பயங்கரவாதிகள் கைது: தமிழக அரசுக்கு நன்றி!

இந்து முன்னணி மற்றும் பாஜக நிர்வாகிகளின் கொலைகள் தொடர்பான வழக்குகளில் தொடர்புடைய மூன்று பயங்கரவாதிகள் தமிழக காவல் துறையால் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலமாக, மாநிலத்தின் அமைதிக்கு விடுக்கப்பட்ட சவால் முறியடிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 20 ஆண்டுகளாகவே தமிழகம் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் கொலைக்களமாக இருந்து வந்துள்ளது. இதுவரை இந்தக் கயவர்களின் கொலைவெறிக்கு 150-க்கு மேற்பட்டோர் தமிழகத்தில் பலியாகியுள்ளனர். வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் தான், ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகமும், இந்து முன்னணி தலைமை அலுவலகமும் வெடிகுண்டுகளால் தகர்க்கப்பட்டன. இவற்றில், முக்கியமான பல தலைவர்கள் கொல்லப்பட்டனர்.

வேலூரில் 2012-ல் கொல்லப்பட்ட மருத்துவர் அரவிந்த ரெட்டி

ஆரம்பத்தில் இந்து இயக்கப் பொறுப்பாளர்கள் ல்லப்பட்டபோதெல்லாம், வேடிக்கை பார்த்த காவல்துறை, பல கொலை வழக்குகளை திசைதிருப்பி வந்தது. முஸ்லிம் வாக்குவங்கி மாயையில் உழன்ற அரசியல்வாதிகள், பாதிக்கப்பட்டவர்களைக் கைவிட்டு, தாக்கியவர்களுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுவந்த விநோதமும் நடைபெற்றுவந்தது.

கொலைபாதகர்களின் உச்சகட்ட  வெறியாட்டமாக, 1998 பிப்ரவரி 14-இல் கோவை குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. அதில் மட்டும் 70-க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதன்பிறகே இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்கள் மீது அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்கத் துவங்கின. அதன் காரணமாக 200-க்கு மேற்பட்டோர் கைதாகி தண்டனை பெற்றனர். இப்போதும் கூட, அல்உம்மா தலைவர் பாட்சா, அன்சாரி உள்ளிட்ட 20-க்கு மேற்பட்டோர் சிறையில் உள்ளனர்.

அரசின் தொடர் நடவடிக்கைகளால், 2000 ஆண்டு வரை நிகழ்ந்த தொடர் படுகொலைகளுக்கு, 2007 வரை சிறு இடைவெளி ஏற்பட்டது. முஸ்லிம் பயங்கரவதிகள் ஒடுக்கப்பட்டுவிட்டார்கள் என்று எண்ணியிருந்த வேளையில், மீண்டும் அடுத்த தலைமுறை பயங்கரவாதிகளின் வெறியாட்டம் துவங்கியது.  2007-இல் தென்காசியில் குமார பாண்டியன் சகோதரர்கள் மூவர் கொடூரமாகக் கொல்லப்பட்டபோதே, மீண்டும் விஷ விருட்சம் கிளை பரப்புவது தெரிந்தது.

காண்க: மறக்குமா இந்த மாபாதகங்கள்?: தொடரும் படுகொலைகள்

ஆனால், அப்போதைய திமுக அரசும் சரி, பிற்பாடு வந்த அதிமுக அரசும் சரி, முந்தைய அனுபவங்களை மறந்துவிட்டு, மீண்டும் இஸ்லாமிய பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் தொய்வை ஏற்படுத்தின. இதன் காரணமாக, தமிழகத்தில் ஆங்காங்கே இந்து இயக்க நிர்வாகிகள் கொல்லப்படுவது வாடிக்கையானது.

வேலூரில் கொல்லப்பட்ட இந்து முன்னணி மாநில செயலாலர் வெள்ளையப்பன்
வேலூரில் 2013-ல் கொல்லப்பட்ட இ.மு. மாநில செயலாளர் வெள்ளையப்பன்

2009-இல், திண்டுக்கல் மாவட்ட ஆர்.எஸ்.எஸ். பிரசாரகர் பாஸ்கர் கொலைவெறியர்களின் தாக்குதலில் காலை இழந்தார். 2012-இல் மேட்டுப்பாளையத்தில் திருப்பூர் மாவட்ட ஆர்.எஸ்.எஸ். செயலாளர் ஆனந்தன் கொடூரமாகத் தாக்கப்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார். 2013 ஏப்ரலில் கன்னியாகுமரியில் பாஜக மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி நடைப்பயிற்சியின்போது கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயத்துடன் தப்பினார். 2013 ஏப்ரலில் நீலகிரி மாவட்டத்தில் இந்து முண்னணி நிர்வாகிகள் மஞ்சுநாத், ஹரிஹரன் உள்ளிட்ட ஐவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிர் தப்பினர்.

