வனவாசிப் பழங்குடிகள் இந்துக்களே

ஜவஹர்லால் நேருவின் தோழரான வீரியர் எல்வின் கிறிஸ்தவ மிஷினரி ஆவார். இந்திய வனவாசிகளை மதம் மாற்ற அவர் வந்தார். அவரது தொடக்க காலங்களில் வனவாசிகள் இந்துக்கள் அல்ல என்றும் இந்துமயமாக்கப்படுவதே வனவாசிகளுக்குப் பெரும் தீமை என்றும் அவர் பிரசாரம் செய்து வந்தார். ஏறத்தாழ பத்து ஆண்டுகள் வனவாசிகளுடன் வாழ்ந்த பின்னர் அவர் எழுதினார்: “பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நான் முதன்முதலில் ஆதிகுடிகளுடன் வாழ வந்தபோது அவர்கள் இந்துக்கள் அல்ல எனக் கருதினேன். ஆனால் பத்து ஆண்டுகள் அவர்களைக் குறித்து ஆழமாக ஆராய்ச்சி செய்தபோது நான் கொண்டிருந்த எண்ணம் தவறு என்பது நிரூபணமாகிவிட்டது.”…

View More வனவாசிப் பழங்குடிகள் இந்துக்களே

புனித தோமா சினிமா: கத்தோலிக்கர்களே சிந்திப்பீர்!

இந்தியாவுக்கு, குறிப்பாகத் தமிழகத்துக்கு, தோமா வந்ததாகக் கூறுகிற கத்தோலிக்க சபையாரும் கிறிஸ்தவப் பெருமக்களும் அதனைத் தங்கள் நம்பிக்கை என்ற அளவில் மட்டுமே கூறுவார்களெனில் அதில் கேள்வி கேட்க எவ்வித உரிமையும் எவருக்கும் இல்லை. ஆனால் அதனை வரலாறாக முன்வைத்து அவரைக் கொன்றதாக இந்துக்கள்மீது குற்றம் சாட்டுவார்களேயானால் நிச்சயமாக அவர்கள் கூறுவதன் வரலாற்றுத்தன்மையை ஆராய்வது ஒவ்வொரு தமிழ்-இந்துவின் கடமையாகிறது…

View More புனித தோமா சினிமா: கத்தோலிக்கர்களே சிந்திப்பீர்!

கீதை, சீதை, தாய் தெய்வம், பெண்ணடிமைத்தனம்: சில கேள்விகள்

ஸ்ரீ கிருஷ்ணர் “பெண்களும் பரகதி பெறுவர்” (கீதை 9.32) என கீதையில் கூறுகிற போது அவர் கூறுவது ‘பெண் தாழ்ந்தவள்’ எனும் மனநிலை படைத்த ஆணினை நோக்கி என்றே கருத வேண்டும். “அவளுக்கு ஞானமும் வீடுபேறும் கிடைக்கும்” என கீதை சொல்வது மிக உன்னத நிலையை இந்த பிறவியிலேயே அவள் அடைந்திட முடியும் என்னும் எக்காலத்துக்குமான உண்மையையும் எனப் புரிந்து கொள்ள வேண்டும்….சீதை எந்த இடத்திலும் சொன்னதைக் கேட்டுக்கொண்டு அமைதியாக இருக்கும் ஒரு பெண்ணடிமைப் பாத்திரமாக சித்தரிக்கப் படவில்லை. மாறாக வலுவான பெண்ணியப் பார்வை கொண்ட, அதே நேரத்தில் சமுதாயத்துக்கு ஒரு தன்னிறைவு இலட்சியமாக திகழும் பாத்திரமாகவே அவள் காட்டப் படுகிறாள். குறுகிய எல்லைகளைக் கடந்து மானுடம் முழுவதையும் அரவணைக்கும் பார்வையை சீதை மூலமாக இராமாயணம் நமக்கு வைக்கிறது

View More கீதை, சீதை, தாய் தெய்வம், பெண்ணடிமைத்தனம்: சில கேள்விகள்

சோதிடம் என்பது உண்மையா பொய்யா?

வாழ்க்கையை நலமும் அழகும் செய்யப் பயன்படும் வானநூல் சாத்திரங்களை, இந்து தருமம் ஏற்கிறது. இந்துக்களின் சடங்குகள், வாழ்க்கை நிகழ்ச்சிகள், விவசாய வேலைகள் ஆகிய அனைத்திலும் பஞ்சாங்கம் ஒரு முக்கிய இடத்தை பெறுகிறது.
ஆனால் இந்த அழகிய பண்பாட்டு அம்சம் மூடநம்பிக்கையாக மாறுவதை இந்து தருமம் தடுக்கிறது.

View More சோதிடம் என்பது உண்மையா பொய்யா?

இந்து சேவை அமைப்புகளின் தொண்டு

மாற்றுமத சகோதரர் ஒருவர் என்னிடம் ‘எங்கள் மதத்தில் பாருங்கள் எவ்வளவோ தொண்டு அமைப்புகள்…

View More இந்து சேவை அமைப்புகளின் தொண்டு

டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் பேச்சு-தமிழாக்கம்

“..நான் Hinduism என்பதன் வரையறை பார்த்த போது அது சிருஷ்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தினை தாங்கும், போஷிக்கும், ஒருங்கிணைத்து பாதுகாக்கும் தர்மம் என கண்டேன். அது இல்லாமல் இப்பிரபஞ்சமே பிரிந்து போய் அழிந்துவிடும். வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்துக்கும் தர்மம் ஒவ்வொரு விதமான செயல்பாடுகளை வலியுறுத்துகிறது…..

நான் என்றுமே ஸ்ரீ ராமகிருஷ்ண விவேகானந்த ஆன்மிக கருத்துக்களால் உத்வேகம் பெற்றுள்ளேன்.”

View More டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் பேச்சு-தமிழாக்கம்

அமைதிக்கான நீண்ட துதி: ஜே.கிருஷ்ணமூர்த்தி

“ஸமஸ்கிருதத்தில் அமைதிக்கான நீண்ட துதி ஒன்று உள்ளது. பற்பல நூற்றாண்டுகளுக்கு முன், அமைதியின் தேவையை முற்றிலும் உணர்ந்த ஒருவரால் இயற்றப்பட்டது. தவிர அவரது அன்றாட வாழ்க்கையும் அமைதியில் வேரூன்றியதாக இருந்திருக்க வேண்டும். – ஜே. கிருஷ்ணமூர்த்தி”

View More அமைதிக்கான நீண்ட துதி: ஜே.கிருஷ்ணமூர்த்தி

சாதி வெறியருக்கு சங்கரர் எழுதியது

“இவன் பிராம்மணன் இவன் நாய்மாமிசம் உட்கொள்பவன் என்ற இந்த மகத்தான வேற்றுமை எனும் மோகம் எங்கிருந்து வந்தது?”

View More சாதி வெறியருக்கு சங்கரர் எழுதியது

அலைஸ் கால்ட்ரோன் – உலக அமைதிக்காக உழைத்த இந்து

அமெரிக்க இசை கலைஞரும் சனாதன தருமத்தின் ஆன்மிக இசை பாரம்பரியத்தின் மூலமும் நாடு, இன மத பேதமின்றி உலக அமைதிக்காக உழைத்தவருமான இந்த பெண் கலைஞரினை உலக நன்மைக்கு உழைத்த இந்துக்கள் வரிசையில் தன் வாசகர்களுக்கு அறிமுகப் படுத்துவதில் தமிழ்இந்து.காம் பெருமை அடைகிறது.

View More அலைஸ் கால்ட்ரோன் – உலக அமைதிக்காக உழைத்த இந்து