வில்லனாகவே நடித்த நல்லவருடன் ஓர் அரிய பேட்டி

வில்லனாகவே நடித்த நல்லவர் எம்.என். நம்பியார் காலமாகிவிட்டார். சுமார் 66 ஆண்டுகளாக சபரிமலைக்குச் சென்ற நம்பியார் ஒரு பேட்டியில் கூறினார், “விரதம் இருக்கிறது சாமிக்காக கிடையாதுங்க. நம்ப மனத்தூய்மைக்காகத்தான். கடவுள் மீது பழியை போட்டுவிட்டு நாம் விரதம் இருக்கிறோம். நம்ம தவறை திருத்திக் கொண்டு வாழ இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.” இந்த அரிய பேட்டியைப் படியுங்கள்…

View More வில்லனாகவே நடித்த நல்லவருடன் ஓர் அரிய பேட்டி

புனிதர் அல்போன்ஸா ஒரு இனவாதக்குறியீடா?

ஒரு வெள்ளை இனமேன்மை வாத மனம் தான் போப் பதினாறாம் பெனிடிக்ட் *இந்தியாவின்* *முதல்* பெண் புனிதரை பட்டமளித்து அங்கீகரித்ததாகக் கூற முடியும்.. ஏனெனில் இந்தியா ஏற்கனவே அதன் மண்ணில் வளர்ந்த தெய்வீகப் பெண்களான புனிதைகள் பலரைக் கொண்டிருக்கிறது. சொல்லப் போனால், இனம் குறித்த அதீத உணர்ச்சி கிறிஸ்தவ சபையில், குறிப்பாக கத்தோலிக்க கிறிஸ்தவ சபையில் அதிகமாக இல்லாதிருந்திருந்தால் அல்போன்ஸா (”இந்தியாவுக்கான” என்றில்லாமல்) கத்தோலிக்க உலகனைத்துக்குமான புனிதையாகக் குறிப்பிடப்பட்டிருப்பார்.

View More புனிதர் அல்போன்ஸா ஒரு இனவாதக்குறியீடா?

தீவிரவாதத்தை ஒழிப்போம், ஜனநாயகம் வளர்ப்போம்

ஆதி அந்தமில்லாத தர்ம நெறியாகிய நம் இந்து மதத்தில் வன்முறைக்கோ, பயங்கரவாதத்திற்கோ, எள்ளளவும் இடமில்லை…. மனமுதிர்ச்சி இன்றி, விளைவுகள் பற்றி சிந்திக்காமல் இந்த குண்டு வெடிப்பில் ஈடுபட்ட இந்துக்கள் (இவர்கள் மீதான குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும் பட்சத்தில்) சட்டத்தின் கீழ் கடுமையாக தண்டிக்கப் படவேண்டும்…”காவி தீவிரவாதம்” போன்ற பொறுப்பற்ற பிரசாரங்களினால், ஏற்கெனவே ஒற்றுமையின்றி பிரிந்து கிடந்து, தன் ஒருங்கிணைந்த ஊக்கத் திறனையும், சக்தியையும் உணராமல் இருக்கும் இந்து சமுதாயத்தில் அதிருப்தியும், குழப்பமும் அதிகரித்து, தேச ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் பங்கம் ஏற்படும் என்பதை நினைவில் கொண்டு ஊடகங்கள் பொறுப்புடன் செயல் படவேண்டும்….தீவிரவாதம் ஒழியட்டும். ஜனநாயகம் தழைக்கட்டும். அமைதி பெருகட்டும். தேசம் எல்லாத் துறைகளிலும் வளரட்டும்.

View More தீவிரவாதத்தை ஒழிப்போம், ஜனநாயகம் வளர்ப்போம்

மானுடத்தை வாழவைக்கும் தீபத் திருவிழா

தாயுணர்வு கொண்ட ஆன்மிகமே பூமியின் காயங்களுக்கும் மானுட நல்வாழ்வுக்கும் அருமருந்தாக அமையும் என்பதே நரகாசுர வதம் எனும் தொன்மம் இன்றைய சூழலில் நமக்கு அளிக்கும் திருசெய்தியாகும்… மாசற்ற செல்வம் தோன்றிய திருநாள் தீபாவளி. இயற்கையுடன் இணைந்த ஆன்மிகத்துக்கு இறைவனே சான்றுரைத்த திருநாள். தென்னாப்பிரிக்காவில் மகாத்மாவின் சத்தியாகிரகத்தின் முன்னோடியாக விளங்கிய தீபாவளி இந்திய கொத்தடிமை தொழிலாளர்களின் தொடர்ந்த ஏறத்தாழ அரை நூற்றாண்டு போராட்டத்தினால் 1906 இல்தான் கொண்டாட அனுமதிக்கப்பட்டது.

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!

View More மானுடத்தை வாழவைக்கும் தீபத் திருவிழா

நிலவில் தடம் பதிக்கும் பாரதம்!

பாரத விண்வெளியாளர்கள் வெற்றிகரமாக “சந்திரயான்-1” என்னும் விண்கலத்தை விண்வெளியில் நிலவை நோக்கிச் செலுத்தியுள்ளார்கள்.…

View More நிலவில் தடம் பதிக்கும் பாரதம்!

வீரர் மோகன் சந்த் சர்மா: அஞ்சலி

நேற்று (செப்டம்பர் 19) டெல்லி குண்டு வெடிப்புகளுக்கு காரணமான பயங்கரவாதிகளை பிடிக்க சென்ற போது பயங்கரவாதிகளின் குண்டுகளுக்கு பலியானார் காவல் துறை அதிகாரி மோகன் சந்த் ஷர்மா. இதுவரை தமது கடமையில் 35 பயங்கரவாதிகளை உயிரிழக்க செய்த இந்த மாவீரர் தேசத்துக்காகவும் நம் அனைவரின் பாதுகாப்புக்காகவும் தமது சொந்த குடும்பத்தைக் கூட கவனிக்காமல் தனது உயிரை பலிதானமாக்கியுள்ளார்…. நமது போலி மனித உரிமை வாதிகள், விலைக்கு போன ஊடகங்கள் நம் அனைவருடையவும் பாதுகாப்புக்காக உயிர் துறந்தவர்களின் தியாகத்தின் கனத்தை, அவர்கள் குடும்பங்களின் சோகங்களை அவை நம் பிரக்ஞையில் பதிய வைப்பதே இல்லை…தமிழ் இந்து.காம் நம் அனைவருடைய பாதுகாப்புக்காகவும் தன் குடும்பத்தையும் கவனிக்காமல் தன்னை பலிதானமாக்கிய இந்த வீரத்திருமகனுக்கு அஞ்சலி செய்கிறது.

View More வீரர் மோகன் சந்த் சர்மா: அஞ்சலி

இன்று மகாகவி பாரதி நினைவு தினம்!

தமிழ்க் கவிதையால் தேசபக்திக் கனலைக் கொழுந்துவிட்டெரியச் செய்த மகாகவி சுப்ரமணிய பாரதியின் நினைவு நாள் இது.

அரசியல், ஆன்மீகம், காவியம், தத்துவம், சமூகம், முற்போக்குச் சிந்தனை, நகைச்சுவை என்று அவன் தொடாததில்லை. தொட்டுத் துலங்காததில்லை.

ஆங்கிலம், வடமொழி, பிரெஞ்சு என்று பல மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தான். அந்த ஞானத்தால் தமிழை வளப்படுத்தினான்.

View More இன்று மகாகவி பாரதி நினைவு தினம்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆர்.எஸ்.எஸ். உதவி

பிகாரில் திசை திரும்பி கட்டுக்கடங்காமல் ஓடிய கோசி நதி, பல உயிர்களையும் உடைமைகளையும் மூழ்கடித்து அனைவரையும் வருத்தமடையச் செய்த அதே வேளையில் மத வேற்றுமைகளையும் மூழ்கடித்தது சற்று ஆறுதலான விஷயம். வெள்ள நிவாரண முகாம்களில் மத வேறுபாடு இன்றி எல்லா மதத்தினரும் ஒருவருக்கொருவர் உதவுவது மகிழ்ச்சி ஏற்படுத்துவதாக இருந்தது. சேவா பாரதி அமைப்பால் ஏற்படுத்தப்பட்டுள்ள முகாமில் 100-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ஒரு வாரமாக தங்கி உள்ளனர். “எங்களை நல்ல முறையில் கவனித்துக் கொள்கின்றனர். நிவாரண முகாமில் இதைவிட வாழ்க்கை சிறப்பாக இருக்க முடியாது” என்று முகமது சலாலுதீன் கூறினார்…

View More வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆர்.எஸ்.எஸ். உதவி

ஸ்ரீகுமரகுருபரர் சரித்திரச் சுருக்கம்: உ.வே.சா

[உ.வே.சாவின் கட்டுரை, படங்களுடன்] “குமரகுருபர முனிவரர் காசியில் தங்கியிருந்த மடத்திற்குக் குமாரசாமி மடமென்று பெயர். அங்கே இவர் சிவயோகம் செய்து கொண்டு வாழ்ந்துவந்தார். இவர் தாம் வாழ்ந்திருந்த மடாலயத்தில் புராணசாலை ஒன்று ஏற்படுத்தி அங்கே ஹிந்துஸ்தானி பாஷையிலும் தமிழிலும் புராணப் பிரசங்கமும் செய்ததுண்டு. சிறந்த இராம பக்தராகிய துளஸீதாசர் அந்தப் பிரசங்கங்களைக் கேட்டு உவந்தனரென்றும், கம்பராமாயணத்திலுள்ள கருத்துக்களைத் தாம் ஹிந்துஸ்தானியில் இயற்றிய இராமாயணத்தில் அமைத்துக் கொண்டன ரென்றும் கூறுவர்.”

View More ஸ்ரீகுமரகுருபரர் சரித்திரச் சுருக்கம்: உ.வே.சா

தாய்ச் சமயம் திரும்பும் திருவிழா

தாய்நாடு காக்க, தாய்மொழி காக்க, தீண்டாமையை ஒழிக்க, சாதி ஏற்றத் தாழ்வுகளை நீக்க, இந்து ஒற்றுமை காத்திட தமிழன்பர்கள் பலர் தாய்மதமாம் இந்து மதம் திரும்பும் திருவிழா வரும் ஞாயிறன்று (31-08-2008) நாகர்கோயிலில் நிகழவிருக்கிறது. அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

View More தாய்ச் சமயம் திரும்பும் திருவிழா