தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாதம்: மறுப்பும் விளக்கமும்

தமிழ்ஹிந்து வலைத்தளத்தில் நான் எழுதிய பயங்கரவாத இயக்கத்திற்கு கழகங்கள் கொடுத்த அரசியல் அங்கீகாரம் (31.5.2011 அன்று வெளிவந்தது) என்ற கட்டுரையில் தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு ஆட்சேபம் தெரிவித்து மனித நேய மக்கள் கட்சியின் சட்ட ஆலோசகர் எழுதிய கடிதம் படித்தேன். வலைத்தளத்தினர் எனக்கு அதை அனுப்பி எனது எதிர்வினையைக் கேட்டிருந்தார்கள்.

திரு. ஜைனுல் ஆபிதீன் தமிழ்ஹிந்துவுக்கு அனுப்பிய கடிதம் –

zainul abideen
2012/06/28 at 7:27 pm

வடிகட்டிய ஒரு பொய்யை எழுதி உண்மையாக்க முயற்சி செய்துள்ள உங்களுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். மனித நேய மக்கள் கட்சிக்கும் தீவிரவாத அமைப்புகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. சிமி தலைவர் ஹைதர் அலி என்றும் ஜவஹிருல்லாஹ் சிறையில் இருந்து விடுதலை ஆனவர் என்றும் பொய் செய்திகளை வாரி இறைதுல்லீர்கள். பேரா.ஜவஹிருள்ளவுடன் பல முறை பாஜக மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் தொலைக்காட்சி நிகழ்சிகளில் பங்கெடுத்துள்ளனர். மனித நேய மக்கள் கட்சியின் வளர்ச்சி பொறுக்க முடியாமல் இந்த அவதூறுகளை செய்துள்ளீர்கள். தமிழக காவல்துறை மற்றும் உளவுத்துறைக்கு கூட தெரியாத தகவல்களை சொல்லும் நீங்கள் மனித நேய மக்கள் கட்சி தலைவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே.

இந்த பொய்யான அவதூறு கட்டுரையை உடனடியாக நீக்காவிட்டால் தங்கள் இனைய தளத்தின் மீதும் கட்டுரை ஆசிரியர் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

இப்படிக்கு
மு.ஜைனுல் ஆபிதீன்
வழக்குரைஞர், உயர் நீதி மன்றம்.
மனித நேய மக்கள் கட்சி.

கட்டுரையில் சுட்டிக் காட்டிய தகவல்களுக்கு ஆதாரம் தேவை என அவர் கேட்டுள்ளார். எனது தரப்புக்கு ஆதாரமாக சிலவற்றை குறிப்பிடுகிறேன்.

“மனித நேய மக்கள் கட்சிக்கும் தீவிரவாத அமைப்புகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை” – உண்மைத் தகவல்கள் இந்த கருத்துக்கு மாறாக இருப்பதால் சில விளக்கங்களும், கொடுக்கின்ற விளக்கங்களுக்கு தேவையான ஆதாரங்களும் கீழே தரப்படுகின்றன.

அல் உம்மா தொடர்பு:

தமிழகத்தில் 1981ம் ஆண்டு கோவையில் நடந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு பொதுக் கூட்டத்தில் பேசிய திருக்கோவிலுர் சுந்தரம், ஜனா கிருஷ்ணமூர்த்தி, திரு.நாராயணராவ் ஆகியவர்கள் அல் உம்மா இயக்கத்தினரால் தாக்கப்படடார்கள், படுகாயம் அடைந்தார்கள். மதுரை ரயில் நிலையத்தில் இந்து முன்னணி தலைவர் பெரியவர் இராம. கோபாலன் வெட்டப்பட்டார். 1993ல் சென்னையில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டு 12 பேர்கள் பலியானார்கள். 1994ல் இந்து முன்னணி மாநில தலைவர் திரு. இராஜகோபாலன் விடியற் காலைப் பொழுதில் தனது வீட்டின் அருகில் படுகொலை செய்யப்பட்டார். 1995ல் இந்து முன்னணி அலுவலகத்தில் குண்டு வெடிப்பு நடந்தது. 1996ல் சென்னையில் இம்பீரியல், லைட் ஆஃப் ஏசியா உள்ளிட்ட மூன்று ஹோட்டல்களில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. 1998ல் பிப்பரவரி மாதம் 14ந் தேதி கோவையில் குண்டு வெடிப்பு, 1999ல் தமிழக காவல் துறைக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக வெடிக்காத குண்டுகள் சென்னை கமிஷனர் அலுவலகம், மாநிலக் கல்லூரி உட்பட 25 இடங்களில் வைக்கப்பட்ட குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டன. 2005ல் மதுரையில் இந்து முன்னணி பிரமுகரான காளிதாஸ் கொல்லப்பட்டார். கோவையிலும் இந்து முன்னணியின் பொறுப்பாளர் வீர கணேஷ் 1989ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ந் தேதி கொலை செய்யப்பட்டார். 1991ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ந் தேதி வீர சிவா கொல்லப்பட்டார். இந்த இரு கொலை சம்பவங்களிலும் சம்பந்தப்பட்ட இயக்கம் அல் உம்மா ஆகும்.

தமிழகத்தில் நடந்த குண்டு வெடிப்பு மற்றும் படு கொலை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் அல் உம்மா, ஜிகாத் கமிட்டி, தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகம், மனித நீதி பாசறை போன்ற இயக்கங்கள் என பல்வேறு செய்திகள் குறிப்பிட்டுள்ளன. “தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் அரசியல் பிரிவு மனித நேய மக்கள் கட்சி” என குறிப்பிட்டு பல வலை தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. ஆகவே இந்த செய்திகளின் அடிப்படையில் தான் நான் எழுதிய கட்டுரை அமைந்துள்ளது.

அல் உம்மா இயக்கத்தை துவக்கியவர்களில் ஒருவர் திரு ஆர். ஜவாஹிருல்லா என்பது உண்மையாகும். ஹிந்து பத்திரிக்கையின் துணை இதழான ஃப்ரன்ட்லைன் இதழில் 1998ல் வந்த ஒரு கட்டுரை தெளிவாகத் தரும் தகவல் இது.

“Pash and Basha came together to start Al-Umma, and Jawahirulla joined them. It was Jawahirulla who selected the name Al-Umma .”

A time of troubles , T S Subramanian, Frontline Mar. 7 – 20, 1998

எனவே இந்த செய்தியின் அடிப்படையிலும், தமிழகத்தில் நடந்த பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் அல்-உம்மா இயக்கதினர் சம்பந்த பட்டிருப்பதாக வந்த தகவலின் அடிப்படையிலும், இந்த இயக்கத்தில் இருந்தவர் திரு. ஜவாஹிருல்லா என்பதாலும் நான் எனது கருத்தை தெரிவித்திருந்தேன். மேலும் அல்-உம்மா இயக்கத்திலிருந்து பிரிந்து தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பை தோற்றுவித்தனர் என்பதையும் மறுக்க இயலாது. அது ஊடகங்களில் ஏற்கனவே பரவலாக வெளிவந்த செய்தியாகும்.

சிமி, த.மு.மு.க தொடர்புகள்:

அதே போல, மனிதநேய மக்கள் கட்சி என்பது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் அரசியல் பிரிவு என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும். இது சம்பந்தமாக சில ஆதாரங்கள்:

New Delhi: The Manithaneya Makkal Katchi (Humanitarian Peoples’ Party) has been floated by Tamilnadu Muslim Munnetra Kazhagam (TMMK) last week in a grand conference attended by more than two lakh people in Tambaram, Chennai.

The Manithaneya Makkal Katchi was formally inaugurated with flag hoisting by Mr. Syed Nissar Ahmed, one of the founders and former Treasurer of TMMK. This was followed by the Felicitation session in which Bishop Ezra Sargunam, S. Natrajan, Thiru. Veerapandian, Shankar Swamy Kani, Moulvi Darvesh Rashadhi, Moulvi Mujeebur Rahman felicitated the new party.

TMMK president Prof. Dr. M. H. Jawahirullah, TMMK general secretary S. Hyder Ali and other office bearers addressed the mammoth gathering.

TwoCircles.net news desk

மேலே கொடுத்துள்ள செய்தி மனித நேய மக்கள் கட்சி துவக்க விழா குறித்த செய்தியாகும். இந்த கட்சியை துவக்கி வைத்தவர் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தை துவக்கியவர்களில் ஒருவரான திரு. சயீத் நசிர் அகமது என்பவர். தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் தான் மனித நேய மக்கள் கட்சியை துவக்கியது. இந்த நிகழ்சியில் வேறு சிலரும் கலந்து கொண்டுள்ளார்கள் என்பதும் உண்மையாகும்.

திரு. ஜவாஹிருல்லா தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான சிமி (SIMI – Student Islamic Movement of India) அமைப்பிலும் இருந்துள்ளார். சிமி அமைப்பு துவக்கிய போது தங்களது கொள்கை என்ன என்பதை தெளிவாக தங்களது இணைய தளத்திலும் குறிப்பிட்டிருந்தார்கள். அதன் மொழிபெயர்ப்பாக “துப்பாக்கி மொழி” (கிழக்கு பதிப்பகம் வெளியீடு) என்ற புத்தகத்தில் குறிப்பிடப் பட்டுள்ளதை, புத்தகத்திலிருந்து அப்படியே தருகிறேன் –

“இந்தியாவின் மதச்சார்பின்மை மீதோ அரசியலமைப்புச் சட்டத்தின் மீதோ எங்களுக்குக் கடுகளவும் நம்பிக்கை கிடையாது. இவை அனைத்துமே இஸ்லாமிய மக்களுக்கு எதிரானவை. ஓவ்வொரு இந்தியனையும் கட்டாயப் படுத்தி முஸ்லீமாக மாற்றுவோம். தேவைப்பட்டால் வன்முறை கொண்டு முஸ்லீமாக மாற்றுவோம். இதன் மூலம் இந்தியாவையே இஸ்லாமிய நாடாக மாற்றுவோம்”

இதுவே சிமி இயக்கத்தின் செயல் திட்டமாகும்.

சிமி இயக்கத்தில் இருப்பவர்கள் இஸ்லாம் அல்லாத மற்ற அனைத்துக் கருத்துக்களுக்கும் முக்கியமாக இந்து மதங்களுக்கும்இ மேற்கத்திய கலாச்சாரம் மற்றும் சிந்தனைக்கும் எதிரானவர்கள் என்ற கருத்து பல விமர்சகர்களால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

SIMI is widely belived to be against Hinduism, western beliefs and ideals, as well as othe ‘anti-islamic cultures, ‘ has declared Jihad against India, the aim of which is to establish Dar-ul-Islam (Land of Islam) by either forcefully converting everyone to Islam or by violence. As the organization does not belive in a nation-state, it does not believe in the Indian Constitution or the secular order. SIMI also regards idol worship as a sin and considers it to be a holy duty to terminate idol worship

Article About SIMI in South Asia Portal

திரு. ஜவாஹிருல்லா சிமியிலும் பொறுப்பில் இருந்தார், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்திலும் பொறுப்பில் இருந்தார் என்பதற்குறிய ஆதாரம் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தியிலேயே உள்ளது:

According to highly placed sources in the police, many ex-presidents of SIMI are now active in several organisations . Professor M H Jawahirullah , the president of Tamil Nadu Muslim Munnetra Kazhagam (TMMK) was an ex-president of SIMI. M Gulam Muhammed, founder president of Darul Islam Foundation was also an expresident of SIMI. The major leaders of SIMI in Tamil Nadu included Sayed Abdul Rahman Umari, a native of Tirupur, ex-zonal president, Senthil Kumar alias Muhammed Yahia, ex-Chennai city president, Mohammed Ilyas Qureshi, former zonal secretary, Sayed Muhammed of Nellikuppam, SIMI Shihabuddin of Coimbatore , Sayed Abdul Kutusi of Madurai, and K Allauddin, former editor of a Tamil magazine ‘Khilafat’ .

இந்தப் பின்னணியைத் தொகுத்துக் கூறும் இன்னொரு வலைப்பதிவு:

For instance, M. Ghulam Ahmed, former zonal [Tamil Nadu] SIMI president, founded the Manitha Neethi Pasarai. When he was expelled recently from the Manitha Neethi Pasarai, he went on to establish another organisation, the Darul Islam Foundation Trust. M.S. Jawahirullah, who is now a top leader of the Tamil Nadu Muslim Munnetra Kazhagam, was a State SIMI president. Another Tamil Nadu SIMI president, S.M. Baucker, is now the general secretary of the Tamil Nadu Thouheed Jamat. Ibn Saudh, who was the first president, in 1982, of the Tamil Nadu unit of the Jamaati-Islam-Hind, the parent organisation of SIMI, is now the president of the All-India Milli Council. Mohammed Ansari, who was a SIMI ikwan (supporter), is now Al Umma general secretary.

“தான் சிமி அமைப்பின் பொறுப்பிலிருந்து விலகியது, சிமியின் கொள்கைகளையும் செயல்பாட்டையும் கண்டித்து அல்ல. மாறாக சிமியில் 30 வயதுக்கு மேல் இருக்க கூடாது என்பதற்காகத் தான்” என்றும் திரு ஜவாஹிருல்லா வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதற்கான ஆதாரம் கீழ்க்காணும் “தெஹல்கா” இதழ் கட்டுரையில் உள்ளது.

So they asked for a day. The next day, Jawahirullah deposed before the tribunal. The Central government’s lawyers cross-examined him. Of course, said Jawahirullah, he was a SIMI member, but left it way back in 1989 when he turned 30, the age of superannuation. SIMI was then a legitimate organisation. Jawahirullah admitted that, as SIMI’s state president.

திரு. ஜவாஹிருல்லா கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப் பட்ட சம்பவமும் செய்தி ஊடகங்களில் பதிவு செய்யப் பட்ட ஆதாரபூர்வமான தகவல் தான்.

1998ல் கோவையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பந்தமாக கைது செய்ய்ப்பட்டவர்களில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் பொறுப்பாளர்களும் அடங்குவர். ஃப்ரண்டலைன் இதழ் கட்டுரையிலும் அந்தச் செய்தி குறிப்பிடப் பட்டுள்ளது. அதைத் தான் எனது கட்டுரை எடுத்துக் காட்டியிருந்ததே தவிர எதுவும் புதியதாகக் கூறவில்லை.

After the 1998 Coimbatore bombings and the communal violence that ensued from it, members of the TMMK were arrested following the banning of the related Jihadist group al-Umma (listed in Extremist Groups) who were directly behind the blasts. Leaders of the Jihad Committee and the TMMK were arrested in a State-wide crackdown. Among those arrested were the TMMK president M.H. Jawahirulla and treasurer S.M. Bakkar. Over the next few days, many activists of the TMMK were arrested at Keezhakkarai, Devakottai, Dindigul, Nagapattinam, Thanjavur, Nagercoil, Melapalayam and Udumalpet as a precautionary measure.

Behind the Coimbatore tragedy, by T. Subramaniyam, Frontline – March 7-20 Issue, 1998.

விடுதலை செய்யப்பட்டவர்களின் பெயர்களை அரசு தெரிவிக்கவில்லை என்றும் காவல்துறையினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்கள் என்றும் அந்தக் கட்டுரையில் எழுதியிருந்தேன். எனக்கு இந்தத் தகவலை அப்போது அளித்தவர் ஐ.பியில் பணியாற்றிய ஒரு முக்கிய அதிகாரி. அவர் தற்போது காலமாகி விட்டார்.

இந்த்த் தகவல் பின்னர் கீழ்க்காணும் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியிலும் பதிவு செய்யப் பட்டது.

The release did not disclose the names of the prisoners, but enquiries revealed that they are all convicts in the Coimbatore blasts case. According to sources, the 10 convicts to be freed are Shahul Hameed, Abdul Rahman, Fakruddin Ali Ahmed, Abdul Farook, Yousuf, Abbas, Yousuf alias Shahjahan, Ashraf, Mohammed Farook and Abdul Rahoof, all members of the Islamic extremist group. They are all serving 13-year sentences and have been in custody since mid-1998, which means they have completed roughly a little more than 11 years of their sentences. Of these, Yousuf alias Shajahan may not be able to avail of the remission immediately, as he is facing another case, the sources said.

அல் உம்மா, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேறற கழகம், மனித நீதி பாசறை, ஜிகாத் கமிட்டி ஆகிய இயக்கங்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் தடை செய்யப் படும்ம் போது மறு பெயரில் புதிய இயக்கம் துவங்கப் பட்டது. பல்வேறு கலவரங்களில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சம்பந்தப் பட்டிருக்கிறது. நான் கட்டுரையில் குறிப்பிட்டிருந்த இயக்கங்கள், அமைப்புக்கள் அனைத்தும் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவை என்பது பல இடங்களில், பல்வேறு செய்தியாளர்களாலும், இதழாளர்களாலும் ஏற்கனவே பதிவு செய்யப் பட்டுள்ளது. இன்னுமொரு ஆதாரம்:

The stated objective of a majority of these organizations was the ‘need to protect Islam’ and the interests of Muslims, especially from what was then articulated as a ‘Hindu onslaught.’ During the latter half of the 1990s, Islamist fundamentalists resorted to planned attacks primarily targeting rival Hindu fundamentalists, as also state structures and institutions perceived to be supporting the latter. These fundamentalist groups – both small and big – began to organize Muslims and to articulate ‘Muslim grievances’, both real and perceived. Among others, in Tamil Nadu such organisations included Al Ummah, the All India Jihad Committee (AIJC), Al Mujahideen, Tamil Nadu Muslim Munnetra Kazhagam (TMMK), Islamic Defence Force (IDF), Jamaithul Ahlul Quran-o-Hadis (JAQH), Sunnat Jamaat Peravai, Sunnat Jamaat Ilaingnar Peravai and the Students Islamic Movement of India (SIMI). While some of these organizations are primarily conservative or revivalist movements that seek to order life in keeping with the tenets of the Holy Quran and the Sunnah,14 others like the Al Ummah, Jihad Committee and the IDF adopt and espouse violence, extensively using coercion, extortion and intimidation to achieve their goals.
Tamil Nadu: The Rise of Islamist Fundamentalism

Tamil Nadu: The Rise of Islamist Fundamentalism, By P.G. Rajamohan

மேற்கூறப்பட்ட அனைத்து ஆதாரங்களின் அடிப்படையில் தான் எனது கட்டுரை எழுதப் பட்டது. இந்தச் செய்திகளைக் கோர்வையாகத் தொகுத்து எழுதியது தான் அந்தக் கட்டுரையே தவிர, அதில் ஆதாரமற்ற செய்தி என்று எதுவுமே சொல்லப் படவில்லை.

47 Replies to “தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாதம்: மறுப்பும் விளக்கமும்”

 1. ஊருக்கெல்லாம் தெரிந்த விசயம் வழக்குறைஞருக்கு தெரியாமல் போனது
  ஆச்சரியமான விசயம்.

  @ ஜைனுல் ஆபிதீன்,

  வழக்குறைஞராக இருந்து கொண்டு சொந்த மண்ணிற்கு உண்மையாக இருக்காமல் அயல் மண்ணிற்கு உங்கள் விசுவாசத்தை காட்டுவது வேதனை தரும் விசயம். உங்கள் பாட்டனும் முப்பாட்டனும் இந்த மண்ணிற்கு தான் உண்மையாக இருந்தார்கள். ஆனால் நீங்களோ பாலைவன மண்ணிற்கு சொந்தம் கொண்டாடுகிறீர்கள்… இதனால் பாதிக்கப்படபோவது நீங்கள் மட்டும் அல்ல.. உங்களின் ஆதாரமாக இருக்கும் இந்த மண் கூட தான்…

 2. ஸோக்கா ஸொல்லிக்கினே நீ சரவணா! ஸொம்மா பூச்சாண்டி காட்றாணுங்கோ அ ஆங்! உன் மேலேயும் தமிள் இந்து மேலேயும் கேஸ் போட்றதுக்கு முன்னால டி.எஸ்.சுபர்மணி, பிரெண்டு லைனு, பிரவீன் சாமி, ஹிந்து, ஜெயா மேனன், இந்தியன் எக்ஸ்பிரசு, டைம்ஸ் ஆப் இந்தியா, டெகல்கா, டகால்டி, லொட்டு, லொஸுக்கு அல்லாத்து மேலேயும் கேஸ் போட்டுட்டு அப்பாலிகா இந்த பக்கமா வர ஸொல்லு நைனா. ரெண்டு வட்டத்துலேந்து (Two Circles) ஒரு ஆதாரம் எட்து வுட்ட பாரு.. அத்தான் வாத்யாரே சூப்பரு. அதுக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்புவானுங்களாமா, ஆ? ஒரே டமாஸுபா இவனுங்க கூட. ஊரு புஃல்லா கொட்டி கெடக்குது ஆதாரம் இவனுங்க பயங்கரவாதிங்கன்னு. வந்துடானுங்க… வக்ல்கீல் நோட்டீஸ எட்துக்கினு.

  இன்னா வர்டா…

  மன்னாரு

 3. நல்ல பதிவு இவற்றை கழகங்கள் ஒப்புக்கொண்டு இந்த மாதிரியான தீவிரவாத அமைப்புகளுக்கு அரசியல் அங்கீகாரம் கொடுப்பதை மதவாத அரசியலையும் தவிர்த்தல் நல்லது

 4. சரவணன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். இவ்வளவு உண்மைகளும் நீதிமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் எடுத்து வைக்கப்படவேண்டும்.

 5. ஆதாரம் கேட்டு தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்கிறார் திரு. ஜைனுல் ஆபிதீன் ! வாழ்க சரவணன்

 6. ஹோ அல்லா மணிதநேய மக்கள் கட்சி என்றால் அடி உதை நிர்மாணி என்று அர்த்தம் போலும். செய்திதாள்களில் வந்தவற்றை முறைப்படுத்தி ஆதாரத்துடன் கட்டுரையை எழுதியதற்கு ஒரு மிரட்டல் கடிதம். மாறாத விலங்கு குணங்களுடன் கற்காலத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்கள் இந்த நாட்டில் இருக்க தகுதியுடையவர்கள் தானா ?
  Egypt to bring in law allowing man to have sex with dead wife :-
  Egypt’s new Islamist-dominated parliament is preparing to introduce a controversial law that would allow husbands to have sex with her deceased wives up to six hours after death. Known as the “farewell intercourse” law, the measure is being championed as part of a raft of reforms introduced by the parliament that will also see that minimum age of marriage lowered to 14 for girls. (Ref : Hindu voice June 2012 page 37)
  இப்படிப்பட்ட கீழ்தரமான பல மணிதநேயம் அற்ற கொள்கைகளை நிலைநாட்டும் சௌதி முஸ்லீம்கள் பாகிஸ்தான் முஸ்லீம்கள் இவர்களை பின்பற்றுவது இந்திய முஸ்லீம்களை அழிவிற்கே இட்டு செல்லும்.
  The Sufis are the men of the highest morality. They are the people who behave according to the need of the time. They are not bound by the shackles of rituals and customs. Religion for them is important only so long as it does not hinder spiritual progress. The greatest religion for them is the love for the humanity and not to hurt anyone’s feelings. Their objective being to evolve as a complete man by improving one’s character and conduct the principles and practices adopted by them revolve around these central ideas and are to be seen in this light.
  இப்படிப்பட்ட இந்திய முஸ்லீம் முன்னோர்களின் வழிவந்த இன்றைய முஸ்லீம்கள் மூதாதையர்களின் கொள்கை படி வாழ்வது தான் உண்மையான மணிதநேயம். இது மதசார்பின்மை நாடு இங்கே மதவெறிகொள்கைகளுக்கு இடம் இல்லை. மீறினால் இனம் அழிவதும் நாடுகடத்தபடுவதும் நிச்சயம் ஒருநாள் பாரதத்தில் நிகழும்.

 7. வெகு அமைதியாக எல்லா தரவுகளையும் கோர்த்துத் தந்துள்ளீர்கள், சரவணன், இப்படி தொகுத்துத் தரக்கூடிய ஒருவர் வேண்டும். வெற்று மிரட்டல்கள் தான் என்று, திராவிட இயக்கத்தவரதும் முஸ்லீம் தீவிர வாதிகளதையும் அலட்சியம் செய்து விட முடியாது. பயப்படுத்தி வைப்பதற்கும், வாயை மூடிக்கிட என்று சொல்வதற்குமாவது ஏதாவது செய்வார்கள். அதற்கு திக, திமுக கட்சிகளும் துணைபோகும், முஸ்லீம்கள் மாத்திரமல்ல. அவர்கள் தான் எதற்கும் சமூகம் முழுதுமே திரண்டு வரும். நாம் தான் ஆயிரம் கட்சிகளாகப் பிரிந்து கிடப்போம்.

  இவ்வளவு பின்னணியை பொது இடத்தில் பத்திரிகைகளில், கோர்ட் ஆவனங்களில் பலர் பார்வைக்கும் இருக்க வைத்துக்கொண்டே ஜவஹருல்லா எங்கே ஆதாரம் என்று மிரட்டுகிறாரே, அவரும் எதோ தைரியத்தில் தான் செய்கிறார்.

  நன்றி சரவணன். எல்லோருக்கும் எல்லாசம்யங்களிலும் எல்லாஆதாரங்களையும் கையில் வைத்திருப்பது சாத்தியமில்லை. “நான் அரசியல் நாகரீகம் பேணுபவன், 60 வருஷங்களாக இந்திய அரசியலில் ….இத்யாதியெல்லாம் சொல்லி “நான் என்று நம் மூதறிஞர் இராசாசிஅவர்களை குல்லுக பட்டர் என்று சொன்னேன். ஆதாரம் என்ன? என்று சொக்கத் தங்கம், அன்னை சோனியா வின் பாதமலர் தொட்டு வணங்கி, சமீப காலமாக கசப்புடன் அரசியல் நடத்தும் கலைஞர் பெருமான் என்னைக் கேட்டால் நான் எங்கு போவேன் ஆதாரத்துக்கு?நான் என்ன ஆராய்ச்சி யாளனா, பத்திரிகை ஆசிரியனா?

 8. இஸ்லாம் மதத்திலேயே மதம் எனும் போர்வையில் உலவும் அந்நிய நாடுகளுக்கு அடிபணியாமல், சுய சார்பான மதநம்பிக்கை உள்ள, சுதேசி உணர்வுள்ள ஒரு பிரிவு வெகு விரைவில் உருவாகும். அது பாரத பண்பாட்டோடு இரண்டற கலந்துவிடும் என்பது ஒரு மகா ஞானியின் கருத்தாகும்.

 9. மனம் நிறைந்த பாராட்டுக்கள் சரவணன்…..

  வெ .சா ஐயா அவர்கள் குறிப்பிட்டதுபோல எல்லா ஆதாரங்களும் இறைந்து கிடக்கையில் தைரியமாக மிரட்டுகிறார் என்றால் அதன் பின்னணியை ஆராய வேண்டும்……

  கருணாநிதியை விடுங்கள்…..அவர் தீவிர ஹிந்துமத துவேஷி…..ஆனால் ஜெயலலிதாவுக்கு என்ன வந்தது என்று கொள்ளிகட்டையை எடுத்து தலையை சொரிந்து கொள்கிறார் என்று தெரியவில்லை…..அதிமுக ஆதரவோடு ஜெயித்த இந்த பேர்வழி [ஜவாஹிருல்லா ] கூடங்குளம் முதல் குடியரசுத்தலைவர் தேர்தல் வரை அதிமுக வின் நிலைப்பாட்டுக்கு எதிராகவே செயல்படுகிறார்…… எதிர்காலத்திலேனும் ஜெயலலிதா பயங்கரவாதிகளை ஒதுக்கி வைத்தால் அது நாட்டுக்கு நல்லது…..

  நல்லதே நடக்கும் என்று நம்ப முடியவில்லை…..காரணம் இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானே?

 10. ஐயா நீங்க என்னமோ நல்ல யோசிச்சு தான் எழுதுறீங்க .. ஆனா நம்ம ஹிந்து thalaivargala paarunga.. ivar பக்கத்துல தான் உக்கருவேன்னு அடம் பிடிச்சு உக்கர்ந்திருக்கர் போல் இருக்கு.. கேவலமா இல்ல நமக்க்கே.. (இந்த குறிப்பிட்ட ஹிந்து தலைவர் மட்டும் இல்ல தமிழ்நாடு மற்றும் இந்திய முழுக்க பல BJP தலைவர்கள் இப்படி தான் கிடைக்காத சிறுபான்மையினர் VOTE உக்காக தவம் கிடக்குரங்க..

  (கீழ இருக்கற லிங்க் அவங்களோட வெப்சைட் தானே அதுனால பொய் அஹ கூட இருக்கலாம்னு எனக்கு தோனல.. ஏன் னா நம்ம தலைவர்கள் TV ல எல்லாம் பேட்டி க்கு வரும் போதே ஹிந்துத்வம் தெரியாம சிறுபான்மையினருக்கு பயந்து பயந்து தான் பேசுவாங்க.. அதுனால இது உண்மையா இருக்க தான் சான்ஸ் இருக்கு..

  https://www.tmmk.in/index.php?option=com_content&view=article&id=2271:2012-07-06-11-44-13&catid=43:tmmk-annoncement&Itemid=௧௬௧

  முகலயன் காலத்துலேர்ந்து மாதவனுக்கு கால் அமுக்கி விட்டே வாழ்ந்தாச்சு..இன்னும் நம்ம BJP தலைவர்களுக்கு அந்த வாழ்கை தான் பிடிச்சிருக்கு போல் இருக்கு.. கொடுமை டா சாமி ..

 11. தமுமுகவின் தற்போதைய தலைவர் யார்,அவர் இப்போது ஏன் பிணையில் இருக்கிறார்,அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை என்ன என்பதையும் கட்டுரையாளர் பதிலில் குறிப்பிட்டிருக்க வேண்டும். Foreign Contribution Regulation Act ஐ மீறியதற்காக தண்டனை பெற்று தற்போது மேல்முறையீடு நிலுவையில் உள்ளதால் ஜவாஹிருல்லா வெளியே உலா வருகிறார்.இதைப் பற்றி தமுமுக தளத்திலேயே விபரங்கள் உள்ளன.இவர்கள் ஏன் வெளிநாட்டு நிதி திரட்டினார்கள் என்பதையும் கவனிக்கவும்.இவர்களுடன் ஒரு காலத்தில் ஒன்றாக இருந்த PJ தன் இணையதளத்தில் கோவை குண்டு வெடிப்பு பற்றி சில தகவல்களை எழுதியுள்ளார்.அதையும் சேர்த்துப் படிக்கவும்.சிமியைப் பற்றி விரிவான தகவல்கள் உள்ளன.மும்பை 1992 கலவரங்களுக்கு இஸ்லாமிய அமைப்புகளும் பொறுப்பு என்பதை ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் குறிப்பிடுகிறது. சிமியைப் பற்றி ஜோதி புன்வானி எழுதியுள்ளார்.சிமிக்கு ஆதரவாக தெகல்கா எழுதிய போது அதை எதிர்த்து பலர் எழுதினார்கள்.தமிழ் வலைப்பதிவுகளிலும் இந்த விவாதம் நடந்தது.

  மமக இதுவரை பாகிஸ்தானை 26/11க் காக கண்டித்துள்ளதா இல்லை காஷ்மீர் தீவிரவாதிகளை கண்டித்துள்ளதா. காஷ்மீர் பற்றி ஜவாஹிருல்லாவின் உரைகளை கேட்டாலே தெரிந்துவிடும் அவர்களின் ஆதரவு யாருக்கு என்று. புதிய காற்று என்ற இதழுக்கு அவர் அளித்த பேட்டி கீற்று இணையதளத்தில் உள்ளது. அதையும் படியுங்கள்.
  மனித நேய மக்கள் கட்சி என்பது பெயர் ஆனால் அடிப்படை கொள்கை மனித நேயமல்ல.தமுமுக ஒளரங்கசீப் பற்றிய ஒவியக்கண்காட்சியை தடுத்த நிறுத்தக் கோரியதால் அரசு அவ்வாறு செய்தது. ஜவாஹிருல்லா போன்றவர்கள் இனிக்க இனிக்க பேசுவார்கள்.அதைக் கண்டு ஏமாறக்கூடாது.

 12. மமக தமுமுகவினர் துவக்கிய அரசியல் கட்சி.அதில் இருப்பவர்கள் யார் யார், அவர்களின் கடந்த கால செயல்பாடுகள்,தொடர்புகள் என்ன என்ப்துதான் கேள்வி.

 13. கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை என்பது பழமொழி. ஆனாலும், ஆதாரம் கேட்டிருக்கிறார் ஜைனுல் ஆபிதீன். அவருக்கு அற்புதமான பதிலடி கொடுத்திருக்கிறார் ஈரோடு சரவணன். வாழ்த்துக்கள்.

  -சேக்கிழான்

 14. சரவணன் சார் இந்த மாதிரி அவர்கள் முகத்தில் கரியைபுசியதர்க்கு நன்றி.

  இவங்களுக்கு நெறைய மீடியா சப்போர்ட்டும் இருக்குது DAILY NIGHT 10 மணிக்கு மேல WIN TV,MOON TV,IMAYAM TV…இதல்லாம் பாருங்க இவங்க தான் வந்து பேசிகிட்டு இருபாங்க,இந்த மாதிரி தேசதுரோகிகளக்கு கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமே இந்த டிவிகளெல்லாம் அவனுகல்லுக்கு ஸ்லாட் தந்து அவனுக புனித சேவைக்கு தோல் கொடுக்குராணுக இந்த டிவிக்கருனாக அத்தனைபேரும் ஹிந்துபயளுகதான் எங்க சொல்ல இந்த கொடுமைய

  நமஸ்காரம்
  Anantha Saithanyan

 15. எப்படியெல்லாம் ஒரு செய்தியை திரித்து எழுதலாம் என்பதற்கு இந்த மறுப்புக் கட்டுரை ஒரு உதாரணம். ஈரோடு சரவணன் அவர்களே நீங்கள் தந்துள்ள சான்றுகள் அனைத்தும் பத்திருக்கைகளில் வந்த செய்திகளின் தொகுப்பே தவிர நீதிமன்றத்தில் நிருபிக்கப்பட்ட உண்மை இல்லை. பத்திருக்கைகளில் வந்த செய்திகளில் அடிப்படையில் ஒருவரை குற்றவாளி என்று முடிவு செய்தால் பாதி ஊர் சிறைச்சாலையாகத்தான் இருக்கும். அப்படி பார்த்தால் பாபர் மஸ்ஜித் இடிப்பிற்கும், அதன் பிறகு ஏற்பட்ட கலவரங்களில் பல ஆயிரக்கணக்கான மக்கள் மரணத்திற்கும் அதன் மூலம் இந்திய மக்களின் மனதில் நிரந்தரமாக பிரிவினையை ஏற்படுத்திவிட்டு, இன்று தேசிய தலைவர்களாக வலம் வரும் பலரும் உள்ளே இருக்க வேண்டியவர்களே. நீங்கள் தந்துள்ள தெகல்கா சுட்டியை சரியாக படித்துப் பாருங்கள். சரவணன் அவர்களே உங்களை பற்றி தவறான ஒரு செய்தி பத்திருக்கைகளில் வந்து அதன் அடிப்படையில் உங்களுக்கு தண்டனை அளித்தால் நீங்கள் சும்மா இருப்பீர்களா?

  நீங்கள் காட்டியுள்ள பத்திருக்கை ஆதாரங்களைக் கொண்டு ஜவஹிருல்லா மேல் நீங்கள் பொதுநல வழக்கு தொடர்ந்து அவரை உள்ளே தள்ள வேண்டியதுதானே?

  இதன் மூல கட்டுரையும், இந்த மறுப்பும் முஸ்லிம்களின் மேல் உள்ள துவேசத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு எழுதப்பட்டவையே அன்றி வேறில்லை.

  பின்னுட்டகாரர்களே இறைவன் தந்த மூளையை கொஞ்சம் use பண்ணுங்கப்பா.

 16. கட்டாயப்படுத்தியோ, வன்முறை மூலமாகவோ இந்துக்களை எல்லாம் முஸ்லிமாக மாற்றுவார்களாம்! இவர்களெல்லாம் இந்தளவுக்கு பேசுவார்கள், அதெல்லாம் செகுலர் ஆகும்.. இதனை எதிர்த்து இந்துக்கள் குரல் கொடுத்தால் அது கம்முனால் ஆம்.. மன்னன் சத்திரபதி சிவாஜியின் ஆத்மா இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறதா??

