ஸ்ரீரங்கம் மோகனரங்கன் எழுதியுள்ள இந்த நூல் பல விதங்களில் முக்கியமானது. மூன்று பகுதிகளாக இந்த நூல் அமைந்துள்ளது. பிரபத்தி நெறியை “அனைவரும் கேட்குமாறு” ராமானுஜர் கூறவில்லை, தேர்ந்தெடுத்த சில வைஷ்ணவர்களுக்கு மட்டுமே கூறினார் என்ற ரீதியில் சில சம்பிரதாயவாதிகள் விவரிப்பதை ஆசிரியர் கடுமையாக மறுக்கிறார். தமது தரப்பிற்கு அடுக்கடுக்காக ஆதாரங்களைத் தருகிறார். “வருத்தத்தினாலே பெற்ற சீரிய அர்த்தத்தைத் தாமே மேல்விழுந்து க்ருபையினாலே எல்லார்க்கும் வெளியிட்டருளினாரிறே”.. ஆசார்யன் என்ற சொல் இராமானுசன் ஒருவனையே குறிக்கும், இராமானுசனைக் கைகாட்டும் பணியைச் செய்பவர்களே மற்ற அனைத்து ஆசாரியர்களும்…
View More ஸ்ரீராமாநுஜரும் சமத்துவமும்: புத்தக அறிமுகம்Author: ஜடாயு
ஸ்ரீ ஹனுமத் பஞ்சரத்னம் – தமிழில்
ஆர்யா என்ற சந்தத்தில் அமைந்த அழகும் இனிமையும் ததும்பும் இந்தத் துதிப்பாடல் ஆதிசங்கரர் அருளியது என்று சம்பிரதாயமாக கருதப்படுகிறது.. இளஞ்சூரியனென முகமலர் – கருணை ரசம் நிறைந்து ததும்பும் கண்கள் – உயிர்தருவோனைப் போற்றுவேன் – அழகிய மகிமையுடையோன் – அஞ்சனையின் பேறானோன்..
View More ஸ்ரீ ஹனுமத் பஞ்சரத்னம் – தமிழில்பாரதியாரும் காசியும்
பாரதி கல்லூரி செல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களில் கங்கா நதிக்கரையில் உட்கார்ந்து கொண்டு கவிதைகள் புனைவதிலும், இயற்கையழகை அனுபவிப்பதிலும், நண்டர்களுடன் படகில் உல்லாச யாத்திரை போவதிலுமாகப் பொழுதைக் கழிப்பார். அந்தணருக்கேற்ற ஆசாரமின்றி எல்லா ஜாதியாருடனும் கைகோர்த்துக் கொண்டு உலாவுவதும், நியம நிஷ்டையில்லாது எப்போதும் கோட்டும் சட்டையும் தலையில் முண்டாசும் காலில் பூட்ஸும் அணிந்திருப்பதும்… பாரதியின் காசி வாசம் மொத்தம் ஐந்தே ஆண்டுகள் தான். காசி வாசத்தில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களும், திறப்புகளும், தரிசனங்களுமே எட்டையபுரத்தில் ‘இளசைச் சுப்பிரமணியன்’ என்று சம்பிரதாயமாக தமிழ்ப் பண்டித நடையில் கவிதை எழுதிக் கொண்டிருந்த சுப்பையாவை, மகத்தான இலட்சியங்களும், தேசிய உணர்வும், சுதந்திர சிந்தனைகளும் கொண்ட சுப்பிரமணிய பாரதி என்ற நவீனத் தமிழ்க் கவிஞராகவும், எழுத்தாளராகவும், படைப்பாளியாகவும் மாற்றின…
View More பாரதியாரும் காசியும்பொன்னியின் செல்வன் பாகம்-1: திரைப்பார்வை
ஒருவகையில் பொன்னியின் செல்வன் ஒரு “தமிழ் ஹாரி பாட்டர்” போல. சோழ சாம்ராஜ்ய வரலாற்றில் நிலவிய குழப்பத்தைக் களமாக்கி, ஒரு மாபெரும் காவியத்தன்மை கொண்ட நாவலை சிந்தித்தது கல்கியின் கூர்மையான வரலாற்று பிரக்ஞையையும், ஒரு கதாசிரியராக அவரது கற்பனை வளத்தையும் காட்டுகிறது.. ஒட்டுமொத்தமாக படம் சுவாரஸ்யமாக, ரசிக்கும்படியாக இருந்தது. சிற்சில போதாமைகள் தவிர்த்து பெரிய குறைகள், சொதப்பல்கள் எதுவும் இல்லை. இந்தப் படத்தின் முக்கியமான ஒரு குறை என்றால், இந்த மூன்று பாத்திரங்களைத் தவிர்த்து மற்றவைஅவ்வளவு சரியாக வெளிப்படவில்லை என்பது தான்…
View More பொன்னியின் செல்வன் பாகம்-1: திரைப்பார்வைராக்கெட்ரி: நம்பி விளைவு – திரைப்பார்வை
ஒரு சராசரி திரைப்பட ரசிகரை மட்டுமல்லாது, இஸ்ரோவையும், விண்வெளித்துறையையும் பற்றிய பல செய்திகளை அறிந்து, நம்பி நாராயணன் எழுதிய Ready to Fire புத்தகத்துடன் பரிச்சயம் உள்ளவர்களையும் கூட “வாவ்” சொல்ல வைத்திருப்பது இந்தப் படத்தின் ஆகப்பெரிய வெற்றி. முயன்றால் இந்திய சினிமா தனது கைக்கு அடக்கமான பட்ஜெட்டிலும் எத்தகைய வீச்சை, உயரத்தைக் கொண்டு வர முடியும் என்பதை இந்தப் படம் நிரூபித்திருக்கிறது. ‘ராக்கெட்ரி’ ஒவ்வொரு இந்திய இளைஞரும் பார்த்து உள்வாங்க வேண்டிய ஒரு திரைப்படம்…
View More ராக்கெட்ரி: நம்பி விளைவு – திரைப்பார்வைதண்டபாணி பஞ்சரத்னம், பொருளுடன்
பழனியாண்டவர் மீது அமைந்த சம்ஸ்கிருத ஸ்தோத்திரம் வேண்டும் என்று நண்பர் கேட்டார். தண்டபாணி பஞ்சரத்னம் உடனடியாக நினைவுக்கு வந்தது. கீழ்க்காணும் இந்த எளிய, இனிய ஸ்துதி சிருங்கேரி சங்கராச்சாரியார் ஜகத்குரு ஸ்ரீ ஸச்சிதானந்த சிவாபினவ நரசிம்ம பாரதி சுவாமிகள் (1858-1912) அருளியது. பழனி திருக்கோயிலுக்கும் சிருங்கேரி பீடத்திற்கும் நீண்டகாலத் தொடர்பு உண்டு…
View More தண்டபாணி பஞ்சரத்னம், பொருளுடன்திராவிட மாயை ஆங்கில மொழியாக்கம் வெளியீடு
தமிழக அரசியல் வரலாறு குறித்த முக்கியமான நூல் சுப்பு எழுதிய திராவிட மாயை (2010) நூலின் ஆங்கிலப் பதிப்பை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இன்றைய தமிழ்நாட்டு அரசியல் களத்தில் பாஜக மையமாகப் பேசக்கூடிய விஷயங்களுக்கான கருத்தியலை 10-12 ஆண்டுகள் முன்பிருந்தே தமிழ்ஹிந்து இணையதளம் வளர்த்தெடுத்து வந்திருக்கிறது..
View More திராவிட மாயை ஆங்கில மொழியாக்கம் வெளியீடுமுள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வில் அண்ணாமலை: ஒரு பார்வை
கடந்த 10 வருடங்களில் இலங்கைத் தமிழர் பிரசினை குறித்து இவ்வளவு தீர்க்கமான, விசாலமான, ஆழமான அரசியல், வரலாற்றுப் புரிதல்களை கொண்டதாக, இந்திய தேசிய நலனையும் ஈழத்தமிழர் மீது உண்மையான, பாசாங்கற்ற பரிவையும் ஒருங்கே உள்ளடக்கியதாக இப்படி ஓரு நேர்மையான பேச்சு தமிழ் மண்ணில் பேசப்பட்டிருக்கிறதா?..
View More முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வில் அண்ணாமலை: ஒரு பார்வைபாரதி நாத்திகரா? புராணங்களை மறுத்தவரா?
புராணங்களும் சாத்திரங்களும் பொய் என்று பாரதியார் கூறுவதாக ஒரு இந்து விரோத பதிவில் மேற்கோள் காட்டியிருந்ததை நண்பர் கவனப்படுத்தினார்.. மகாபாரதம் பொய் என்று பாரதி கருதியிருந்தால், ஏன் பாஞ்சாலி சபதம் எழுத வேண்டும்? பீமனையும் பார்த்தனையும் தான் எழுச்சி பெற்ற பாரதத்தின் லட்சிய நாயகர்களாக அவர் காண்கிறார்.. நிவ்ருத்தி எனப்படும் யோக, ஆன்மீக உயர்நிலையில் நின்று பாரதி அந்த வரிகளை எழுதுகிறார்..
View More பாரதி நாத்திகரா? புராணங்களை மறுத்தவரா?பல்லக்கு, சிவிகை, பாரம்பரியம், அறம்
ஆக, பல்லக்கு தமிழக அரசியல் களத்தில் சூடான விவாதப் பொருளாகி விட்டது. அச்சொல் பர்யங்க – பல்லங்க என்ற சம்ஸ்கிருத மூலம் கொண்டது. அதற்கான பழைய சொல் சிவிகை. சம்பந்தர் அழகிய சிவிகையில் அமர்ந்து காட்சி தருவதையும், ஏறி இறங்குவதையும் ஏகப்பட்ட இடங்களில் சேக்கிழார் பரவசத்துடன் வர்ணித்துச் செல்கிறார். அறத்தின் பயன் இது என்று நீட்டி முழக்கிச் சொல்லவேண்டாம்; சிவிகையில் அமர்ந்திருப்பவனையும் தூக்குபவனையும் பார்த்தாலே போதுமே என்கிறது குறள்…
View More பல்லக்கு, சிவிகை, பாரம்பரியம், அறம்