மேலும், 2012 ஜூலை 4- இல் நாகப்பட்டினத்தில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் புகழேந்தி, 2012 அக்டோபர் 23-இல் வேலூரில் பாஜக மாநில நிர்வாகி மருத்துவர் அரவிந்த் ரெட்டி,  2013 மார்ச் 19- இல் பரமக்குடி நகராட்சி பாஜக முன்னாள் கவுன்சிலர் முருகன். 2013 ஜூலை 1-இல் வேலூரில் இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் வெள்ளையப்பன்,  2013 ஜூலை 8- இல் ராமேஸ்வரத்தில் ஒன்றிய இந்து முன்னணி செயலாளர் குட்டநம்பு, 2013 ஜூலை 19-இல் சேலத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் ஆகியோர் கொடியவர்களால் கொல்லப்பட்டனர்.

காண்க: பா.ஜ.க மருத்துவ அணித் தலைவர் அர்விந்த் ரெட்டி படுகொலை

காண்க: இந்து சமுதாய நலனுக்காக மீண்டும் ஒரு களபலி வெள்ளையப்பன்ஜி!

இவையல்லாது, பல இடங்களில் சிறு மோதல்களும் நடைபெற்றுள்ளன. இவ்வாறு கொலைகாரர்கள் சுதந்திரமாக உலவியபடி  இந்து இயக்க நிர்வாகிகளைக் கொன்று குவித்து வந்த போதெல்லாம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கொலைக்கான காரணங்களை செயற்கையாக ஜோடிப்பதில் தான் காவல்துறை கவனம் செலுத்தியது.

சேலத்தில் 2013-ல் கொல்லப்பட்ட பாஜக மாநில பொ.செ. ஆடிட்டர் ரமேஷ்

ஒவ்வொரு முறை தங்கள் தலைவர்கள் கொல்லப்படும்போதும், கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் போன்ற ஜனநாயக முறைகளில் எதிர்ப்பைப் பதிவு செய்துவந்த இந்து இயக்கங்கள், ஆதரவு தெரிவிக்க ஆளில்லாமல், இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு எதிராக நிராயுதபாணியாக களத்தில் போராடி வந்தனர்.

சேலத்தில்  நடைபெற்ற பாஜக மாநில நிர்வாகி ரமேஷ் கொலை தான் இதற்கு முற்றுப்புள்ளி வைத்தது. அமைதியான சுபாவம் கொண்ட ரமேஷ் மிகக் கொடூரமாகக் கொல்லப்பட்டது, அரசியல் கட்சியினரின் கண்களைத் திறந்தது. தமிழகம் முழுவதிலும் அதற்கு எழுந்த எதிர்ப்பு, முஸ்லிம் வாக்குவங்கி மாயையில் மூழ்கிக் கிடந்த அரசியல் கட்சியினரையும் அரசையும் தெளியவைத்தது.

காண்க: தமிழகத்தை சிந்திக்கவைத்த ஆடிட்டர் ரமேஷ்!

அப்போதும் கூட, சாதாரணக் கொலைகளை அரசியல் கொலைகளாக இந்து இயக்கங்கள் பிரசாரம் செய்வதாக மாநில காவல்துறை தலைவர் ராமானுஜம் அறிக்கை வெளியிட்டார் என்பது மறக்கக் கூடாத தகவல். இபபோது கைதாகியுள்ள இஸ்லாமிய பயங்கரவாதிகள் தினந்தோறும் அளித்துவரும் தகவல்களை அறியும்போது, காவல்துறையே திடுக்கிட்டுப் போயிருக்கிறது.

