம் – 5 (Kamba Ramayanam – 5)

பால காண்டம்

2. நாட்டுப்படலம் 2. Canto of the country

எருமை

நீரிடை உறங்கும் சங்கம்; நிழலிடை உறங்கும் மேதி;
தாரிடை உறங்கும் வண்டு; தாமரை உறங்கும் செய்யாள்;
தூரிடை உறங்கும் ஆமை; துறையிடை உறங்கும் இப்பி;
போரிடை உறங்கும் அன்னம்; பொழிலிடை உறங்கும் தோகை. 6

சொற்பொருள்:
மேதி – எருமை; தார் – பூமாலை; செய்யாள் – சிவந்த நிறத்தினளான திருமகள்; உறங்குதல் – நித்திரை கொள்ளுதல், சோர்வாகக் கிடத்தல், தங்கியிருத்தல் என்று ஒவ்வோரிடத்திலும் ஒவ்வொரு பொருளில் ஆளப்பட்டுள்ளது.

(கோசல நாட்டின்) நீர்நிலைகளில் சங்கினம் இருக்கும்; மரநிழலில் எருமைகள் படுத்திருக்கும்; மலர்மாலைகளில் தேனீக்கள் இருக்கும்; தாமரையில் திருமகள் வசிப்பாள்; குளத்தின் அடிப்பகுதியில் ஆமைகள் வசிக்கும்; முத்துச் சிப்பிகள் கடல் துறையில் நிறைந்திருக்கும்; வைக்கோற் போர்களில் அன்னங்கள் ஓய்வெடுக்கும்; மலர் வனங்களில் மயில்கள் நிரம்பியிருக்கும்.

Translation: (In the land of Kosala) Molluscs are aplenty in water bodies; buffaloes lounge in shades; bees are asleep in garlands; Sri Lakshmi, the Goddess of Wealth resides in lotuses; tortoises stay at the bottom of the ponds; pearl oysters are heaped in the sea ports; hay stacks are full of resting Swans; and, gardens are full of relaxing peacocks.

Elucidation: What we see is a picture of contentment. It is a chain of causes, one leading to the other. Since the buffaloes are at rest and have not plunged in the pools, the tortoises are at peace, and rest at the bottom; since the tortoises are at rest, the oysters remain undisturbed, without being gobbled; since the peacocks are not flocking on the haystacks to pick on the grains, swans find their places of rest; and since Mahalakshmi occupies and stays on the lotus, the bees (moving away from the lotus) draw honey from the flowers of Her garland to the brim and rest, contented there.

படை உழ எழுந்த பொன்னும், பணிலங்கள் உயிர்த்த முத்தும்,
இடறிய பரம்பில் காந்தும் இன மணித் தொகையும், நெல்லின்
மிடை பசுங் கதிரும், மீனும், மென் தழைக் கரும்பும், வண்டும்,
கடைசியர் முகமும், போதும், கண்மலர்ந்து ஒளிரும் மாதோ. 7

சொற்பொருள்:
படை – உழுபடை எனப்படும் கலப்பை; காந்தும் – ஒளி வீசும்; மிடை – சேர்ந்திருக்கும்; கடைசியர் – உழவர்குலப் பெண்டிர்.

கலப்பையினால் உழும்போது நிலத்திலிருந்து கிளம்பிய பொன்; சிப்பிகள் உமிழ்ந்த முத்துக்கள்; சமதளப்படுத்திய வயலில் ஒளிவீசும் ரத்தினக் குவியல்கள்; பசுமையான கதிரில் இருக்கும் நெல்மணிகள்; மீன்கள்; மென்மையான சோலையைத் தாங்கிய கரும்பு; வண்டுகள்; உழத்தியர் முகங்கள்; மொட்டுக்கள் — இவை யாவும் தமது கண்களைத் திறந்து ஒளிவீசுவன ஆகும்.

Translation: The gold turned up by the plows while tilling lands; pearls from oysters; superior gems blazing on the levelled lands, grains of paddy on green plants; fish; tender sheathed sugar cane; bees; faces of agricultural labour women; buds — these are the ones that open their eyes and gleam.

Elucidation: The previous verse listed sleepy, and closed eyes. This verse portrays those eyes that remain open and glow.

பாணர்களின் இசை The music of minstrels

தெள் விளிச் சீறியாழ்ப் பாணர் தேம் பிழி நறவம் மாந்தி,
வள் விசிக் கருவி பம்ப, வயின்வயின் வழங்கு பாடல்,
வெள்ளி வெண் மாடத்து உம்பர், வெயில் விரி பசும் பொன் பள்ளி,
எள்ள அருங் கருங் கண் தோகை இன் துயில் எழுப்பும் அன்றே. 8

சொற்பொருள்:
சீறியாழ் – சிறிய யாழ்; நறவம் – கள், தேன்; விசி – இழுத்துக் கட்டிய; பம்ப – ஒலிக்க; வயின்வயின் – பல பக்கங்களிலும்; வெயில் விரி – ஒளி வீசுகின்ற.

தெளிந்த ஒலியைக் கொண்ட சிறிய யாழைக் கையில் ஏந்திய, கள்ளைக் குடித்த பாணர்கள், இழுத்துக் கட்டிய பறைகளை அடித்தபடி, ஆங்காங்கே பாடல்களைப் பாடுகின்றனர். வெள்ளி மாடங்களின் உச்சியில் ஒளிவீசும் பசும்பொன் கட்டில்களில் துயில் கொண்டிருக்கும் அழகிய பெண்களை அந்த இசை எழுப்பி விடுகிறது.

Translation: Drunk minstrels playing upon clear sounding small lutes to the accompaniment of tightly strung drums, make music on all sides. Black eyed maiden sleeping in radiant golden beds atop mansions of silver, are woken up by this music.

Elucidation: Arts flourish in a prosperous country. The singing minstrels with their small lutes and drums is a testimony to Kosala’s prosperity.

ஆலைவாய்க் கரும்பின் தேனும், அரி தலைப் பாளைத் தேனும்,
சோலை வீழ் கனியின் தேனும், தொடை இழி இறாலின் தேனும்,
மாலைவாய் உகுத்த தேனும், வரம்பு இகந்து ஓடி, வங்க
வேலைவாய் மடுப்ப-உண்டு, மீன் எலாம் களிக்கும் மாதோ. 9

சொற்பொருள்:
தொடை – தொடர்ந்து; இறால் – தேன்கூடு; வங்கம் – கப்பல்; களித்தல் – கள் உண்டு மகிழ்தல்.

ஆலைகளில் பிழியப்படும் கருப்பஞ் சாறும், தென்னை முதலிய மரங்களில் பாளையை அரிந்து வடிக்கப்படும் சாறும், சோலைகளில் கனிந்து உதிரும் பழங்களின் சாறும், தேன்கூட்டிலிருந்து தொடர்ந்து ஒழுகிக்கொண்டிருக்கும் தேனும், மாலைகளில் இருந்து விழும் தேனும் ஒன்றாகி வரம்பில்லாமல் பெருகி, கப்பல்கள் உலவும் கடலில் சென்று கலக்கின்றது. கடலிலுள்ள மீன்கள் அவற்றை உட்கொண்டதால் ஏற்பட்ட போதையில் திளைக்கின்றன.

Translation: The juice of sugar canes in crushing mills, the toddy dripping from the trimmed spathe of trees like coconut, the juice of ripe fruits that have fallen upon the earth in gardens, the continuously flowing honey from honeycombs, the honey dripping from garlands — all these intermingle and flow into the ocean. The fish in the ocean get drunk (with this mixture of juices) and are ecstatic.

Elucidation: All the juices, toddy and honey are derived from Maruda thinai (fertile land) related sources. They flow into the ocean, which brings in Neythal thinai (sea and land adjoining the sea). The mixture of juices are flowing on their own into the sea because there is no one to collect them. The fact that ships are mentioned in connection with sea indicates flourishing trade and sea transport.

பண்கள் வாய் மிழற்றும் இன் சொல் கடைசியர் பரந்து நீண்ட
கண், கை, கால், முகம், வாய், ஒக்கும் களை அலால் களை இலாமை,
உண் கள் வார் கடைவாய் மள்ளர், களைகிலாது உலாவி நிற்பர்;
பெண்கள்பால் வைத்த நேயம் பிழைப்பரோ சிறியோர் பெற்றால்? 10

சொற்பொருள்:

களைகிலாது – களையெடுக்காமல்.

வயல்களில் (கருங்குவளை, தாமரை, ஆம்பல் போன்ற) களைச் செடிகள் முளைத்திருந்தன. வாயோரம் ஒழுகுகிற அளவுக்கு மிகுதியாகக் கள்ளைக் குடித்திருந்த உழவுத் தொழிலாளருக்கு அவற்றைப் பார்த்தால், இனிமையாகப் பாடும் உழத்தியரின் அகன்று நீண்ட கண்கள், கை, கால், முகம், வாய் போலத் தோன்றியதே தவிர, களைகளைப் போலத் தோன்றவில்லை. எனவே அவர்கள் அவற்றை (களை) பிடுங்காமல் அங்கும் இங்கும் உலாவுவார். அதிகப் பக்குவம் இல்லாதோர் காதலில் வீழ்ந்தால் அதன் (வேடிக்கையான) விளைவுகளிலிருந்து தப்பிக்கவும் முடியுமோ!

Translation: (In agricultural lands) Weeds (like blue lilies, lotuses, red lilies etc.,) were flourishing. The agricultural workers, who had drunk so much that toddy was dripping from the corner of their mouths, mistook the flowers for the long and large eyes, hands, leg, face and mouth of their loved ones. So, instead of weeding out the plants they loiter (in confusion). Can an immature person survive the (funny consequences of) love of women!

Elucidation: Love and spirits are equally intoxicating. Their combination and excess can be deadly. The agricultural workers here are soaked to their gills with both. That creates a funny situation where even weeds look like body parts of their loved ones. The poet’s wonderment whether immature persons can survive the consequences of love, does not (may be deliberately) take into account the effects drunkenness.

முந்தைய பகுதி…

அடுத்த பகுதி…

One Reply to “கம்பராமாயணம் – 5 (Kamba Ramayanam – 5)”

  1. The english translation and elucidation is beautiful. The prose sounds classical and comprehensible at the same time.

    And it is truly befitting the majesty and poetic genius of Kamban.

    Hari Krishnan and Madura Bharathi’s contribution to bring Kamba Ramayanam in English is laudable and will be long standing.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *