அவ்வரங்கள் இவ்வரங்கள்

இராமகாதை வரங்கள் காரணமாகவே வளர்கிறது… கைகேயி இராமனை, ‘உங்கள் மகன்’ என்றோ, ‘கோசலை மகன்’ என்றோ கூடச் சொல்லாமல் யாரோ மூன்றாம் வீட்டுப் பையனைச் சொல்வது போல ‘சீதை கேள்வன்’ என்று குறிப்பிடுகிறாள்… இராமன், ‘என் தாய்’ என்று கூடச் சொல்லாமல் அதற்கும் ஒருபடி மேலே போய், ‘என் தெய்வம்’ என்கிறான்… “இராமபிரான் எனக்கொரு வரம் தந்தார். அதை அவருக்கு நினைவுப்படுத்த வேண்டும்,” என்கிறாள் சீதை… கைகேயி கேட்ட இரு வரங்களில் தொடங்கிய இராமகாதை இராமன் கேட்ட இரு வரங்களோடு முடிவடைகிறது.

View More அவ்வரங்கள் இவ்வரங்கள்

பணிப்பொன்

ஐந்து இந்திரியங்களும் கைவிட்ட நிலையில் யார் கை கொடுப்பார்கள்? ஆண்டவன் ஒருவனே கைகொடுக்க முடியும். ஆனால் அந்த நேரம் ஆண்டவன் நாமத்தைச் சொல்லி அழைக்க முடியுமா? நல்ல நினவும் அறிவும் இருக்கும் போதே ஆண்டவன் நாமங்களைச் சொல்லிப் பழக வில்லை யென்றால் புலனடங்கி நினைவிழந்து பொறிகலங்கி கபம்அடைக்க நலம் நசிந்து நமன் வரும் வேளையிலா நாமம் சொல்ல முடியும்? அதனால் தான் ஆன்றோர்கள், நாம் நல்ல நிலையில் நினைவோடும் அறிவோடும் இருக்கும் போதே இறைவன் திரு நாமங்களைச் சொல்லிப் பழகிக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள்.

View More பணிப்பொன்

காவடிகள் சிந்து பாடும் கழுகுமலை

”கருணை முருகனைப் போற்றி – தங்கக் காவடி தோளின் மேலேற்றி…. “ – காவடிச்சிந்து மெட்டுக்கள், படித்தவர், பாமரர் அனைவரையும் ஈர்க்கும் தன்மை கொண்டவை. காவடிச்சிந்து என்றாலே நம் நினைவுக்கு வருபவர், அண்ணாமலை ரெட்டியார்… இங்கு கழுகுமலையில் கடலொத்த வீதிகள் காணப்படுகின்றன. அங்குள்ள கடைகளின் முன்பு முத்துப் பந்தல் போட்டிருக்கிறார்கள். அந்தப் பந்தலின் ஒளியினால் அஷ்ட கஜங்களுடைய தந்தங்களின் ஒளி கூட மழுங்கி விடுமாம்!

View More காவடிகள் சிந்து பாடும் கழுகுமலை

வாழையடி வாழையாய் வரும் நற்பண்புகள்

கர்நாடக மாநிலத்தில் தர்மஸ்தலா என்ற ஊரிலுள்ள மஞ்சுநாதர் ஆலயத்தில் தினந்தோறும் ஆயிரக் கணக்கான யாத்ரீகர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. சென்ற வருடம் அமிர்தஸரஸ் பொற்கோவிலுக்குச் சென்ற பொழுது அங்கு நடக்கும் அன்னதானம் கண்டு வியந்தேன். யாத்ரீகர்களுக்குத் தண்ணீர் கொடுக்கும் நேர்த்தியையும் சாப்பிட்ட தட்டை சுத்தம் செய்து நன்கு துடைத்துத் தருவதையும் மிக நேர்த்தியாகச் செய்கிறார்கள்

View More வாழையடி வாழையாய் வரும் நற்பண்புகள்

காற்றினிலே வரும் கீதம்

சிவந்து மலர்ந்த தாமரைப் பூவை வண்டுகள் சூழ்ந்து கொண்டது போல முகத் தாமரையை சுருண்ட தலைமயிர் அழகு செய் கிறது. இந்த முகத் தாமரை யிலிருந்து தேனினும் இனிய கீதம் பெருகி வருகிறது. இந்த அமுத கீதத்தைப் பருகிய மான்கள் எப்படி அனுபவிக்கின்றன? …ண்ணனின் கானா மிர்தம் கிளம்பியதுமே அங்குள்ள மரங்கள் எல்லாம் மகரந்தத் தாரைகளைப் பெருக்கு கின்றன. சில மரங்கள் இந்த வேணு கானத்தைக் கேட்பதற்காகக் கிளை களைத் தாழ்த்திக் கொண்டு நிழலைத் தரு கின்றன …

View More காற்றினிலே வரும் கீதம்

தீராத விளையாட்டுப் பிள்ளை

… யசோதை கண்ணனைத் தொட்டிலில் படுக்க வைக்கிறாள். கண்ணன் தொட்டில் கிழிந்து விடும்படி உதைக்கிறான். [பின்னால் சகடாசுரனை உதைப் பதற்கு ஒத்திகை பார்த்திருப்பானோ?]ஐயோ இப்படி உதைத்து, உதைத்துக் குழந்தைக்குக் காலெல்லாம் வலிக்கப் போகிறதே யென்று ஆதங்கத்தோடு தூக்கி எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டால் இடுப்பையே முறித்து விடுகி றானாம் ….

View More தீராத விளையாட்டுப் பிள்ளை

அன்னையெனப் போற்றப்பட்ட அரக்கி

தாயின் உயர்வைச் சொல்லும் முதுமொழிகள் ஏராளம். ஏனென்றால் அன்பே உருவானவள் தாய். அரக்க குலத்தில் பிறந்த பெண் ஒருத்தி, அவள் காட்டும் அன்பின் காரணமாகத் தாயினும் இனியவளாகப் புகழப்படுகிறாள். ஆம், திரிசடையைத்தான் கம்பன் இப்படி அறிமுகம் செய்கிறான்.

அரக்க மகளான திரிசடையை ஒருமுறை அல்ல, மூன்றுமுறை அன்னை, அன்னை, அன்னை என்று விளிக்கிறாள். என்ன காரணம்?…

View More அன்னையெனப் போற்றப்பட்ட அரக்கி

மலைக்குல மயில்

ராமாயண நாயகனான ராமனின் மனைவி சீதை. எதிரணித் தலைவன் இராவணன் மனைவி மண்டோதரி. இருவரும் சிறந்த கற்புக்கரசிகள். அவர்களுக்கு நடுவில் வைத்துப் போற்றப்படுகிறாள் தாரை. அவளை “மலைக்குல மயில்” என்று அடைமொழி கொடுத்துச் சிறப்பிக்கிறான் கம்பன்….

View More மலைக்குல மயில்

பகைவனும் பாராட்டும் பகழி

பொதுவாக உலகில் ஒருவரை நண்பர்கள், உறவினர்கள் பாராட்டுவார்கள். ஆனால் ஒருவருடைய பகைவனே அவரைப் பாராட்டுவது என்பது மிகவும் அருமை. அதிலும் யாரைப்பற்றி, யாருடைய வீரத்தைப் பற்றி முன்னொரு முறை மிக இழிவாக, மிக ஏளனமாகப் பேசினானோ அவரைப் பற்றியும் அவருடைய வீரத்தைப் பற்றியும் மனம் திறந்து பாராட்டுகிறான். ஒரு தடவை அல்ல பல தடவை. பலவகையாகப் பாராட்டுகிறான். பாராட்டுபவர் யார்? பாராட்டுப் பெறுபவர் யார்?…

View More பகைவனும் பாராட்டும் பகழி

பெரியாழ்வாரின் பட்டினம்

எம்பெருமான் தன் உள்ளத்தில் குடிபுகுந்து விட்டதால் விஷ்ணுசித்தருக்கு இப்பொழுது தைரியமும் தன்னம்பிக்கையும் வந்து விட்டது. இதற்குமுன் தன் ஐம்புலன்களையும், நோய்களையும். மரணத்தையும், யமதூதர்களையும் கண்டு அஞ்சிய விஷ்ணுசித்தர் இப்பொழுது அதே ஐம்புலன்களையும், நோய்களையும், யமதூதர்களையும் தாமே வலிய அழைத்து, தன் அச்சமின்மையையும் தான் பாதுகாப்பாக இருப்பதையும் கர்வத்தோடு எடுத்துச் சொல்கிறார்…

View More பெரியாழ்வாரின் பட்டினம்