பெப்ருவரி 14, 2009. மனிதத் தன்மையற்ற பயங்கரவாதிகள் வைத்த குண்டுகளால் கோவையில் எழுபதுக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் இந்துக்கள் உயிரிழந்த கொடூரத்தின் நினைவுநாள். 11 ஆண்டுகளுக்குமுன் இதே நாளில் கோவை நகரின் பல்வேறு இடங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்பினால் உயிரிழந்த 50-க்கும் மேற்பட்ட எம் சகோதர சகோதரிகளுக்கு நினைவஞ்சலி செலுத்துவதுடன்…
View More கோவை குண்டு வெடிப்பு நினைவு தினம்Author: ஆசிரியர் குழு
நாற்குலம்
~ மகாகவி பாரதி மொழிபெயர்ப்பில் திலகர் வாக்கு
திலகர் சொன்னார்: ‘பழைய காலத்து நான்கு வர்ணப் பிரிவுக்கும் இப்போதுள்ள ஜாதி வேற்றுமைக்கும் பேதமிருக்கிறது. திருஷ்டாந்தமாக, இப்போது ஒரே பந்தியில் இருந்துண்ண விரும்பாதிருத்தல் சாதிப் பிரிவுக்கு லட்சணம் என்று பலர் நினைக்கிறார்கள். பழைய காலத்து விஷயம் இப்படியில்லை.
SC, ST அன்பர்களுக்கு ஓர் அறிவிப்பு
மத்திய அரசு SC மற்றும் ST பிரிவினருக்காக Rajiv Gandhi National Fellowship…
View More SC, ST அன்பர்களுக்கு ஓர் அறிவிப்புதலித் இந்து ஆன்மிக சங்கத் தலைவருடன் ஒரு பேட்டி
அருட்திரு காளிதாஸ் சுவாமிகள் அகில இந்திய தலித் இந்து மக்கள் ஆன்மிக சங்கத்தின் தலைவர். அவர் கூறுகிறார்: “…தலித்துகளுக்கு உதவுகிறோம் என்கிற பெயரில் கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்புகள் வெளிநாடுகளிலிருந்து பெரிய அளவில் பணத்தை இந்த நாட்டுக்குக் கொண்டு வருகின்றனர்… இதனால் தலித் மக்களுக்கு சக இந்துக்கள் தங்களைக் குறித்து அக்கறை கொள்ளவில்லை என்பது போன்ற எண்ணத்தைத் தோன்ற வைக்கிறது.”…
View More தலித் இந்து ஆன்மிக சங்கத் தலைவருடன் ஒரு பேட்டிமும்பை சம்பவங்கள் – அரசு என்ன செய்யப் போகிறது?
மீண்டும் ஒரு பயங்கர செயல். சற்று முன் வரை கிடைத்த தகவலின்படி, எண்பதுக்கும் மேற்பட்ட மக்கள் தீவிரவாதிகளின் தாறுமாறான துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர். இந்தத் தீவிரவாத சம்பவத்தில் பல உயர் அதிகாரிகளும் பொதுமக்களும் உயிரிழந்திருக்கிறார்கள். தீவிரவாத தடுப்பு பிரிவின் தலைவர் (ATS chief) ஹேமந்த் கார்காரே கொல்லப்பட்டிருக்கிறார். இது தவிர, இரண்டு நட்சத்திர ஓட்டல்களில் தீவிரவாதிகள் மக்களை பிணை வைத்துள்ளனர். இவற்றுக்கெல்லாம் டெக்கான் முஜாகிதீன் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தெரிகிறது.
View More மும்பை சம்பவங்கள் – அரசு என்ன செய்யப் போகிறது?சந்திரயான், பாரம்பரிய அறிவியல் மற்றும் அரைகுறை ‘பகுத்தறிவு’…
இந்து மரபில் மட்டுமே இந்த ராகு-கேது தொன்ம மரபு பூமி-சந்திரன் ஆகியவற்றின் இயக்கத்துடனும் நிழல்களுடனும் தொடர்பு கொள்ளச் செய்யப்பட்டு அவை சாயாகிரகங்கள் என அழைக்கப்பட்டன. வானியல் கணித்தல்களில் ஒரு கணிதச்சமன்பாட்டின் அங்கமாக மாற்றப்பட்டன….இந்திய பாரம்பரிய் அறிவியல் சஞ்சிகையில் பஞ்சாங்கங்களின் மழைக்கணிப்பு குறித்து ஒரு ஆராய்ச்சி வெளிவந்தது.. போலி பகுத்தறிவு பேசி அரசியல் நடத்தி இன்றைக்கு பெரும் பொறுப்பில் இருக்கும் தமிழகத் தலைவர் ஒருவர் சந்திரயான் விண்கலம் குறித்து கவிதை என்கிற பெயரில் சில கருத்துக்களை கூறியிருக்கிறார். அதில் தெரியும் இந்து எதிர்ப்பு வக்கிரம் அந்த தலைவரது பகுத்தறிவின்மைக்கும் கட்டியம் கூறுவதாக அமைந்திருப்பதுதான் இதில் வேடிக்கை!
View More சந்திரயான், பாரம்பரிய அறிவியல் மற்றும் அரைகுறை ‘பகுத்தறிவு’…வில்லனாகவே நடித்த நல்லவருடன் ஓர் அரிய பேட்டி
வில்லனாகவே நடித்த நல்லவர் எம்.என். நம்பியார் காலமாகிவிட்டார். சுமார் 66 ஆண்டுகளாக சபரிமலைக்குச் சென்ற நம்பியார் ஒரு பேட்டியில் கூறினார், “விரதம் இருக்கிறது சாமிக்காக கிடையாதுங்க. நம்ப மனத்தூய்மைக்காகத்தான். கடவுள் மீது பழியை போட்டுவிட்டு நாம் விரதம் இருக்கிறோம். நம்ம தவறை திருத்திக் கொண்டு வாழ இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.” இந்த அரிய பேட்டியைப் படியுங்கள்…
View More வில்லனாகவே நடித்த நல்லவருடன் ஓர் அரிய பேட்டிபுனிதர் அல்போன்ஸா ஒரு இனவாதக்குறியீடா?
ஒரு வெள்ளை இனமேன்மை வாத மனம் தான் போப் பதினாறாம் பெனிடிக்ட் *இந்தியாவின்* *முதல்* பெண் புனிதரை பட்டமளித்து அங்கீகரித்ததாகக் கூற முடியும்.. ஏனெனில் இந்தியா ஏற்கனவே அதன் மண்ணில் வளர்ந்த தெய்வீகப் பெண்களான புனிதைகள் பலரைக் கொண்டிருக்கிறது. சொல்லப் போனால், இனம் குறித்த அதீத உணர்ச்சி கிறிஸ்தவ சபையில், குறிப்பாக கத்தோலிக்க கிறிஸ்தவ சபையில் அதிகமாக இல்லாதிருந்திருந்தால் அல்போன்ஸா (”இந்தியாவுக்கான” என்றில்லாமல்) கத்தோலிக்க உலகனைத்துக்குமான புனிதையாகக் குறிப்பிடப்பட்டிருப்பார்.
View More புனிதர் அல்போன்ஸா ஒரு இனவாதக்குறியீடா?தீவிரவாதத்தை ஒழிப்போம், ஜனநாயகம் வளர்ப்போம்
ஆதி அந்தமில்லாத தர்ம நெறியாகிய நம் இந்து மதத்தில் வன்முறைக்கோ, பயங்கரவாதத்திற்கோ, எள்ளளவும் இடமில்லை…. மனமுதிர்ச்சி இன்றி, விளைவுகள் பற்றி சிந்திக்காமல் இந்த குண்டு வெடிப்பில் ஈடுபட்ட இந்துக்கள் (இவர்கள் மீதான குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும் பட்சத்தில்) சட்டத்தின் கீழ் கடுமையாக தண்டிக்கப் படவேண்டும்…”காவி தீவிரவாதம்” போன்ற பொறுப்பற்ற பிரசாரங்களினால், ஏற்கெனவே ஒற்றுமையின்றி பிரிந்து கிடந்து, தன் ஒருங்கிணைந்த ஊக்கத் திறனையும், சக்தியையும் உணராமல் இருக்கும் இந்து சமுதாயத்தில் அதிருப்தியும், குழப்பமும் அதிகரித்து, தேச ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் பங்கம் ஏற்படும் என்பதை நினைவில் கொண்டு ஊடகங்கள் பொறுப்புடன் செயல் படவேண்டும்….தீவிரவாதம் ஒழியட்டும். ஜனநாயகம் தழைக்கட்டும். அமைதி பெருகட்டும். தேசம் எல்லாத் துறைகளிலும் வளரட்டும்.
View More தீவிரவாதத்தை ஒழிப்போம், ஜனநாயகம் வளர்ப்போம்மானுடத்தை வாழவைக்கும் தீபத் திருவிழா
தாயுணர்வு கொண்ட ஆன்மிகமே பூமியின் காயங்களுக்கும் மானுட நல்வாழ்வுக்கும் அருமருந்தாக அமையும் என்பதே நரகாசுர வதம் எனும் தொன்மம் இன்றைய சூழலில் நமக்கு அளிக்கும் திருசெய்தியாகும்… மாசற்ற செல்வம் தோன்றிய திருநாள் தீபாவளி. இயற்கையுடன் இணைந்த ஆன்மிகத்துக்கு இறைவனே சான்றுரைத்த திருநாள். தென்னாப்பிரிக்காவில் மகாத்மாவின் சத்தியாகிரகத்தின் முன்னோடியாக விளங்கிய தீபாவளி இந்திய கொத்தடிமை தொழிலாளர்களின் தொடர்ந்த ஏறத்தாழ அரை நூற்றாண்டு போராட்டத்தினால் 1906 இல்தான் கொண்டாட அனுமதிக்கப்பட்டது.
அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!
View More மானுடத்தை வாழவைக்கும் தீபத் திருவிழா