தனிமனித வாழ்வில் அடிப்படை ஒழுக்கத்தை நம்பிக்கைத்தன்மையைப் பேண முடியாத ஒரு நபரினால் எப்படி நாட்டை ஒழுங்காக ஆள முடியும் என்ற இயல்பான கேள்வியைத் தாண்டி, அவரது பிற நேர்மையற்ற குணங்களைக் காணலாம்… கமலஹாசன் இந்தத் தேர்தலில் தனி விமானங்களையும் ஹெலிக்காப்டர்களையும் பயன் படுத்தி வருகிறார். இதற்கான நிதி இவ்வளவு பெரிய செலவுகளுக்கான கணக்கை அவர் காட்டுவாரா? கணக்குக் கேட்டால் மிரட்டுகிறார்… தமிழில் ஒரு மதன் ரவிச்சந்திரன், ஒரு மாரிதாஸ், ஒரு அண்ணாமலையுடன் இவரால் ஐந்து நிமிடங்களாவது விவாதிக்கும் திறன், அறிவு இவருக்கு கிடையாது…
View More கமலஹாசன் நம்மவரும் இல்லை நல்லவரும் இல்லை – 2Author: விஸ்வாமித்ரா
கமலஹாசன் நம்மவரும் இல்லை நல்லவரும் இல்லை – 1
சென்ற பாராளுமன்ற தேர்தலின் பொழுது பெரும் அளவில் தமிழக நடுத்தரவர்க்க மக்களும், குறிப்பாக பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்களும் கமலஹாசன் கட்சிக்கு வாக்களித்தனர். அதன் காரணமாகவே திமுக கூட்டணி பல தொகுதிகளிலும் வெற்றி அடைந்தது… அந்தணர்கள் அடிபட்ட பொழுதெல்லாம் அவமானப் படுத்தப் பட்ட பொழுதெல்லாம் தாக்கப் பட்ட பொழுதெல்லாம் இவர் என்றுமே அதற்காக ஒரு சிறிய கண்டனத்தைத் தெரிவித்தவர் அல்லர். அந்தணர்களில் ஏழைகளுக்குக் கூட மோடி அரசு தரும் இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர். இவர்…
View More கமலஹாசன் நம்மவரும் இல்லை நல்லவரும் இல்லை – 1அரவான் – அபத்தத்தில் இருந்து சொதப்பலுக்கு
காலக்கிரமமான சில சம்பவங்களை காலம், இடம், பேச்சு வழக்கு, வாழ்க்கை முறைகள், கள்ளர்களின் கலாசாரங்கள், உணர்ச்சி கொப்பளிக்கும் சித்திரங்கள் போன்ற எதைப் பற்றியும் எந்த பிரக்ஞையுமின்றி, சிறிது கூடக் கவலைப்படாமல் படு செயற்கையான சொதப்பலான ஒரு சினிமாவாக மாற்றியுள்ளார் இயக்குநர் வசந்தபாலன்… இப்படி, படம் முழுவதும் இவை போன்ற எண்ணற்ற பொருத்தமில்லாத, இயல்பில்லாத, செயற்கையான, அபத்தமான, செறிவற்ற, சொதப்பலான, ஆழமற்ற காட்சிகளாலும் வசனங்களினாலும் நடிப்பினாலும் நிரம்பி வழிகின்றன.
View More அரவான் – அபத்தத்தில் இருந்து சொதப்பலுக்குகரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 2
ஹோலோகாஸ்ட் குறித்து மனதைக் கலங்க அடிக்கும் ஏராளமான சினிமாக்கள் இன்றும் வந்த வண்ணம் இருக்கின்றன. மாறாக வட இந்தியாவின் ஆயிரக்கணக்கான கலை நுட்பம் மிகுந்த கோவில்களை யார் அழித்தார்கள் என்பது குறித்தோ ஸ்ரீரங்கம் கோவிலும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் எத்தனை முறை அழிக்கப் பட்டன எப்படிக் கொள்ளையடிக்கப் பட்டன என்ற உண்மைகள் குறித்தோ, ஒரு நாலந்தா பல்கலைக் கழகம் யாரால் எப்படி தீக்கிரையாக்கப் பட்டது என்ற உண்மை குறித்தோ நம்மிடம் இன்று எத்தனை மியூசியங்கள், எத்தனை நாவல்கள், எத்தனை நூல்கள், எத்தனை சினிமாக்கள் உள்ளன?
View More கரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 2கரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 1
தன் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் தன் மக்களின் பாதுகாப்புக்கு கெடுதலாக விளங்கும் எவரையும் அவர்கள் நடுங்கும் வண்ணம் ஒழிக்கும் மன உறுதி படைத்த தலைவர்களைப் பெற்ற புண்ணிய தேசம் இஸ்ரேல். தி ஹவுஸ் ஆன் கரிபால்டி ஸ்ட்ரீட் என்கிற இந்த இஸ்ரேலிய திரைப்படம் கூட நிஜமாகவே நடந்த அத்தகைய ஒரு தீர சாகசத்தின் கதைதான். 1979ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் இது.
View More கரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 1கூடங்குளம் அணு மின் நிலையம்: சர்ச்சைகளும், தீர்வுகளும் – 2
அணு மின் நிலையம் என்பது வெறும் மின்சார உற்பத்திக்காக மட்டுமே ஏற்படுத்தப் படுவதல்ல… இந்தியா எந்த வகையிலும் ஒரு தன்னிறைவு உள்ள நாடாக, பலமான ஒரு நாடாக மாறுவதை கிறிஸ்துவ அமைப்புகளும் அவற்றை இயக்கும் நாடுகளும் விரும்புவதேயில்லை… எஸ்.பி.உதயகுமார் ஆராய்ச்சியின்படி பொக்ரானில் அணு குண்டு வெடித்த பா ஜ க அரசு ஒரு நாசகார சக்தி. அதன் தொடர்ச்சியாக இப்பொழுது அதே அமைதி ஆராய்ச்சியாளர் கூடங்குளத்தில் இறங்கி… இந்தத் திட்டம் தோல்வி அடையுமானால் ஜெயிக்கப் போவது இந்திய எதிர்ப்புச் சக்திகள் மட்டுமே, அது ஒரு மாபெரும் பொதுத் தொடர்புப் பிரச்சாரத் தோல்வியாகவும் இருக்கும்….
View More கூடங்குளம் அணு மின் நிலையம்: சர்ச்சைகளும், தீர்வுகளும் – 2கூடங்குளம் அணு மின் நிலையம்: சர்ச்சைகளும், தீர்வுகளும் – 1
அணுசக்தித் தொழில் நுட்பம் குறித்து விஞ்ஞானிகளும், பொறியாளர்களும் மட்டுமே கருத்துச் சொல்லத் தகுதியானவர்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக இந்தப் பிரச்சினையைப் பற்றி பாதிரியார்களில் இருந்து சினிமா நடிகர் வரை… மக்களை மதித்துப் பேசாததும், மக்களை தங்கள் நம்பிக்கைக்கு எடுத்துக் கொள்ளாததும் அரசுகளின் தவறே. அதை இப்பொழுதும் கூட நிவர்த்தி செய்து விடலாம்….சாலையில் போகும் பாதசாரியை மோட்டார் வாகனங்கள் இடித்துக் கொன்று விடுகின்றன என்பதற்காக சாலையே கூடாது என்பார்களா அல்லது வாகனங்களே இனி ரோட்டில் ஓடக் கூடாது என்பார்களா?…
View More கூடங்குளம் அணு மின் நிலையம்: சர்ச்சைகளும், தீர்வுகளும் – 1மரணதண்டனை அரசியல்கள் – 1
இக்கோரிக்கை நான் முற்றிலும் எதிர்பாராமல் தமிழ்ஹிந்து தளத்தில் குளவியார் என்பவரிடமிருந்து எழுந்ததே என்னிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இந்த நீண்ட பதில் கட்டுரையை எழுத வைத்து விட்டது. [..] அப்சலைத் தூக்கில் போடாமல் இருக்க காங்கிரஸும் பிற முஸ்லீம் அமைப்புகளும் சேர்ந்து போட்ட ஒரு நாடகம். அதில் தமிழக முதல்வரும் குளவியும் தடுமாறி விழுந்து விட்டார்கள். எப்படி?
View More மரணதண்டனை அரசியல்கள் – 1மன்மோகன் சிங்கின் வட்டமேஜை நேர்காணலில் கேட்கப் படாத கேள்விகள்
இவர் மெத்தப் படித்தவர். உலகத்திலேயே சிறந்த தகுதிகள் கொண்டவராம். ஆனால் படிக்காத ஒரு காமராஜர் பேச்சில் இருந்த தெளிவும் துணிவும் என்றுமே இவரது பேச்சில் இருந்தது கிடையாது… அவரிடம் கேட்கப் பட்ட சில கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களில் இருந்த குழப்பங்களையும், மழுப்பல்களையும், ஏமாற்றுக்களையும், சமாளிப்புக்களையும் அதில் இருந்த ஓட்டைகளையும் , அவரிடம் அவசியமாகக் கேட்டிருக்கப் பட வேண்டிய ஆனால் கேட்கப் படாத கேள்விகளையும் அலசலாம்… அயோக்கியர்களை அகற்றுங்கள். இந்தியா நமது தேசம்; அதை அந்நியருக்கும் இனிமேலும் விற்க மாட்டோம் என்று உறுதி செய்யுங்கள்.
View More மன்மோகன் சிங்கின் வட்டமேஜை நேர்காணலில் கேட்கப் படாத கேள்விகள்நம்மை உண்மையில் ஆள்வது யார்? – 03
இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலை இந்தியா எதிர் கொண்டிருக்கும் விதம் இந்தியாவின் எதிர்காலம் குறித்த பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. நாட்டின் பிரதமரிடம் தொடங்கி கடைத்தட்டு குடிமகன் வரை குடிகொண்டுள்ள அலட்சியமும், நேர்மையின்மையும், பொறுப்பற்ற தன்மையும், பேராசையும் இந்தியாவின் ஒட்டு மொத்த எதிர்காலம் குறித்து பெரும் அச்சத்தையே தோற்றுவிக்கிறது………இதை வாசிக்கும் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
View More நம்மை உண்மையில் ஆள்வது யார்? – 03
 
					 
					 
					 
					 
					 
					 
					 
					 
					