 17. அருமை சரவணன். இவர் இப்படி ஒரு மிரட்டல் விடாவிட்டால் இப்படி ஒரு ஆதாரபூர்வமான பதில் கிடைத்திருக்காது. சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டிருக்கிறார்.

  இந்த மிரட்டல் குறித்து அனைவருக்கும் தெரியப் படுத்தியும் வைக்கவும். தமிழ் ஹிந்து தமிழ் நாட்டின் இந்தியாவின் மனசாட்சியாகச் செயல் படுவது அனைவரையும் உறுத்துவது தெரிகிறது.

 18. ஈரோடு சரவணன் அவர்களுக்கு நன்றி.

  இந்த ஜைனுல் ஆபிதீன் தௌஹீத் ஜமாத்தின் பொருளாளர். இப்போது கூட பீட்டர்ஸ் சாலையில், ஐஸ் ஹவுஸ் திருவல்லிக்கேணி ரோடு, நடேசன் சாலை சந்திப்பில் பெரும் ப்ளெக்ஸ் போர்டு வைத்திருக்கிறார், அதில் பெரிய எழுத்தில் அவர்தான் பொருளாளர் தவுஹீத் ஜமாத் என்று இருக்கிறது.

  நீங்கள் பாபுலர் பிரண்ட் ஆப இந்தியா பற்றி எதுவும் சொல்லவில்லை. Popular Friend of India இப்போது தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் சிமியின் மறுபதிப்பாகச் செயல்படுகிறது. முப்பது வயதுக்குக் கீழான முஸ்லிம் இளைஞர்கள் இதை நடத்துகிறார்கள். முப்பது முடிந்ததும் ஜவஹரிருல்லா போல மனித நேயர்கள் ஆகி விடுவார்கள்!

 19. முட்டாளுக்கு முழங்காலில் மூளை இருக்கும் என்ற பழமொழியை சரவணனும் ஏனைய இந்து முட்டாள்களும் கட்டுரை மற்றும் கருத்துக்களின் முலம் நிருபித்து விட்டார்கள். உங்கள் கட்டுரையை படிப்பவர்களை பலவந்தமாக திரு,நேதாஜிக்கு சமமாக ஜவாஹிருல்லாவை பாவிக்க வைத்துள்ளீர்கள். இந்து பார்ப்பன பத்திரிக்கைகளை ஆதாரமாக்கியத்தின் மூலமும் மடமை வெளிப்படுகிறது,(உதாரணத்திற்கு கொலைக்காரன் தான் கொலை செய்யவில்லை என்பதற்கு சாட்சியாக அவன் தாய், மனைவி பிள்ளைகள் சகோதர சகோதரி என டஜனுக்கும் அதிகமாக சாட்சிகளை ஆக்கியது போல.)

 20. ப ஜ க, ஆர் எஸ் எஸ் நிர்வாகிகள் இனியாவது இது போன்ற பங்கரவாதிகளோடு சமமாக அமர்ந்து டிவியில் பேசுவதை நிறுத்த வேண்டும். தீவிரவாதி என்ன சொல்கிறான் என்று பாருங்கள் .kumaran

 21. இதற்கு மேல் என்ன ஆதாரம் தர முடியும், மு.ஜைனுல் ஆபிதீன். ஆ.சரவணன் அவர்கள் தனது கட்டுரைக்கு தகுந்த ஆதாரங்களை தராமல் போனால் கூட அது உலகுக்கும் தெரிந்த விஷயம் தானே! // ஜவாஹிருல்லா போன்றவர்கள் இனிக்க இனிக்க பேசுவார்கள்.அதைக் கண்டு ஏமாறக்கூடாது//
  ஆயிரம் தடவை பொய் சொல்லுவதால் அது உண்மையாகி விடும் என்பது பழையக் கதை,நவீன காலம் ஒவ்வொரு விசயமும் அழிக்க முடியாத கல்வெட்டோடு நகர்கிறது. அதில் ஆ.சரவணன் போன்ற பெரியவர்களுக்கு நமக்கு ஞாபகப் படுத்துவது தான் வேலை, அதில் பொய் கலப்பு இருக்க முடியாது…(இன்னொரு விசியம் ஆதாரம் தர முடியுமா என்று சும்மா வழக்கு போட்டு பார்ப்போம், ஆதாரம் தந்தால் சும்மா இருப்போம், தர வில்லை என்றால் கூச்சல் போடுவோம் என்று தானே இந்த காரியம் செய்தீர்கள்)
  தேசத்தின் பால் ஓரளவாவது விசுவசத்தோடு இருங்கள் நண்பரே! தாங்கள் வழிபாடும் இறைவன் மேலுள்ள விசுவாசத்தில் நூரில் ஒரு சதவிகிதமாவது இருக்கட்டும்.

 22. @ maran,

  உங்கள் கருத்துக்கும் பதிவிற்கும் சம்மந்தமே இல்லையே. மூலை முற்றிலுமாக
  செயல் இழந்து எதையோ எழுத வேண்டும் என்பதற்காக எழுதிவிட்டு போனது போல் தெரிகிறது.

  நேதாஜி என்ற சிங்கத்தை எப்படி ஜவாஹிருல்லாவுடன் ஒப்பிட இயலும் என்பது எனக்கு புரியவில்லை.

  முட்டாள்களுக்கு பார்ப்பவர்கள் எல்லாம் முட்டாள்களாக தான் தெரியும். அதனால் ஹிந்துக்கள் உங்கள் கண்ணுக்கு அவ்வாரு தெரிந்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

  ‘தே ஹிந்து’ கம்யூனிஸ பத்திரிக்கையை பார்ப்பண் பத்திரிக்கை என்று சொன்னதில் இருந்தே தெரிகிறது உங்கள் மூளையின் புரிந்துணர் சக்தி என்னவென்று 🙂

 23. @ சிகந்தர்.

  ரொம்ப எல்லாம் யோசிக்க வேண்டாம்.. அரேபிய ஏகாதிபத்தின் ஏவலாளாக குரல் கொடுக்கும் ஜவஹருல்லா என்பவரின் யோக்கியதை என்ன என்பதை இரவு 10 மணிக்கு மேல் காளாங்கள் போல் பெருகி இருக்கும் தொலைக்காட்சி ஏதேனும் ஒன்றில் அந்த அரேபிய மத அடிப்படைவாதிகள் கொடுக்கும் பணத்தின் மூலம் நரி ஊலை இடுவது போல் கத்தி கொண்டு இருக்கும் பேட்டிகளை பார்த்தாலே தெரியும்…

 24. இங்கு ஒரு சிலர் எழுதயுள்ள மறுமொழிகளை பார்த்தேன் பொதுவாகவே அவர்களுக்கு சகிப்பு தன்மை கொஞ்சம் கம்மிதான், எதோ பத்திரிகைகள்ல வந்தத செய்தயைதான் இவர்களால் ஆதரமாக காட்டமுடிகிறது என்று சொல்கிறார்கள்,இதே கனவான்கள் குஜராத்தில் நடைபெற்ற கலவரத்திற்கு திரு.நரேந்திர மோடி அவர்கள்தான் காரணமென்று ஒலிப்பெருக்கி வைத்து ஊரு ஊருஅக சென்று தம்பட்டம் அடித்தார்களே அப்போது இவர்களிடத்தில் பத்திரிக்கை செய்தி தவிர வேறு என்ன ஆதாரம் இருந்தது, இன்று வரையுள்ளும் கூட இவர்களின் குற்றச்சாட்டுக்கான ஒரு ஊருபடியான ஆதாரத்தை இவர்களால் கொடுக்க முடியவில்லை ஊச்சநீதிமன்றம் அமைத்த விசாரணை கம்மிட்டியனர் கரடியாக கத்தியும் இவர்களால் ஒரு ஊருபடியான ஆதாரத்தை கூட காட்டமுடியவில்லை,.

  எதோ பாபர் மசூதி இடிப்பை பற்றியெல்லாம் பேசுகிறார்கள் காஷ்மீரில் 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் தீவிரவாதிகளால் ஹிந்துக்கள் படுகொலை செய்யப்பட்ட போதும்,ஆயிரக்கணக்கான ஹிந்து கோயில்கள் இடிகபடபோதும், தம் சொந்த மண்ணில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு இன்று டெல்லியுலும்,பஞ்சாபிலும் அகதிகளாக இருப்பதை வேடிக்கை பார்தவர்கள்தானே இந்த மதசர்ப்பின்மைவாதிகளும்,இஸ்லாமிய சகோதிரர்களும்,பின்னர் இரண்டு வருடங்கள் கழித்து பாபர் மசூதி இட்டிக்கபட்ட போது இவர்கள்ளுக்குள் தூங்கி கொண்டிருந்த மனிதாபிமானமும் கருணையும் பிற்ரிட்டுக்கொண்டு கிளம்பின

  நேதாஜியோடு சிலர் ஜவஹிர்ருல்லாஹ்வை ஒபிடுகிறார்கள்,நேதாஜியை பிடிக்கவில்லை என்றால் பேசாமல் இருந்துவிட்டு போக வேண்டியதுதானே
  அதற்காக அவரை ஜவஹிர்ருள்ளஹ்வோடு ஒப்பிட்டு ஏன் கேவலபடுத்த வேண்டும்.

  சில போலிமதசார்ப்பின்மைவாதிகளுக்கு அவர்களை எதிர்த்து யாராவது பேசிவிட்டால் உடனே அப்பிடி பேசிய நபரையோ அல்லது அப்பிடி எழுதிய பத்திரிகையோ பிடித்து பார்பனர் என்று முத்திரை குத்தி விடுவார்கள் ஒருவேளை அவர் பார்பனர் அல்லாத பட்சத்தில் இவர்களே பூணூல் அணிவித்து பார்பனர் ஆக்கிவிடுகிறார்கள்,இப்படி போலிமதசார்ப்பின்மைவாதம் பேசும் முக்கால்வாசி பேர் ஹிந்துபயளுகதான் எங்க சொல்ல இந்த கொடுமைய.

  நமஸ்காரம்
  Anantha Saithanyan

 25. மாறன் என்பவருக்கு முழங்காலும் இல்லையோ? முதுகெலும்பு நிச்சயம் இல்லை என்று தெரிகிறது. மூளை?

  டைம்ஸ் ஆப இந்தியா இந்து பார்ப்பனருடையது அல்ல.
  டேஹல்கா பத்திரிக்கை இந்து பார்ப்பனருடையது அல்ல.
  ராஜமோகன் பார்ப்பனர் அல்ல.

  அதெல்லாம் சரி இந்து இல்லாத பார்ப்பனர் இருக்கிறாரா என்பது மாறன் சொன்னால் நல்லது. எனக்குத் தெரிந்து இல்லை, இல்லவே இல்லை.

  சாதி இருக்கும் ஒரே மதம் இந்து மதம்தான் என்றுதானே மாறன் வகையறாக்கள் பிரச்சாரம் செய்கிறார்கள்.

 26. #/முட்டாளுக்கு முழங்காலில் மூளை இருக்கும் என்ற பழமொழியை சரவணனும் ஏனைய இந்து முட்டாள்களும் கட்டுரை மற்றும் கருத்துக்களின் முலம் நிருபித்து விட்டார்கள்#/

  இவர் எழுதியுள்ள மறுபதிப்பில் “இந்து முட்டாள்களும்” என்கிற வார்த்தை பிரயோகம் கடும் கண்டனதிர்கூரியது

  முட்டாள்களில் ஹிந்து முட்டாள்,முஸ்லிம் முட்டாள்,கிருஸ்துவமுட்டாள்,மதசார்பின்மைவாத முட்டாள்,போலி மதசார்பின்மைவாத முட்டாள் என்றெல்லாம் கூடவா இருக்கின்றன என்பதை திருமிகு.மாறன் சார்தான் விளக்க வேண்டும்.

  நமஸ்காரம்
  Anantha Saithanyan

 27. I will tell you onething, those who emotionally try to get their message, Muslims are different who we all are, we read Krishna, and speak what right and wrong, for them no such thing, like right or wrong. They are no forward thinkers, so many muslims look at this site, but none of will look at their web-site and see what is going on, take a minute and look at them, but some knowledge of “urudhu” and Arabic are essential to do so. They are all united, we have find a way to unite ourself and stay away from alcohol, and also we got enormous amount of fear, which need to be eradicated, seek some help. Only way we can change through political means, there is no such party in India to help us, neither congress nor BJP they are all afraind of Americans does not care about their own citizens.

 28. சகோ சிகந்தர்

  ராஜா கனிமொழியை பற்றி கூட பத்திரிகை செய்திகள் தான் மோசமாக வந்தது. நீதி மன்றத்தில் அவங்களை பத்தி எதுவுமே நிரூபணம் ஆகல்லை.

  ரெண்டு பெரும் ரெம்ப நல்லவர்கள் தானே. அதுவும் திராவிடனுக்கு நேர்ந்த கொடுமையை பார்த்தீர்களா. அன்ன அன்றே சொன்னார் அவன் ரொட்டி சாப்ட்றான், நம்ம சோறு திங்கரோன்னு. ஆரிய பார்பன சதி ராஜாவையும் கனிமொழியையும் அநியாயமா திஹார்ல ரொட்டி தின்னாங்க வேச்சிருச்சு.

  சிந்திக்க மாட்டீர்களா !!!

 29. அடியவன்

  //
  மாறன் என்பவருக்கு முழங்காலும் இல்லையோ? முதுகெலும்பு நிச்சயம் இல்லை என்று தெரிகிறது. மூளை?

  டைம்ஸ் ஆப இந்தியா இந்து பார்ப்பனருடையது அல்ல.
  டேஹல்கா பத்திரிக்கை இந்து பார்ப்பனருடையது அல்ல.
  ராஜமோகன் பார்ப்பனர் அல்ல.
  //

  வடக்கத்தி பத்திரிகை எல்லாத்தையும் பார்பன பத்திரிகை என்று சொல்ல முடியான்காட்டியும், ஆரிய பத்திரிகை என்று சொல்லுவோம்ல.

 30. சிகந்தர்

  //
  பின்னுட்டகாரர்களே இறைவன் தந்த மூளையை கொஞ்சம் use பண்ணுங்கப்பா.

  //

  ஹையா அல்லா முமீங்களை பாத்து தான் சிந்திக்க மாட்டீர்கள சிந்திக்க மாட்டீர்கள என்று கூவுகிறார். காபிர்கள் வேஸ்ட் என்று அவர் முடிவு செய்துவிட்ட பிறகு அல்லாவின் வார்த்தையை மீறி காபிர்கள சிந்திக்க சொல்ல நீங்கள் யார். சொன்னால் சுவனத்தில் உங்களுக்கேது இடம்.

  சிந்திக்க மாட்டீர்களா சிகந்தர்

 31. மண்டியிட்டு மண்ணை நெற்றியால் தொடும் உன்னை என் பாரத மாதா மகனாகத்தான் நினைக்கிறாள் ஆனால் நீயோ எங்கோ இருக்கும் ஒருவரை நினைத்துகொண்டு இங்கிருக்கும் ஹிந்துக்களை அழிக்க நினைக்கிறாய். பாபர்முதல் பாஷா வரை நாங்கள் பார்த்துவிட்டோம். ஹிந்து கங்கை எல்லோரையும் தூய்மை படுத்தி விடும்.

  (edited and published)

 32. முஸ்லிம் வெறியர்களால் 19,வயது ஹிந்து மாணவன் கொள்ளபட்டிருக்கிறான் கேரளாவில்,அவன் செய்த குற்றம் ABVP யில் இருந்ததுதான்

  விஷால் என்ற அந்த ஆத்மாவிற்கு என் வணக்கத்தை தெரிவிக்கிறேன்.அந்த குடும்பத்திற்கு என் வருதுத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

  (edited and published).

 33. netru (17-07-2012) andru iravu imayam tholaikatchiyil nadaipetra islam oru iniya margam nigalchiyil adhil pesiya
  nabar oruvar thirupathi venkadachalapthi i ilivu paduthum vagayil pesnar.avar avar madhathin perumaikalai andha
  nigalchiyil pesatum anal matra madhathinarin sadangukalai kura avaruku endha thagudhiyum kidaiyadhu.
  evan pesinalum adutha madahthai Kuripa hindhu madhathai kindal panranga enna seyya?

 34. என்ன செய்ய?என்ன செய்ய?என்று சொல்லி எதுவுமே நாம் செய்யவில்லைஎன்றால்,நம் ஹிந்து மக்கள் வாழ்க்கை கேள்விக்குறிதான்,அதனால் RSSல் இணைந்து செயல்படுங்குல் ஹிந்துக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

 35. //netru (17-07-2012) andru iravu imayam tholaikatchiyil nadaipetra islam oru iniya margam nigalchiyil adhil pesiya
  nabar oruvar thirupathi venkadachalapthi i ilivu paduthum vagayil pesnar.avar avar madhathin perumaikalai andha
  nigalchiyil pesatum anal matra madhathinarin sadangukalai kura avaruku endha thagudhiyum kidaiyadhu.
  evan pesinalum adutha madahthai Kuripa hindhu madhathai kindal panranga enna seyya?//

  சுப்பைய்யா சார்! நாம இவ்வளவுதான். இதுதான் நம்மளோட கையாலாகாத்தனம். அவங்க இளைஞர்கள் பைபிளிலும் குரானிலும், நம்மளோட ஆத்மாக்கள எப்படி அறுவடை செய்றதுல குறியா இருக்காங்க. ஆனா இந்து இளைஞர்கள் விஸ்வரூபத்துல கமல் போட்டுருக்குற பேன்ட் என்ன விலை, பில்லா படத்துல அஜீத் எவ்வளவு சம்பளம் வாங்குனாரு, இது மாதிரி சில்லரத்தனமான விஷயத்துல ஆர்வமா இருக்காங்க! தப்பித்தவறி எங்கேயோ ஒன்னு, ரெண்டுபேருக்கு சொத்துல உப்புபோட்டு சாப்படரோம்னு ரோஷம் வந்தாலும், மதச்சார்பின்மைக்கு பங்கம் வந்துடுச்சு, இந்து தீவிரவாதம், காவித் தீவிரவாதம், “இஸ்லாமிய பயங்கரவாதத்தவிட இந்து பயங்கரவாதம் இன்னும் மோசம்” நு பொய் மேல பொய் சொல்லி அராஜகம் பண்ணிகிட்டே இருப்பாங்க. நாம இவ்வளவுதான். பொத்திகிட்டு வீட்லதான் உக்காரணும். ஆனந்தசயனத்துல இருக்குற நம்ம ஆண்டவன் விழிச்சா தான் உண்டு.. பாப்போம்! இவ்வளவு சொன்னதுக்கு நாலுபேர் என்னப்பாத்து:- “நீ என்னடா கிழிச்ச?” னுதான் கேப்பாங்க.

  நம்மள சொல்லி தப்பில்ல, மேக்காலயிசம் நம்மள அப்படி ஆக்கிடுச்சு!

 36. பதில் அளிக்கிறோம் என்று மழுப்பல்களை கொட்டியுள்ள அன்புச் சகோதரர் ஈரோடு சரவணன் மீதும் முஸ்லிம்கள் என்றவுடன் வேற்றார்களாகவே பார்க்கும் சிந்தணையுள்ள பின்னூட்டமிடும் சகோதரர்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக….

  முதலில் ஒன்றை தெரிந்துகொள்ளுங்கள் முஸ்லிம்களும் இந்த மண்ணின் மைந்தர்கள்தான். இந்திய சுதந்திரத்திற்காக இன்னுயிரையும் தியாகம் செய்துள்ளோம், சொத்துக்களை இழந்துள்ளோம் இந்த நாட்டின் மீது வைத்துள்ள பாசத்தால் இந்தியா சுதந்திரம் அடைந்து பாகிஸ்தான் என்று தனிநாடு பிரியும்பொழுது, இந்தியர்களாகத்தான் இந்ந இந்திய மண்ணிலேதான் நாங்கள் மடிவோமே தவிற வேற்றார்களாக நாங்கள் ஒருபோதும் எங்களை மாற்றிக்கொள்ளமாட்டோம் என்ற சிந்தணையிலே எங்கள் சொந்த பூமியை விட்டு செல்ல மறுத்து மைண்ணின் மைந்தர்களாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆகவே இந்த மைண்ணிற்கு சொந்தகாரர்களான முஸ்லிம்களை குரோத பார்வைகொண்டு பார்ப்பதை முதலில் மாற்றிக்கொள்ளுங்கள். இந்தியா எங்கள் தாய்நாடு, இஸ்லாம் எங்கள் வழிபாடு இதுதான் எங்களின் கொள்கை. இந்தியாவின் மதிக்கத்தக்க பண்பாளர் டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் கூட நான் முதலில் இந்தியன் பிறகுதான் இஸ்லாமியன் என்று கூறியதை நினைவுபடுத்துகிறேன்.

 37. ஜவாஹிருல்லாஹ் சிமியில் இருந்தார் அவர் 30 வயதை தாண்டியவுடன் அதில் இருந்து விடுபட்டு தமுமுகவில் இருக்கிறார் ஆகவே சிமியை போலவே தமுமுகவும் தீவிரவாத இயக்கம் என்று கூறும் சகோதரர்களே சற்று சிந்தித்து பாருங்கள் சிமி தீவிரவாத இயக்கம் என்று எந்த ஆதாரத்தை வைத்து நீங்கள் கூறுகின்றீர்கள் இந்திய அரசு தடைசெய்திருப்பதாலா. சரி உங்கள் கூற்றுப்படி சிமி தீவிரவாத இயக்கம் என்றால் அதில் 30 வயது வரை பயணித்துவிட்டு பிறகு 30 வயதை தாண்டியவுடன் ஜாவாஹிருல்லாஹ் ஏண் அவரது கொள்கையை மாற்றிக்கொண்டு பயணிக்க கூடாது. 10 வயதில் ஒருவருக்கு ஒரு விஷயம் தவறு என்று படும் அதே நபருக்கு 20 வயதில் அது சரியென்று படும். மற்றொருவருக்கு 20 வயதில் சரியென்று பட்ட ஒன்று 25 வயதில் தவறு என்று படும் இதை வைத்தெல்லாம் ஒருவரை எடை போடுவது முட்டாள்தனம். ஜவாஹிருல்லாஹ் தலைவராக இருந்து, தற்போது மூத்த தலைவராக இயக்கி கொண்டிருக்கும் தமுமுக வின் பணிகளை பாருங்கள், 100 க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களை வைத்து அனைத்து சமுதாய மக்களுக்கும் சேவையாற்றிவருகிறது. இரத்த தானம் வழங்குவதில் தனி முத்திரை, மருத்துவ உதவிகள், கல்வி உதவிகள், மாற்று மத சகோதரர்களுக்கும் வட்டியில்லா கடன் உதவி திட்டங்கள் என மக்கள் சேவையாற்றிகொண்டிருக்கிறது தமுமுக. பாரத பிரதமர் மன்மோகன் சிங் முதல் தமிழக முதல் அமைச்சர் கருணாநிதி, ஜெயலலிதா வரை அணைவரும் எங்கள் சேவையை பாராற்றியுள்ளார்கள். தமுமுக எந்த தீவிரவாத செயல்களில் ஈடுபட்டது என்று ஈரோடு சரவணனோ அல்லது பின்னூட்டக்காரர்களோ ஆதாரத்தோடு கூறமுடியுமா?

  வெறும் பத்திரிக்கை செய்திகளை வைத்துக்கொண்டு முஸ்லிம்களையும் அவர்களின் இயக்கங்களை தீவிரவாத முத்திரை குத்துவது நியாயமானது இல்லை. அப்படி தாங்களிடம் ஆதாரம் இருக்கும் பட்சத்தில் நீதிமன்றங்களை நாடலாம் அதைவிடுத்து தன் மனோயிச்சையின் படி வாய்க்குவந்ததை உளறக்கூடாது. சகோ.வழக்கறிஞர்.ஜெய்னுல் ஆபிதின் கேட்டதற்கு முறையான ஆதாரங்களை காட்டாமல் இந்த பத்திரிக்கையில் வந்தது அந்த பத்திரிக்கையில் வந்தது என்று சப்பைகட்டு கட்டாமல் முறையான ஆதராத்தை காட்டவும். இப்படிதான் பொய்யான வழக்கை காவல்துறை ஜோடித்து தமுமுகவின் நிறுவனரான குணங்குடி ஹனீபா அவர்களை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது ஆனால் 13 ஆண்டுகள் கழித்து எந்த குற்றமும் செய்யாதவர் என நீதிமன்றம் அவரை முதிய வயதில் விடுதலை செய்கிறது. இப்படிதான் முஸ்லிம்கள் மீதும் அவர்களின் இயக்கத்தின் மீதும் வைக்கும் குற்றாச்சாட்டுகள் அனைத்தும் பிற்காலத்தில் பொய்த்துப்போய்விட்டன. ஆகவே எங்கள் உடன்பிறவா சகோதரர்கள் உண்மையை விளங்கி கொண்டு கருத்திட வேண்டும்.

 38. I am surprised to see muslims coming into the site and commenting — Would we people do them as well. “இனிய இளவல்” seems forgetting one thing — He/She seems proud Indian, but would you able to go and hoist Indian in Lashadeep not in Kashmir — then I will accept muslims in India treat India as their mother land. Can he able to remove the pakisthani flags in Kumbakonam — the proud temple city — at least can he able to ask the muslims in Kasi leave that town and find some other place for their masque other than close to Kasi Vishwanather temple

 39. இனிய இளவல் சார்,
  ரொம்ப சிரமப்பட வேண்டாம். நீங்கள் கட்டுரையையும் முழுவதுமாகப் படிக்கவில்லை, மறுமொழிகளையும் முழுவதுமாகப் படிக்கவில்லை. அரைகுறையாக அலசிவிட்டு அனைத்தையும் படித்துவிட்டதுப் போல பாவுலா காட்டுகிறீர்கள். சில உதாரணங்கள்.

  நீங்கள் கூறியிருப்பது:-

  //வெறும் பத்திரிக்கை செய்திகளை வைத்துக்கொண்டு முஸ்லிம்களையும் அவர்களின் இயக்கங்களை தீவிரவாத முத்திரை குத்துவது நியாயமானது இல்லை. அப்படி தாங்களிடம் ஆதாரம் இருக்கும் பட்சத்தில் நீதிமன்றங்களை நாடலாம் அதைவிடுத்து தன் மனோயிச்சையின் படி வாய்க்குவந்ததை உளறக்கூடாது.//

  இந்த கேள்விக்கு ஏற்கனவே பதிலளிக்கப் பட்டுவுட்டது. மேலே சிக்கந்தர் என்ற நண்பர் இதே கேள்வியைக் கேட்டார். அதற்க்கு அனந்தசயனன் என்ற நண்பர் கொடுத்த பதில்:-

  //இங்கு ஒரு சிலர் எழுதயுள்ள மறுமொழிகளை பார்த்தேன் பொதுவாகவே அவர்களுக்கு சகிப்பு தன்மை கொஞ்சம் கம்மிதான், எதோ பத்திரிகைகள்ல வந்தத செய்தயைதான் இவர்களால் ஆதரமாக காட்டமுடிகிறது என்று சொல்கிறார்கள்,இதே கனவான்கள் குஜராத்தில் நடைபெற்ற கலவரத்திற்கு திரு.நரேந்திர மோடி அவர்கள்தான் காரணமென்று ஒலிப்பெருக்கி வைத்து ஊரு ஊருஅக சென்று தம்பட்டம் அடித்தார்களே அப்போது இவர்களிடத்தில் பத்திரிக்கை செய்தி தவிர வேறு என்ன ஆதாரம் இருந்தது, இன்று வரையுள்ளும் கூட இவர்களின் குற்றச்சாட்டுக்கான ஒரு ஊருபடியான ஆதாரத்தை இவர்களால் கொடுக்க முடியவில்லை ஊச்சநீதிமன்றம் அமைத்த விசாரணை கம்மிட்டியனர் கரடியாக கத்தியும் இவர்களால் ஒரு ஊருபடியான ஆதாரத்தை கூட காட்டமுடியவில்லை,.//

  இல்லை என்று உங்களால் மறுக்க முடியுமா??

  அடுத்து,

  //சற்று சிந்தித்து பாருங்கள் சிமி தீவிரவாத இயக்கம் என்று எந்த ஆதாரத்தை வைத்து நீங்கள் கூறுகின்றீர்கள் இந்திய அரசு தடைசெய்திருப்பதாலா.//

  அதே இந்திய அரசு பஜ்ரங் தள் போன்ற இந்து அமைப்புகளை தடை செய்திருந்தால் உங்களின் வாதம் இதே போன்று இருந்திருக்குமா?? மேலே, கட்டுரையில் ஆசிரியர் சிமி அமைப்பின் கொள்கையை அந்த அமைப்பின் வலைத்தளத்திலிருந்தே கொடுத்திருந்தார். இன்னொரு முறை படித்துப் பார்க்கவும்:-

  “இந்தியாவின் மதச்சார்பின்மை மீதோ அரசியலமைப்புச் சட்டத்தின் மீதோ எங்களுக்குக் கடுகளவும் நம்பிக்கை கிடையாது. இவை அனைத்துமே இஸ்லாமிய மக்களுக்கு எதிரானவை. ஓவ்வொரு இந்தியனையும் கட்டாயப் படுத்தி முஸ்லீமாக மாற்றுவோம். தேவைப்பட்டால் வன்முறை கொண்டு முஸ்லீமாக மாற்றுவோம். இதன் மூலம் இந்தியாவையே இஸ்லாமிய நாடாக மாற்றுவோம்”

  இப்படிப்பட்ட கொள்கையை உடைய அமைப்பை பயங்கரவாத இயக்கம் என்று சொல்லாமால் தன்னலமற்ற தொண்டு நிறுவனம் என்றா கூறமுடியும்?

  நாங்கள் யாரும் எல்லா இஸ்லாமியர்களும் கெட்டவர்கள், தீவிரவாதிகள் என்று கூறவில்லை. அதேபோல எல்லா இந்துக்களும் அப்பாவிகள், நல்லவர்கள் என்றும் சொல்லவில்லை. அப்படிக்கூறும் ஒரு இந்துவைக் காட்டுங்கள் பாப்போம். இதற்க்குக் காரணம் “எல்லா மார்கங்களிலும் நல்லவர்களும் உண்டு, கேட்டவர்களும் உண்டு” என்று நாங்கள் நம்புவதால்தான். சிறந்த உதாரணம்:- எங்கள் மத நூல்களில் கெட்டவர்கள், அரக்கர்கள் என்று நாங்கள் கூறும் அனைவரும் இந்துக்களே, மற்ற மதத்தினர் எவரையும் அல்ல. “மற்ற மதத்தினரை, குறிப்பாக காபீர்களை வெறுக்க வேண்டும்” என்று ஆணையிடப்பட்டவர்கள் நீங்கள். இந்துமதத்தில், மற்ற மார்கங்களை வெறுக்கசொல்லி எந்த அறிவுரையும் இல்லை.

  இறுதியாக,

  //இந்தியாவின் மதிக்கத்தக்க பண்பாளர் டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் கூட நான் முதலில் இந்தியன் பிறகுதான் இஸ்லாமியன் என்று கூறியதை நினைவுபடுத்துகிறேன்.//

  அப்துல் கலாம் அய்யாவின் பெயரைச்சொல்லி மக்களை ஏமாற்றியது போதும். உங்களை விட அவரை நாங்கள் அதிகமாகவே மதிக்கிறோம், நேசிக்கிறோம். அவர் மட்டும் தேர்தலில் நின்றால், அவருக்கு விழும் அதிக ஓட்டுக்கள் இந்துக்களின் ஒட்டுக்களாகத் தான் இருக்கும்.
  ஒரே கேள்வி, நீங்கள் சொன்ன இஸ்லாமிய அமைப்புக்கள் செய்யும் அராஜகங்களை அப்துல் கலாம் அய்யா போன்றவர்கள் ஆதரிப்பார்களா என்று ஒரு கேள்வியை உங்களுக்கே கேட்டுக்கொள்ளுங்கள்! விடையும் உங்களுக்கே கிடைக்கும்!!

  தவறை உங்கள் மீது வைத்துக் கொண்டு, அடுத்தவர்களை குறைகூறாதீர்கள்!!!

  நீங்கள் கூறிய ஏக இறைவன் உங்களுக்கு நல்ல புத்தி அளிக்கட்டும்,
  இந்தியன்…

 40. இதோ இன்னிக்கு பெருமதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய, இந்திய மண்ணின் மீதும் மக்களின் மீதும் மட்டற்ற பாசம் கொண்டுள்ள தன்னலமற்ற தியாகி, மாண்புமிகு அண்ணல் அபு ஜிண்டல் சொல்லியிருக்கிறார் :

  இந்தியாவில் நடந்த தாக்குதல்களுக்கெல்லாம் “சிமி”தான் முதுகெலும்பு

  ஓஓஓஓ போலீஸ் அதிகாரிகள் வன்முறைமூலம் அந்த அப்பாவி அவதார புருஷனிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலம்-ல அது ? அடடாஆஆ …. இந்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள்தான் எவ்வளவு கொடுமைக்கார அரக்கர்கள் …. ச்ச்சு ச்ச்சு ச்ச்சு ச்ச்சு ….

 41. “ஆகவே இந்த மைண்ணிற்கு சொந்தகாரர்களான முஸ்லிம்களை குரோத பார்வைகொண்டு பார்ப்பதை முதலில் மாற்றிக்கொள்ளுங்கள்.”

  அது வேற ஒண்ணு இல்ல இளவல் அவர்களே, இந்துக்களுக்கு வேற வேலையே இல்லியா, அதுவுமில்லாம சமீப காலமா இந்துக்களுக்கெல்லாம் பைத்தியம் வேற முத்திப்போக ஆரம்பிச்சிடிச்சா, அதனாலதான் முஸ்லிம்களை குரோத பார்வைகொண்டு பாக்க ஆரம்பிச்சிட்டாங்க. நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க, அவங்கள்ளாம் முஸ்லிமா மாறிட்டாங்கண்ணா எல்ல்ல்ல்லாம் சரியா போயிடும். என்ன நா சொல்றது ?

 42. இனிய இளவல் என்ற புனைபெயரில் எழுதும் முஸ்லிம் பயங்கரவாதியே ,நீ சொல்லும் ஆம்புலன்ஸ் சேவை எப்படி என்று தென்காசி மக்களுக்கு தெரியும்,உய்ரிக்கு போராடுபவர் ஹிந்து என்று தெரிந்தவுடன் அவரை காப்பாற்றாமல் விட்டது,ஆகநீங்கள் பசுதோல் போர்த்திய புலி என்று,ஆடு நனைவதை கண்டு ஓநாய் அழுவவது போன்று உங்கள் சேவை,அதனால் உண்மையாக நீ வாழ பழகிகொள் ,உன் கோட்பட்படி உலகம் முழுவதும் இஸ்லாம் பரவ வேண்டும் என்று எல்லோரையும் அழிக்க நினைக்காதீர்கள் அது எந்நாளும் நடக்காது .

 43. மறுக்க முடியாத வாதம், ஒப்புகொள்வதில் ஏன் பிடிவாதம்,பதில் சொல்ல முடியாவிட்டால் ஆரியன் பார்பான் என்பதா?தி க காரன் போல… சரவணனுக்கு ஜே !!.

 44. நம்மை அழிக்க அவர்கள் நினைத்தால் , அவர்களை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி ஒழிப்பதே மிக சிறந்த தீர்வாக இருக்கும். உயிர் சனாதனத்திற்கு உடல் மண்ணுக்கோ இல்லை நெருப்புக்கோ என்று நாம் செயலில் இறங்கும் நேரம் வெகு விரைவில் வரும் என்றே கருதுகுறேன். இனி ஒரு முறை சண்டை வந்தால் அதன் அடிப்படைகளை இருந்த இடம் தெரியாமல் செய்ய சுளுரைபோம். சநாதனம் நாளை டென் மார்க்கில் மறுபடி உயிர் பெறலாம்..ஆனால் அவர்களுடையது அங்கே பிறந்து அங்கேயே அழிவை பார்க்க போவது…ஜெய் ஹிந்து..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *