வருண் வருகையும் சோனியா கலக்கமும்

வருண் காந்திபிலிபிட் – உத்தரப் பிரதேச மாநிலத்தின் இந்திய-நேபாள எல்லையில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதி. இங்கே இந்திரா காந்தியின் மருமகளும், சஞ்சய் காந்தியின் மனைவியுமான மேனகா காந்தி 1996-ஆம் வருடத்திலிருந்து தொடர்ந்து வெற்றிபெற்று பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். ஆரம்ப காலத்தில் சுயேச்சையாக இருந்து பின்னர் பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்து மத்திய அமைச்சராகவும் இருந்தவர். வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் தன் மகனான வருண் காந்தியை, தான் இத்தனை வருடங்களாகக் கட்டிக் காத்து வந்த பிலிபிட் தொகுதியில் தன் கட்சியின் அனுமதியுடன் வேட்பாளராக நியமித்துள்ளார்.

வருண் காந்தி, பட்டம் படித்தவர், மேற்படிப்புக்குச் சென்றவர்; நன்றாகக் கவிதையும், உரைநடையும் எழுத வல்லவர்; ஓரளவு திறமையான பேச்சாளரும் கூட. இருபத்து ஒன்பது வயதேயான இளைஞர். குழந்தைப் பருவத்திலேயே தந்தையான சஞ்சய் காந்தியைப் பறிகொடுத்தவர் ஆதலால், இவர் வளரும்போது, நேரு குடும்பத்திற்கே உரியதான, போலி மதச்சார்பின்மையும், ஹிந்து வெறுப்பும், வெளிநாட்டு மோகமும், இவரிடம் ஒட்டவில்லை. இவரது தாயார் மேனகா காந்தி சீக்கிய வம்சாவளியில் வந்த காரணத்தால் இவரை வீரம் உள்ளவராகவும், தைரியம் மிக்கவராகவும் வளர்த்தார் என்றே சொல்ல வேண்டும்.

வருண் காந்தி, தான் பிலிபிட் தொகுதி வேட்பாளர் என்பது உறுதியானவுடன், தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அந்தத் தொகுதி ஹிந்துக்களும், முஸ்லீம்களும் பெரும்பான்மையாகக் கொண்ட தொகுதி. நேபாள எல்லையில் இருப்பதால் இஸ்லாமியத் தீவிரவாதிகள் எல்லை தாண்டி வந்து நம் நாட்டிற்குள் புக வசதியாக இருக்கின்ற ஒரு தொகுதி. அவ்வாறு நம் எல்லைக்குள் வருகின்ற தீவிரவாதிகளுக்கு சில உள்ளூர் மதவாதிகள் இடமும் கொடுத்து உதவியும் செய்து வருகின்றனர். இதனால் அடிக்கடி இத்தொகுதியில் பசு வதை, ஹிந்துப் பெண்கள் கடத்தல் மற்றும் கற்பழிப்பு, ஹிந்துக்கள் வீட்டில் கொள்ளை போன்ற பயங்கர சம்பவங்கள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. ஹிந்துக்கள் எப்போதும் ஒரு பயத்திலேயே உயிர் வாழவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப் பட்டுள்ளனர். (இந்த உண்மைகளை எழுத்தாளரும், பத்திரிகையாளருமான திரு தருண் விஜய் சமீபத்தில் எழுதிய ஒரு கட்டுரையில் தெளிவு படுத்தியுள்ளார்). உத்திரப் பிரதேசத்தை ஆண்டுவரும் முலாயம் (5 ஆண்டுகள்) மற்றும் மாயாவதி (2 ஆண்டுகள்) ஆகியோரின் போலி-மதச்சார்பின்மை அரசுகள் இப்பிரச்சனையைக் கண்டு கொள்ளவே இல்லை.

தொகுதியில் ஹிந்துக்களின் நிலையைக் கண்டு கொதித்துப்போன வருண் காந்தி, தன் கட்சித் தொண்டர்களின் கூட்டத்தில், “ஹிந்துக்களுக்குத் துரோகம் இழைப்பவர் எவராயிருந்தாலும் அவர்களை அழிப்பேன். எவரேனும் ஹிந்துக்கள் மீது கை வைத்தால் அவர் கையை வெட்டுவேன். பாகிஸ்தான் தீவிரவாதிகளையும், அவர்களுக்கு உதவும் நபர்களையும், அவர்கள் ஹிந்துக்களாக இருந்தால் கூட, பகவத் கீதையில் சொன்னபடி அவர்களை அழிக்கத் தயங்க மாட்டேன்” என்று உணர்ச்சி மேலிட்டு முழங்கியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியது.

அந்த வீடியோவில் இருப்பது தன் குரலல்ல என்று வருண் கூறியுள்ளார்.

தன் பேச்சில் அவர் முஸ்லீம்கள் என்று ஒரு சமுதாயத்தைக் குறிப்பிட்டுச் சொன்னதாகவோ அல்லது அவர்களைத் தரக்குறைவாகப் பேசியதாகவோ தெரியவில்லை. ஆனால் அப்படிப் பேசியதாக நாடெங்கும் உள்ள பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகள் செய்திகள் பரப்பின. மத நல்லிணக்கத்திற்கு எதிராக, இரு மதத்தினரிடையே பகைமையை வளர்க்க, நாட்டின் அமைதியைக் கெடுக்கவேண்டி அவர் வேண்டுமென்றே பேசியதாக இவை விடாமல் கூறி வருகின்றன. போலி மதச்சார்பின்மை பேசி, எப்பொழுதும் ஹிந்துக்களுக்கு எதிராகவே கருத்துக்களைக் கூறிவரும் ஊடகங்களின் விஷமப் பிரச்சாரத்துக்கு மதிப்பளித்து, தேர்தல் ஆணையம், ‘இந்திய தண்டனைச் சட்டம்’ (IPC) 153A பிரிவின் கீழும். ‘மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்’ (Representation of People Act) 125 பிரிவின் கீழும் வருண் காந்தி மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்திரப் பிரதேச தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு உத்தரவு அளித்தது. அதன்படி அவர் காவல்துறைக்குப் புகார் அளிக்க, உத்திரப் பிரதேசக் காவல் துறையும் முதல் தகவல் அறிக்கை தயார் செய்தது.

இங்கே நாம் இரண்டு முக்கியமான விஷயங்களைக் கவனிக்க வேண்டும். ஒன்று, ஊடகங்களின் விஷ(ம)ப் பிரச்சாரம். இரண்டாவது, தேர்தல் ஆணையத்தின் அத்துமீறல்.

முதலாவதாக, பல ஊடகங்கள் நேரு குடும்பத்தின் அடிவருடிகளாக இயங்குவது நமக்குப் புதிதல்ல. இத்தாலி நாட்டைச் சேர்ந்த சோனியாவை நேரு குடும்பத்தில் வாழ்க்கைப்பட்ட ஒரே காரணத்துக்காக பாரதப் பிரதமராக்க வேண்டிப் படாத பாடுபட்ட ஊடகங்கள், இந்திய சட்டப்படி அது இயலாது என்று தெரிந்தவுடன், இந்திய மற்றும் இத்தாலி ஆகிய இரண்டு தேசத்துக் குடியுரிமையும் கொண்டுள்ள பிரியங்கா மற்றும் ராகுல் ஆகியோரைப் பிரதமராக்கத் துடித்தன. பிரியங்காவும் தனக்கு ஆர்வமில்லை என்று சொல்லி விட்டதால், கடந்த ஐந்து ஆண்டுகளாக வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ராகுல் காந்தியை மக்கள் முன்னால் நிறுத்த அனைத்து முயற்சியும் எடுத்து வருகின்றன. உருப்படியான கல்வி அறிவு, நாட்டு நடப்புகளை கவனித்து அவற்றை ஆராய்ந்து பார்க்கும் திறன், பேச்சுத் திறன், எனப் பல தேவையான தகுதிகள் இல்லாததால் ராகுல் காந்தியால் மக்கள் மனதில் இடம் பிடிக்க இயலவில்லை.

அவரை முன்நிறுத்திப் பிரச்சாரம் செய்த எந்த மாநிலத் தேர்தலிலும் காங்கரஸ் கட்சியினால் வெற்றி பெற முடியவில்லை. இருந்தாலும், “இந்தியாவைக் கண்டுபிடித்தல்” (Discovering India) என்று அவர் நாடகத் தன்மையுடன் கூடிய ஒரு பிரயாணம் மேற்கொண்ட போது, அதன் மூலம் மக்கள் மனதில் அவர் இடம் பிடிக்க ஏதுவாக, அவர் தலித் மக்களுடன் ஒரு நாள் இரவு குடிசையில் தங்கியதையும், ஒரு நாள் மதிய உணவு அருந்தியதையும், தலித் குழந்தைகளுடன் ஒரே ஒரு நாள் விளையாடியதையும், பெரிதுபடுத்திக் காண்பித்து, அவற்றைப் பற்றிக் கட்டுரைகள் எழுதி மக்களிடையே ராகுல் காந்தியை “இந்தியாவின் இளவரசன்” என்பதான ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்த முயன்றன ஊடகங்கள். இந்த முயற்சியிலும் தோற்றுப்போயின.

பின்னர் அவர் தன்னுடைய செயலர்கள் எழுதிக் கொடுத்த பேச்சைப் பாராளுமன்றத்தில் தட்டுத் தடவிப் படித்ததை ஒரு மாபெரும் சொற்பொழிவாகக் காட்ட முயற்சித்தன. அதிலும் அவை வெற்றி பெற முடியவில்லை. இந்த ஊடகங்கள் எந்த அளவுக்குத் தரம் தாழ்ந்து போயிருக்கின்றன என்றால், ராகுல் காந்தி காலையில் கண் விழிப்பதையும், பல் தேய்ப்பதையும், குளியலறை போவதையும் தான் முக்கியச் செய்தியாக (breaking news) போடுவதில்லை. மற்றபடி அவர் எது செய்தாலும் அது முக்கியச் செய்திதான்!

இவ்வாறு ராகுல் காந்தியை இந்திய மக்களின் மீது பிரதமராகத் திணிக்க ஊடகங்களும், போலி மதச்சார்பின்மை வாதிகளும் முயற்சி செய்யும் வேளையில், மேனகா காந்தியின் மைந்தர் வருண் காந்தி ஹிந்துக்களின் பிரதிநிதியாகவும், பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய வேட்பாளராகவும், தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்குவதை அவர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. சொல்லப் போனால் நேரு குடும்பத்திலிருந்து ஓர் இளைஞர் இந்த தேசத்தின் உண்மையான பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும், மத உணர்வுகளையும் புரிந்து கொண்டு அவற்றைக் காக்கும் பொருட்டு அரசியலில் இறங்குவதை அவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. வருண் காந்தி ராகுல் காந்தியை அரசியல் களத்தில் எளிதில் தோற்கடித்து விடுவாரோ என்கிற அச்சம் வெளிப்படையாகவே தெரிகிறது. கடந்த இரண்டு வாரங்களாக ஊடகங்கள் வருண் காந்தி மீது சேற்றை வாரி இறைக்க முயற்சி செய்து வருவதன் காரணம் இதுதான்.

பிலிபிட் தொகுதியின் அதிகாரபூர்வ வேட்பாளராக வருண் காந்தி தேர்தல் ஆணையத்தினால் அங்கீகாரம் செய்யப்படாத நிலையில், மேலும் தன்னுடைய வேட்பு மனுவை அவர் இன்னும் தாக்கல் செய்யாத நிலையில், தேர்தல் ஆணையம் அவர்மீது நடவடிக்கை எடுத்திருப்பது சட்டத்திற்குப் புறம்பானது என்றும் அது தன் எல்லையை மீறி நடந்துகொண்டுள்ளதாகவும் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களே தெளிவு படுத்தியுள்ளார்கள். காவல்துறைக்கு மட்டுமே வருண் காந்தி மீது நடவடிக்கை எடுக்க தற்போது அதிகாரம் இருக்கின்ற நிலையில், வருண் காந்தி வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, காவல்துறையின் அறிக்கையின் படி தேர்தல் ஆணையம் வேட்புமனுவை நிராகரித்திருக்கலாம். அல்லது தேவையான நடவடிக்கைகளை அப்போது எடுத்திருக்கலாம்.

மேலும், வருண் காந்தி, தான் அவ்வாறு மத வெறியுடனோ, இரு மதத்தாரிடையே பகைமை ஏற்படுத்திக் கலவரம் ஏற்படும் விதமாகவோ பேசவில்லை என்றும், அந்த ஒலி/ஒளி மின்வட்டுக்கள் திருத்தம் செய்யப்பட்டவை என்றும், தனக்கு எதிராக நடந்த அரசியல் சதி என்றும் கூறியுள்ளதை தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்யவில்லை. அவர் தன் பக்கத்து நியாயங்களை எடுத்துச் சொல்ல அவருக்கு வாய்ப்பும் அளிக்கப்படவில்லை. அதோடு நில்லாமல் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்துவிட்டு, பா.ஜ.க.வுக்கு வருணை வேட்பாளராக நியமிக்க வேண்டாம் என்று அறிவுரை வழங்கியிருப்பதும் ஒரு அதீதமான செயல்பாடு என்று கருத இடமிருக்கிறது. இதுவரை இந்தியாவில் நடந்திராத விதமாகத் தேர்தல் ஆணையம் இவ்வாறு நடந்து கொண்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஏப்ரல் 20-ம் தேதி முதல் தலைமைத் தேர்தல் ஆணையராக பதவி ஏற்கப் போகும் திரு நவீன் சாவ்லா அவர்களும், மற்றொரு ஆணையர் திரு கொரேசி அவர்களும் காங்கிரஸ் கட்சிக்கு வேண்டப்பட்டவர்கள் என்பதே. தற்போது உள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் திரு கோபாலஸ்வாமி அவர்கள் திரு நவீன் சாவ்லா காங்கிரஸ் கட்சியின் சார்பாகப் பலமுறை நடந்து கொண்டதாகவும் அவரைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதியிடம் அரசியல் சாசனத்தின்படி பரிந்துரை அளித்ததை நாம் அறிவோம். மேலும், வருண் விஷயத்தில் தேர்தல் ஆணையம் அவசர கதியில் நடந்து கொள்வதைப் பார்க்கும்போது, நமக்குச் சந்தேகம் உறுதியாகிறது. அதாவது ராகுல் காந்திக்குப் போட்டியாக வருண் வந்துவிட்டால், ராகுலின் அரசியல் வாழ்வு அதோகதியாகிவிடும் என்கிற பயம் காரணமாக காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவியும், நவீன் சாவ்லா மூலமாக வருணின் அரசியல் வாழ்க்கை தொடங்கு முன்னரே முடமாக்கிவிட முயற்சி மேற்கொண்டுள்ளனர் என்பது தெளிவாகிறது. இதற்கு ஊடகங்களும் ஒத்து ஊதுகின்றன என்பதும் விளங்குகிறது.

இதனிடையே வழக்குகள் போடப்பட்டதால், தன்னுடையVarun Gandhi முன்ஜாமீன் காலாவதியாகிவிட்ட நிலையில், நம் நாட்டு சட்டத்திற்கு மதிப்பளித்து, வருண் காந்தி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அப்போது அவருடன் வந்த அவரின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மீது காவல் துறை தடியடி, மற்றும் ரப்பர் குண்டுகள் அடங்கிய துப்பாக்கிப் பிரயோகம் ஆகிய நடவடிக்கை எடுத்து ஒரு கலவரம் ஏற்பட வழிவகை செய்துள்ளது. மேலும் சம்பந்தமே இல்லாமல் வருண் மீது கொலை முயற்சி, கலவரம் ஏற்படுத்தியது, போன்ற பல பொய் வழக்குகள் போட்டுள்ளது மாயாவதி அரசு. அதோடு நிறுத்தாமல் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தையும் அவர்மீது ஏவி விட்டிருக்கிறது. நம் நாட்டுச் சட்டப்படி சரண் அடைய நீதி மன்றத்திற்குச் சென்ற ஒருவரின் மீது, அபாண்டமான குற்றச்சாட்டுகள் சொல்லிப் பொய் வழக்குகள் போடுவதன் மூலம் மாயாவதியும் பா.ஜ.க.வின் வெற்றி வாய்ப்புகளைக் கண்டு பயப்படுகின்றார் என்பது தெரிகிறது. இவருக்கும் சோனியாவுக்கும் ஒரு ரகசிய உடன்படிக்கை உள்ளதோ என்றும் சந்தேகம் எழுகிறது.

எப்பொழுதுமே இந்தியாவிற்கு எதிராக நடந்து கொள்ளும் கம்யூனிஸ்டுகளும், மற்ற போலி மதச்சார்பின்மை பேசும் கட்சிகளும் வருண் காந்தியின் அரசியல் பிரவேசத்தைக் கண்டு அச்சம் கொண்டு அவர் மீது சேற்றை வாரியிரைப்பதைப் பார்க்கும் போது, இந்த நாட்டில் பெரும்பான்மை சமுதாயமாக இருக்கும் ஹிந்துக்களின் சார்பாக யார் முன் வந்தாலும் அவர்களை மத வெறியர்களாகச் சித்தரித்து அவர்களின் அரசியல் வாழ்க்கைக்குத் தடங்கல்கள் ஏற்படுத்தும் போக்கு நன்றாகவே தெரிகிறது. அதாவது, இந்த நாட்டில் ஹிந்துக்கள் இரண்டாம் தரக் குடிமக்களாகவே இருக்க வேண்டும்; சிறுபான்மை இன மக்களுக்கு மட்டுமே சலுகைகள் வழங்கப்பட வேண்டும்; அவர்களை ஓட்டு வங்கிகளாக வைத்துக் கொண்டு, ஹிந்துக்களை ஜாதி வாரியாகப் பிரித்து, தமது சுயநல அரசியல் நாடகங்களை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்பதே இவர்களது தாரக மந்திரமாக இருக்கிறது. தங்கள் சுயலாபத்துக்காக, இந்த நாட்டின் இறையாண்மையைப் பற்றியும், பாதுகாப்பைப் பற்றியும், கலாசார சீரழிவைப் பற்றியும், பொருளாதார சீர்கேட்டைப் பற்றியும், துளியும் கவலைப் படாமல் நாட்டைக் குட்டிச் சுவராக்கும் இந்த அரசியல் வியாதிகள் இருப்பது நமக்குப் பெரும் அவமானமும் அபாயமும் ஆகும்.

சரி, விஷயத்திற்கு வருவோம். தன்னுடைய இருபத்தி ஒன்பதாவது வயதில், அரசியல் பிரவேசத்தைத் தொடங்கும் ஒரு இளைஞர், ஹிந்துக்களுக்கு ஆதரவாக களம் இறங்குவதாலும், நேரு குடும்பத்திலிருந்தே வந்து ராகுல் காந்திக்கு எதிராகக் களம் இறங்குவதாலும், ஆகிய இரண்டு காரணங்களுக்காக மட்டுமே வருண் மீது சேற்றை வாரி இறைக்கின்றன ஊடகங்களும், போலி மதச்சார்பின்மை வாதிகளும். பல அரசியல்வாதிகள் இதற்கு முன்னால் இந்துக்களுக்கு எதிராகப் பேசியபோதும், செயல்பட்ட போதும் ஏன் இவர்கள் மௌனமாக இருந்தார்கள்? தேர்தல் ஆணையம் அப்போது ஏன் வாய் மூடி இருந்தது?

உதாரணத்திற்கு, தமிழக முதல் அமைச்சரான கருணாநிதி, தன்னுடைய ஐம்பது ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில், சட்டசபையில் பொன்விழா கண்டதாகச் சொல்லிக்கொள்ளும் அரசியல் வாழ்க்கையில், 365 நாளும் ஹிந்துக்கள் மீதும், ஹிந்து கலாசாரம், ஹிந்து ஆன்மீகம், ஹிந்துக் கோவில்கள், ஹிந்து மதம், ஹிந்து பழக்க வழக்கங்கள், ஹிந்து மத நூல்கள் என்று எல்லாவற்றின் மீதும் வசை பாடியே வாழ்ந்துள்ளார்! எந்த ஊடகமாவது அவரை விமரிசித்தது உண்டா? தேர்தல் ஆணையம் அவர் மேல் நடவடிக்கை எடுத்ததுண்டா? சமீபத்தில் கூட, ராமாயணத்தையும், ராமர் பாலத்தையும், ராமரையும், அசிங்கமாகப் பேசிப் பல கோடி ஹிந்துக்கள் மனத்தைப் புண்படுத்தும் விதமாகப் பேசினாரே! தேர்தல் ஆணையம் என்ன செய்து கொண்டிருந்தது? இதுவரை, ஒரு எச்சரிக்கை அறிக்கையாவது அவருக்கு அனுப்பியதுண்டா? கருணாநிதிக்கு ஒரு சட்டம், வருண் காந்திக்கு ஒரு சட்டமா?

சோனியா தான் போகின்ற இடங்களிலெல்லாம், ஒவ்வொரு முறை பேசும்போதும் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை ஹிந்துத் தீவிரவாதிகள் என்றே சொல்லிக்கொண்டிருக்கிறார். இவை ஒரு குறிப்பிட்ட மதத்தினரைத் தாக்கும் பேச்சு இல்லையா? கடந்த குஜராத் சட்ட மன்றத் தேர்தலின் போது ஹிந்துத் தலைவர்களை பொய்யர்கள், திருடர்கள், மரணத்தின் தூதுவர்கள் என்றெல்லாம் பேசினாரே! அப்போது தேர்தல் ஆணையம் என்ன வழக்குப் போட்டது? சோனியா காந்திக்கு ஒரு சட்டம், வருண் காந்திக்கு ஒரு சட்டமா?

அதே குஜராத் தேர்தலின் போது, காங்கிரஸ் தலைவர் திக்விஜய்சிங் “குஜராத்தில் உள்ள ஹிந்துக்கள் தீவிரவாதிகள்” என்று பேசினாரே! அப்போது தேர்தல் ஆணையம் என்ன செய்தது? அவருக்கு ஒரு சட்டம், வருணுக்கு ஒரு சட்டமா?

இரண்டு வருடங்களுக்கு முன்னர் தேசிய மாநாடுக் கட்சியின் தலைவர் பாஃரூக் அப்துல்லா, பாராளுமன்றத் தாக்குதலில் தூக்கு தண்டனை வழங்கப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாதி அப்சல் குருவுக்காகப் பரிந்து பேசியபோது, “அவரைத் தூக்கிலிடுங்கள்! அதன் விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள்! இந்த நாடு பற்றி எரியும்! ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமை சீரழியும்! தண்டனை அளித்த நீதிபதிகள் கொல்லப் படுவார்கள்!” என்று பேசினாரே! அப்போது தேர்தல் ஆணையம் என்ன செய்து கொண்டிருந்தது?

தற்போது கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் மதானியுடன் கூடிக் குலாவுகின்றனர்! மதானிக்கு எதிரான தடயங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அங்கே எதிர்க்கட்சியாக இருக்கின்ற காங்கிரஸ் ஏன் வாயைப் பொத்திக் கொண்டு இருக்கிறது? ஹிந்துக்களுக்கு ஒரு சட்டம், முஸ்லீம்களுக்கு ஒரு சட்டமா? பா.ஜ.க.வுக்கு ஒரு சட்டம், கம்யூனிஸ்ட்களுக்கு ஒரு சட்டமா? மதானியை விடவா வருண் காந்தி மோசமாகப் போய்விட்டார்?

சமீபத்தில் சண்டிகார் நகரில் காங்கிரஸ் தலைவர் இம்ரான் கித்வாய் “நான் ஒரு முப்தியாக இருந்திருந்தால், பா.ஜ.க.வுக்கு முஸ்லீம்கள் ஓட்டுப் போடுவது காபிஃர்களுடன் (ஹிந்துக்களை தரக்குறைவாகச் சொல்லும் வார்த்தை – காபிஃர்) நட்பு வைத்துக் கொள்வதற்கு சமம், என்று ஒரு பஃட்வா கொடுத்திருப்பேன். நான் முப்தியாக இல்லையே என்று வருந்துகிறேன்” என்று பேசியுள்ளார். தேர்தல் ஆணையத்திடம் அவர்மீது பா.ஜ.க. புகார் கொடுத்துள்ளது. அவர் பேச்சு அடங்கிய ஒலி நாடாவையும் கொடுத்துள்ளது. ஆனால் இன்னும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏன்?

2007 ஜனவரி மாதம் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சென்னை வந்தபோது அவரை உயிருடன் திரும்ப அனுமதிக்கமாட்டோம் என்று சவால் விட்டனரே தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினர்! அப்போது தேர்தல் ஆணையம் என்ன செய்து கொண்டிருந்தது? தௌஹீத் ஜமாத் தலைவர் எஸ்.எம். பாகர் சமீபத்தில் மதுரையில் ஒரு பொதுக் கூட்டத்தில் “வருண் காந்தி தமிழகம் வந்தால் உயிருடன் திரும்ப முடியாது” என்று பேசியுள்ளார். அது “வின்” தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் பட்டதே! என்ன செய்து கொண்டிருந்தது தேர்தல் ஆணையம்? அந்தப் பேச்சுக்கள் வன்முறையைத் தூண்டும் பேச்சுகள் இல்லையா? அவர்களுக்கு ஒரு சட்டம் வருணுக்கு ஒரு சட்டமா?

இந்த மாதிரிப் பல உதாரணங்கள் சொல்லிக் கொண்டே போகலாம். இப்போது வருண் காந்தி மேல் போடப்பட்டிருக்கும் அத்தனை வழக்குகளும் மேற்சொன்ன அத்தனைத் தலைவர்கள் மேலும் போட்டிருக்க வேண்டுமே!

இவற்றையெல்லாம் பார்க்கும் போது என்ன தெரிகிறது? ஹிந்துக்களுக்கு ஆதரவாக எந்த அரசியல் கட்சியும் செயல் படக்கூடாது; ஹிந்துக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விடக்கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்கின்றன போலி மதச்சார்பின்மை பேசும் ஊடகங்களும், அரசியல் கட்சிகளும். இவ்வுண்மையை ஹிந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த தீய சக்திகளை இந்துக்கள் நிராகரிக்க வேண்டும். ஹிந்துக்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை உணர்ந்து செயல் படவேண்டும்.

27 Replies to “வருண் வருகையும் சோனியா கலக்கமும்”

 1. நல்ல கட்டுரை. இந்தியாவில் திம்மித்துவம் எத்தனை ஆதிக்கமாய் இருக்கிறது என்பது இப்போது எல்லோருக்கும் வெட்டவெளிச்சமாய் ஆகிக்கொண்டிருக்கிறது. இந்துத்துவா என்பதை முழுசாய் விளங்கிக்கொள்ளாதவர்கள் கூட இப்போதெல்லாம் இந்துக்கள் அவமானப்படுத்தப்பட்டு, ஒடுக்கப்படுவதை நிதர்சனமாய் பார்க்கிறார்கள், உணர்கிறார்கள்.

  ராமசேனே முதாலிக்கிற்கு ரோசாப்பூ ஜட்டி அனுப்பும் அருவருப்பான போராட்டம் ஊடகங்களால் பெரிசாய் வளர்க்கப்பட்டது. “நடத்தைகெட்ட பெண்கள் சங்கம்” நடத்தி இந்த ஊடகங்கள் இதை ஒரு மாசம் முதல்பக்க செய்தியாய் போட்டு இந்து வெறியர்கள் என்றே சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால், அதன் பின்னர் நடந்த முஸ்லிம்களின் அராஜகங்களையும், மதமாற்றி கட்டாயத்திருமணம் முதலானவைகளை இந்த ஊடகங்கள் கண்டுகொள்ளவே இல்லை. இவை நடந்திருக்கிறது என்பதே பலருக்கும் தெரியாமல் மறைக்கப்படுகிறது. இதுதான் இந்தியாவின் திம்மித்துவ நிலை.

  இந்த ராமசேனே அருவருப்புப் போராட்டம் நடந்த ஒரு மாதத்தில் ஸ்டேட்ஸ்மென் பத்திரிக்கை ஆங்கில கார்டியன் பத்திரிக்கையில் வந்த ஒரு கட்டுரையை மீள்பதிவு செய்தது. அந்த கட்டுரை எல்லா மதங்களையும் ஒருசேர கண்டித்தது. குழந்தைபெற்றும் கன்னியாக இருப்பதை நான் நம்பமாட்டேன், கொலை, கொள்ளை கற்பழிப்பு நடத்தி ஒன்பது வயது குழந்தையோடு தாம்பத்தியம் நடத்தியவரை நான் இறைதூதராக ஏற்க மாட்டேன் என்றெல்லாம் எழுதியிருந்தார். ஆனால், அதில் முஸ்லிம்கள் மட்டும் கோபம் கொண்டனர். ஸ்டேட்ஸ்மென் பத்திரிக்கை அலுவலகம் தாக்கப்பட்டது. அங்குள்ளோருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டது. இதை ஒரு ஊடகமும் கண்டிக்கவில்லை. மாறாக, அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை ஊக்குவித்தது. காவல்துறை அந்த பத்திரிக்கை மீது கேஸ் போட்டது. அந்த பத்திரிக்கை தன் பதிப்பில் இந்த கட்டுரை போட்டதற்கு மன்னிப்பு கேட்டது. இனிமேல் இம்மாதிரி செய்யமாட்டோம் என்று எழுத்து உத்தரவாதம் கொடுத்தது.

  இதுதான் இன்றைய இந்தியாவின் நிலை.

  வீர் சாங்க்வி (இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையின் எடிட்டர்) என்.டி.டி.வி யில் ஒரு பேட்டியில் இதை ஒப்புக்கொண்டார். இன்று இந்தியாவின் எல்லா ஊடகங்களும் மற்றும் பெரும்பான்மை பத்திரிக்கையாளர்களும் இரட்டை வேடம் போடுகிறார்கள் என்றார் அவர். இந்துக்கள் எது செய்தாலும் ‍, ஜனநாயகம், பெண் சுதந்திரம், கருத்து சுதந்திரம் என்றெல்லாம் பேசுபவர்கள் அதை விட பெரிய அராஜகங்கள் மற்ற மதத்தினரால் இந்தியாவில் நடத்தப்பபடும்போதும், இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பைத் தகர்க்கும்போதும் கண்டுகொள்வதே இல்லை என்றார் அவர். இது எல்லா இந்துக்களாலும் புரிந்துகொள்ளப்பட வேண்டியது.

  நாலைந்து மாதம் முன்பு ஒரு சமதர்ம சமுதாய கூட்டம் இந்தியாவில் வேலூரில் தடுத்து நிறுத்தப்பட்டது, போலீஸால். ஏனென்றால் அவர்கள் வள்ளலார், ஏசு, முகம்மது முதலிய இறை நே‍சர்களின் படங்களை போட்டு அவர்களை பாராட்டி விழாவில் பேசியிருக்கிறார்கள். முகம்மதுவின் படத்தைப் போட்டார்கள் என்று அவர்கள் மீது வழக்கும், அவர்கள் மன்னிப்பும் கேட்டு அப்புறம் அந்த விழாவை நிறுத்தினார்கள். தங்கள் சமய கருத்துக்களை உலகம் முழுவதும் அனுசரிக்க வேண்டும் என்று நினைப்பதுதான் இவர்கள் மத சுதந்திரம். ஆனால், இவர்களின் புகழ்பெற்ற கலைஞர்கள் இந்து தெய்வங்களை நிர்வாணமாகவும், துர்கை சிங்கம் சம்போகம் என்றும் “கலை” நிகழ்ச்சி நடத்துவார்கள். இதுதான் இன்றைய இந்தியாவின் நிலை.

 2. இன்றைய காலை செய்தி.

  https://timesofindia.indiatimes.com/I-would-have-crushed-Varun-under-a-roller-Lalu/articleshow/4366594.cms

  “நான் இந்தியாவின் உள்துறை மந்திரியாக இருந்தால், வருண் காந்தியை ரோடு ரோலர் இயந்திரத்தால் அவனை நசுக்கி அழித்திருப்பேன். எந்த விளைவுக்கும் கவலைப்பட்டிருக்க மாட்டேன்”.

 3. கட்டுரை உண்மை நிலையைத் தெளிவாய்ச் சொல்லுகின்றது. மக்கள் புரிந்து கொண்டு செயல்படவேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திப்பதைத் தவிர வேறு வழியே இல்லை. ஆண்டவன் தான் காப்பாற்றவேண்டும் இந்த நாட்டை! :((((((

 4. லாலுவின் மீது தேர்தல் ஆணையம் நடவ‌டிக்கை எடுக்காது. இந்தியாவில் தேர்தல் ஆணையம் மட்டுமல்ல; பல்வேறு அரசு இயந்திரங்களும் இப்படித்தான் உள்ள‌ன. கோத்ராவில் ராம பக்தர்கள் உயிருடன் எரிக்கப்பட்டதை இந்த செக்யூலர் அரசியல் வியாதிகள் கண்டிக்கவில்லை. பின் நடந்த கலவரத்தில், முஸ்லிம்கள் தாக்கப்பட்டதாக இன்று வரை குரைக்கின்றன. அப்போது சில குடும்பங்கள், தற்காலிகமாக இடம் பெயர்ந்தனர் என்று நொண்டி சாக்கு கூறி, தேர்தல் ஆணையம் குஜராத்தில் தேர்தலை ஒத்திப் போட வேண்டும் என கூறியது. அதே ஆணையம், 4.50 லட்சம் பண்டிட்டுகள் விரட்டி அடிக்கப் பட்ட காஷ்மீரில் தேர்தல் நடத்தியது. அப்துல் ரஹ்மான் அந்துலே மும்பை தக்குதலில் இந்துக்களுக்கு பங்கு இருக்கலாம் என்று கூறிய போது, யாரும் கண்டிக்கவில்லை. மாறாக சிதம்பரம் அவருக்கு விளக்கம் அளித்து, புரிய வைத்தார். படெல் என்ற சிம்மம் இருந்த உள்துறை அமைச்சர் சிம்மாசனத்தில், இன்று இருப்பவர்களை பார்க்கும் போது, எங்கள் நெஞ்சு பொறுக்குதில்லையே. இனியாவது இந்துக்கள் இந்து அமைப்புகளில் சேர்ந்து போராடினால் தான் இந்த புனித பாரதத்தை மீட்க முடியம். மதானியுடன் கூட்டு சேரும் கம்யூனிஸ்டுகள் இந்துக்களை மதவாதிகள் என்று கூறுவதை இன்னும் எத்துனை காலம் தான் பொறுத்துக் கொள்ளப் போகிறோம்.

 5. அனைத்தும் நீயே என்றால் அணைத்து காப்பான் அந்த பரம்பொருள்
  அகந்தை கொண்டோரை அண்டவிடான்.
  அகந்தைதனை நீக்கி அவன் படைப்புகளிடம் அன்பு கொண்டு
  அவனிடம் பிரார்த்தனை செய்தால் அனைத்தும் சீர்ப்படும்
  சிக்கலை உண்டாக்குபவனும் அவனே
  அந்த சிக்கலையும் நீக்குபவனும் அவனே.
  நம்பிக்கையை எந்நாளும் தளரவிடாமல்
  இருப்பதொன்றே நாம் செய்யவேண்டிய வேலை.
  சோதனைகளை கண்டு அஞ்சிடாமல்
  போதனைகளை கண்டு மயங்கிடாமல்
  வாதனைகளை கண்டு வருந்திடாமல்
  இருந்தால் போதும்
  அனைத்தும் சரி செய்யப்படும் விரைவில்.

 6. I recently read in a blog that the Hindus are in a hopless state of affairs. “When rape is inevitable, better to relax and enjoy it” is one of the modern maxims and the Hindus seem to have no other alternative.

 7. /நம்பிக்கையை எந்நாளும் தளரவிடாமல்
  இருப்பதொன்றே நாம் செய்யவேண்டிய வேலை/

  திரு.பட்டாபி ஜி, கிருஷ்ண பரமாத்மா உடன் இருந்தும், அர்ஜுனனை ஏன் கீதையை கூறி, போரிட செய்தார்? பகவான் நம்மை கொண்டு தான் காரியங்களை செய்வார். பகவான் அவதாரம் எடுக்க, கலியுகம் முடிய இன்னும் 1.27 லட்சம் வருடம் உள்ளது. அதர்மத்தை ஒழிக்க அதர்மத்தை கையில் எடுப்பது தவறு இல்லை என்பதை மஹாபாரததின் பல சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன. இந்துக்களுக்கு எதிரான தீவிரவாதத்தை எதிர்கொள்ள‌ வேண்டிய இத்தருண‌த்தில், கடவுள் நம்முடன் உள்ளார் என்ற நம்பிக்கையுடன், நாம் நமது கடமையை செய்ய வேண்டாமா! இந்துக்கள் ஒன்று படுவோம்! வென்று காட்டுவோம்! பாரத் மாதா கி ஜெய்! ஜெய் ஹிந்த்!

  இன்றே நமது ஊரில் உள்ள ஏதாவது ஒரு ஹிந்து அமைப்பில் இணைவது என நான் முடிவெடுத்து விட்டேன்.

 8. மிக அருமையான கட்டுரை. நன்றி

 9. ஹிந்து அமைப்புகளில் இணைவதில் தவறொன்றுமில்லை. பெருவாரியான இந்துக்கள் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை இன்னும் உணரவில்லை. அவர்களை உணர செய்வதற்கு சூரிய மாயைகள் எப்போதும் விடுவதில்லை. இந்து முன்னேறற்றம் என்றால் உடனே பார்ப்பன ஆதிக்கம் மேலோங்கிவிடும் என்றும் அவர்கள் ஊருக்கு வெளியே அடித்து விரட்டப்படுவார்கள் என்று பயமுறுத்தப்படுவதால் அவர்களை ஒன்று சேர்ப்பது கடினமான செயல். எப்படி இந்திய சுதந்திர போராட்டத்தின் பொது 30கோடி மக்கள் இருந்தும் சில லட்சம் பேர்களே தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்து சுதந்திரத்தை பெற்று தந்தது போல் இப்போதும் 110 கோடி மக்கள் தொகை இருந்தாலும் சுயநலமற்ற, தியாகம் செய்யக்கூடிய குறைந்த மக்களால்தான் இதற்க்கு வழி காண முடியும். எந்த நாளும் அனைத்து இந்துக்களும் ஒன்று சேர்வதென்பது இயலாத காரியம். வெற்றி பெற்ற பின் ஆளுவதற்கு என்று உள்ள சுயநல பெருச்சாளிகள் மட்டும் அப்போது மட்டும் பந்தியில் தொந்தியை போட்டுக்கொண்டு முக்கி முக்கித் தின்ன மட்டும் வந்துவிடும் தற்போதுள்ள ஆட்சியாளர்களைபோல.

 10. Many many thanks for the wonderful analysis which is the need of the hour. But, how to carry this on and convey to the masses who really matter? If that is done successfully the object of this sise will be achieved.

 11. தேவையானதொரு கட்டுரை. இந்தியாவில் இந்துக்களுக்குப் பாதுகாப்பு இல்லை. மீண்டும் மீண்டும் ஒடுக்கப் படுகிறார்கள் என்பதை இந்த வருண் சம்பவம் மீண்டும் நீரூபித்துள்ளது. அன்றாடம் பிராமணர்களை இழிவாகப் பேசிவரும் கருணாநிதியை எவரும் இது வரை குண்டர் சட்டத்தில் கைது செய்யவில்லை. தஸ்லீமா நஸ்ரீனை அடித்து விரட்டியவர்களைத் தேர்தலில் நிற்காதே என்று எந்த நவீன் சாவ்லாவும் சொல்லவில்லை, கோவை குண்டுவெடிப்பில் தொடர்புடையவராகக் கருதப்பட்ட மதானியை ரோடு ரோலர் வைத்து நசுக்குவேன் என்று எந்த லாலுவும் சொன்னதில்லை. உத்திரபிரதேச மக்கள் இந்த தேர்தலிலாவது விழித்துக் கொண்டு பா.ஜ.க.வை ஜெயிக்க வைத்தால் மத்தியில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி மலரும். அவர்கள் இந்துக்களுக்கு ஏதும் சாதகம் செய்யவில்லைனாலும் கூட சேது பாலத்தை இடிப்பது போன்ற பாதகமான விஷயங்களையாவது செய்யாமல் இருப்பார்கள்.

  உங்கள் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் நின்றால் அவருக்கு ஓட்டளியுங்கள். அல்லது பா.ஜ.க. ஆதரவு பெற்ற வேட்பாளர் நின்றால் அவருக்கு ஓட்டளியுங்கள். இல்லையென்றால் தி.மு.க., கம்னியுஸ்டு தவிர்த்து இந்து மதத்தைக் கேவலமாகப் பேசாத வேட்பாளர்களில் நல்ல வேட்பாளராகத் தேர்வு செய்து ஓட்டளியுங்கள். இதுவே இப்பொழுதைக்கு நாம் செய்யக் கூடியது. இந்தத் தேர்தலிலும் தீவீரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும், அப்சல் குருவைத் தூக்கில் போட மறுக்கும், மதானியுடன் கூட்டணி வைக்கும் காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிச கும்பலுக்கு ஓட்டுப் போட்டால் இந்தியாவை கோடானுகோடி கடவுள்களால் கூடக் காப்பாற்ற முடியாது. வருண் கைது நம் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும்.

  வருத்தத்துடன்
  ச.திருமலை

 12. Every one knows that the speech was not of any hatred. Even the common public is well aware of the truth. just by repeating, these pseudo secular forces achieves nothing. On the other hand if BJP is not enthuastic in its work, surely it will loss in converting it’s public support to votes. Nothing more and nothing less.Please don’t over react for these silly things.

 13. We Hindus don’t have leader who can unite us.
  We need a leader like Shivaji to unite us.

 14. Though the media is hyping it like anything, there are a few things which the Hindus must realize. It is the need of the hour that the Hindus must unite, irrespective of their caste, creed and religious sects. Will they do it? The answer is a big NO. When we do not have unity among ourselves, what are we hoping for? We are just masses who are constantly thinking that some superhuman will come and save this country one day, but never are ready to take the responsibility. If the same sikh threw his shoes on a muslim or a sikh himself, the entire community would have gathered in one side. Hindus have become weak, physically and mentally. We are just day-dreamers, thinking that some miracle will happen and everything will be alright.

 15. There are no hindus in India to get them united. They are divided by sects,subsects,by language,and by politics and so on.
  To call the people of India as hindus is a myth.

 16. @ t.r.pattabiraman

  அன்பிற்குரிய பட்டாபிராமன்,

  உலகில் உள்ள அனைத்து பாகன் மதங்களும் பெரும்பாலும் அழிந்துபோய்விட்டன. இந்தியாவில் மட்டும்தான் பாகன் மதமான ஹிந்து தர்மம் உயிர்பிழைத்து வருகிறது. காரணம்: இன்னமும் அந்த தர்மத்தைப் பாதுகாக்கத் தேவையான தலைவர்கள் இருக்கிறார்கள்.

  இன்னொன்று. நாம் ஏன் வேறு யாரோ ஒரு தலைவருக்காகக் காத்திருக்க வேண்டும்? பொறுப்பை உணர்ந்து செயல்படும் யாரும் தலைவர்தான். நீங்களும், நானும்தான் ஹிந்து தர்மத்தின் தலைவர்கள்.

  போர் தொடர்கிறது.

 17. ஒரு திருத்தம் , இந்து மதம் பாகன் மதம் அல்ல , நீங்கள் குறிப்பிடும் பொழுது ‘கிறித்துவ மற்றும் இஸ்லாமிய மதங்களால் பாகன் மதம் என்று வருணிக்கப்படுகின்ற இந்து மதம்’ என்று குறிப்பிட்டால் நன்றாக இருக்கும், ( எனக்கு தெரிந்து இவர்களின் மூல மதமான யூத மதத்தினர் இந்து மதத்தை இழிவுபடுத்தவோ, அழிக்கவோ யோசித்ததில்லை எனவே தான் அபிராகாமிய மதங்கள் என்று சொல்லாமல் கிறித்துவம் மற்றும் இஸ்லாம் என்று சொல்கிறேன்)

 18. Yes Ganapthi,

  You are absolutely right. We are the leaders and also Soldiers.

  I am doing my best. I am also spreading the awareness among my friends. Let us we work together to spread our dhrama to the world … to our next generation…. I am sending our website links to my friends. I am also also converting the web pages in PDF format and sending them.

 19. Dear baskasura,

  Time has come already. Please dont get tired; Let us we work together and make the changes.

  Siru thuli peru vellem

  I have already started… We no need to fight with anybody. Atleast we need to spread the awareness….Hope you will agree with me. i will be very happy if you reply for my message.

 20. மறுமொழியிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

  வருண் காந்தியின் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைப் பாய்ச்சியது அநியாயச் செயல். மாயாவதி அரசு மனம் மாறுவதாகத் தெரியவில்லை. வருண் காந்தியை விட அதிகமாகப் பல அரசியல்வாதிகள் பேசிவிட்டனர். ஆனால் இன்னும் யார் மீதும் எந்த நடவடிக்கையும் (சிலருக்கு நோடீஸ் அனுப்பியதைத் தவிர) எடுத்த மாதிரித் தெரியவில்லை. இந்த உண்மை ஒன்றே போதும் வருண் உச்ச நீதி மன்றத்தில் ஜாமீன் வாங்க. பார்ப்போம் என்ன நடக்கின்றது என்று.

 21. பெருமதிப்பிற்குரிய அப்துல் கலாம் அவர்கள் செய்த பல நிர்வாகத் தவறுகளுள் ஒன்று நவீன் சாவ்லாவைப் பற்றிய நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டை வைத்து மேல் நடவடிக்கை எடுக்காமல் அதை அசட்டுத்தனமாக காங்கிரஸ் அரசிடமே சமர்ப்பித்து ரப்பர் ஸ்டாம்ப் என நிரூபணம் செய்ததுதான். சாதாரண மனிதனுக்குக் கூட நன்றாகத் தெரியும், குற்றச் சாட்டே காங்கிரஸுக்கு ஜால்ரா அடிப்பதுதான் என்று. அப்படி இருக்கையில் உச்ச நீதிமன்றதுக்கோ அல்லது தேர்தல் ஆணையத்துக்கோ நடவடிக்கை எடுக்கச் சொல்லாமல் கோமாளித்தனம் செய்துவிட்டார்.

 22. ஜனாதிபதி மக்களால் தேர்ந்தெடுக்க படுவதில்லை
  ஆளும் கட்சியின் உறுப்பினர்களால் பதவியில் அமரவைக்கபடுபவர் அவர்களை மீறி அவர் ஒன்றும் செய்ய முடியாது
  ஆனால் அவர் பதவியில் இல்லாவிட்டாலும் என்று மக்கள் மனம் கவர்ந்த மாமனிதர் என்பதை யாரும் மறுக்கமுடியாது
  தவறு செய்தவர் யாராக இருந்தாலும் அவர்களை அறக்கடவுள் பார்த்துக்கொண்டே இருக்கிறது.
  அது அவர்களை சரியான நேரத்தில் அவர்களை தண்டித்து கதையையும் முடித்துவிடும்.

 23. We are all lamenting without doing anything usefully. Unless we (Hindus) unite and act with single minded purpose we shall be losing the battle.

 24. பேசுபவர்கள் பேசிகொண்டிருக்கட்டும்
  அவர்கள் பேச்சு காற்றோடு போய்விடும்
  இன்று இந்தியாவின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும்
  நல்லவர்கள்,வல்லவர்கள், இறைஅருள் பெற்றவர்கள், ஆர்பாட்டமில்லாமல்,விளம்பரமில்லாமல்
  தர்மத்தினை அடிப்படையாக கொண்டு
  அன்பை அடிப்படையாக கொண்டு
  சுயநல சிந்தனைகள் இல்லாமல்.தியாக உணர்வோடும்,
  அர்பணிப்பு உணர்வோடும் அல்லல்படுபவர்களை கை தூக்கிவிட்டுகொண்டும்,
  நம்பிக்கையற்றவர்களுக்கு வாழ்வில் நம்பிக்கை ஏற்படுத்திக்கொண்டும்
  சேவை புரிந்து வருகிறார்கள்
  அவர்களால்தான் இந்த மண்ணும் உலகமும் இன்னும் நிலைபெற்றுவருகிறது.
  ஊடகங்களில் மிகைபடுத்தப்படும் நரிகளின் ஊளையிடும் கூச்சல்களினால்
  ஒன்றும் நம் பாரத நாட்டின் வேரை எந்த கொம்பனாலும் அசைக்கமுடியாது
  இஸ்லாம் மன்னர்கள் ஆட்சி புரிந்த காலத்தில்தான்,குமரகுருபரரும், ராகவேந்திர சுவாமிகளும் , சிவாஜியும் இன்னும் பல மகான்கள் தோன்றி .இந்து தர்மத்தை காத்தனர்
  வெள்ளையர்களின் மோகத்தில் மூழ்கிய மக்களை காத்தது ராமக்ரிஷ்ணபரமஹம்சரும் விவேகானந்தரும், பாரதியும், மகாத்மா காந்தியும், வள்ளலாரும் போன்றவர்கள்தான். அவர்கள் ஒன்றும் கூட்டத்தை சேர்த்துக்கொண்டு போரிட வில்லை. தங்கள் வாழ்வை தியாகம் செய்துதான் ஆர்பாட்டமில்லாமல் மக்களிடையே சென்று எழுச்சியை உண்டு பண்ணி தர்மத்தை காத்தார்கள். …..
  அவநம்பிக்கையை விட்டுவிட்டு அவரவர் இருக்கும் இடத்தில் ஏதாவது நல்லதொரு இயக்கத்தில் இணைந்துகொண்டு நம்மால் முடிந்த பங்கை ஆற்றுவதுதான் நாம் செய்ய வேண்டியது.
  அதை விடுத்து எல்லோரும் சேர்ந்துதான் பணியை தொடங்குவோம் என்று அடம் பிடித்தால் வடம் பிடிப்பதற்கு தேர் இருக்காது. .

 25. உண்மைய சொன்னிங்க .எப்போது நம் மக்களுக்கு புரிய போகுதோ தெரியல .இந்த கட்டுரை எழுதியதுற்கு மிக்க நன்றி …..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *