கடந்த 2026 ஆகஸ்டு 8 அன்று திருப்பூரில் அறம் அறக்கட்டளையின் ஏகாதசி உரைகள் 2026 நிகழ்வில் அரவிந்தன் நீலகண்டன் ஆற்றிய பேருரையின் வீடியோ பதிவு.
“விநாயகர் அகவல் குறித்து. பேச வேண்டி நினைத்திருந்தவற்றை முழுமையாக பேசவில்லை. மேடை உரைகள் பேசுவது மிகவும் குறைந்துவிட்டது. எனவே எண்ணிய அனைத்தையும் பேசவில்லை. பக்தி யோக சாதனை ஆகிய இரண்டு பாதைகளும் எல்லை கிழித்து பிரித்துவிட முடியாதவை. என்ற போதிலும் திருமந்திரத்தில் யோக-தந்திர சாதனைகளில் உள்ள முக்கியத்துவமும் இதர திருமுறைகளில் பக்திக்கு உள்ள முக்கியத்துவமும் அவை இரண்டு முழுக்க வெவ்வேறான பாதைகள் என்பது போல காட்சி மயக்கமொன்றை ஏற்படுத்துகின்றன. விநாயகர் அகவல் இந்த மயக்கத்தை இல்லாமலாக்குவதுடன் இரண்டையும் ஆற்றலுடனும் அழகுடனும் இனிமையுடனும் இணைக்க முடியும் என்பதைக் காட்டி அதன் பின்னர் அருணகிரிநாதர், தாயுமானவர், பாரதி வரை ஏற்பட்ட இணைவு இனிமைக்கு பிள்ளையார் சுழியாகவும் மிகச்சிறந்த பூரணமாகவும் அமைந்துள்ளது. இதை மையப்படுத்தியே பேசினேன்” என்று இது குறித்து உரையாளர் குறிப்பிடுகிறார்.
