தாமரை சங்கமம்: பொன்.ராதாகிருஷ்ணனுடன் ஒரு நேர்காணல்

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் 5-வது மாநில மாநாடு மதுரையில் மே 10, 11 தேதிகளில் நடைபெறவுள்ளது.

தாமரை சங்கமம் என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த மாநாட்டுக்காக மிக பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக ஆட்சி என்பதை தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் உணர்த்தும் வகையில் டில்லி செங்கோட்டை, தமிழகத்தின் தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டை ஆகியவற்றின் மாதிரி முகப்புடன் மாநாட்டு அரங்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 28, 29 தேதிகளில் நடைபெறுவதாக இருந்த தாமரைச் சங்கமம் மதுரையில் சில நாள்கள் இடைவிடாது பெய்த கோடை மழையின் காரணமாக மே 10, 11-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மாநாட்டு வேலைகளில் மிகவும் பிசியாக இருந்த மாநிலத் தலைவர் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனிடம் தமிழ்ஹிந்து ஆசிரியர் குழு கேட்டுக் கொண்டதன் பேரில் சில நிமிடங்கள் பேசினேன். தமிழ்ஹிந்து குறித்து ஏற்கெனவே நன்கு அறிந்திருந்த அவர் மகிழ்ச்சியுடன் பேச ஆரம்பித்தார்.

2014 மே மாதம் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கு சில மாதங்களுக்கு முன்பு மாநாடு நடந்தால் பாஜகவின் பலத்தையும் காட்டலாம். தொண்டர்களையும் உற்சாகப்படுத்தலாம். இப்போது இவ்வளவு மாநாடு நடத்த வேண்டிய அவசியம் என்ன?

பாஜகவின் பலத்தை மற்றவர்களுக்கு காட்டுவதற்கான மாநாடு அல்ல இது. மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற தன்னம்பிக்கையை ஒவ்வொரு தொண்டனின் மனதிலும் விதைப்பதற்காகவே இந்த மாநாடு. ஆனாலும் தமிழகத்தில் பாஜக எங்கே இருக்கிறது என்று கேட்பவர்களுக்கு பதிலடியாகவும் இந்த மாநாடு அமையும்.

மத்தியில் ஆட்சி சரி. தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்போம் என்கிறீர்கள். 234 எம்.எல்.ஏ.க்களை கொண்ட சட்டப்பேரவையில் இப்போது பாஜகவுக்கு ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லாத நிலையில் ஆட்சி அதிகாரம் சாத்தியம் தானா?

1998-ல் பாஜக மத்தியில் ஆட்சி அமைக்கும் என்று 1996-ல் கூறியபோது யாரும் நம்பவில்லை. ஆனால், 1998-லிருந்து அடுத்த 6 ஆண்டுகளுக்கு பாஜக ஆட்சிதான் செங்கோட்டையில் இருந்தது. எதுவும் சாத்தியமில்லை என்று கூறிவிட முடியாது.  இந்த மாநாட்டில் சுமார் 5 லட்சம் பாஜக தொண்டர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி அமைப்போம் என்ற உறுதிமொழியை எடு்க்க இருக்கின்றனர். எனவே, இது கூடி களையும் கூட்டமாக இருக்காது. உறுதிமொழி மாநாடு இது.

மாநாட்டுக்கு 5 லட்சம் பேர் வர வைக்க வேண்டுமானால் அதற்காக பல மாதங்களாக திட்டமிட்டிருக்க வேண்டுமே?

ஆம். மாநாட்டை முன்னிட்டு கடந்த சில மாதங்களாக சிறப்பு உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தை நடத்தினோம்.  அதன்  மூலம் 6 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். இவர்களோடு ஏற்கெனவே உள்ள 7 லட்சம் உறுப்பினர்களையும் சேர்த்தால் மாநாட்டுக்கு 5 லட்சம் பேர் வருவது உறுதி.

மாநாட்டின் மூலம் மக்களுக்கு என்ன செய்தி சொல்லப் போகிறீர்கள்?

மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சிக்கு வர வேண்டியதன் காரணங்களை மக்களுக்கு சொல்வோம். பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆட்சி நடைபெறும் குஜராத், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ஹிமாச்சல பிரதேசம், கோவா, ஜார்க்கண்ட், கர்நாடகம், பிகார், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் அடங்கிய மிகப்பெரிய கண்காட்சி மாநாட்டு அரங்கில் வைக்கப்பட்டுள்ளது. அதுபோன்ற சாதனைகள் தமிழகத்திலும், தேசிய அளவிலும் நிகழ்த்தப்பட பாஜகவை ஆதரியுங்கள் என கேட்போம்.

தமிழகத்தில் அதிமுக, திமுக இரண்டு திராவிடக் கட்சிகளையும் மீறி காங்கிரசால் வளர முடியவில்லை. மூன்றாவது இடத்தை தேமுதிக பிடித்துள்ளது.  இதுதவிர பாமக, மதிமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் உள்ளன. இதையெல்லாம் மீறி பாஜக வளர்வது சாத்தியம்தானா?

நான் முன்பே கூறியபடி முடியாதது என்று எதுவும் இல்லை. தமிழகத்தில் தனியொரு தலைவரை மையப்படுத்தி தான் அரசியல் சுழல்கிறது. கருணாநிதி, ஜெயலலிதா, வைகோ, ராமதாஸ், விஜயகாந்த் என்ற தனி மனிதர்களை நம்பிதான் கட்சிகள் உள்ளன. அந்த கட்சிகளை நம்பிதான் மக்கள் வாக்களிக்கின்றனர். உதாரணமாக நான் கடந்த 40 ஆண்டுகளாக பொதுவாழ்க்கையில் இருக்கிறேன். ஆனால் என்னைவிட சில ஆண்டுகளுக்கு முன்பு அரசியலில் நுழைந்த விஜயகாந்த் பிரபலமாகி இருக்கிறார். காரணம் சினிமா கவர்ச்சி. ஆனால், இந்த தனி மனித மற்றும் சினிமா கவர்ச்சியை எல்லாம் மீறி பாஜக வளரும். ஏனெனில் பாஜக கொள்கையை மட்டுமே நம்பியுள்ளது. அந்தக் கொள்கைக்கு அழிவில்லை.

என்ன தான் முயன்றாலும் தேர்தல் என்று வந்துவிட்டால் பாஜக தனிமைப் படுத்தப் படுகிறதே?

அப்படி கூறுவதை நான் ஏற்க மாட்டேன். தமிழகத்தில் அதிமுக, திமுக, மதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் என அனைத்துக் கட்சிகளும் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்தித்தவர்கள்தான். இன்று குஜராத் கலவரத்தை பற்றி பேசுகிறார்கள். ஆனால், அந்த நேரத்தில் திமுக பாஜக கூட்டணியில் இருந்தது என்பதை மறக்க வேண்டாம்.  பாஜக பலமாக இருந்தால் அனைவரும் தேடி வருவார்கள். அதனால்தான் கூட்டணி அமைப்பதைவிட கட்சியைப் பலப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம்.

முஸ்லிம, கிறிஸ்வதவர்களுக்கு எதிரான கட்சி பாஜக என்று தொடர்ந்து பிரசாரம் செய்யப்படுகிறது. இது பாஜகவுக்கு பலவீனம் தானே? ஏனெனில் பல தொகுதிகளில் வெற்றியை தீர்மானிப்பது சிறுபான்மை மதத்தினரின் வாக்குகள் தானே?

முஸ்லிம், கிறிஸ்தவர்களை பாஜகவின் எதிரிகளாக தொடர்ந்து சித்தரித்து வருகின்றனர். ஆனால், அது உண்மையல்ல என்பதை பாஜகவை நெருங்கி வந்து பார்க்கும் சிறுபான்மையினர் புரிந்து கொள்கிறார்கள். அதனால் இப்போது தமிழகத்திலும் பெரும் எண்ணிக்கையில் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் பாஜகவில் இணைந்து வருகின்றனர்.

சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்படுவதுபோல இந்து ஏழை மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என்பதற்காக மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினீர்கள். நாகர்கோயிலிலும், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் எதிரிலும், ஒரு லட்சம் பேர் திரண்ட ஆர்ப்பாட்டத்தை நடத்தினீர்கள். ஆனாலும் அக்கோரிக்கை மத்திய, மாநில அரசுகளால் கண்டுகொள்ளப் படவில்லையே?

ஏழை இந்துக்களுக்கு போலி மதச்சார்பின்மை பேசும் அரசுகளிடம் நீதி கிடைக்காது என்று எங்களுக்குத் தெரியும். ஆனாலும் மக்களுக்காக செய்ய வேண்டிய கடமையை செய்தோம். இதுபோன்ற கோரிக்கைகளை நிறைவேற்றவே பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என்கிறோம். பாஜக ஆட்சிக்கு வந்தால் மத பேதமின்றி அனைவருக்கும் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

நீங்கள் பாஜக தலைவராகி இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டது. கட்சி வளர்ச்சிக்காக இந்த காலகட்டத்தில் நீங்கள் செய்தது என்ன?

திறமையான தொண்டர்களை உருவாக்க மாவட்ட, கோட்ட, மாநில அளவில் பயிற்சி முகாம்கள் – நீங்களே குறிப்பிட்டதுபோல ஏழை இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவி வழங்கக்கோரி நடைபெற்ற போராட்ட்ங்கள் – தாமரை யாத்திரை – மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து தொடர் போராட்டங்கள் – இவற்றை நடத்தினோம். நடத்தி வருகிறோம். இவை அனைத்தும் கட்சி வளர்ச்சிப் பணிகளே.

மாநாட்டுப் பணிகள் காரணமாக மேலும் அதிக நேரம் பேச முடியாததால் அவரிடம் இருந்து விடைபெற்றோம். மாநாட்டு்க்கு தமிழ்ஹிந்து ஆசிரியர் குழுவினர், ஆதரவாளர்கள், வாசகர்கள் அனைவரும் கண்டிப்பாக வர வேண்டும் என்று அன்புடன் அழைத்தார்.

பாஜக மாநில மாநாடு

மே 10, 11 வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை

இடம்: விரகனூர் சுற்றுச்சாலை, மதுரை

பங்கேற்பு: எல்.கே. அத்வானி, நிதின் கட்கரி, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி, வெங்கய்ய நாயுடு, பொன். ராதாகிருஷ்ணன், இல. கணேசன், எச். ராஜா உள்ளிட்டோர்.

இரு நாள்களும் தேசியம் வளர்க்க அன்னை மீனாட்சி ஆளும் மதுரையில் கூடுவோம்.

27 Replies to “தாமரை சங்கமம்: பொன்.ராதாகிருஷ்ணனுடன் ஒரு நேர்காணல்”

 1. சேற்றில் தான் தாமரை மலரும். அதே சேற்றில் தாமரை மாநாடும் வரும் வாழ்த்துக்கள்

 2. பாஜக ஒரு வித்தியாசமான கட்சி என்ற மாயை விலகி 16 ஆண்டுகள் ஆகி விட்டன. 16 ஆண்டுகள் என்று நான் சொல்வது 1996 லிருந்து 13 நாட்கள் ஆட்சி செய்தார்களே, அப்போதிருந்து.

  பதவிக்காக, கூட்டணிக் கட்சிகளுடன் சமரசம் செய்து, நாட்டு நலனை காக்க மறந்து விட்டனர். காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளிடையே அந்நிய முதலீடு போன்ற கொள்கைகள் பலவற்றிலும் இரு கட்சிகளிடையே எந்த வித்தியாசமும் இல்லை.

  2004 விட 2009ல் பெருத்த தோல்வி அடைந்தனர்.

  இன்று பிஜேபி தலைவர்கள் நிரம்பிய கட்சியாக உள்ளது. 2014ல், ஆட்சியைப் பிடிப்பது குதிரைக் கொம்புதான்.

  UPA மீண்டும் ஜெயிப்பதற்கு பிஜேபியை மட்டும் நம்பினால் போதும்.

 3. வாழ்த்துகள் பாஜகவிற்கு.. பாஜக அபிமானி என்ற முறையில் வரமுடியவில்லை என்றாலும் எமது ஆதரவும் பிரார்த்தனைகளும்..

 4. Though I am skeptical, I wish the maanadu all success.

  Hope BJP comes to power some time in the future in tamilnadu.

  All the best.

 5. Again Again writing like this creating boring to me.what else to do. Somebody brings this suggestion to BJP leaders.

  Donot go for muslim and chirstian voters. They are very smart than hindu voters. They made to believe parties that parties won because of them. But reality is far away from fact.

  Normally, hindu voters donot have awareness .They voted for their caste or parties. This is normal perception. only ,problem come to their reservation in government , they are raised againt secular parties.Now ,chance came to BJP. All secular parties give promise reservation for miniorities in Government. It certainly make some impanct on hindu voters.
  If you try for minority votes, it is waste of time. Instead , goto Dailis except UP and project and raise their image. Fighting inside party also great weakness. Because this issue. they lost election in UP.
  Now, time for very crucial election for 2014 general elections. unit all party leaders and try hard. certainly win comes to BJP.

 6. வெளியுறவுக்கொள்கை, அந்நிய முதலீடு போன்ற முக்கிய கொள்கைகளில் காங்கிரஸுக்கும் பா.ஜ.க.-வுக்கும் ஒன்றும் வேறுபாடு இல்லை என்ற நாகராஜன் அவர்களது கருத்தோடு ஒத்துப்போகிறேன்.

 7. “நான் கடந்த 40 ஆண்டுகளாக பொதுவாழ்க்கையில் இருக்கிறேன். ஆனால் என்னைவிட சில ஆண்டுகளுக்கு முன்பு அரசியலில் நுழைந்த விஜயகாந்த் பிரபலமாகி இருக்கிறார். காரணம் சினிமா கவர்ச்சி”

  தமிழகத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்த கேவலமான சூழலின்மீதான திரு.ராதாகிருஷ்ணன் அவர்களது ஆதங்கத்தையும் பகிர்ந்துகொள்கிறேன்.

 8. ஒரு சில மறுமொழியாளர்கள் சொல்லியிருப்பது போல், அந்நிய முதலீடு, வெளியுறவுக் கொள்கை ஆகிய இரண்டிலும் பா.ஜ.க. வித்தியாசமானது என்று சொல்லித்தான் தேர்தல்களைச் சந்திக்கிறதா? இக்கொள்கைகளுக்காகத்தான் இஸ்லாமியர், கிறிஸ்துவர் போன்றோர் அக்கட்சிக்கு அன்னியமாகிறார்கள் என்று சொல்ல முடியுமா?

  மக்களை மத ரீதியாகப் பிளந்து, பிரித்தே வைக்கும், இந்நாட்டில் நிலவிவரும், படு பாதகச் செயலை எதிர்த்து அழிப்பதன் மூலம் எல்லா மதத்தவரும் இந்நாட்டின் சம உரிமையுள்ள பிள்ளைகள் என்பதை நிலை நாட்டுவது அல்லவா அதன் நோக்கம்?

  ஒரு மனிதன் பின்பற்றும் சமயத்துக்கும் அரசியல், பொருளாதாரம், கல்வி, வேலை வாய்ப்பு… போன்றவற்றுக்கும் என்ன தொடர்பு?

  ஒருவன் இன்று ‘முருகன்’. வேலை வாய்ப்பு, கல்வி… போன்றவற்றில் அவனது சமயத்தைப் பொறுத்து அவனுக்கு முன்னுரிமை எதுவும் இல்லை. (இருக்கவேண்டியதும் இல்லை தான்.) ஆனால், அந்த முருகனே ‘Paul முருகன்’ அல்லது ‘முபாரக்’ ஆகிவிட்டால், அவனுக்குக் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு. இது என்ன கொடுமை..!

  உண்மையில் தாங்கள் ஹிந்துக்கள் என்கிற சிந்தனையும் இல்லாமல், தங்களுக்கு இப்படியெல்லாம் வஞ்சனை தங்கள் ஜனநாயக அரசுகளாலேயே செய்யப்படுகிறது என்கிற புரிதலும் இல்லாமல், ஆனால், ஏட்டளவில் மட்டும் ஹிந்துக்களாக இருந்துகொண்டிருக்கும் பெரும்பான்மையினரின் விழிப்புணர்வின்மையே பா.ஜ.க. என்று ஒரு கட்சி இருப்பதற்கே காரணம்.

  இது நிச்சயமாக ஹிந்து அல்லாத எவருக்கும் எதிர் நிலை அன்று. ஹிந்து அல்லாதவருக்கும் ஹிந்துக்களுக்கும் அரசியல், சமூக, பொருளாதார, கல்வி, வேலை வாய்ப்பு உரிமைகள் சமமாக இருக்க வேண்டும் என்னும் மத ரீதியான சமத்துவத்தை விரும்பும் நிலையே..!

 9. முஸ்லீமகளைத் தாஜா பன்ணி அவர்கள் வோட்டுக்களைப் பெற முயல்வதில் பாஜக ஒன்றும் இளைத்ததல்ல காங்கிரஸுக்கு. இதுவும் ஒரு வோட்டு சேகரிக்கும் கட்சிதான். இதை தமிழ் நாட்டிலும் பார்க்கலாம். தமிழ் நாட்டுக்கு வெளியிலும் பார்க்கலாம். வாஜ்பாயானாலும் சரி, அத்வானியானாலும் சரி, திமுக பாஜகவுக்கு எதிராக இருந்தாலும், மறைமுகமாக காங்கிரஸுக்கு தூது விட்டாலும், அது ஆட்சியைக் கைப்பற்றக்கூடும் அதை விரோதித்துக்கொள்ளக் கூடாது என்னும் மகா உத்தமமான கொள்கை கொண்ட கட்சி அது. தமிழ் நாட்டில் பாஜக என்றுமே ஆட்சிக்கு வராது, ஆனால் கர்நாடகாவில் அது ஆளும் கட்சியாகும் என்ற எண்ணம் எப்போதும் அதன் பின்னிருக்கும், தமிழ் நாடு – கர்நாடகா சச்சரவுகளில், தமிழ் நாட்டின் பக்கம் நியாயம் இருந்தாலும், அது வாய் மூடி இருக்கும். கர்நாடகா என்ன, ஆந்திரா, கேரலா ச்ச்சரவுகளிலும் அது வாய்மூடியே இருக்கும். அதற்கும் காங்கிரஸுக்கும் வித்தியாசம் ஏதும் இல்லை. வாஜ்பாயி ஹஜ் யாத்திரீகள் எண்ணிக்கையையும் மான்யத்தையும் அதிகரிக்கத் தான் முடிந்தது. நல்ல பெயர் வாங்க. அப்படியும் அந்த நல்ல பெயர் கிடைத்த பாடில்லை. முஸ்லீம்களை யார் அதிகம் தாஜா பண்ணுக்கிறார்கள் என்பதில் தான் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் போட்டி. இது கசப்பான உண்மை. ஒப்புக்கொண்டாலும், ஒப்புக்கொள்ள மனமில்லாவிட்டாலும். பாஜக எப்படி வித்தியாசமான கட்சியாகும்.?

 10. ஹிந்துகளுக்கு மதம் வேறு, அரசியல் வேறு என்பது புரிய வேண்டும்.
  எனது முஸ்லிம் நண்பர் ஒருவர் ரம்ஜான் பண்டிகைக்காக தனது வீட்டில் விருந்து வைத்தார். என்னையும், என் நண்பர்கள் பலரையும் அழைத்தார். “சைவம் – அசைவம்” இரண்டும் உண்டு வாருங்கள் என்று.

  விருந்துக்கு அழைக்கப்படத்தில், என்னை தவிர அனைவரும் சென்று விருந்தை சிறப்பித்து வந்தார்கள்.

  என்னிடம் வராததிற்கு காரனம் கேட்டார்கள் : “அவர் எனது தொழில் நண்பர். அவரது தனிப்பட்ட குடும்ப விழாக்களுக்கு அழைத்தால், சென்றிருப்பேன். ஆனால் அவர் அழைத்தது அவரது மத விழாவுக்கு. ஆகையால் நான் வரவில்லை” என்றேன்.

  அவரது மதம் எனக்கு ஏற்புடையது இல்லை. ஆகையால் நான் செல்லவில்லை.

  இந்த புரிதல் அனைத்து இந்துக்களுக்கும் இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.

  அதே போல் அரசியலிலும் மதம் வேறு, அரசியல் வேறு என்ற புரிதல் வேண்டும்.

  பா.ஜ.க. நல்ல அரசியல் கட்சியாக பார்க்க வேண்டுமே தவிர, அங்கே மதத்தை திணிக்க வேண்டியதில்லை…

 11. A good effort to make the presence of BJP felt in TN

  Best Wishes ! Is Narendra Modi Sa’b is coming…

 12. Both Congress and BJP call themselves as NATIONAL PARTIES ! After the 2014 National Elections there is bound to be a hung Parliament as both these parties are likely to be overtaken by Regional ones. In such a predicament will both these, so called ‘National Parties’ come together in the larger interests of the Nation?

 13. என்று காந்தி முஸ்லீம்களுக்கு கரிசனம் காட்டினாரோ அன்றிலிருந்து இந்தியாவிற்கு சனி பிடித்துவிட்டது. அவரது வழியை பின்பற்றியே அடுத்து வந்த காங்கிரஸ் அரசாங்கங்களும் முஸ்லீம் பாசத்தை ஊட்டி வளர்துவந்துள்ளது. இது போதாது என்று சோனியா என்ற வெளிநாட்டு பெண்ணை இங்கே இறக்குமதி செய்து கிருஸ்துவ மதமாற்றத்தை ஊக்குவித்து வந்தது காங்கிரஸ் அரசாங்கம். இந்த சிறுபான்மை பாசத்தில் இரண்டு தேசியகட்சிகளும் சளைத்தல்ல. பா.ஜ.கா ஆட்சியில் இருந்தபொழுதே நிறைய தில்லுமுல்லு வழக்குகளில் சோனியாவின் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுத்து அவரை இந்த நாட்டை விட்டே துரத்தும் அளவுக்கு பா.ஜ.கா. விற்கு ஆளுமை இருந்ததும் அதை செய்ய தவறியது. இப்படி சிறுபான்மையினர் ஆதரவுக்காக அலைந்து பதவியைபிடித்த தேசிய கட்சிகளின் காலம் மலையேறிவிட்டது. இந்த சிறுபான்மையனரை கட்டிதவழுவதில் இன்று மாநிலகட்சிகள் தேசியகட்சிகளை பின் தள்ளிவிட்டுவிட்டது என்பதுதான் யதார்த்தம். எனவே தேசியகட்சியான பா.ஜ.கா இந்த சிறுபான்மை ஆதரவு என்ற போலி வேஷத்தை கலைத்து நாங்கள் ஹிந்துகளுக்காக போராடும் கட்சி என்பதை நிறுபிக்கவேண்டும். அயோத்தியில் ராமர் கோவில் எழுப்புவதிலும் அர்தமற்ற சிறுபான்மை சலுகைகளை நீக்குவதிலும் உருதியான கொள்கைகளை அறிவித்து செயல் பட்டால்தான் ஒட்டு மொத்த ஹிந்துகள் ஆதரவு கிட்டும்.

 14. திரு. வெங்கட் சுவாமிநாதன் அவர்களின் கருத்தை நான் வழிமொழிகிறேன்….

  பா.ஜ.க [ வாஜ்பாய் புண்ணியத்தில் ] முஸ்லீம்களிடம் நல்லபெயர் வாங்க முயற்சி செய்து ஹிந்துக்களின் ஆதரவை இழந்ததுதான் மிச்சம்..

  கார்கில் போரின் போது நம் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தை விரட்டுவதோடு சரி…. எல்லை தாண்டி தாக்க மாட்டோம் என்ற நிலையை எடுத்தது யார்? [ நிச்சயம் கூட்டணிக்கட்சிகள் அல்ல]

  ஒரு லட்சம் பாக். ராணுவ வீரர்களை [ சரணடைந்தவர்கள்] வைத்துக்கொண்டு இந்திரா காந்தி எல்லை பிரச்சினையை ஏன் தீர்க்கவில்லை என்று கேட்ட ஜனசங்கம் , தான் ஆட்சிக்கு வந்தவுடன் செய்தது என்ன?

  ராமர் பெயரை சொல்லி ஆட்சியை பிடித்துவிட்டு , ஆறுவருட காலம் ராமர் கோயிலை மறந்தது ஏன்? [கூட்டணிக்கட்சிகள் விடாது என்றால் , அதே காரணத்தை காட்டி பதவியை ராஜினாமா செய்திருந்தால் ஹிந்துக்களிடமாவது நல்ல பெயர் கிடைத்திருக்குமே?]

  ஒரு சொட்டு தண்ணீர் கூட விடமாட்டோம் என்றுகொக்கரிக்கும் சதானந்த கவுடா , எடியூரப்பா வகையறாக்கள் சங்கத்தின் வளர்ப்பா? இதுதான் ஆர். எஸ் .எஸ் தேசபக்தியை போதிக்கும் லட்சணமா?

  முல்லை பெரியாறு அணையை உடைப்போம் என்று புல்டோசரை எடுத்துக்கொண்டு கிளம்பிய கேரள பா.ஜ.க வினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

  மாநில உணர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் அரசியல் செய்ய முடியும் என்றால் காங்கிரசுக்கும் பா.ஜ.கவுக்கும் என்ன வித்தியாசம்?

  நரேந்திர மோடி அவர்களை தொடர்ந்து அவமதிக்கும் நிதிஷ் குமாரை கண்டிக்காதது ஏன்?

  எந்தகாலத்திலும் முஸ்லீம்களோ , கிறித்தவர்களோ பா.ஜ,கவை ஆதரிக்கப்போவதில்லை……ஆகவே அவர்கள் ஆதரவை பெறுகிறோம் என்று இரட்டை வேடம் போட்டால் ஹிந்துக்கள் ஆதரவையுயம் இழக்க நேரிடும்…..உத்தரபிரதேசத்தில் நடந்ததை மறக்க வேண்டாம்…..

  சோனியா காந்தியின் சொத்து மதிப்பை [ அயல்நாடுகளில் உள்ள வங்கி கணக்குகள் ] ஸ்வீடன் பத்திரிகைகள் பல முறை அம்பலப்படுத்தியும் பா.ஜ.க அதுபற்றி மூச்சு விடாதது ஏன்? [ பார்க்க : இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் திரு. குருமூர்த்தி அவர்களின் கட்டுரை ]

  மக்கள் எதிர்பார்ப்பது காங்கிரசுக்கு மாற்றான கட்சியை….இன்னொரு காங்கிரசை அல்ல….எப்போதுமே டூப்ளிகேட்டுகளுக்கு மரியாதை இருக்காது…..

 15. Venkat,

  Your frustrations are understandeable. You are right to a certain extent. But atleast the BJP stands up for hindus as in the case with scholarship of poor hindu students. To that extent, it is better than congress.

 16. அன்பின் பெருந்துறையான்,

  அந்நிய முதலீடு மற்றும் வெளியுறவுக்கொள்கை இரண்டும் நமது சுதேசி பொருளாதாரத்தை நேரடியாக பாதிக்கும் மிக முக்கிய துறைகள் என்பதாலேயே அவற்றை சுட்டிக்காட்டினேன். அதன்மூலம் நான் சொல்லவந்தது காங்கிரஸ் என்பதும் பா.ஜ.க என்பதும் ஒரே கட்சியின் இரண்டு முகமூடிகள் என்பதே.

  “மக்களை மத ரீதியாகப் பிளந்து, பிரித்தே வைக்கும், இந்நாட்டில் நிலவிவரும், படு பாதகச் செயலை எதிர்த்து அழிப்பதன் மூலம் எல்லா மதத்தவரும் இந்நாட்டின் சம உரிமையுள்ள பிள்ளைகள் என்பதை நிலை நாட்டுவது அல்லவா அதன் நோக்கம்? ”

  இதை பா.ஜ.க தான் ஆட்சியில் இருந்தபோது செய்திருந்தால் பா.ஜ.க காங்கிரஸ் போலல்ல அதைவிட பலமடங்கு மேம்பட்டது என்று சொல்ல வாய்ப்பிருந்திருக்கலாம்.

 17. “கார்கில் போரின் போது நம் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தை விரட்டுவதோடு சரி…. எல்லை தாண்டி தாக்க மாட்டோம் என்ற நிலையை எடுத்தது யார்? [ நிச்சயம் கூட்டணிக்கட்சிகள் அல்ல]

  ஒரு சொட்டு தண்ணீர் கூட விடமாட்டோம் என்றுகொக்கரிக்கும் சதானந்த கவுடா , எடியூரப்பா வகையறாக்கள் சங்கத்தின் வளர்ப்பா? இதுதான் ஆர். எஸ் .எஸ் தேசபக்தியை போதிக்கும் லட்சணமா?

  முல்லை பெரியாறு அணையை உடைப்போம் என்று புல்டோசரை எடுத்துக்கொண்டு கிளம்பிய கேரள பா.ஜ.க வினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

  மாநில உணர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் அரசியல் செய்ய முடியும் என்றால் காங்கிரசுக்கும் பா.ஜ.கவுக்கும் என்ன வித்தியாசம்?”

  பொட்டிலடித்தாற்போன்ற கேள்விகள். பாவம் இதையெல்லாம் சிந்தித்து சுய பரிசோதனை செய்துகொள்ள ஏது அவர்களுக்கு நேரம் ?

 18. Muthukumar,

  மக்களை மத ரீதியாகப் பிளந்து, பிரித்தே வைக்கும், இந்நாட்டில் நிலவிவரும், படு பாதகச் செயலை எதிர்த்து அழிப்பதன் மூலம் எல்லா மதத்தவரும் இந்நாட்டின் சம உரிமையுள்ள பிள்ளைகள் என்பதை நிலை நாட்டுவது அல்லவா அதன் நோக்கம்? ”

  This divide & rule policy is done by congress, It is Manmohan singh who ordered for religion census to be taken in army.

  It is the congress which pamperes the minorities & rubbishes the feelings of the majority.

  If you say pampering the minorities is secularism, yes – congress is secular.

 19. Sanjay,

  I think you had misinterpreted what I said. I didn’t say Congress is secular. Even a mentally retarded won’t say so.

  Mr.Perundhuraiyaan had opined that, BJP’s sole intention is to destroy the division based on the religion and to establish the fact that all the religious people are equal in this country.

  My response was questioning the same. If it were true, did BJP do the same “destruction of the religious divide” when it was in power ?

 20. @//பொன்.முத்துக்குமார் on May 9, 2012 at 9:34 pm//

  பா.ஜ.க. தனது ஆறாண்டுகள் ஆட்சிக் காலத்தில் சமய சமத்துவத்தை நிலை நாட்டுவதற்கான நடவடிக்கைகளில் இறங்கவில்லை என்பது புரிகிறது. அக்கட்சி அப்படிச் செயல்பட்டுவிட்டதாகவும் நான் குறிப்பிடவில்லை.

  பொருளாதாரம், அயலுறவு ஆகிய கொள்கைகளில் இரு கட்சிகளுக்கும் பெரிய வேறுபாடு இருக்கிறதா இல்லையா என்பதை வைத்து இக்கட்சிகளை நாம் அங்கீகரிக்கவில்லை. சர்வ சமய சமரசக் கொள்கையை வைத்துத்தான் இவற்றை வேறுபடுத்திப் பார்க்கிறோம்.

  ஆனால், பா.ஜ.க. காங்கிரசைப்போல் பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை அல்லது மிருக பலம் உள்ள தனிப் பெரும் கட்சியாக ஆட்சி புரிந்ததே இல்லை. அந்த நிலையையும் கணக்கில் நாம் கொள்ள வேண்டும்.

  அதன் ஆறாண்டுக் கால ஆட்சியின்போது சமய சமத்துவ நடவடிக்கைகளில் இறங்கி அதில் வெற்றி அடைந்திருக்கவோ அல்லது அதனால் ஆட்சியை இழந்திருக்கவோ இல்லையே என்னும் ஆதங்கம் எனக்கும் உண்டு. இதில் நமக்குள் வேற்றுமையே இல்லை.

  ஆனால், இருப்பவற்றிலேயே மக்களிடம் ஓரளவு ஒட்டு பலமும் சமய சமரசக் கொள்கையும் கொண்ட கட்சி (கொள்கை ரீதியாக) பா.ஜ.க தவிர வேறு எதுவும் இல்லை என்பதை நீங்கள் மனத்தில் நிறுத்த வேண்டும். அன்பு.

 21. திரு தமிழன் அவர்களுக்கு,

  வணக்கம்.

  மதுரை ஆதீனம் பற்றிய பதிவில் நீங்கள் எழுதிய பின்னூட்டத்திற்கு, பிஜேபி பற்றி இந்தப் பதிவில் எழுதுகிறேன்.

  1980ல் – ஜனதாவிலிருந்து பிரிந்து பழைய ஜன சங்கத்தினை பாரதிய ஜனதா கட்சி என்று துவக்கினர். அவ்வருடம் ஜூன் மாதத்தில் வந்த தேர்தலில், தமிழ் நாட்டில், சில தொகுதிகளில் போட்டியிட்டனர். நான் இருந்த தொகுதியில் BJP போட்டியிட்டது. நான் வாக்கும் அளித்தேன், பிஜேபிக்கு நிச்சயமாக வாய்ப்பு இல்லாத நிலையிலும். ஆனால், 2011ல், நான் இருந்த தொகுதியில் BJP போட்டியிட்ட போதும், நான் இக்கட்சியைத் தவிர்த்தேன், ஓட்டுப் போடவில்லை. படிப்படியாக அக்கட்சியின் மீது நம்பகத்தன்மை குறைந்து கொண்டே வந்தது.

  பிஜேபி கட்சியினர், பெரும்பாலோர் RSSலிருந்து வந்தவர்கள். எனவே எளிமையாகவும், நேர்மையாகவும், தலைமைக்கு கட்டுப்பட்டவர்களாகவும் இருப்பார்கள் என்ற நம்பிக்கையை 1980லிருந்து, 1996 வரை என்னைப் போன்ற பலருக்கு கொடுத்தனர். நடந்தது என்னவோ வேறு.

  குஜராத்தில் வகேலா என்ன செய்தார்? தனிப்பட்ட விரோதத்தினால் கட்சியைப் பிளந்து, காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்து, இன்று அக்கட்சியின் தலைவர்களுள் ஒருவராக உள்ளார் .

  அனைவரும் போற்றும் வாஜ்பாயே 1996ல், பெரும்பான்மை இல்லாத நிலையிலும், கிடைத்து விடும் என்ற அசட்டு நம்பிக்கையில், ஆட்சி அமைக்க உரிமை கோரி 13 நாட்கள் பதவியில் இருந்தார். கெட்ட பெயர் தானே மிஞ்சியது? 1998 முதல் 2004 வரை நடந்தவற்றைப் பற்றி நான் கூறத் தேவையில்லை. கூட்டணிக் கட்சிகளின் இழுப்புகளுக்கேல்லாம் ஆட வேண்டி வந்தது.

  6 ஆண்டுகள் நடத்திய ஆட்சி சரியில்லை என்றுதானே மக்கள் பிஜேபிக்கு 2004ல், தோல்வியைத் தந்தனர்? தோல்விக்குப்பின் என்ன ஆனது? கூட்டணிக் கட்சிகள் – BJD , TDP , AIADMK , NC – பிஜேபியை விட்டு வெளியேறி விட்டனர். கூட்டணிக் கட்ட்சியான JD (U ) மோதி பீகாருக்கு வரக்கூடாது என்று கூறுவதையும், BJP சகித்துக் கொண்டு விட்டது.

  6 ஆண்டு ஆட்சியிலும், காங்கிரஸ் போலத் தானே aatchi செய்தனர்? இன்றைய காங்கிரஸ் போல, வாஜ்பாய் அரசும், bofors வழக்கு மீது உருப்படியாக எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை தானே? பங்காரு லக்ஷ்மண் பணம் வாங்கிய விவகாரத்தை மூடி வைக்கத்தானே முயன்றனர்? டேஹெல்கா மீது எவ்வாறு பல வழக்குகளை போட்டனர் என்பதை நான் விவரிக்க விரும்பவில்லை. அன்றைய சட்ட மந்திரி அருண் ஜெட்லி எவ்வாறெல்லாம் இவ்வழக்கை மூடப் பார்த்தார்? அவர் மீது உள்ள வழக்கே 2006ல் தானே ஆரம்பமானது?

  எடுயூரப்பா – கட்சியை அழகாக வளர்த்து ஆட்சியைப் பிடித்தார். பதவி வெறி கண்ணை மறைத்தது. கட்சித் தலைமை, அவரிடம் பதவியை விடுமாறு கெஞ்சியது. மீண்டும் பதவி வேண்டும் என தலைமையை மிரட்டிக் கொண்டிருக்கிறார்.

  தற்போதைய கட்சித் தலைமைக்கு கட்சியிலேயே மதிப்பு இல்லை. மோதி UP தேர்தலில் பிரச்சாரம் செய்வார் என கட்சி கூறுகிறது. மோதி செல்லவே இல்லை.

  UPல், மாயாவதியுடன், பதவிக்காக, கூட்டணி வைத்து, கேவலப்பட்டதை விவரிக்க விரும்பவில்லை. உள்ளங்கைப் புண்ணைப் பார்ப்பதற்கு கண்ணாடி எதற்கு?

  மோதி – இவர் தயவில்லாமல், இன்று, அத்வானி கூட காந்தி நகரில் ஜெயிக்க முடியாது. கட்சித் தலைமைக்கும் இவருக்கும் ஏழாம் பொருத்தம். மோதியும் குஜராத்தில், கட்சியில், வேறு யாரையும் வளர விடவில்லை.

  இன்று நடப்பது என்ன? ஜனாதிபதி தேர்தல். ஒரு அலங்காரப் பதவி. யார் இருந்தால் என்ன? சுஷ்மா ஏதோ சொல்லப் போக, பிஜேபியே, அவர் கூறியதை மறுக்க, கூட்டணிக் கட்சிகளும் மறுக்க, ஒரு நகைச் சுவை நிகழ்ச்சி அல்லவா நடந்தது?

  நாட்டுக்குத் தேவை காங்கிரசுக்கு மாற்று ஆட்சி. இன்னொரு காங்கிரஸ் ஆட்சி, பிஜேபி மூலமாக, அல்ல.

  பிஜேபி என்ன செய்ய வேண்டும்? வலிவான தலைமை, தலைமைக்கு கட்டுப்படும் மற்றவர்கள், தன்னை விட கட்சி பெரிதென்று எண்ணும் பிற துணைத் தலைவர்கள். மத்தியில் ஆட்சியை பிடிக்கும் நோக்கில் மட்டும் கட்சியை நடத்தாமல், கட்சியை பரவலாக்கும் முயற்சி வேண்டும். கூட்டணிக் கட்சிகள் தேவைதான் – ஆனால், அவற்றிற்கு வெண்சாமரம் வீசத் தேவையில்லை. 1980 – 1995 கால கட்ட மதிப்பினை மீண்டும் பெற வேண்டும்.

  ஹிந்துக்கள் நலனை பிஜேபி காக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு வர வேண்டும். பிற மதங்கள் மீது துவேஷங்கள் தேவையில்லை. தேசத்தை நோக்கும் எந்தப் பிரச்சனையிலும் ஒரே நோக்கு இருக்க வேண்டும். மாநிலங்களுக்கு ஏற்றவாறு கொள்கைகளை வகுக்கக் கூடாது.

 22. அன்பின் பெருந்துறையான்,

  இன்றைய நமது அரசியல் சூழலில் எந்த அரசியல் கட்சியானாலும் எந்த மாறுதலையும் கொண்டுவர இயலாது, அதற்கு துணியவும் துணியாது. இருக்கும் நிலையை அப்படியே தக்கவைத்துக்கொண்டு ‘மாடு வந்துதா பாப்பாத்தியம்மா’ என்ற ரீதியில்தான் ஆட்சி நடத்தும். அலங்கோலமாக இல்லாமல் இருந்தால் அதுவே நாம் செய்த புண்ணியம்.

  இதில் பா.ஜ.க-வோ காங்கிரஸோ எவ்விதத்திலும் வேறுபட்டதல்ல – அது ஓட்டுபலமாயினும் சரி, சமய சமரசக்கொள்கையாயினும் சரி. திரு.வெ.சா அவர்கள் ரத்தினச்சுருக்கமான பின்னூட்டமும், சான்றோன் மற்றும் நாகராஜன் அவர்களது புள்ளிவிபரத்துடன் கூடிய விளக்கமான பின்னூட்டங்களும் என் எண்ணத்தை இன்னமும் உறுதிப்படுத்தவே செய்கின்றன.

 23. பெருந்துறையான் அவர்களே…..

  ஆயிரம் மன வருத்தங்கள் இருந்தாலும், நான் இன்றும் ஹிந்து இயக்கங்களின் ஆதரவாளன் தான்…..வெற்றி வாய்ப்பு இல்லை என்று தெரிந்தாலும் ,சமீபத்தில் நடந்த தேர்தல் வரை பா.ஜ.க வுக்கே வாக்களித்து வருகிறேன்….இருப்பினும் பாஜக தொடர்ந்து சொதப்புவதை பார்த்தால் நாள் ஆக ஆக நம்பிக்கை குறைந்து வருகிறது….. காங்கிரசுக்கு எதிரான அலை தேசம் முழுவதும் வீசுகிறது ….ஆனால் அந்த எதிர்ப்பு அலையை தனக்கான ஆதரவு வாக்குகளாக மாற்றும் நிலையில் பா.ஜ.க இல்லை என்பதுதானே உண்மை?

  பா.ஜ.க இனி [யேனும்] செய்ய வேண்டியது என்ன?

  கட்சித்தலைமை விஷயத்தில் ஒரு தெளிவான முடிவு எடுக்கப்பட வேண்டும்….கட்சி விதிகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும்….நம்மை விட முதிச்சியடைந்த அமெரிக்கா போன்ற ஜனநாயக நாடுகளில் கூட மக்கள் செல்வாக்கு உள்ள தலைவர்கள்தான் வெற்றி அடைய முடிகிறது…[ நிக்சனுக்கு எதிராக கென்னடி வெற்றி பெற்றது கவர்ச்சியால்தான் …சமீப காலத்தில் கிளிண்டன் , ஒபாமா ஆகியோர் வெற்றிபெற்றதும் தனி நபர் செல்வாக்கில்தான் ]

  மிக குறைந்த காலம் பா.ஜ.கவில் இருந்த காமாட்சி நாயுடு என்பவர் கூறியது நினைவுக்கு வருகிறது….” தலைவரா இருந்தவர் துணைத்தலைவர் ஆகிறாரு…. அந்த கட்சியில் இருந்தா நமக்கு பைத்தியம் பிடிச்சுடுமப்பா ”……. என்ன ஒரு காமெடி பாருங்கள்….இந்தியாவில் வேறு எந்த கட்சியிலாவது இந்த அவலம் உண்டா?
  படிப்பறிவற்ற , புற தோற்றத்தை நம்பி மக்கள் வாக்களிக்கும் ஒரு தேசத்தில் , சோனியா காந்தி , மகாத்மா காந்தி குடும்பத்தை சேர்ந்தவர் என்று நம்பும் மக்கள் கணிசமாக உள்ள தேசத்தில் ,அதற்கேற்றவாறு அரசியல் செய்யாமல் உட்கட்சி ஜனநாயகம் என்ற பெயரில் வறட்டு வேதாந்தம் பேசி என்ன பயன்?

  ஆக , உடனடியாக மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ள மோடி அல்லது அத்வானி போன்றோர் தலைமை பொறுப்புக்கு வர வேண்டும்…..நிதின் கத்காரி போன்ற டம்மி பீஸ்கள் ஓரம் கட்டப்படவேண்டும் …[ இதை எழுதிக்கொண்டிருக்கும் நேரத்தில் , நிதின் கத்காரி இரண்டாம் முறை தலைவராகக்கூடும் என்று செய்திகள் வருகின்றன ……பா.ஜ.க இந்த ஜென்மத்தில் திருந்தப்போவதில்லை ..]

  பா.ஜ.கவின் பிரச்சனையே ஓவரான ஜனநாயகம் தான்……

  வாய்க்கு வந்ததை உளறிக்கொட்டி ,வாங்கிக்கட்டிக்கொள்ளும் சுஷ்மா [ சோனியா பதவிக்கு வந்தால் விதவைக்கோலம் பூணுவேன் , பிரதிபாவுக்கு உள்ள stature அன்சாரிக்கு இல்லை போன்ற முத்துக்களை தொடர்ந்து உதிர்ப்பவர் ] போன்றவர்களை உடனடியாக ஓரம் கட்ட வேண்டும் [ முடிந்தால் கட்சியை விட்டே விலக்க வேண்டும் ]….அருண் ஜெட்லி , நிதின் கத்காரி , முரளி மனோகர் ஜோஷி போன்றோர் பிரதமர் கனவு காணுவதை நிறுத்த வேண்டும்…..

  ஐக்கிய ஜனதாதளம் பற்றி அதிகம் கவலைப்படாமல் நரேந்திர மோடி அவர்களை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்……கூட்டணி கட்சிகளை பற்றி அதிகம் கவலைப்பட்டால் ,பா.ஜ.க வுக்கு சொந்த செல்வாக்கு உள்ள மாநிலங்களில் பிடுங்கிக்கொண்டுவிடும்…உத்தரப்பிரதேசம் ஒரு நல்ல உதாரணம்….

  தெளிவான செயல்திட்டத்தோடு , ஒற்றுமையாக செயல்பட்டால் வாய்ப்பு உண்டு…….வெற்றி பெரும் வாய்ப்பு உள்ள கட்சிக்கே மக்கள் வாக்களிப்பர் …….

 24. பா ஜா க ஆதரவு நண்பர்களுக்கு வணக்கம்.

  திரு வெங்கட் சுவாமிநாதன் ஜி , அவர்களின் கருத்துக்கு நான் மதிப்பு அளிக்கிறேன்.

  திரு சான்றோன் , திரு நாகராஜன் திரு பொன் குமார் போன்ற வர்கள் பா ஜா க
  வுக்கு நல்ல அறிவுரை தந்து இருக்கிறர்கள்.

  உங்களில் யாராவது CONFERNENCEKKU போனீர்களா ? உண்மை கல நிலைமை என்ன ? பா.ஜ.க தொண்டன் தமிழகத்தில் சந்திக்கிற பல பிரச்சனைகளை தாண்டி எவ்வளவு சிறப்பாக இந்த மாநாடு நடை பெற்றது . பா ஜ க தொண்டர்களை நம்பி இருக்கிற கட்சி. பெண்களும் குழந்தைகளும் கடும் வெய்யிலில் 10 கி மி நடந்து மாநாட்டு பந்தலை வந்தார்கள். சொந்த காசு செலவு செய்து வரும் ஒரே தொண்டன் நமது தொண்டன் . திரு சான்றோன் போன்றவர்கள் நமக்கு வாக்கு அளிக்காமல் தோற்கிற கட்சிக்கு எதற்கு வாக்கு ? என மற்றவர்க்கு ஆதரவளித்தல் பா ஜ கவை பலவீன படுத்தும் . உண்மையில் நமக்கு எவ்வளவு ஆதரவு உள்ளதோ அதை விட குறைவாகத்தான் வாக்குகள் கிடைகின்றன என்பது தமிழகத்தில் நம்மை பலவீன படுத்தி இருக்கிறது. எனவே உங்களது வாக்கு பா ஜ வுக்கு மட்டுமே இருக்கட்டும் . நன்றி

 25. shanmu அவர்களே…..

  // உண்மையில் நமக்கு எவ்வளவு ஆதரவு உள்ளதோ அதை விட குறைவாகத்தான் வாக்குகள் கிடைகின்றன என்பது தமிழகத்தில் நம்மை பலவீன படுத்தி இருக்கிறது. எனவே உங்களது வாக்கு பா ஜ வுக்கு மட்டுமே இருக்கட்டும் . நன்றி //

  தோற்கிற கட்சிக்கு வாக்களிக்கக்கூடாது என்று நினைத்திருந்தால் நான் இத்தனை காலம் பா.ஜ.க வுக்கு வாக்களித்து வந்திருக்க மாட்டேன்…..ஆனால் நீங்களும் நானும் தொடர்ந்து ஆதரிப்பதால் மட்டும் பி.ஜே .பி ஆட்சியை பிடித்து விட முடியாது…… இதுவரை செய்துவந்த தவறுகளை பற்றி சுய விசாரணை செய்தால் தான் இனியேனும் ஆட்சியை பிடிக்க முடியும்….

  காங்கிரஸ் செய்யும் அதே தவறுகளை பி.ஜே.பி யும் செய்கிறது…..காங்கிரஸ் நேரு குடும்பத்தின் புண்ணியத்தில் தப்பித்துக்கொள்ளும் ….பா. ஜ. க காணாமல் போய் விடும் …..அதுவே நம் கவலை….

 26. நேரு குடும்பம் தன்க்கும் தம் கட்சிக்கும் தலைமையை இத்தாலியிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியிருக்கிறது. அந்த தலைமை கூட part time leadership தான் தர சம்மதிக்கிறது. தன் முழு விசுவாசத்தை இத்தாலிக்கும் போப்புக்கும் ஸ்விஸ் வங்கிக்குமாக பிரித்துக் கொடுத்து விட்டு மிச்சமிருப்பதை சூழ்ந்து கொண்டு வாலாட்டும் நாய்க்குட்டிகளுக்கு பிச்சுப் பிச்சுப் போடுகிறது. இந்த நாய்க்குட்டிகளின் வாலாட்டம் சகித்துக்கொள்ள முடியவில்லை. அதிக பட்ச பக்தியை கோபால புரத்திலிருந்து சொக்கத் தங்கம் என்று ஒரு அர்ச்சனை மந்திரம், அன்னை சோனியா என்று ஒரு அர்ச்சனை மந்திரம் ஒரு பெரும் கூட்டத்திலிருந்து எழும்புகிறது.

  ஏதோ ஒரு அறுபது வருடம் முழுமையடைந்த கொண்டாட்டம் நடந்ததே. அது என்ன இத்தாலிய கலோனிய ஆதிக்கத்தின் வருடாந்திர கொண்டாட்டமா?

  நமக்கு வைஸ்ராய்கள் முன்னால் லண்டனிலிருந்து வருவது வழ்க்கம். இப்போது டூரினிலிருந்து வர்த் தொடங்கியிருக்கிறார்கள்.

  முரசு கொட்டலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *