நிகரில்லா நிவேதிதா – இரு புத்தகங்கள்

மேற்கத்திய நாட்டிலிருந்து எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்திய மக்களின் முன்னேற்றத்தின் மீது முழு அக்கறையும் அன்பும் மதிப்பும் கொண்டு வாழ்நாள் முழுக்க தன்னைத்தானே தேய்த்து அழித்து சமர்ப்பித்த ஒருவர் உண்டு. அவரது சமாதி தினத்தின் நூற்றாண்டு விழா இவ்வருடம்… மாற்று வழிகளில் உலக அறிவியலாளர்களையும் இதர இந்திய நேசிப்பாளர்களையும் தொடர்பு கொண்டு அவர் அறிவியல் கண்டுபிடிப்புகள் உலக பிரசித்தி அடைய உதவி செய்தார்… தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்ந்த பகுதிகளில் உள்ள சாக்கடைகளை பிளேக் காலங்களில் நிவேதிதாவும் அவருடன் பணியாற்றிய இளைஞர்களும் களமிறங்கி சுத்தப்படுத்தினார்கள்…

View More நிகரில்லா நிவேதிதா – இரு புத்தகங்கள்

சென்னையில் “உடையும் இந்தியா?” புத்தக வெளியீட்டு விழா!

ஜனவரி-3, 2012 (செவ்வாய்) மாலை 6 மணி.. அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு, பத்ரி சேஷாத்ரி, கிருஷ்ண பறையனார், எழுத்தாளர் ஜோ டி குரூஸ், கல்வெட்டு எஸ்.இராமச்ச்சந்திரன், டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், டாக்டர் தியாக சத்திய மூர்த்தி, பேரா. சாமி தியாகராஜன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்… அழைப்பிதழ் கீழே! அனைவரும் வருக. ஆதரவு தருக!

View More சென்னையில் “உடையும் இந்தியா?” புத்தக வெளியீட்டு விழா!

இரு வேறு நகரங்களின் கதை

புத்தர் போன்ற ஒர் கருணையும் சாந்தமும், மெல்லிய புன்முருவலும் கொண்ட கடாட்சம் தரும் இன்னொரு தேவ ரூபம் உண்டா என எனக்குத் தெரியாது. அத் தேவ ரூப சாந்த சொரூபன், புத்தன் தேவனும் அல்லன். தேவனாகிய மனிதன் தான். புத்த பிக்கு காவியுடையும் எங்கும் இதே போன்ற “கருணை” பாலிப்பதும் இல்லை. காவியுடைக்குள் இருக்கும் மனித மனம் சார்ந்தது, சக மனிதனை பிணக்கிடங்காக்குவதும் அவன் வாழ்ந்த இடத்தைப் பாழாக்குவதும். காவியுடைக்குள் இருந்த ஒரு இன்னொரு பிக்கு தான்….

View More இரு வேறு நகரங்களின் கதை

உடையும் இந்தியா? – ஒரு உரையாடல்

நெடுநாட்களாக எதிர்பார்த்திருந்த “உடையும் இந்தியா?” நூல் வெளிவந்து விட்டது. அரவிந்தன் நீலகண்டனே தமிழ் மொழியாக்கத்தை செய்திருக்கிறார். நூல் குறித்து பத்ரி சேஷாத்ரியும் அரவிந்தனும் நிகழ்த்திய காரசாரமான உரையாடல் மூன்று பகுதிகளாக… ஆரிய, திராவிடம் ஆகியவை எவ்வாறு இனவாதச் சிந்தனைகளாக ஆகின.. உலகளாவிய கிறிஸ்தவ மதமாற்ற வலை, “திராவிட கிறிஸ்தவம்” என்ற புரளி…தலித்களை இந்திய சமூகத்திலிருந்து பிரித்தெடுக்கும் சூழ்ச்சிகள். உலக அரசியலில் இந்தியாவை சீர்குலைக்க முனையும் சக்திகளின் சதிவலைகள்….

View More உடையும் இந்தியா? – ஒரு உரையாடல்

கருணாநிதி என்ன கடவுளா?: ஒரு வித்தியாசமான குரல்

”மீண்டும் பார்ப்பனத் தலைமை தொடங்கிவிட்டது” என்று கறுவிய கருணாநிதி, சங்கராச்சாரியாரிடம் அதிகாரம் இருப்பின் அவருக்குப் பாதபூசை செய்து அவருடைய கால்களைக் கழுவி அதைத் தீர்த்தமென்று தன் தலையில் தெளித்துக்கொள்ளத் தயங்காதவர்,” என்கிறார் கருப்பையா… “தி.மு.க. என்ன சங்கரமடமா?” என்பது கருணாநிதியின் புகழ் பெற்ற சொல்லாட்சி. சங்கர மடத்தில் ஒருவர் நியமனம் பெற அவர் “ஸ்மார்த்த பிராமணராக” இருக்கவேண்டும். தி.மு.க.வில் நியமனம் பெற, கருணாநிதியின் குடும்பத்தவராக இருக்கவேண்டும் என்ன வேறுபாடு? நினைத்தாலும் வீரபாண்டி ஆறுமுகம் ஆகமுடியுமா?”

View More கருணாநிதி என்ன கடவுளா?: ஒரு வித்தியாசமான குரல்

வெட்டுப்புலி: திராவிட இயக்க அரசியல் சார்ந்த முதல் இலக்கியப் பதிவு

தமிழ்மகனின் வெட்டுப்புலி நாவல்… வாழ்வையும் சிந்தனையோட்டத்தையும் ஆசைகளையும் சொல்கிறது… வெள்ளைக்காரன் மாதிரி இவனுங்களும் (பாப்பானுங்களும்) காபி குடிக்க ஆரம்பிச்சுடானுங்க.. அவன் மேரி நாமும் ஆவணும்னா கறி மீனை விட்டுப்புட்டு தயிர் சோறு சாப்பிட்டுக்கினு நாக்கு செத்துப் போக வேண்டியதுதான். அடச்சீ, நாம எதுக்கு பாப்பானை மாரி ஆவணும்?… இந்தப் பாப்பானுவ நுழையறதுக்கு முன்னாலே நீ நுழைஞ்சிடு… அவன் வட்டாரத்தில் பாரதியாரை ஒதுக்கினார்கள். பாரதி தாசன் போதும் அவர்களுக்கு… எல்லாப் புத்தகங்களையும் போல, இதைப் பற்றியும் கூட தமிழ் உலகம் மௌனம் சாதிக்கலாம்.

View More வெட்டுப்புலி: திராவிட இயக்க அரசியல் சார்ந்த முதல் இலக்கியப் பதிவு

பாகிஸ்தான் சிறுகதைகள் [புத்தக விமர்சனம்]

இந்தியாவில் சிறுபான்மையினராக இருந்துகொண்டு அவர்களது வாழ்வையும் அடையாளங்களையும் காத்துக்கொள்ள முடியாது என்றும் வாதித்து, கலவரங்கள் செய்து பிரிந்து சென்றார்கள்… பகை உணர்வு எவ்வளவு தீவிரமாக இருந்தாலும் அவன் இங்கு காலடி வைத்ததும் பார்க்க விரும்புவது மொகலே ஆஸம் படம்தான்… பண்பாட்டையும் வரலாற்றையும் பகிர்ந்து கொண்டவர்கள், தம்மை அடையாளப்படுத்திக் கொள்வது மத்திய கிழக்கு முஸ்லீம் நாடுகளோடு. உலக முஸ்லீம் இனத்தோடு சேர்ந்தவர்களாகவே தம்மைக் காண்கிறார்கள்… எனவே எதையும் நேரடியாகச் சொல்லாத எழுத்துமுறை- குறியீடுகளும், அருவுருவங்களும் ஒன்றோடென்று கொளுவிக்கொண்டு ஒரு புதிய அவதாரம் எடுத்தது… “வெறி பிடித்த கும்பல் மதமும் அறியாது, மனிதாபிமானமும் அறியாது” என்று மண்டோ யாரை நோக்கிச் சொல்கிறார்? ஹிந்துக்களையா முஸ்லீம்களையா?… 500 பக்கங்களில் ஒரு பெரும்பகுதி வெறும் மாயாஜாலங்கள்

View More பாகிஸ்தான் சிறுகதைகள் [புத்தக விமர்சனம்]

சதாசிவ பிரம்மேந்திரர் குறித்த வரலாற்றுப் புதிர்கள்

உடலை மணல்மூடி தியானத்தில் லயித்திருந்தபோது அவரது தலை மண்வெட்டியால் வெட்டப் பட்டு ரத்தம் வந்தது – நவாப் படைகளிலிருந்து தப்பிக்கவும், நதிக்கரைகளைப் பாதுகாக்கவும் முயன்றபோது படைகளால் தாக்கப் பட்டிருக்கலாம்… ”வர்ணாஸ்ரமங்களின் கட்டுப்பாடுகளைக் கடந்தவன் நான். சாஸ்திரங்களில் விலக்கப்படுபவை பற்றிய விதிகளையும் உதறித் தள்ளியவன்”…

View More சதாசிவ பிரம்மேந்திரர் குறித்த வரலாற்றுப் புதிர்கள்

வெ.சா என்னும் சத்திய தரிசி

எந்தக் கும்பலிலும் கூடாரத்திலும் அடங்காத குரலாக, ஒரு கலை, இலக்கியவாதியின் அறச்சீற்றத்தின் குரலாகவே அவரது குரல் உண்மையுடன் ஒலித்து வந்திருக்கிறது. சமயங்களில் அளவு கடந்த ஆவேசத்துடன் இருக்கிறது.. சத்தியத் தேடல் கொண்ட ஒரு கலை ரசிகனை, இலக்கிய வாசகனை எல்லாக் காலகட்டங்களிலும் அவரது விமர்சனங்களும், பார்வைகளும் ஈர்த்திருக்கின்றன. சொல்லப் போனால், சுண்டி இழுத்திருக்கின்றன…

View More வெ.சா என்னும் சத்திய தரிசி

வந்தே மாதரம் – தோற்றமும் இன்றைய பின்னடைவும்

இஸ்லாத்துக்கு எதிரானது என்ற இந்த ஆயுதம் அவ்வப்போது முஸ்லீம் மதத் தலைமைகள், அரசியல் தலைமைகள் தம் அதிகார பலத்துக்காக, பயன்படுத்துவது தான். இந்தியாவின் சமீப கால சரித்திரத்தில் இது முதலில் எழுந்தது 1923-ல். இதிலிருந்து அவ்வப்போது சில முஸ்லீம் தலைமைகள் வந்தேமாதரம் பாடலைச் சாக்கிட்டும் சில முஸ்லீம் அறிஞர்கள் அதை மறுத்தும் வந்திருக்கின்றனர். ஆனால் கையோங்கியது, குரல் ஓங்கியது வந்தேமாதரம் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது என்ற குரலே.

View More வந்தே மாதரம் – தோற்றமும் இன்றைய பின்னடைவும்