ஒரு நிஷ்காம கர்மி

உயர்ந்த மனிதர். சுமார் ஆறரை அடி உயரம். சற்று நீண்டு தொங்கும் தாடி. அப்போது இன்னம் நரை தோன்றாத காலம். மேஜையில் இருக்கும் விளக்கொளியில் குனிந்து படிக்கும் காட்சி நன்றாக இருக்கும். ஒருவாறாக, உ.வே. சாமிநாத ஐயர் ஒரு நூற்றாண்டுக்கு முன் சின்ன சிமினி விளக்கொளியில கும்பகோணம் பக்த புரி அக்ரஹாரத்துத் திண்ணையில் உட்கார்ந்திருக்கும் ஒரு சாயலை அபிஜீத் ஐந்துக்குப் பத்து காபினில் மின்சார விளக்கொளியில் உட்கார்ந்திருக்கப் பார்ப்பதாகத் தோற்றம் தரும். ஒரு சின்ன மாற்றம். அபிஜீத் கையில் ஒரு கணேஷ் பீடி மேஜையில் ஒரு டீ கப். அதிகப் படியாகக் காட்சி தரும். இல்லையெனில் இளம் வயது தாகூர் தான்…. யமுனை நதியைக் கடந்தால் பட்பட் கஞ்சில் வீடு. தந்தை விட்டுப் போன லைப்ரரி. அது மட்டுமல்ல. புத்தகங்களோடும் சிந்தனை உலகோடும். கலைப் பிரக்ஞையொடும் வாழ்வதில் தான் அர்த்தம் உண்டு என்று நினைக்கும் கலாசாரம்….

View More ஒரு நிஷ்காம கர்மி

ஒரு கர்நாடகப் பயணம் – 5 (சிருங்கேரி, பேலூர்)

ஆதி சங்கரரின் மனம் இப்பகுதியின் இயற்கை அழகிலும் அமைதியிலும், புனிதத்திலும் தோய்ந்து ததும்பி நிறைகிறது. நீ இங்கேயே உறைந்து மக்களுக்கு அருள் பாலிக்க வேண்டும் என்று அன்னை சரஸ்வதியை வேண்டிக் கொள்கிறார். சலங்கை ஒலி நின்று விடுகிறது. சாரதை அங்கு நிரந்தரமாகக் குடி கொள்கிறாள்… கண்ணாடியில் முகம் பார்க்கும் தர்ப்பண சுந்தரிகள், வேட்டைக்காக வில்லுடன் நிற்கும் கானக அழகிகள், இசைக்கருவிகளை மீட்டும் வாதினிகள், அபிநயம் பிடிக்கும் நர்த்தகிகள் என மூச்சடைத்து, பித்துக் கொள்ள வைக்கும் சிற்பங்கள். ஒவ்வொரு அங்குலத்திலும் மகோன்னத சிற்பிகளின் உளிகளும் கரங்களும் இதயங்களும் உயிர்களும் கலந்து எழுந்திருக்கும் அற்புதக் கலைப் பெட்டகம் பேலூர் கோயில்…

View More ஒரு கர்நாடகப் பயணம் – 5 (சிருங்கேரி, பேலூர்)

ஒரு கர்நாடகப் பயணம் – 4 (கோகர்ணா, முருடேஷ்வர்)

ராவணன் கைபட்டு முறுகியதால் பசுவின் காது போல சிவலிங்கத் திருமேனி வளைகிறது. பசுவின் காது போன்ற வடிவம் கொண்ட அந்த அழகிய கடற்கரையில் அவ்வாறே நிலைபெற்று எம்மை வழிபடும் பக்தர்களுக்கு அருள்வோம் என வானில் சிவபெருமான் தோன்றி ஆசியளிக்கிறார்…வங்கக் கடலைப் போன்று சீறிப் பாயும் அலைகள் முருடேஷ்வரில் வருவதில்லை. ஒன்றையே பற்றிக் கொண்டு கொந்தளிப்புகள் அடங்கிய நிச்சலமான மனம் போல, அலைகளற்ற கடல் இது. ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு மேல் கடலுக்குள் காலார நடந்து செல்ல முடிகிறது. புத்துணர்வூட்டும் அனுபவம்… இந்தியாவிலேயே சிரபுஞ்சிக்கு அடுத்து அதிகம் மழை பெய்யும் பகுதி. இது டிசம்பர் மாதம் என்பதால் மழை இல்லை. அதனால் இருபுறமும் அடர்ந்த காடுகளின் பசுமையை கண்களால் தெளிவாகப் பருகிக் கொண்டு மலைக் காற்றின் நறுமணத்தை நுகர்ந்து கொண்டு செல்கிறோம்…

View More ஒரு கர்நாடகப் பயணம் – 4 (கோகர்ணா, முருடேஷ்வர்)

ஒரு கர்நாடகப் பயணம் – 3 (பாதாமி)

மிகப் பெரிய பாறைகளின் அடிப்பகுதியைக் குடைந்து குடைந்தே உருவாக்கப் பட்டுள்ள ஒற்றைக் கல் கோயில்கள் இவை. உள்ளே தண்ணென்ற குளிர்ச்சியுடன் இருக்கின்றன. மொத்தம் நான்கு குகைக் கோயில்கள். ஒவ்வொன்றிலும் கருவறையும், தூண்களுடன் கூடிய மண்டபங்களும், அற்புதமான சிற்பங்களும் உள்ளன…. கீழே தெரியும் பிரம்மாண்டமான குளம் அகஸ்திய தீர்த்தம். குளத்தின் மூன்று புறமும் மலைகள். ஒரு புறம் பாதாமி நகரம். குளத்தில் இறங்கிச் செல்ல நீண்ட படிக்கட்டுகள் எல்லாப் பக்கங்களிலும் அமைக்கப் பட்டுள்ளன… சாளுக்கிய கலைப் படைப்புகளை காஞ்சி, மகாபலிபுரத்தில் உள்ள பல்லவ சிற்பங்களுடன் ஒப்பிடுவது தவிர்க்க முடியாதது. இரண்டும் ஒரே காலகட்டத்தைச் சார்ந்தவை என்பதால் ஒரே வித கலைப்பாணிகளைப் பார்க்க முடிகிறது. இரண்டுக்கும் இடையில் கலைரீதியான போட்டியும் இருந்திருக்கலாம்…

View More ஒரு கர்நாடகப் பயணம் – 3 (பாதாமி)

ஒரு கர்நாடகப் பயணம் – 2 (ஹம்பி)

எங்கு போனாலும் கோயில்கள், மண்டபங்கள், இடிபாடுகள், அது போக பூதங்கள் போன்ற விசித்திர வடிவங்கள் கொண்ட கற்பாறைகள். ஹேமகூடம், மாதங்க கிரி என்று நகருக்குள்ளேயே இரு குன்றுகள். இது எல்லாவற்றுக்கும் சாட்சியாகவும் பட்டும் படாமலும், காலத்தின் சலனம் போல ஓடிக் கொண்டிருக்கும் துங்கபத்ரா நதி. சிதைந்து போன ஒரு மாபெரும் வரலாற்றுக் கனவுக்குள் வாழ்ந்து கொண்டிருப்பது போன்ற பிரமையை இங்கிருக்கும் கணங்கள் நமக்கு அளித்துக் கொண்டே இருக்கும்… தெருவோர சிறு பிள்ளையார் கோயிலில் கூட செருப்பைக் கழற்றி விட்டு பயபக்தியோடு செல்லும் மக்களை, இந்தக் கோயில்கள் வெறும் காட்சிப் பொருட்கள் என்று மனதில் நினைக்க வைத்து விட்டது ஆக்கிரமிப்பாளர்களின் அழிப்புச் செயல். நமது பண்பாடு, நமது வாழ்க்கை முறை இங்கே ஆழமாகக் காயப் படுத்தப் பட்டிருக்கிறது…

View More ஒரு கர்நாடகப் பயணம் – 2 (ஹம்பி)

ஒரு கர்நாடகப் பயணம் – 1 (சித்ரதுர்கா)

பயணம் கிளம்பியதும், முதலில் இறங்கிய இடம் சித்ரதுர்கா கோட்டை.. ஏழு சுற்றுகள், பதினெட்டு கோயில்கள், தோரண வாயில்கள், பண்டக சாலைகள், விழா மண்டபங்கள், குருகுலம், குளங்கள், சுனைகள், உடற்பயிற்சி நிலையங்கள், ரகசிய வாயில்கள் என பற்பல பகுதிகளைக் கொண்ட கோட்டையை ஏறி இறங்கி சுற்றி வருவதற்கு குறைந்தது மூன்று மணி நேரம் ஆகும்… கொண்டாட்டங்கள், மாபெரும் வீரச் செயல்கள், சிலிர்ப்பூட்டும் தியாகங்கள், சதி வலைகள், காதல்கள் எல்லாம் கலந்து பெருமூச்சு வரவழைக்கும் கதைகள். கோட்டையிலிருந்து இறங்கும் போது வரலாற்றின் திசை மாற்றங்களை யோசித்துக் கொண்டே வந்தேன்..

View More ஒரு கர்நாடகப் பயணம் – 1 (சித்ரதுர்கா)

தற்கொலைக்கு ஒரு கலைஞனை விரட்டும் சமூகம்

வியாளம் – மிகுந்த சோகத்துடனும் இழப்பின் வலியுடனும் பாச உணர்வுடனும் இளமையில் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட ஒரு கலைஞனுக்கு அவரது தோழமையும் உடன் செயலாற்றும் வாய்ப்பும் பெற்றவர்கள் தங்கள் நினைவுகளை அஞ்சலியாகத் தந்துள்ளதன் தொகுப்பு இது. எஸ்.வேலாயுதம் அந்தக் கலைஞனின் பெயர்…. இளங்கலை வரலாறு படிக்கும் மாணவருக்கு கருஞ்சுழி நாடகத்தில் ஒளிப் படிமங்கள் வாழ்க்கையின் பாதையை நிச்சயித்து விடுகிறது. அலைமோதும் மன நிலையில் பல உணர்வுகள் கொட்டி அலைக்கழிக் கின்றன. மாட்டுத் தொழுவத்தில் தாத்தாவின் முறுக்கேறிய அழுகையில் புதிதாகப் பிறக்கும் பாடல்களின் குரல் வலிமை தனக்குக் கிடைகாதா என்று ஏங்கி தொழுவத்தைச் சுற்றிச் சுற்றி வந்ததாகச் சொல்கிறார் வேலாயுதம். க அபூர்வமான சோகத்தின் கனம் நிறைந்த கணங்கள் அவை… அவர் பயிற்றிவிப்பாளராகவே இன்றோ நாளையோ என்ற தவிப்பிலேயே வாழ்ந்தவர். வாழ்ந்தவரா, சாவை ஒத்திப்போடும் தன் வல்லமையைச் சோதித்துக்கொண்டிருந்தவரா? நாடகத் துறையில், இளம் முனைவர் பட்டத்துக்கான மாணவராக மறுபடியும் ஒரு முயற்சி….

View More தற்கொலைக்கு ஒரு கலைஞனை விரட்டும் சமூகம்

திருச்சியில் மோதி திருவிழா – ஒரு நேரடி அனுபவம்

மோடியைக் கண்டவுடன் மக்கள் அடைந்த உற்சாகத்தை விவரிக்கவே முடியாது. இதுதான் உண்மையான எழுச்சி. தமிழர்கள் முகம் கோணாமல் அகம் நிறைந்து ஒரு ஹிந்தி சொற்பொழிவை ஒரு மணி நேரம் கேட்டார்கள். வாழ்க ஒழிக என்று கோஷம் போட்டே பழக்கப்பட்ட மக்கள் வந்தேமாதரம் என்று கோஷம் போட்டார்கள்… இந்த கும்பலெல்லாம் இதற்கு முன் மற்ற கட்சிகளுக்கு ஆதரவு செலுத்தியவர்களாகத்தான் இருப்பார்கள். இந்த கட்சி கூட்டத்திற்கு வரும் போது மட்டும் ஒழுங்கு எப்படி இயல்பாக வந்து விடுகிறது என்று யோசித்தால் ஒன்று புரியும். தலைவன் எவ்வழி மக்கள் அவ்வழி… பொதுவாக எல்லா கட்சி மாநாடுகளிலும் நிகழ்ச்சி நடந்து முடிந்த பின் அந்த இடம் ஒரு மாபெரும் குப்பை மேடு போல இருக்கும். டாஸ்மாக் பாட்டில்கள், துண்டுகள், செருப்புகள் இவையெல்லாம் கிடக்கும். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் மைதானத்தைச் சுற்றிவந்து பார்த்தபோது இவை எதுவும் தென்படவில்லை….

View More திருச்சியில் மோதி திருவிழா – ஒரு நேரடி அனுபவம்

பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸ் பெயரில் வந்த கௌரவம்: பலரோடு எனக்கும் ஒன்று

”பி.பி. ஸ்ரீனிவாஸ் விழா நடத்த இருக்கிறோம். பல மொழிகளிலும் தம் பங்களிப்பைத் தந்துள்ள, பி.பி ஸ்ரீனிவாஸ் போல 80 வயது நிறைந்த, அறிஞர்களையும் கௌரவிக்கத் திட்டமிட்டு, அவ்வகையில் தமிழ் மொழிக்குத் தாங்கள் செய்துள்ள பாராட்டத்தக்க சேவையைக் கருத்தில் கொண்டு அதே மேடையில் தங்களையும் கௌரவிக்க விரும்புகிறோம்” என்று 2012 டிசம்பரில் வந்த கடிதத்தில் கண்டிருந்தது.. ஆச்சரியமாக இருந்தது. இங்கு அதுவும் தமிழ் நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டோம் என்று கூச்சலிடும் கர்நாடகத்தில், ”உங்களை கௌரவிக்கிறோம்” என்றா குரல் எழும்? எப்படி இது நேர்கிறது?…. ”அவர் இருந்த போது பெரிய அளவில் நடத்த இருந்தோம். நம் துரதிர்ஷ்டம் அவர் மறைந்து விட்டார். இருந்தாலும் விழாவும் கௌரவிப்பும் இருக்கும். பெரிய அளவில் இல்லாவிட்டாலும். முடிந்த அளவில் நடத்துவோம்” என்றார்…. பாலஸ் மைதானத்தில் உள்ளே நுழைந்தால் ஒரு பெரிய கொட்டகை திறந்த மைதானத்தில் எழுப்பப் பட்டிருந்தது. மேடையும் மிகப் பெரியது… கௌரவிக்கப்பட இருந்தவர்கள் மேடைக்கு அழைத்து வரப்பட்டு எஸ்,பி.பாலசுப்ரமணியம், ஏசுதாஸ் முதலிய நக்ஷத்திர பாடகர்கள், சரோஜா தேவி, ஜெயந்தி, ரவி உட்பட எல்லோரும் புடை சூழ ஒவ்வொருவரும் கௌரவிக்கப்படுபவரை கால் தொட்டு வணங்கி, சால்வையோ, மாலையோ, பணமுடிப்போ, ஷீல்டோ கொடுத்தனர்….

View More பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸ் பெயரில் வந்த கௌரவம்: பலரோடு எனக்கும் ஒன்று

மதங்களைக் கடந்த பண்பாடெனும் ஆணிவேர்: ஹிந்துத்வம் – 2

அயாஸ் ரஸூல் நஸ்கி எழுதுகிறார் – “எனக்கு ஸ்ரீநகரின் ஹரிபர்வதம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் சாரதா பீடம். அது என் மூதாதையர்கள் நடந்து சென்ற பாதை. தத்தாத்ரேய கணேஷ் கௌலின் மூதாதையர்களும் கடந்து வந்த பாதை. பீர் ஷேக் ஹம்ஸா மக்தூம் சாஹேபின் மூதாதையர்கள் வந்த பாதையும் அது தான்….க்ருஷ்ண கங்கா நதிக்கரையின் மறுபக்கம் இரண்டு மலைகளுக்கிடையே சூரிய கிரணங்கள் தலைநீட்ட, மெல்லிய மஞ்சள் ஒளியில் க்ருஷ் ணகங்காவின் நீரோட்டம் அப்போது தனி இருள் – ஒளி நர்த்தனமாகத் தெரிந்தது. இதோ என் எதிரே சாரதா ஆலயம். அது என் வேர். என் மூலாதாரம். என் தொன்மை…”. ஸ்ரீ நஸ்கி அவர்களது தாகத்துடன் ஒப்பிடுகையில் எனது தேடலில் இருக்கும் ஆவல் மிகவும் மாற்றுக் குறைவானதே. நான் ஸ்தலத்தின் வெகு அருகில் சென்றிருந்தாலும் தேசப்பிரிவினையால் இடப்பட்ட வெம்மை மிகுந்த தடைக்கோட்டால் வெகு தொலைவில் இருக்கிறேன் என்பது நிதர்சனம்…

View More மதங்களைக் கடந்த பண்பாடெனும் ஆணிவேர்: ஹிந்துத்வம் – 2