சென்னை தமிழர் விரோத மாநாடும், முறியடிக்கப்பட்ட சதியும்

“தமிழ்நாட்டில் அன்னிய மத ஏகாதிபத்தியத்துக்கு வேலை செய்யும் கைக்கூலிகள் சொந்த மண்ணின் பண்பாட்டை காப்பாற்ற ஒற்றை மனிதனாக வீரத்துடன் போராடிய அத்திருமகனாரை ‘சைத்தானின் பிள்ளை’ என வர்ணித்த அந்த கொடுஞ்செயல் ‘தமிழர் சமய மாநாடு’ எனும் போர்வையில் நடைபெற்ற அந்த கூட்டத்தில் அரங்கேறியது…” –
தமிழரின் அழியாப் பாரம்பரியமான இந்து சமயத்தின்மேல் கிறிஸ்துவ சாயம் பூசி நம்மையும், நம் மூதாதையர்களையும் சுய சிந்தனையற்றவர்களாக சித்தரிக்க அண்மையில் சென்னையில் ஒரு மாநாடு மூலம் சிலர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு, அந்த மாநாட்டின் இறுதி நாளிலேயே பலத்த அடி விழுந்தது. இம்மாநாட்டில் கலந்து கொண்ட சிலர் நமது தளத்தைத் தொடர்பு கொண்டு அளித்த தகவல்களின் அடிப்படையில் இது பற்றிய ஆதாரபூர்வமான குறிப்புகளைத் தொகுத்து அளிக்கிறோம்.

View More சென்னை தமிழர் விரோத மாநாடும், முறியடிக்கப்பட்ட சதியும்

பகவத் கீதை – பாரதியார் மொழிபெயர்ப்பு

[இந்த நூலை இங்கிருந்து PDF கோப்பாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்]
தமிழி்ல் செய்யப்பட்டுள்ள பகவத்கீதை மொழிபெயர்ப்புகளில் மஹாகவி பாரதியின் மொழிபெயர்ப்பு மிகப் பரவலாக அறியப்பட்டதும், ஐயத்துக்கு இடமில்லாமல் மிகச் சிறப்பானதுமாகும். இந்த மொழிபெயர்ப்புக்கு பாரதி எழுதிய முன்னுரை மட்டுமே தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். பாரதியின் இந்த மொழிபெயர்ப்பைப் படிக்கும் எவருக்கும், கிருஷ்ண-அர்ஜுன உரையாடல்களில் காணப்படும் நெருக்கமான பாவத்தையும், கேள்விகளைக் கேட்கும்போது அர்ஜுனன் எடுத்துக்கொள்ளும் அதிகப்படி உரிமையையும், சகஜ மனோபாவத்தையும் கவனிக்கும்போது, பகவத்கீதை ஒரு பிற்கால இடைச்செருகல் என்ற வாதத்தில் பொருளில்லாமல் போவது இயல்பாகவே விளங்கும்.

View More பகவத் கீதை – பாரதியார் மொழிபெயர்ப்பு

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு!

‘எனது நூல் மட்டுமே மெய்ஞான நூல்’, ‘நான் கடவுளுக்கு என் மொழியில் இட்டு அழைக்கும் பெயர் மட்டுமே மெய்யானது’, ‘இவ்விரண்டையும் நம்பி ஏற்றுக்கொள்ளாதவர்கள் நரகத்துக்குப் போவார்கள்; அவர்களைக் கொன்றாலும் நான் சொர்க்கத்துக்குப் போவேன்’ என்றெல்லாம் கண்மூடித்தனமாக நம்புகிறவர்களை நாம் சமத்துவ, சகோதரத்துவ வாதிகள் என்று நம்புகிறோம்!

View More எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு!

தமிழர்களுக்குச் சிந்திக்கச் சொல்லித்தந்த புனித தோமையர்

தாமஸ் இந்தியாவிற்கு வந்தார் என்று சொன்னால் என்ன ஆகிவிடும். ஏன் நாம் இதனை எதிர்க்க வேண்டும்? என சிலர் கேட்கலாம். இந்த தலைமுறையின் தலை சிறந்த தமிழ் எழுத்தாளரான ஜெயமோகன் இந்த முயற்சிகளின் பின்னால் இருக்கும் வலைப்பின்னல்களை வெளிக்கொணர்கிறார்.

ஜெயமோகனின் தெளிவான கட்டுரையை அவருடைய வலைப்பதிவில் வாசிக்கலாம்.

View More தமிழர்களுக்குச் சிந்திக்கச் சொல்லித்தந்த புனித தோமையர்

ஆஸ்திரேலியாவில் இந்துக் கோவில்கள்

1970 ஆம் ஆண்டுகளில் இருந்து இந்துக்கள் ஆஸ்திரேலியாவுக்குப் புலம் பெயர்ந்துள்ளனர்; அவர்கள் தாம் குடியமர்ந்த இடங்களில் வழிபாட்டுத்தலங்களையும் அமைத்துள்ளனர். இந்து சமயம் காட்டும் நெறியில் இந்துக்களாகவே வாழ்வதற்கு அவர்கள் உறுதியான அத்திவாரத்தை இட்டுள்ளனர். 15 இந்து கோவில்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன…

View More ஆஸ்திரேலியாவில் இந்துக் கோவில்கள்

ஹிமாசலப்பிரதேச ஆலய நெரிசலில் மரணித்த பக்தர்களுக்கு அஞ்சலி

தமிழ்இந்து.காம் சார்பாக உயிரிழந்த பக்தர்களின் உற்றார் உறவினர்களுக்குத் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்கள் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.

View More ஹிமாசலப்பிரதேச ஆலய நெரிசலில் மரணித்த பக்தர்களுக்கு அஞ்சலி

குண்டுவெடிப்புகளில் இறந்தவர்களுக்கு அஞ்சலி

பெங்களூரிலும் அகமதாபாதிலும் குண்டுவெடிப்புகளில் இறந்த உயிர்களுக்கு தமிழ்இந்து.காம் தனது அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறது. மனிதம் மிக உன்னதமானது. உலகமெங்கும் வாழும் மனிதர்களை குலம், இனம், மொழி, மத நம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு அப்பால் இந்து வேதங்கள் ‘அழிவின்மையின் மைந்தர்களே’ என அழைக்கின்றன….

View More குண்டுவெடிப்புகளில் இறந்தவர்களுக்கு அஞ்சலி

மாணிக்கவாசகரின் பிரபஞ்ச அழகியல் தரிசனம்

அமரர் நீதியரசர் மு.மு. இஸ்மாயில் எழுதுகிறார் – எப்படி எண்ணற்ற நுண் துகள்களை ஒரு சிறிய ஒளிக்கீற்றின் மூலமாகச் சூரியன் வெளிப்படுத்துகிறதோ அப்படியே மிகப் பெரியவனாக இருக்கிற இறைவனும் அழகும் அற்புதமும் தாண்டவமாடும் இவ்வண்ட கோள முழுமையையும் தன் அருளொளியால் வெளிக்காட்டுகிறான்…

View More மாணிக்கவாசகரின் பிரபஞ்ச அழகியல் தரிசனம்

மகாகவி பாரதியின் ‘குரு கோவிந்தசிங்’ – 1

(பாடலும் விளக்கமும்.) ரஷ்யப் புரட்சியையும் ஃபிஜித் தீவில் தமிழர் படும் பாட்டையும் தனது சொற்களால் அமர கவிதைகளாக்கிய பாரதி பத்தாவது சீக்கிய குருவான குரு கோவிந்தசிங் ‘கால்ஸா’ என்ற தர்மம் காக்கும் வீரர் படையை அமைத்த அற்புத நிகழ்ச்சியையும் எழுதி வைத்திருக்கிறான். தர்மதேவதையின் தாகம் தீர்க்க ஐந்து வீரர்களை பலி கேட்ட குரு கோவிந்தசிங்கின் சோதனை, வரலாற்றின் ஓர் பிரமிக்க வைக்கும் நிகழ்வு…

View More மகாகவி பாரதியின் ‘குரு கோவிந்தசிங்’ – 1

இந்து யார்?: சுவாமி விவேகானந்தர்

இந்து என்ற பெயர் தாங்கிய மனிதனுக்கு ஏற்படும் துன்பம், உங்களது உள்ளத்தை வந்து தாக்கி, உங்களது மகனே துன்பப்படுவது போன்ற உணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். அப்பொழுது தான், அப்பொழுது மட்டுமே நீங்கள் இந்து ஆவீர்கள்.

View More இந்து யார்?: சுவாமி விவேகானந்தர்