நம் நாட்டில் சாராயம் பற்றி விளம்பரம் செய்ய தடை உண்டு, ஏனென்றால் அது போதையை உண்டுபண்ணி உடல்நலத்தைக் கெடுக்கும். இந்தத் தடையில் இருந்து தப்பிக்க சாராயம் காய்ச்சும் கம்பெனிகள் செய்யும் தந்திரம் அதே பெயரில் சோடா விளம்பரம் செய்வது தான். பிற தெய்வங்களை மறுப்பதை அடிப்படை கொள்கையாக கொண்ட மதங்களான கிறித்துவமும் இஸ்லாமும் செய்யும் நரித்தனமும் அதுபோல் தான். அவர்கள் விற்கும் சோடா – மத நல்லிணக்கம். அவர்கள் நம் பண்பாட்டின் சமயத்தின் கருக்களை மறுத்து இசை, கவிதை, வாழ்வியல் என்ற பல உறுப்புகளை மட்டும் திட்டமிட்டு களவாட முயன்று கொண்டே இருக்கிறார்கள். ஆனால் நம் கலைஞர்களும் பூசாரிகளும் அதற்கு துணை போவது கொடுமை. அதைத் தட்டிக் கேட்டால், சோடா விற்கத்தான் பாடினேன் என்பது ஏற்கத்தக்கது அல்ல. சோடா விற்கலாம் தான். ஆனால் சாராய குழுமத்திற்காக செய்தால், சாராய விற்பனை என்றே கொள்ளப்படும்…
View More கிறிஸ்தவத்தின் கலாசாரத் திருட்டும் கர்நாடக இசைக் கலைஞர்களும்Category: விவாதம்
விவாதங்கள், உரையாடல்கள், கண்டனங்கள், எதிர்வினைகள்..
‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 2
மாணிக்கவாசகர் வாழ்க்கை வரலாற்று ஆராய்ச்சி என்ற போர்வையில் திருப்பெருந்துறை கோயிலை சிவாலயமன்று என்று நிறுவமுயன்று, அதற்கு அறிவார்ந்த சான்றுகள் எதுவும் கிடைக்காமல் போக, கருவறையில் லிங்க பணமில்லை, அம்பிகையின் சந்நிதியில் திருமேனியில்லை, கல்வெட்டில்லை, நந்தியில்லை, கொடிமரமில்லை, கோணங்கியில்லை, என் தகப்பன் குதிருக்குளில்லை என்பது வரை பேசி, அது சமணச்சார்புடைய கோயில் என்று கொண்டு நிறுத்தி, அதற்கும் அடங்காமல் ஆதாரமுமில்லாமல், ஏதோ ஒரு க்ராமக்கோயில் கல்வெட்டை கோடிட்டு காட்டி, பீடம், இந்திரன், சாத்தன், திருமால், குதிரை, கொட்டடி, கொள்ளுக் கடையென்று கொட்டமடித்து விளையாடியுள்ளார். என்ன விதமான ஆராய்ச்சி இது? இதற்கு சைவசித்தாந்தப் பெருமன்றமும் துணைபோயுள்ளது. இனிவரும் ஆண்டுகளில் இது போன்ற “ஆய்வு” நூல்கள் வெளிவரும் என்று வேறு பயமுறுத்தியுள்ளார். மிகக்கொடுமை. ஆரூர் த்யாகேசப்பெருமான் காப்பாற்றட்டும்…
View More ‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 2‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 1
சென்னை சைவ சித்தாந்த பெருமன்றத்தால் வெளிக்கொண்டுவரப்பட்ட நூலொன்று “திருவாசகம் அருளிய மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்” என்பது. சென்னையை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளரும், தமிழக தொல்லியல்துறையில் பணியாற்றியவருமான முனைவர்.ஆ.பத்மாவதி அவர்களால் எழுதப்பட்டது… இரண்டு கேள்விகள் இயல்பாகவே நம்முள் எழுகின்றன. ஒன்று, மாணிக்கவாசகர் எடுப்பித்த கோயில் உண்மையில் எது? இரண்டு, இன்று இருக்கும் ஸ்ரீ ஆத்மநாதசுவாமி திருக்கோயிலின் தோற்றம், வளர்ச்சி என்பதை எப்படி அறியவேண்டும்? இதில் முன்னதற்கு விடையாக இரண்டாம் கட்டுரையும், பின்னதற்கு விவகாரமாக முதல் கட்டுரையின் இரண்டாம் பகுதியும் அமைந்துள்ளது. இந்த இரண்டாம் கட்டுரையில் தான் ஆராய்ச்சியாளர் பல சூக்ஷும முடிச்சிகளை அவிழ்ப்பதாக எண்ணி, சைவ அடியார்கள் தம் நம்பிக்கையை அசைத்து விளையாட முனைந்து , வரலாற்று எச்சங்கள் ஒன்றும் தெளிவாக இல்லாத காரணத்தால், கிடைத்த செதில் கற்களை கொண்டு ஒரு பெரிய கற்பனை கோட்டையை கட்டி எழுப்புகிறார்…
View More ‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 1‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ ஓசூர் கருத்தரங்கம்: வீடியோ பதிவுகள்
ஓசூரில் ஜூன் 10, 2018 ஞாயிறு முற்பகல் மைத்ரி அமைதி மையம் ஏற்பாடு செய்து நடத்திய ‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ கருத்தரங்கம் சிறப்புற நிகழ்ந்தது. சங்க இலக்கியத்தில் வேதப்பண்பாடு என்பது குறித்து ஜடாயுவும், நாங்கள் ஆதி இந்துக்கள் என்ற தலைப்பில் ம.வெங்கடேசனும் உரையாற்றினர்… அடுத்து, தனது உரைக்கு முன்பாக, முந்தைய பேச்சாளர்கள் கூறிய சில கருத்துக்களின் தொடர்ச்சியாக, கிராம தெய்வங்களும் வேதப்பண்பாடும் என்பது குறித்து ரங்கன்ஜி பேசினார். இறுதியாக, பாரதியாரும் வேதமும் என்ற தலைப்பில் ரங்கன்ஜி உரையாற்றினார். உரைகளுக்கு நடுவில் பார்வையாளர்களுடனான கேள்வி பதில்களும் சிறப்பாக இருந்தன. இந்த உரைகளின் முழு வீடியோ பதிவுகளையும் இங்கு காணலாம்…
View More ‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ ஓசூர் கருத்தரங்கம்: வீடியோ பதிவுகள்டார்கெட் இந்தியா: பிரிவினைவாத அபாயங்கள்
வட கிழக்குப் பகுதி தனது தனித்தன்மையை வன்முறைப் பிரிவினை என்ற அளவுக்குக் கொண்டு சென்றதால் அந்த முயற்சியில் எப்படிப் பரிதாபகரமாகத் தோற்றுவிட்டிருக்கிறது என்பதை ‘வடகிழக்கு ஆயுதப் போராளிகளுடன் ஒரு ரகசிய சந்திப்பு” என்ற இந்தப் புத்தகம் தெளிவாக விவரிக்கிறது. இதன் ஆசிரியர் தன் உயிரைப் பணயம் வைத்துச் செய்திருக்கும் பயணம் ஊடகச் செயல்பாடுகளுக்கு ஓர் நல்ல முன்னுதாரணம்… வடகிழக்கு பிரிவினைவாதிகள் அனைவரிடமும் இருக்கும் ஒரே ஒரு குறிக்கோள்: இந்தியாவே நம் எதிரி என்பதுதான். சீன, கிறிஸ்தவ, இஸ்லாமிய, பிராந்திய சக்திகளிடையே இருக்கும் இந்த உள் மோதல்களினால்தான் அவை தோற்றுவிட்டிருக்கின்றன. எனவே இதை இந்திய தேசியத்தின் வெற்றி என்று நிச்சயம் நினைத்துவிடக்கூடாது… தமிழகத்திலும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, கம்யூனிஸ சக்திகள் தத்தமது அஜெண்டாக்களுடன் களம் இறங்கியிருக்கின்றன. தமிழகத்தில் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு நடக்கத் தொடங்கியிருக்கும் போராட்டங்கள் (அல்லது இந்தப் போராட்டங்கள் நடக்கத் தோதாக அவருடைய மரணம் நடத்தப்பட்டதா) பனி மலையில் சிறு நுனி மட்டுமே. இந்தப் போராட்டங்களை கொஞ்சம் எள்ளலுடன் எகத்தாளமாகப் பார்க்கும் போக்கே இருக்கிறது… இந்து மற்றும் இந்திய அம்சங்களை எதிர்க்க எந்தவொரு நியாயமான காரணமும் வசதி வாய்ப்பும் இல்லாத நிலையிலும் தனியாகப் பிரிந்தே தீரவேண்டும் என்ற கூக்குரல்களால் சூழப்பட்டுவரும் நமக்கு வடகிழக்கின் அந்தப் போராட்டத்தின் வீழ்ச்சி பற்றிய வரலாறு ஒரு நல்ல பாடம்…
View More டார்கெட் இந்தியா: பிரிவினைவாத அபாயங்கள்இயேசு உயிர்த்தெழவில்லை: இளையராஜா சொன்னது சரியே
இயேசு உயிர்த்தெழவில்லை என்று சமீபத்தில் இளையராஜா அறிவித்தார். இது பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது. …
View More இயேசு உயிர்த்தெழவில்லை: இளையராஜா சொன்னது சரியேஒன்றுபட்ட இந்தியா: ஒரு உரையாடல் / விவாதம்
ஒன்றுபட்ட ஒரே தேசமாக, ஒற்றுமையாக நமது நாடான இந்தியா இருப்பதற்கான காரணங்கள் என்ன என்று நானும் நண்பரும் ஒரு நாள் சாதாரணமாக உரையாட ஆரம்பித்தோம். பேசப் பேசத் தான் இது எவ்வளவு பெரிய, மகத்தான விஷயம் என்ற உணர்வு ஏற்பட்டு அதிகரித்து வந்து. பின்பு, இந்த உரையாடலையே ஒரு காணொளியாகப் பதிவு செய்தால் என்ன எண்ணம் தோன்றியது. அதன் விளைவே கீழ்க்கண்ட வீடியோ பதிவு… வைகோ, சீமான் போன்ற முட்டாள்கள் இந்தியா துண்டு துண்டாக உடையும் என்ற ரீதியில் செய்யும் பிரிவினைவாத பிரசாரங்கள், இந்தியா ஏதடா, இந்து ஏதடா என்பது போன்ற உளறல்கள் ஆகியவற்றையும் பற்றி இந்த உரையாடலின் ஊடாக பதிலடி கொடுத்துள்ளோம். தனித் தமிழ் தேசம் சாத்தியமில்லாத ஒன்று என்பதை அழுத்தமாக வலியுறுத்தியிருக்கிறோம்…
View More ஒன்றுபட்ட இந்தியா: ஒரு உரையாடல் / விவாதம்‘திராவிட இயக்கத்தின் இந்துமத வெறுப்பு’ கருத்தரங்கம்: வீடியோ
சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் 2017 டிசம்பரில் சுதேசிய இந்தியவியல் – 3 (Swadeshi Indology – 3) மாநாடு சிறப்பாக நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக நிகழ்ந்த ‘திராவிட இயக்கத்தின் இந்துமத வெறுப்பு’ குறித்த கருத்தரங்கத்திற்கு டாக்டர். பேராசிரியர் கனகராஜ் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். ம.வெங்கடேசன், பத்மன், ஜடாயு, தேவப்ரியா ஆகியோர் உரையாற்றினர். ஈ.வெ.ராவின் சமூக அழிப்புக் கொள்கைகள், தமிழ் ஊடகங்களின் இந்து எதிர்ப்பு மனநிலை, தமிழ் இலக்கியங்களைத் திரித்தும் அவற்றின் இந்துக்கூறுகளை இருட்டடித்தும் திராவிட இயக்கத்தினர் செய்த பிரசாரம், கிறிஸ்தவ மிஷநரிகளின் பொய்கள் ஆகியவை குறித்து இந்த உரைகள் அமைந்தன. பார்வையாளர்களுடனான கேள்வி பதில்களும் சிறப்பாக இருந்தன. இந்த நிகழ்வின் முழு வீடியோ பதிவையும் இங்கு காணலாம்…
View More ‘திராவிட இயக்கத்தின் இந்துமத வெறுப்பு’ கருத்தரங்கம்: வீடியோஅக்பர் என்னும் கயவன் – 18
பி.என்.ஓக் (P.N.Oak) எழுதிய Who says Akbar is Great? என்னும் புத்தகத்தின் அடிப்படையில் இத்தொடர் எழுதப்படுகிறது. …
View More அக்பர் என்னும் கயவன் – 18அக்பர் என்னும் கயவன் – 17
பதாயுனி மற்றும் அபுல் ஃபசல் இருவருமே அக்பர் ஹிந்துக்களின் மீதான கருணையுடன் ஜிஸியாவை நீக்கிவிட்டதாகப் பொய்யாக எழுதி வைத்திருக்கிறார்கள். அக்பரின் காலத்தில் (பதாயுனி, அபுல் ஃபசல் காலமும் கூட) இந்தியாவில் பயணம் செய்த ஐரோப்பிய பயணிகள் அக்பர் ஹிந்துக்கள் மீதான ஜிஸியா வரியைத் தொடர்ந்து கொடூரமான முறையில் வசூலித்துக் கொண்டிருந்ததாக விளக்கமாக எழுதி வைத்துச் சென்றிருக்கிறார்கள். ராந்தம்போரை ஆண்ட ஹிந்து அரசரான ராய் சுர்ஜான் அக்பரை நேரில் சந்தித்து தன்னுடைய பிராந்தியங்களில் ஜிஸியா வரி வசூலிப்பதனை நிறுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தது அக்பரின் வரலாற்றாசிரியர்களாலேயே பதிவு செய்யப்பட்டிருக்கிறது… இஸ்லாமிய சட்டங்களின்படி, ஒரு இஸ்லாமிய நாட்டில் வாழ்கிற காஃபிர் அந்த நாட்டுக் குடிமகனாக அங்கீகரிக்கப்பட மாட்டான். அவ்வாறு இருக்கிற காஃபிர்களை அவமானங்களுடன் மட்டுமே வாழ இஸ்லாமியச் சட்டம் அனுமதிக்கிறது. எனவே காஃபிர்களுக்கு எதிரான எல்லாவிதமான நடவடிக்கைகளையும் அந்தப் பகுதியில் வாழும் முல்லாவே தீர்மானிப்பான். இஸ்லாமியச் சட்டம் அந்த முல்லாவின் மூலமாகவே அங்கு வாழும் ஹிந்து காஃபிர்கள் மீது செயல்படுத்தப்படும் என்பதால் ஹிந்துக்கள் தங்களின் மதச் சடங்குகளையும், ஆலயங்கள் நிர்மாணிப்பதனையும், ஏன் இடிந்த பழையதொரு ஆலயத்தையும் மீண்டும் கட்டிக் கொள்வதற்கான அனுமதியும் கூட மறுக்கப்படும் என்பதே வரலாறு…
View More அக்பர் என்னும் கயவன் – 17