வெள்ளையப்பன், ரமேஷ் கொலை வழக்குகளில் ஒரே கும்பல் ஈடுபட்டிருப்பதைக் கண்டறிந்த காவல்துறை, வரைபட உதவியுடன், தேடப்படும் பயங்கரவாதிகளின் படங்களை வெளியிட்டது தான் திருப்புமுனையாக அமைந்தது. சென்ற ஆண்டு மதுரைக்கு பாஜக தலைவர் அத்வானி வந்தபோது அவரைக் குறிவைத்து, அவர் சென்ற பாதையில்  நாசம் விளைவிக்க வைக்கப்பட்ட வெடிகுண்டுகள் கண்டுபிடித்து அகற்றப்பட்டன. அந்த வழக்கில் தேடப்பட்டவர்களுக்கும், இந்த தொடர் கொலைகளுக்கும் தொடர்பு இருப்பதை ஜூலை மாதமே காவல்துறையினர் கண்டுபிடித்துவிட்டனர். எனினும் அவர்கள் தப்பிவிட்டதால், அவர்களை காவல்துறை வலைவீசித் தேடி வந்தது.

இந்நிலையில் தான், அண்மையில் திருப்பூரில் முஸ்லிம் கொலைவெறிக் கும்பலில் தொடர்புடைய சிலர் சிக்கினர். அவர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில், கொலையாளிகளின் திட்டங்கள் காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களின் கொலைப் பட்டியலில் இடம் பெற்றிருந்த 40-க்கு மேற்பட்ட இந்து இயக்கத் தலைவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

காவல்துறையினர் வெளியிட்ட சுவரொட்டிகள் தமிகத்தின் பல இடங்களில் ஒட்டப்பட்டதால், பயங்கரவாதிகளின் நடமாட்டம் முடக்கப்பட்டது. தவிர, பயங்கரவாதிகள் குறித்த துப்புச் செய்திகளும் காவல்துறைக்குக் கிடைத்தன. அதன்மூலமாக, ஒளிந்திருந்த பயங்கரவாதிகளை காவல்துறை நெருங்குவது சுலபமானது.

போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக்.
கைதாகியுள்ள பயங்கரவாதிகள் ‘போலீஸ்’ பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக்.

கடந்த அக்டோபர் 4-ம் தேதி, சென்னை- சூளை பகுதியில், திருப்பதிக்குச் செல்லும் குடை ஊர்வலத்தில் நாசவேலை செய்யக் காத்திருந்த ‘போலீஸ்’ பக்ருதீன் சிக்கினார். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், ஆந்திரப்பிரதேச மாநிலம், புத்தூரில் மறைந்திருந்த பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர் அக். 5- ம் தேதி பிடிபட்டுள்ளனர்.

முன்னதாக, கொளையாளிகள் மறைந்திருந்த வீட்டை வேவு பார்க்கச் சென்ற இன்ஸ்பெக்டர் லட்சுமணனும் இன்னொரு காவலரும்  பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டிருக்கின்றனர். தற்காப்புக்காக அவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பன்னா இஸ்மாயில் குண்டுக்காயம் பட்டிருக்கிறார். அதன்பிறகு மத அமைப்புகளைக் கண்காணிக்கும் நுண்ணறிவு போலீஸாரின் உதவியுடன் பயங்கரவாதிகளுடன் பேச்சு (?) நடத்தி, அவர்கள் சரணடையச் செய்யப்பட்டுள்ளனர். அப்போது பிலால் மாலிக்கின் மனைவியும் 3 குழந்தைகளும் மீட்கப்பட்டுள்ளனர்.

தலைமறைவாக உள்ள பயங்கரவாதி அபுபக்கர் சித்திக்
தலைமறைவாக உள்ள பயங்கரவாதி அபுபக்கர் சித்திக்

எனினும், அபுபக்கர் சித்திக் என்ற கொடிய பயங்கரவாதி போலீஸாரின் வலையிலிருந்து தப்பி இருக்கிறான். அவன் சிக்கினால் தான், பயங்கர நாசவேலைகளை வேருடன் கிள்ளி எறிய முடியும். இந்த பயங்கரவாதிகள் அனைவருக்கும் பாகிஸ்தான் ஆதரவு அமைப்பினரின் ஆதரவு இருப்பதை அறிந்து காவல்துறை அதிர்ச்சியில் உள்ளது. இவர்களிடம் விசாரனை நடத்த தேசிய புலனாய்வு அமைப்பினரும் (NIA) வந்துள்ளனர்.

கைதாகியுள்ள பயங்கரவாதிகள் கொடுக்கும் வாக்குமூலங்களும் தகவல்களும், அவர்களது பயங்கர சதித் திட்டங்களை வெளிப்படுத்தி உள்ளன. தமிழகத்தில் அதிவேகமாக வளர்ந்துவரும் இந்து இயக்கங்களை நசுக்கவும், அவற்றை ஆதரிக்கும் மக்களை மிரட்டவும், மேலும் பலரைக் கொல்ல இருப்பதாகவும், அதற்கென மாநிலம் முழுவதும் 50-க்கு மேற்பட்டவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருப்பதாகவும், கைதாகியுள்ள பயங்கரவாதிகள் கூறி உள்ளனர்.

இது மாநிலத்தின் சட்டம் ஒழுக்கிற்கும், சட்டத்தின் ஆட்சிக்கும் விடுக்கப்பட்ட சவால் ஆகும். நல்ல வேளையாக, சரியான சமயத்தில் விஷமிகள் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதிகளின் நடமாட்டம் முடக்கப்பட்டிருக்கிறது. இறைவனுக்கு நன்றி!

இந்து இயக்கத் தலைவர்களின் கொலை வழக்கில் தீவிரவாதிகளைக் கைது செய்த சிறப்பு புலனாய்வுக் குழுவினருடன் முதல்வர் ஜெயலலிதா.
இந்து இயக்கத் தலைவர்களின் கொலை வழக்கில் தீவிரவாதிகளைக் கைது செய்த சிறப்பு புலனாய்வுக் குழுவினருடன் முதல்வர் ஜெயலலிதா.

2012-இல் மருத்துவர் அரவிந்த ரெட்டி கொல்லப்பட்டபோதே இந்த நடவடிக்கையை அரசு எடுத்திருந்தால், விலை மதிப்பற்ற பல மனித உயிர்களைக் காத்திருக்கலாம் என்பதை இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. அரவிந்த் கொலைவழக்கு மட்டுமல்ல, பரமக்குடி முருகன் கொலைவழக்கும், நிலத் தகராறு காரணமாக நடந்ததாகவே திசை திருப்பப்பட்டது.

பாஜக மாநில மருத்துவ அணி தலைவர் அரவிந்த ரெட்டி கொலை வழக்கை காவல்துறை திசைதிருப்பி 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இப்போது பிடிபட்டுள்ள பயங்கரவாதிகள் அரவிந்தை தாங்களே கொன்றதாகக் கூறி இருக்கின்றனர். இபபோது போலீசாரின் பொய்க்கதைகள் பல்லிளிக்கத் துவங்கி இருக்கின்றன. வேலூர் மாவட்ட காவல்துறை அரவிந்த் ரெட்டி கொலைவழக்கை திசை திருப்பியது தெள்ளத் தெளிவாக நிரூபணமாகிறது. ஆகவே, தவறு செய்த அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுப்பது அவசியம்.

(காண்க: கீழே உள்ள டி.ஜி.பி அறிக்கை)

முஸ்லிம் வெறியர்களின் கொட்டத்தை கண்டும் காணாமல் இருந்துகொண்டு, மேற்படிக் கொலைகளைப் பூசி மெழுகிய காவல்துறைத் தலைவர் ராமானுஜம் மீதும் நடவடிக்கை பாய வேண்டும். இந்த பயங்கரவாதிகளுக்கு பல மாநிலங்களிலும், அரபு நாடுகள் உள்ளிட்ட பல  வெளிநாடுகளிலும் இருந்து நிதியுதவி கிடைத்திருப்பது அம்பலமாகி உள்ளது. இனிமேலும், அரசு மெத்தனம் காட்டக் கூடாது.

பயங்கரவாதிகளைப் பிடித்த காவல்துறைக்கு வெகுமதியும் பதவி உயர்வும் அளித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, இந்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டால் தான், எதிர்காலத்தில், காவல்துறையினர் எந்தத் தவறும் நேராமல் பணிபுரிவர். அரசியல்வாதிகளின் பகடைக்காய்கள் தாங்கள் அல்ல என்பதை அப்போது தான் அவர்கள் உணர்வார்கள்.

காண்க: 21 பேருக்கு தலா ரூ.5 லட்சம் (தினமணி செய்தி)

காவல் ஆய்வாளர் லட்சுமணனுக்கு நன்றி!
காவல் ஆய்வாளர் லட்சுமணனுக்கு நன்றி!

உயிரையும் பொருட்படுத்தாமல், கொலைவெறியர்களின் தாக்குதலுக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஆய்வாளர் லட்சுமணனுக்கு நமது நன்றியும் வணக்கங்களும் என்றும் உண்டு.  மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, ரூ. 15 லட்சம் நிதியுதவியும் வழங்கிய  முதல்வருக்கும் நன்றி.

மதவெறிக் கயவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதை பாஜக தவிர்த்த எந்த அரசியல் கட்சியும் வரவேற்காமல் இருப்பது சந்தேகங்களை எழுப்புவதாக உள்ளது. ஆடிட்டர் ரமேஷ் கொல்லப்பட்டபோது நெக்குருகி இரங்கல் தெரிவித்த எந்த ஒரு அரசியல் தலைவரும் இப்போது, அவரைக் கொன்ற கொடியவர்கள் கைதாகி இருப்பதை வரவேற்காதது ஏன்? தங்கள் மீதும் கொலைவெறியர்களின் இலக்கு பாய்ந்துவிடும் என்று அவர்கள் அஞ்கிறார்களா? இனியும் முஸ்லிம் வாக்குவங்கி மயக்கத்தில் இவ்வாறு செயல்படும் கட்சிகளைப் புறக்கணிக்க வேண்டிய கடமையும் தமிழக வாக்காளர்களுக்கு உள்ளது.

மொத்தத்தில், நடந்துள்ள நல்ல செயல்கள் மிகத் தாமதமாயினும், இப்போதேனும் நடந்திருக்கிறதே (Better than Never) என்று நிம்மதிப் பெருமூச்சு விடச் செய்துள்ளன. பிடிபட்டுள்ள பயங்கரவாதிகள் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் விசாரணையைத் துரிதப்படுத்தி, நாசகாரக் கூலிப்படையினர் அனைவரையும் கைது செய்வது தமிழக அரசின் கடமை.

துணிவுள்ள முதல்வர் என்று பெயரெடுத்த ஜெயலலிதா இடைப்பட்ட காலத்தில் தனது பெயரைக் கெடுத்துக் கொண்டிருந்தாலும், இப்போதைய தீவிர நடவடிக்கைகள் அவரது வீழ்ச்சியைத் தடுத்துள்ளன. இந்த நடவடிக்கைகள் தொடர வேண்டும். தமிழகம் அமைதிப் பூங்காவாக என்றும் மிளிர வேண்டும். இதுவே அனைவரின் எதிர்பார்ப்பு.

 

மிஸ்டர் டி.ஜி.பி, சொன்னது நீங்கள் தானா?

தமிழக டி.ஜி.பி ராமானுஜம்
தமிழக டி.ஜி.பி ராமானுஜம்

பாஜக, இந்து முன்னணி பிரமுகர்களின் கொலைகளுக்குக் காரணம் சொந்தப் பிரச்னை அல்லது சம்பந்தப்பட்டவரின் மதத்தினரால் ஏற்பட்ட பிரச்னை தான். இந்த கொலைகள் சம்பந்தமாக காவல்துறை துரித நடவடிக்கை எடுத்து வருகின்றது என்று 26.07.2013 அன்று, தமிழக டிஜிபி ராமானுஜம் அறிக்கை வெளியிட்டார். அவரது அறிக்கையில் சில பகுதிகள் இதோ…

இந்து அமைப்புகளின் தலைவர்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றனர். அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையையும் காவல்துறை எடுக்கவில்லை என்பது போல இந்து அமைப்புத் தலைவர்களின் கருத்துகள் உள்ளன….

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மதுரை வந்தபோது திருமங்கலத்தில் பாலத்துக்கு கீழ் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டது. இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். 3 பேர் தேடப்படுகின்றனர்.

பாஜக பொதுக்குழு உறுப்பினர் புகழேந்தி நாகப்பட்டினத்தில் சிலரால் கொல்லப்பட்டார். அது நில விவகாரம் மற்றும் பணப்பிரச்னையால் ஏற்பட்டுள்ளது. இதில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். 2 பேர் சரணடைந்தனர். புகழேந்தி, கடந்த காலங்களில் ரவுடி பட்டியலில் இடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக மருத்துவ அணி செயலாளர் டாக்டர் அரவிந்த் ரெட்டி கொலை பண விவகாரத்தால் நடந்தது. இது தொடர்பாக வசூர் ராஜா, உதயகுமார், தங்கராஜ், சந்திரன், ராஜா, பிச்சை பெருமாள், தரணிகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்….

கோவை மேட்டுப்பாளையம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தாலுகா செயலாளர் ஆனந்தன் முன்விரோதம் காரணமாக தாக்கப்பட்டார். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

பரமக்குடி பாஜக நகர செயலாளர் தேங்காய் கடை முருகன் கொல்லப்பட்டார். இது நிலப்பிரச்னையால் நடந்தது. இது தொடர்பாக 4 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டனர்….

ஊட்டியில் இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் மஞ்சுநாத் தாக்கப்பட்டது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். மத உணர்வுகளை மதிக்காமல் மஞ்சுநாத் பேசியதால் தாக்குதல் நடத்தியுள்ளனர். மஞ்சுநாத் மீதும் புகார் வந்ததால் அவரும் கைது செய்யப்பட்டார்….

இந்து முன்னணி நகர செயலாளர் ஹரிஹரன் குன்னூரில் மசூதியில் போஸ்டர் ஒட்டியதால் தாக்குதல் நடந்தது. இது தொடர்பாக அயூப், சதாம் என 10 பேர் கைது செய்யப்பட்டனர்….

இந்து முன்னணி உறுப்பினர் குட்டி நம்பு ராமேஸ்வரத்தில் தாக்கப்பட்டு இறந்தார். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். இது சொந்த பிரச்னையால் ஏற்பட்ட மோதல்.

இந்து அமைப்புகள், பாஜக பிரமுகர்களுக்கு தேவையான போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேற்சொன்ன வழக்குகளை பார்க்கும் போது சில சம்பவங்கள் சொந்த பிரச்னையால் ஏற்பட்டுள்ளன. சில சம்பவங்களில் சம்பந்தப்பட்டவரின் மதத்தை சேர்ந்தவரால் பிரச்சனை ஏற்பட்டுள்ளன என்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறுவதும் பேசுவதும் உண்மையல்ல. குற்றவாளிகளை கண்டறிவதில் தேவையான நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு டிஜிபி ராமானுஜம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம்: டிஜிபி ராமானுஜம் அறிக்கை (வெப்துனியா- தமிழ்)

15 Replies to “பயங்கரவாதிகள் கைது: தமிழக அரசுக்கு நன்றி!”

 1. தமிழகத்தில் தான் இந்த ஒட்டு வங்கி அரசியல் மிகவும் மிகவும் மிகவும் மோசமாக உள்ளது. நான்கு ஐந்து நூறு ஆண்டுகளுக்கு முன்பு நமது தமிழ் நாடு இருந்தது எப்படி ,, இப்போது எப்படி …..ம் …ம்…ம்…ம்.. ஆண்டவா
  பரமசிவம்

 2. அன்புள்ள சேக்கிழான்,
  ஆறுதல் தரும் செய்திகள். நன்றி.

 3. பயங்கரவாதத்தை ஏவும் கயவர்களுக்கு சாமரம் வீச தமிழகத்தில் நிறைய பேர்கள் உள்ளனர். அவர்களது கருத்தைத்தான் டி.ஜி.பியும் எதிரொலித்தார்.

  இப்போது அவர்களது சாயம் வெளுத்துவிட்டது.

 4. தமிழக முதல்வரையும் தமிழக காவல்துறையும் பாராட்டியது சரியே . ஆனால் திருமங்கலத்தை சேர்ந்த ஆலம்பட்டியின் பாலத்தின் அடியில் வைக்கப்பட்ட pipe bomb ஐ கண்டுபிடித்து காவல்துறைக்கு தகவல் சொன்ன அந்த “”விவசாயி”” நன்றி சொல்ல வேண்டாமா? அவர் மட்டும் தகவல் தரவில்லை என்றால் திரு அத்வானி கதி என்ன ஆகியிருக்கும் என்று யோசித்து பாருங்கள். அதே போல புத்தூரில் 2 முஸ்லிம் தீவிரவாதிகளை பிடிக்க பெரிதும் உதவிய திரு ஸ்ரீநிவாஸ் அவர்களை மனதார பாராட்ட வேண்டாமா?ஒரு கட்டுரை எழுதி அவர்களை பாராட்டினால் மட்டும் போதாது. பிஜேபி தலைவர்கள் அவர்கள் இருவரையும் மேடை ஏற்றி பாராட்ட வேண்டும்
  பிஜேபி செய்யுமா?

 5. நமது தமிழ் நாட்டில் இந்த மாதிரியான பயங்கரங்கள் இனிமேலே நடக்காமல் இருக்க வேண்டுமென்று ஆண்டவனிடம் பிறர்த்தித்து கொள்ளுகிறேன் ; வாழ்க பாரதம்.

 6. Kudos to our TN police. Particularly to insp.Lakshmanan. Also we have to congratulate CM for this bold action and also rewarding alll the policemen who made this happen. Your article in asking questions to DG TN Police is excellent. He has lot to answer and if not at least say sorry to all Hindus whose feeling he hurted the most or step down from the post( but keep it in mind, as a obident servant of the govt. He would have made the statement to satisfy his political masters)

 7. Greetings!

  we appreciate the article and the details provided, thank for the work.

  It is time to retrospect the functioning of Hindu organization functioning, too many groups working hard like politicians, but there is no productive output for these work. It is time to have a apex body of the Hindu Organization and work at gross-root and do productive support to under-privilege HINDUs.

  senior leaders may put path for a apex body and organize in more productive way. Let us work together.

 8. இக்கட்டுரைக்குச் சில மாதம் முன் வந்த கட்டுரைகளில் தமிழ்நாடு முதல்வரையும் போலீசையும் திட்டி பின்னூட்டமிட்டிருந்தார்கள். அதைத்தவறென்று சுட்டிக்காட்டி போலீசுக்கு டைம் வேண்டுமென்று சொன்னபோது என்னைத்திட்டினார்கள் அப்பின்னூட்டக்கரர்கள்.

  இன்று?

  ஓகே. பெட்டர் லேட் தேன் நெவர் !

 9. I think TN took action because the victims families went to Supreme Court!
  Otherwise they would have kept quiet. This is all for votes only
  I am sure the police knew who did that. Once the case was filed, they immediately arrested them. Govt/police are hand in glove with terrorists. The terrorists pay them off to keep quiet
  Not when there is a case in SC
  Do not believe in the sincerity of this government ever

 10. NIA தேசிய புலனாய்வு பிரிவு இதில் என்ன பங்களித்தது? தீவிரவாத தடுப்பில் மாநில அரசுகளை சிதம்பரமமும் மைய அரசும் குறையே கூறி வந்தன.

 11. பாரத நாட்டிலிருந்தும், ஏன், அகிலத்திலிருந்தும் இஸ்லாமிய பயங்கரவாதத்தை வேரும் வேரடி மண்ணுமில்லாமல் செய்ய வேண்டுமெனில், இந்த பயங்கரவாதிகளின் பின்புலத்தை கண்டறிந்து, இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்தில் நடத்தி, அவர்களுக்கு, கொடுமையான முறையில் மரணதண்டனை நிறைவேற்றவேண்டும்.

 12. எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள் அல்ல , ஆனால் தீவிரவாதிகளெல்லாம் முஸ்லிம்களாகவே இருக்கின்றனர் என்பது மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கிறது. தீவிரவாதிகளுக்கு ஆதரவாய் அறிக்கை விட்ட டி.ஜி.பி.ராமானுஜம் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

  ஹிந்துக்கள் மீது அடக்குமுறை தடுக்கப்பட ஹிந்து ஆட்சி அமைய வேண்டும்.73%ஹிந்துக்கள் ஒன்றிணைந்தால் உலகின் மகாசக்தியாக பாரதம் மீண்டும் உருவாகும். ஹிந்துக்களே ஒன்றிணைவீர்களா? -ஆலயம்.எஸ்.ராஜா.

 13. பாகிஸ்தானின் சிறைகளில் இருந்து சுமார் 2000 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக இன்று 19-10-2013- செய்தி வந்துள்ளது. இவர்கள் அனைவருமே பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு , நீதிமன்ற தண்டனை பெற்றவர்கள். இவர்களுக்கு மேலும் தக்க பயிற்சி கொடுத்து இந்தியாவுக்குள் திருட்டு தனமாக அனுப்பிவைத்து, நம் நாட்டில் பயங்கரவாதத்துக்கு விதை விதைக்க பாகிஸ்தானின் ஐ எஸ் ஐ மற்றும் தாலிபானீய சொம்புகள் திட்டமிட்டு வருகின்றன. நமது ராணுவமும், பாதுகாப்பு துறையும் இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக செயல் பட வேண்டும். கையாலாகாத காங்கிரசின் மத்திய அரசு என்ன செய்யப் போகிறது ?

 14. There is no term called “Terrorist” in the charge sheet filled by police department under present TN CM.
  kindly thank others after reading the facts.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *